ஒரு தேனீயும், ஈயும், வழியில்
ஒரு நாள் சந்தித்துக் கொண்டன.
தேனீயிடம், ஈ, கேட்டது
"நண்பா , சாப்பிட்டு விட்டாயா ?"
தேனீ சொன்னது,
"இல்லை நண்பா, அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கேன்."
தேனீயின் பதிலைக் கேட்ட ஈ
விழுந்து விழுந்து சிரித்தது .
"பூமி முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்கிறது. ஆனால்
நீ மட்டும் தான்  பூக்களைத் தேடி
ஓடிக் கொண்டிருக்கிறாய்..
உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா.?"
"அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்க,, அரிதான விஷயத்தைத்
தேடி இவ்வளது தூரம் அலைந்து கஷ்டப்படுகிற உன்னைப் பைத்தியம் என்றுதான் சொல்ல
வேண்டும் "
என்றது.
தேனீ கோபப்படாமல் சொன்னது.
"உன் கண்களுக்கு இனிய உணவாகவும், இன்பமயமாகவும் காட்சியளிக்கும் சகலமும் ,
எனக்கு நாற்றம் பிடித்தவையாகவும்,
அருவறுக்கத் தக்கவையாகவும் தோன்றுகிறதே
நான் சேமித்து வைக்கும் என்னுடைய உணவு ஆண்டுகள் பல ஆனாலும் அதே சுவையோடு
அப்படியே இருந்து பல பேருக்குப் பயன்படும்.
ஆனால் உன்னுடைய உணவு,
கொஞ்ச நேரத்திலேயே அழுகிப் புழுத்து அழிந்து போகும்.
அத்துடன் உன்னுடைய கூட்டம் மட்டுமே அந்த நாற்றத்தைத் தேடிப் போகும் " என்றது.
ஈ அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் ஓடிப் போனது .
பாவங்களை இன்பமாய்க் கருதி வாழும் பிறவிகளின் கண்களுக்குப் பரிசுத்தவான்கள்
பைத்தியங்களாய்த் தோன்றுவது இயற்கைதான்.
ஈ தேடுவது~சிற்றின்பம்.   தேனீ தேடுவது~பேரின்பம்.
A bee and a fly, on the way
They met one day.
The fly asked the bee"Friend, have you eaten?"
said the bee,
"No mate, that's why I'm flying in search of flowers."
E fly heard the bee's answer
Falling and laughing.
"The earth is overflowing with delicious food. But
You are the only one looking for flowers
You are running..
Do you have a problem with your eyes or a problem with your mind?
"When the pleasures to be enjoyed are pouring out before your eyes, you
must be called mad to wander so far in search of a rare thing."said.
Bee said without getting angry.
"All that appeareth sweet food and delight unto thine eyes,
I like the smell,It also looks disgusting
My food that I store will last for many years but still taste the same and
will be used by many people.
But your food,It will rot and die in no time.
And only your crowd will go in search of that smell."
E ran away without saying anything more.
It is natural for the saints to appear as madmen to the eyes of mortals who
live with pleasure in their sins.
Seeking E~Sensual.   The bee seeks~bliss.     SILA NERANGALIL SILA
MANIDHARGAL   KR  IRS  19124

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoryB1LZZ9ocjy-8hqKGHF6coFc5UhBOMsC-mv8x_Gx%2BOQ%40mail.gmail.com.

Reply via email to