விரகின் தன்மை தன் வினை சார்ப; தன் நல் வினை நல்விரகு; தீய வினை தீவிரகு;
விதியின் தனமை சனாதன தர்மத்தின் பன்முகம். வேறு எந்த மதங்களிலும் இல்லாதது.
விதி கர்மா பலன்; கர்மா மறு பிறப்பின் காரணம்; மறுபிறப்பின் தாக்கம்,
வழிபாடு என்பதும், முக்தி என்பதும். தமிழ் படிப்பதின் நோக்கம், திராவிட அல்ப
தத்வம் அல்ல. அது அறிவீலிகளின் மதுக்கூடாரம். கனி மொழி ,உதயநிதி உளறல்கள் அந்த
தமிழ் தெரியாதவர்களின் காரணம்.
ராமாயணத்திலும், அதயே கூற்றாக வைக்கிறார் கம்பன்;
1734. ‘நதியின் பிழை அன்று
நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
என்னை வெகுண்டது?’ என்றான்.
விதியை வெல்லுதல் அரிதாம். ஆனால், நம் பழைய நூல் கதைகளில் சரித் சாகர
இது பற்றி ஒரு கதை உள்ளது.
குருவிடம் பயின்று (குருகுலத்தில்) வெளியே பலகாலம் சுற்றித் திரிந்து,
திரும்பிய சீடன், தன் குருவின் மகள், பரத்தையாய், இருத்தலைக் கண்டு மனம்
நொந்தான். ஏற்கனேவே மகள் பிறக்கும் போது அங்கு இருந்த சீடன், பிரம்மன்
லிபியைத் தெரிந்தவன் ஆதலால், (பிரம லிபி தலை எழுத்து ;பிரம்மன் அவளுக்கு தினம்
1௦௦ பொற்காசுகள் பரத்தை தொழிலில் கிடைக்கும் என எழுதியுள்ளான்) அவளை நேரில்
கண்டு ஆறுதல் கூறி, அவளிடம், விதியை மதியால் வெல்ல ஒரு வழி கூறினான்; அதை
பின் பற்ற கூறி வந்த வழியே சென்றான். அதன்படி, இரவு யார் கதவைத் தட்டினாலும்,
1௦௦ பொற்காசு எனக்கூற, யாரும் அதற்கு ஒத்துக்கொள்ளாததால், அவளால் அந்த தொழிலை
செய்ய முடியவில்லை. ஆனால் ப்ரம்ம லிபி விதியன்றோ? எனவே ஒவ்வொரு இரவும் ஒருவன்
கதவைத் தட்டி 1௦௦ பொற்காசுகளை கொடுத்து விட்டு, திரும்பி செல்கிறான் அவளுக்கு
காசும் உடலும் ஆரோக்கியமாய் உள்ளது. அப்படி தினமும் வருபவன், வேறு யார்?
ப்ரம்மமனேதான்.
The character of Viragu (fate) is dependent on its action; His good deeds
are good; negative reaction radical; The uniqueness of fate is the manifold
of Sanatana Dharma. Unlike any other religion. Vidhi Karma is the result;
Karma is the cause of rebirth; The effect of rebirth is worship and
salvation. The purpose of studying Tamil is not Dravidian mean blabberings.
It is a bar of the ignorant. Kanimazhi and Udayanidhi rumblings are the
reason of those who don't know Tamil.
In the Ramayana, Kamban makes the same claim;
1734. ‘நதியின் பிழை அன்று
நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
என்னை வெகுண்டது?’ என்றான்.
விதியை வெல்லுதல் அரிதாம்
victory over the fate is rare. But there is a story about this in
our old book stories of Katha Sarit Sagara.
After learning from the guru and wandering outside (in the
gurukula) for a long time, the returning disciple was heartbroken to find
the existence of his guru's daughter, a prostitute. The disciple who was
already there when the daughter was born, who knew the Brahma script,
(Brahman wrote that she would get 100 gold coins a day in the industry) saw
her and comforted her and told her a way to beat fate by virtue; He
followed it and went on his way. Accordingly, whosoever knocks on the door
at night and is willing to pay, for 100 gold coins alone can enter her
chamber; , no one agrees to it, so she could not do that business. But what
about Brahma Libi? So every night someone knocks on the door and gives 100
gold coins and leaves, she goes back and the money and body are healthy.
Who else comes like that every day? It is Brahman. K Rajaram IRS 20124
On Sat, 20 Jan 2024 at 04:42, Chittanandam V R <[email protected]>
wrote:
>
>
>
> *வில்லி பாரதம் - விதியை வெல்லும் விரகு *
>
> *தமிழ்நாயகம் *
>
> ஏன் தமிழ் படிக்க வேண்டும்? இலக்கியம் ஏன் படிக்க வேண்டும்? மொழி சோறு
> போடுமா? வேலை வாங்கித் தருமா? தமிழ் படிக்கும் நேரத்தில் வேறு ஏதாவது
> உருப்படியாக படித்தால் இன்னும் நாலு காசு சம்பாதிக்கலாமே என்று நினைக்கலாம்.
> அது சரிதான். இல்லை என்று சொல்லுவதற்கு இல்லை.
>
> ஆனால், பணம் மட்டும் போதுமா? வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதும் என்றால்,
> இலக்கியம் வேண்டாம் என்று தள்ளி விடலாம். வெறும் பணம் மட்டுமே வாழ்க்கையாகி
> விடுமா?
>
> அது புறம் இருக்கட்டும். நாம் நினைக்கிறோம், பணம் இருந்துவிட்டால் எந்தப்
> பிரச்சனையையும் சரி செய்து விடலாம் என்று. பணத்தால் சாதிக்க முடியாதது ஒன்றும்
> இல்லை என்று. அது சரியா?
