1.  In a way, true story. So personal effect might be there.
2.  Love and life of marriage is  different.
K. R.  IRS.  10124

On Wed, 10 Jan 2024, 21:00 Chittanandam V R, <[email protected]>
wrote:

>
>
>
>
>
>
> *சிங்கமய்யங்கார் பேரன் - நாடகம் - சுஜாதா  *
>
>
> *சுஜாதா மறைந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் இம்மாதிரி வசனமெழுத
> ஆளில்லாதது ஆச்சரியமளிப்பதாய் இல்லை?*
> *(நன்றி: கிறுக்கல்.com <http://xn--clcaa4ih8ep1hc.com/> வலைப்பூ)*
>
>
> *சிங்கமய்யங்கார் பேரன் நாடகத்திலிருந்து ஒரு காட்சி*
>
>
> *நரசிம்மாச்சாரி: நான் அப்படிச் சொல்லலை. ஒரே கம்யுனிட்டி. அதான் முக்கியம்.*
>
> *ராகவன்: வேற கம்யுனிட்டியில பண்றதில என்னப்பா தப்பு?*
>
> *நரசிம்மாச்சாரி: சொல்றேன். நீ காத்தால எழுந்திருந்தா. காப்பி கேப்பே. அவ டீ
> போட்டுக் கொடுப்பா. நீ மோர்க் குழம்பு கேப்பே, அவ மீன் குழம்பு குடுப்பா. நீ
> விகடன் படிக்கணும்பே, அவ ஜிலேபி ஜிலேபியா எழுதியிருக்கிற பாஷையில படிக்க
> புஸ்தகம் கேப்பா. உனக்கு மதுரை சோமு பாட்டு பிடிக்கும். அவளுக்கு குலாம்
> அலிகான், பிடிவாதமா கைக்குழந்தை அழறா மாதிரி பாடறான் பாரு அதுதான் புடிக்கும்.
> நீ நல்லெண்ணை, அவ கடுகெண்ணை. நீ தமிழ். அவ பஞ்சாபி. உங்களுக்குக் குழந்தை
> பிறந்தா இதுவும் இல்லாம அதுவும் இல்லாம, ரெண்டுங்கெட்டானா ‘டாடி முஜே
> பிசுக்கொத்து வேணும்’ங்கும். காதல் எல்லாம் ஆவியானப்புறம் அதுதான்
> மிஞ்சியிருக்கும்.*
>
>
> *ராகவன்: அதெல்லாம் எங்க ப்ராப்ளம். நீங்க ஏன் கவலைப்படறீங்க?*
> *…*
> *நரசிம்மாச்சாரி: இதெல்லாம் ரிச்சுவல்ஸ்டா.*
>
> *ராகவன்: இந்த ரிச்சுவல்லையா நான் கல்யாணம் பண்ணிக்கணும்?*
>
> *நரசிம்மாச்சாரி: இதுக்கு பின்னால இருக்கற அர்த்தங்களைப் புரிஞ்சுண்டு…*
>
> *ராகவன்: என்ன அர்த்தம்? நீங்கதான் சொல்லுங்களேன் அப்பா. நீங்க நிஜமாகவே ஒரு
> ஐயங்காரா இருந்தா, இந்த மாதிரி சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தியோகம் பாத்திருக்கக்
> கூடாது. இப்ப ரிட்டயர் ஆனப்புறம்தானே திருமண் ஸ்ரீசூரணம் இட்டுக்கறங்க?
> உத்தியோகத்தில் இருக்கற வரைக்கும் குடுமியை குல்லாய்ல ஒளிச்சு வெச்சுண்டு,
> எரால்ட் ராபின்ஸ் படிச்சுட்டு இப்ப பகவத் கதை படிச்சா மறுபடி ஐயங்கார் ஆய்ட்ரா
> மாதிரியா? உண்மையான ஐயங்காரா இருந்தா, நீங்க காவேரிக்கரையை விட்டுட்டு
> வந்திருக்கக் கூடாது. அங்க உக்கார்ந்துண்டு அமாவாசை தர்ப்பணம் பண்ணிவெச்சு
> பகவத் விஷயம் காலட்சேபம்னு மத்தவா கொடுக்கற உஞ்சவிருத்தில சம்சாரம் பண்ணணும்.*
>
> *நரசிம்மாச்சாரி: அது நடைமுறைக்கு ஒத்துவராது. அதனால காம்பரமைஸ்
> பண்ணிண்டாச்சு.*
>
> *ராகவன்: அதைத்தான் சொல்லவரேன். நீங்க ஆரம்பிச்ச காம்ப்ரமைஸைத்தான் நான்
> தொடர்ந்து இந்த மாதிரி ஐயங்கார், பஞ்சாபி எல்லாம் முக்கியமில்லை. மனசுதான்
> முக்கியமுன்னு…*
>
> *நரசிம்மாச்சாரி: ரொம்ப கிளவரா பேசிட்டே இப்ப நான் கொஞ்சம் பேசலாமா?*
>
> *ராகவன்: சரி.*
>
> *நரசிம்மாச்சாரி: இது எல்லாம் தற்காலிகமான காம்ப்ரமைஸ். மிலிட்டரிகாரன்
> யூனிஃபார்ம் போல. ஆனா நீ பண்றது கல்யாணம். வாழ்க்கை பூரா கமிட் பண்ணிக்கிற
> சமாசாரம். கல்யாணம்ங்கறது வாழ்நாள் பூரா வியாபிக்கிற ஒருவிதமான டிஸ்கவரி.
> உங்கம்மா என்னோட முப்பத்திரண்டு வருஷம் வாழ்ந்தா. உயிர்போற இன்னி வரைக்கும்கூட
> அவளை நா முழுசா புரிஞ்சுக்க முடியலை. அதுவும் உறவில கல்யாணம் பண்ணிண்டேன்.
> சொந்த அத்தை பொண்ணு. அப்படி அத்தனை க்ளோஸா ஒரே ஜாதி ஒரே குடும்பம்னு
> பண்ணிண்டாலே இத்தனை சண்டை போட்டோம். இது வேற்று பாஷை. மேரேஜ் ஸ்டேபிளா
> இருக்காது என்கிற கவலைனால்தானே.*
>
> *ராகவன்: தாங்க்யு.*
>
> *நரசிம்மாச்சாரி: என்ன மனசு மாறிட்டியா?*
>
> *ராகவன்: இல்லை நீங்க சொன்னது இன்னும் எனக்கு எங்க கல்யாணத்தை மணவாழ்க்கையை
> வெற்றிகரமாக்கணுங்கற சவால்தான் ஜாஸ்தியாறது.*
>
> *- சுஜாதா *
>
> *******************************
>
> *சித்தானந்தம் *
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorOiyQ3KwedAS9aaxNtiXew8TeQ0Rw4%3DcC%2BLepZHbPb5w%40mail.gmail.com.

Reply via email to