a WISHFUL THINKING. When people are at the peak, all praise them to be within the pool. KR
On Thu, 18 Jan 2024 at 06:47, Chittanandam V R <[email protected]> wrote: > > *இசைஞானி இளையராஜா பற்றி: சுஜாதா* > > (அம்பலம் இணைய இதழில், 12.6.2005) > > *இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவருடைய திருவாசகம் 'சிம்பொனி' அனுபவத்தைப் > பற்றிப் பேசிக் கொண்டிருந்தது ஓர் இனிய அனுபவம்.* > > *இளையராஜாவுடன் எனது நட்பு ஏறக்குறைய ஆரம்ப காலத்திலிருந்து தொடர்வது. > **முதன்முதலாக > காயத்ரி, ப்ரியா போன்ற படங்களை பஞ்சு அருணாசலம் எடுத்தபோது (1976) பெங்களுரில் > கம்போசிங்கின் போதும், சென்னையில் யேசுதாஸின் முதல் ஸ்டீரியோ ஸ்டுடியோவில் > ரிக்கார்டிங்கின்போதும் - ஆர்வமுள்ள, முன்னேறத் துடிக்கும், எந்த சவாலையும் > சந்திக்கத் தயாராக இருக்கும் இளைஞராகப் பார்த்திருக்கிறேன்.* > > * இன்னமும் ஞாபகம் இருக்கிறது. **அப்போதெல்லாம் சின்தஸைஸர் மிக > மிகக் குறைவாகத்தான் பயன்படுத்தப்பட்டது. வயலின் என்றால் நிஜ வயலின்கள், > ப்ளூட் என்றால் நிஜ ப்ளூட். கித்தாரும் அப்படியே. ரிக்கார்டிங் > ஸ்டுடியோவில் **இசைக் கலைஞர்கள் கூட்டம் பெரும் வட்டமாக இருக்கும். > ட்ராக்கில் பாடுவதெல்லாம் கிடையாது. கான்சோலில் இசை அமைப்பாளர் வீற்றிருக்க, > உள்ளே ஒரு அரேஞ்சர் இருப்பார். அப்போதே, ராஜா எல்லோருக்கும் நோட்ஸ் எழுதிக் > கொடுப்பார் - உள்ளூர் வாத்தியங்களுக்கு ஸ்வரங்களாகவும், வெஸ்டர்னுக்கு > நொட்டேஷனிலும்.* > > *எந்த மூலையில், எத்தனை லேசான பிசிறு இருந்தாலும் அவரது நுட்பமான, > தீட்டப்பட்ட காதுகளுக்குக் கேட்டு விடும். **கட் பண்ணி விட்டு, "என்ன > கோதண்டம், பிசிறு கேக்குதே ! சரியா ட்யூன் பண்ணிக்கலையா ?" இது ஒரு இன்பமான, > வினோதமான அனுபவம். அங்கங்கே ஞீ ஞா என்று ஆளாளுக்கு ஒத்திகை பார்த்துக் > கொண்டிருக்க, "ஓகே ! டேக் போகலாமா ? " என்றதும் நிசப்தமாகும். ஒன்… டூ… என்று > கை சொடுக்கினால் முடிவில், திடீர் என்று ஒரே நேரத்தில் அத்தனை பேரும் > ஒத்திசைத்து சங்கீதம் புயலாக வெடிக்கும். அந்தத் திடீர்த் துடிப்பு > வேறெதிலும் கிடைக்காதது.* > > *ராஜாவின் முன்னேற்றத்தைப் படிப்படியாக கவனித்து வந்திருக்கிறேன். அவரிடம் > இருந்த மேதமை, உலகளாவிய நண்பர்களை அவருக்குத் தந்திருக்கிறது. மெல்ல மெல்ல > அவர் தன் வாழ்க்கையைப் பற்றியே சிந்திக்கும்போது, வேறு ஏதோ ஒரு உயர்ந்த > காரியத்திற்குத் தான் படைக்கப்பட்டிருப்பதை உள்ளுணர்வில் கண்டிருக்கிறார்.* > > * திருவாசகத்தில் உள்ள பக்தி ரசத்தையும், ஈசனிடம் உண்மையான சரணாகதியையும் > உணர்ந்து அவர் பாடியிருக்கும் ஆரடோரியோ, ராஜாவின் இசைப் பயணத்தில் ஒரு மிக > முக்கியமான திருப்பம். இனிமேல் அவர் செய்ய இருப்பதற்கெல்லாம் கட்டியம்.* > > *ராஜா ஒரு முழுமையான சிம்பொனியை எழுதக் கூடியவர். அதே போல் சிக்கலான > மேற்கத்திய அமைப்பில் கிழக்கத்திய இலக்கியங்களின் சுவையை இணைக்கும் திறமை > இவரிடம்தான் காண முடிகிறது. * > > *விளைவாக, சிலப்பதிகாரம் ஒரு ஆப்பெராவாக (Opera) வெளிவந்தால் ஆச்சரியப்பட > மாட்டேன். நம்மாழ்வாரின் சூழ்விசும்பு பாசுரங்களை தூரியம் முழங்க, > பில்ஹார்மோனிக் இசையில் பரமபதத்துக்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்லலாம்.* > > *ராஜாவின் முழுமேதைமை வெளிநாட்டில்தான் முதலில் வெளிப்படும். தென்னாட்டில் > அறியப்படும்.* > *திருவாசகம் சிடியை வாங்கிக் கேட்டுப் பாருங்கள்.* > > *- சுஜாதா* > > ************************** > > வலையில் பிடித்தது > > சித்தானந்தம் > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop%2B1XrxiP%3DM%2BZT%2B2-7CtEr7esqRVYjxT5fg2UdiXLP2vQ%40mail.gmail.com.