>
> வயது ஏற ஏற, பணத்தால் சாதிக்க முடியாத பலவற்றை நாம் அனுபவ பூர்வமாக
> அறிவோம். அப்போது என்ன செய்வது? மிகப் பெரிய பிரச்சனை. பெரிய துக்கம். தாங்க
> முடியவில்லை. பெட்டி பெட்டியாக பணம் இருக்கிறது. ஒரு பலனும் இல்லை. எத்தனை
> கோடி கொட்டிக் கொடுத்தாலும் நம் துக்கம் தீராது என்ற நிலைகள் வரும். அப்போது
> என்ன்ன செய்வது? பணத்தால் சரி செய்ய முடியவில்லையே என்ற இயலாமை ஒரு புறம்.
> இந்தப் பணத்தைச் சேர்க்கவா என் வாழ் நாள் எல்லாம் செலவழித்தேன். கடைசியில்
> இந்தப் பணத்தால் ஒரு பலனும் இல்லை. என் முயற்சிக்கு கிடைத்த பலன் இதுவா என்ற
> வெறுமை மறுபுறம்.
>
> அந்த நிலை வரும் முன், மனதை பக்குவப்படுத்த வேண்டாமா? தயார் செய்து கொள்ள
> வேண்டாமா? அதற்குத்தான் இலக்கியம்.
>
> மகாபாரதத்தில் அபிமன்யு இறந்து கிடக்கிறான். அர்ஜுனன், தருமன், கண்ணன், பீமன்
> எல்லோருக்கும் முன்னால் வில்லிப்புத்துராழ்வார் அழது புலம்புகிரார். அவரால்
> அதை சகிக்க முடியவில்லை.
>
> அபிமன்யு யார்? அவனுடைய தந்தை உலகின் மிகப் பெரிய வீரன் அர்ஜுனன். அவன்
> மாமன், உலகைக் காக்கும் கண்ணபிரான். பெரியப்பா, மிகப் பெரிய பலசாலி பீமன்.
> தாத்தா, தேவர்களின் அரசனான இந்திரன். அப்படிப்பட்ட அபிமன்யு அனாதையாக இறந்து
> கிடக்கிறான் என்றால் காரணம் என்ன. விதி. இத்தனை பேர் இருந்தும் அவனை காக்க
> முடியவில்லை என்றால் விதியை நம்புவதைத் தவிர வேறு என்ன செய்வது ?
>
> பாடல்
>
> மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம் திருத்தாதை; வானோர்க்கு எல்லாம்
>
> நாயனாம் பிதாமகன்; மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர்; சேயனாம்
> அபிமனுவாம்,
> செயத்திரதன் கைப்படுவான்! செயற்கை வெவ்வேறு
>
> ஆய நாள், அவனிதலத்து, அவ் விதியை வெல்லும விரகு ஆர் வல்லாரே?
>
> பொருள்
>
> மாயங்களில் வல்லவன் மாமனாகிய கண்ணபிரான்; வில் வீரத்தில் ஒப்பற்றவன்
> தந்தையான அர்ஜுனன்; தேவர்களுக்கு எல்லாம் தலைவனாம் தாத்தாவாகிய இந்திரன்;
> மேலும் ஒரு கோடி பேர்கள் மக்களின் அரசர்கள், நண்பர்களாக உள்ளவர்கள்.
> பிள்ளையாம் அபிமன்யு ஜெயத்திரதன் என்ற அரசனின் கையால் இறந்தான். ஊழ்வினையின்
> வேறுவேறு விதமாக நடக்கும் செயல்கள் எல்லாம் அன்றில் இருந்து இந்த உலகில் அந்த
> விதியை வெல்லும் வழி யாரிடம் இருக்கிறது? யாரிடமும் இல்லை! (விரகு = வழிவகை,
> திறமை)
>
> இவ்வளவு இருந்தும், அபிமன்யுவை காக்க முடியவில்லை. கடவுளான கண்ணனால் கூட
> முடியவில்லை. கண்ணன் நினைத்து இருந்தால் காத்திருக்கலாம்.
>
> விதி. விதி என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ, தெரியாது.
>
> சில சமயம், தாங்க முடியாத துக்கம் வரும் போது, மனதுக்கு ஒரே மருந்து விதியை
> நம்புவதுதான். இல்லை என்றால் எப்படி மனம் சமாதானம் அடைய முடியும்.
>
> விதி என்று ஒன்று இல்லை என்று சொல்லிவிடுவது எளிது. பெரிய துக்கதில்
> இருக்கும் ஒருவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அதுதான் என்றால், அதை பறிப்பானேன்?
> நம் இலக்கியம் முழுவதிலும் விதி அழுத்தமாக நம்பப் படுகிறது. இலக்கியம்
> படித்துப் பழகிவிட்டால் வாழ்வில் வரும் துன்பங்களை பொறுத்து, சகித்து, அதைத்
> தாண்டி மேலே வர முடியும். இல்லை என்றால் மன அழுத்தம், மன நோய், மருந்து,
> மாத்திரை என்று துன்பப்பட வேண்டிவரும்.
>
> இலக்கியம் துன்பத்தை ஆற்றும். மனதைத் தேற்றும். மன வலிக்கு மருந்து போடும்.
> சாய்ந்து கொள்ள தோள் தரும். கண்ணீர் துடைக்கும்.
>
> *- தமிழ்நாயகம் *
>
> ****************************************
>
> *சித்தானந்தம் *
>
>
>
>
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqWejz2Q5RbDdiELtD6YLP3%2BUj5tKwmxGD0qi3dd3kK1A%40mail.gmail.com.