---------- Forwarded message ---------
From: Srinivasan Sridharan <[email protected]>
Date: Sat, 6 Jan 2024 at 23:01
Subject: Fwd: SILVER TONGUE
To: Rajaram Krishnamurthy <[email protected]>, Devarajan Subramaniam <
[email protected]>


The silver tonghued orator is really great and the Hall of fame named after
him in Mylapore near luz round tana I visity often KR IRS 7124

*Date:* January 6, 2024 at 5:47:12 AM PST
*From:* sridharan <[email protected]>
*Subject:* *SILVER TONGUE*


கடைசி வரை காந்தியை அரை நிர்வாணப் பக்கிரி என்றே சர்ச்சில் கிண்டலடித்தார்.

அந்த சர்ச்சிலுக்கு 1890-களில் சென்னையிலிருந்து கடிதம் எழுதி YOU SPEAK BAD
ENGLISH என்று குற்றம் சாட்டினார் ஒருவர்.

‘WHO ARE YOU? WHERE ARE YOU? என்று சர்ச்சில் விசாரிக்க, நான் தமிழ்நாட்டில்
சென்னை திருவல்லிக்கேணி, இந்து ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர்!’ என்றார்.

உடனே அவரை இங்கிலாந்து வரச்சொன்னார் சர்ச்சில். இவர் போனார்.

ஒரு மேடையில் இலக்கணப் பிழையுடன் சர்ச்சில் பேசியதை இவர் விளக்கிச் சொல்ல
மிரண்டு போய்விட்டார் சர்ச்சில். என் தாய்மொழியை அயல்நாட்டான் கற்றுக் கொண்டு
என் பேச்சிலேயே தவறு கண்டுபிடிக்கிறாயா? நீ யார் -உன் பூர்வீகம் எது?’ என்று
திரும்பக் கேட்டார்.

‘கும்பகோணம் அருகே வலங்கைமான் கிராமத்தில் கோயிலில் பூஜை செய்யும்
சாஸ்திரியின் மகன். கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பு, சென்னை பச்சையப்பன்
கல்லூரியில் பட்டப்படிப்பு, சேலத்தில் முனிசிபல் கல்லூரியில் பேராசிரியராக
கொஞ்ச நாள். இப்போது திருவல்லிக்கேணி, இந்து ஹைஸ்கூலில் ஹெட்மாஸ்டர். என்
பெயர் சீனிவாச சாஸ்திரி!’ என்றார்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார் சர்ச்சில்.

ரென் அண்டு மார்ட்டின் ஆங்கில இலக்கணப் புத்தகம் போல ஜே.சி.நெஸ்பீல்டு ஆங்கில
இலக்கண நூல் தயாரித்திருக்கிறோம். ஒரு முறை சரிபார்த்துச் சொல்லுங்கள் என்று
கொடுத்தனர். இரவெல்லாம் படித்து 4, 5 அத்தியாயங்கள் தரக்குறைவாக உள்ளன’ என்று
மாற்றி எழுதிக் கொடுத்தாராம்.

ஆங்கில மொழிப் புலமையில் -ஆங்கிலப் பேச்சாற்றலில் இந்த நூற்றாண்டில் உலகில்
சிறந்த பேச்சாளர்கள் 5 பேரில் நீங்களும் ஒருவர் என்று மரியாதை செய்து -தாமஸ்
ஸ்மார்ட் என்பவர் பிரிட்டீஷ் அரசின் சில்வர்டங் அரேட்டர் -வெள்ளி நாக்குப்
பேச்சாளர் என்று பட்டம் கொடுத்து அனுப்பினார்.

இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் பல பதவிகள் வகித்தவர்.
தென்னாப்பிரிக்காவில் பிரிட்டீஷ் அரசின் இந்தியப் பிரதிநிதியாக கொஞ்ச நாள்
இருந்தார்.

கோபாலகிருஷ்ண கோகலேவின் அரசியல் பார்வையில் ஈர்க்கப்பட்டு அவரது சீடர் என்று
சொல்லிக்கொண்டார். மகாத்மா காந்தியை விட 10 நாள் முன்னதாகப் பிறந்தார்.
காந்திஜி அக்டோபர் 2-ல் பிறந்தார். இவர் செப்டம்பர் 22-ல் பிறந்தார். அதனால்
அண்ணா என்றே சாஸ்திரியை காந்தி அழைப்பார்.

‘பார் -அட் லா’ படித்த உனது ஆங்கிலம் தரமாக இல்லை என்று சாஸ்திரி சொல்ல, தன்
வரலாற்று நூலான சத்தியசோதனை- ஆங்கிலப் புத்தகத்தைத் திருத்தித் தரக் கேட்டுக்
கொண்டார் காந்தி.

அதேபோல அரசியல் செய்திகளைச் சொல்ல ‘ஹரிஜன்’ என்று ஒரு பத்திரிகை நடத்தினார்
காந்தி. மாதாமாதம் அந்த புரூஃபை சாஸ்திரிக்கு 2- வாரம் முன்னரே அனுப்பி
திருத்தி அவர் அனுப்பிய பின்னரே அச்சுக்குக் கொடுத்தார் காந்தி.

ஒரு தரம் காந்தியைப் பார்க்க வேண்டும் என்று சாஸ்திரி கேட்க, குஜராத்தில்
ஆனந்த் நகரில் நடக்கவிருந்த ஒரு மாநாட்டுக்கு வரச்சொன்னார் காந்தி. சாஸ்திரி
போனார்.

கட்டுக்கடங்காத கூட்டம். ஐயாயிரமோ, பத்தாயிரமோ அத்தனையும் ஏழை விவசாயிகள்.
பாட்டாளிகள். அவர் மீது அந்த மக்கள் வைத்திருந்த மரியாதையைப் பார்த்து
சொல்லாமல் கொள்ளாமல் சென்னை திரும்பி விட்டார் சாஸ்திரி.

‘இனிமேல் ஹரிஜன் புரூஃப் எனக்கு அனுப்ப வேண்டாம். நீங்களே திருத்திக்
கொள்ளுங்கள்!’ என்று காந்திக்கு கடிதம் எழுதினார்.

‘அண்ணா! நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா?’ என்று காந்தி கேட்டார். இல்லை.
என்னிடம் கேவலம் இங்கிலீஷ் மட்டும்தான் உள்ளது. உங்களிடம் ஆன்மா உள்ளது. ஆன்மா
சொல்வதுதான் வேதம். நீங்கள் சொல்வது சத்தியம். தொடருங்கள்!’ என்றார்.

ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிரதமரே மெச்சும் அளவுக்கு சாஸ்திரியின்
ஆங்கிலப் புலமை இருந்துள்ளது. கற்றறிந்த பெரியோர் முன்பு தன் ஆற்றலைத்
துணிந்து வெளிப்படுத்தும் ஒருவனே கற்றவர்களிலெல்லாம் சிறந்தவன் என்கிறார்
வள்ளுவர்:

‘கற்றாருள் கற்றார் எனப்படுபவர் -கற்றார் முன்

கற்ற செலச் சொல்லுவார்’

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopuX4Gn5_CbDr3Dit_G9Q%2BWL-CjA%3Dah0CWhqXrpxwpYQA%40mail.gmail.com.

Reply via email to