தமிழ் நாயகத்தின் உருவாக்கமும் எழுத்துருவமும், ரசிக்கலாம், ஆனால், நாயகன்
படம் போல, கூனியையும் ,சூர்பனகையையும், அவமானப்படுத்தினான் தான், விளைவு
நிகழ்ந்தது, எனும் தத்துவம், ஏற்புடையதல்ல. கூனியின் பிரித்தாளும் சூழ்ச்சி,
கைகேயின் நல்ல உள்ளதை கெடுத்தவள், தண்டிக்கப்படவேண்டியவளே; அவமானத்தின் எல்லை,
பெண் என்பதால் தான்; ராமன் பெண்ணிடம் காட்டும், ஒழுக்கமே,  உயர்ந்து
நிற்கிறது. சூர்ப்பனகையின் காமம் ஒழுக்கமற்ற பெண்ணின் இயல்பை, அழகின் எல்லை
எவ்வளவு, என்பதைக் காட்டவே, மூக்கறுபட்டாள். பெண் எனும் மாய பிசாசை
குறைந்த  தண்டனைக்கு உள்ளாக்கியவன் அரசனாகிய ராமன். ராவணனை நல்லவனாக காட்ட
தமிழ் நாயகத்தின் விளக்கம், அன்றே மறப்பதற்குரியது.  ஆனால், கம்பனின் சொல்வளம்
பெருமைக்கு உரியது . ஆனை என்ற சொல்லை  விதவிதமாக உபயோகப்படுத்தி உள்ளான்.
யான் பட்ட பழி என்பது அவளின் கூற்று; இவ்வுலகத்தின் கண் குற்றம் செய்த
 எவரும், அதைக் குற்றம் தான் செய்தது எனக் கூறாமல், பிறர் தான் குற்றம்
செய்தனர், எனது திரித்துக் கூறுவதைப் போல; தன் குற்றம் நீக்க மறுப்பவர்
மாக்களே. சூர்பனகையே விதி விலக்கல்ல எனவே அவள் மீது  பழி வீழ்ந்தது போலவும் ,
பிறர் தான் அதைச்  செய்தனர் போலவும் ,காட்டிக் கொள்கிறாள் ஒழுக்கமற்ற சிந்தனை
 மனிதர்களை ஆட்டிப் படைக்கின்றது.  நம்மில் சிலர் போல . கி ராஜாராம் இ  வ ப 12
1 24

*'ஆர்த்து, *ஆனைக்கு-*அரசு உந்தி, அமரர் கணத்தொடும் அடர்ந்த*

*போர்த் தானை இந்திரனைப் பொருது, அவனைப் போர் தொலைத்து,*

*வேர்த்தானை, உயிர் கொண்டு மீண்டானை, வெரிந் பண்டு*

*பார்த்தானே! யான் பட்ட பழி வந்து பாராயோ?*

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Fri, 12 Jan 2024 at 05:52
Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam - Soorppanaga (50)
To:



*கம்ப இராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் (50)*

*தமிழ்நாயகம் *

*அதையெல்லாம் பார்த்தாயே, இதைப் பார்க்க மாட்டாயா?*


தான் பட்ட அவமானத்தால் வருந்தி தன் அண்ணனான இராவணனை அழைத்துப் புலம்புகிறாள்

சூர்ப்பணகை.

இராவணா, நீ எதையெல்லாம் பார்த்து இருக்கிறாய்....

முன்பு ஒரு நாள் ஐராவதம் என்ற யானையின் மேல் ஏறி உன்னோடு போர் புரிய வந்தான்
இந்திரன். அவனை போர்க்கோலத்தில் கண்டாய். பின் அவன் உன்னோடு போர் புரிந்து,
உயிருக்குப் பயந்து தப்பி ஓடினான். அப்போது அவனுடைய முதுகைக் கண்டாய். அவன்
புறமுதுகு காண ஓடச் செய்தாய். அப்பேர்ப்பட்ட வலிமை உள்ளவன் நீ. உன் தங்கை இந்த
நிலையில் இருந்து கவலைப்படுகிறேன். இதைக் காண வரமாட்டாயா என்று ஓலமிடுகிறாள்.


பாடல்


*'ஆர்த்து, ஆனைக்கு-அரசு உந்தி, அமரர் கணத்தொடும் அடர்ந்த*

*போர்த் தானை இந்திரனைப் பொருது, அவனைப் போர் தொலைத்து,*

*வேர்த்தானை, உயிர் கொண்டு மீண்டானை, வெரிந் பண்டு*

*பார்த்தானே! யான் பட்ட பழி வந்து பாராயோ?*

(ஆர்த்து - பேரொலி எழுப்பிக்கொண்டு; ஆனைக்கு அரசு - ஐராவதம்; உந்தி - ஏறி;
அமரர் கணம் - தேவர் படை; போர்த் தானை - போர் தலைவனை; பொருது - போரிட்டு;
தொலைத்து - தோற்கடித்து; வேர்த்தானை - உயிருக்கு பயந்து ஓடி உடல் எல்லாம்
வேர்த்தானை; உயிர் கொண்டு மீண்டானை - உயிர் தப்பியவனை; வெரிந் = புறமுதுகு;
பண்டு - முன்பொரு நாள்; பார்த்தானே - கண்டவனே.)


ஆனை என்ற சொல்லை எவ்வளவு அழகாக கையாள்கிறான் கம்பன்.

ஆனைக்கு அரசு - ஐராவதம்

போர்த் தானை = போர்த் தலைவனை

வேர்த்தானை = வேர்க்க விறுவிறுக்க ஓடியவனை

மீண்டானை = உயிரை கையில் பற்றிக் கொண்டு மீண்டவனை

பார்த்தானை = பார்த்தவனே

கம்பனில் இரசிக்க ஆயிரம் இருக்கு.

சூர்ப்பணகையின் இந்த அவலம், பின்னாளில் எப்படி எல்லாம் வெடிக்கப் போகிறது
என்று பார்க்க இருக்கிறோம்.

அசுர குலத்தை அடியோடு வேர் அறுத்தது அவள் பட்ட அவமானம்.

யாருடைய தன்மானத்தையும் சீண்டிப் பார்க்கக் கூடாது.

கூனியின் தன்மானத்தைச் சீண்டியதால் கானகம் வர நேர்ந்தது. சூர்ப்பணகையின்
தன்மானத்தைச்  சீண்டியதால் சீதையை இழந்து எவ்வளவு சோகம்!

இராவணன் சீதையை கவர்ந்தது தவறு. அந்த தவறின் வேர் எங்கே இருந்தது?

சிந்திப்போம்.

*- தமிழ்நாயகம்*

*****************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopmdgupEs6C4aiJ7jg8MKZknwCtYvXXGGVMP70Vw%2BAEAQ%40mail.gmail.com.

Reply via email to