This is invoking the readers to offer their knowledge about the maintenance
of sesha vastram and transferring to others. I have a lot of sesha vastrams
of many temples including the leading ones. How to preserve and proceed
further? K Rajaram  IRS  21 1 24

On Sun, 21 Jan 2024 at 06:25, Chittanandam V R <[email protected]>
wrote:

>
>
> *மூன்று நாள் திருச்சி  பிரயாணம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN*
>
>
> *திருச்சியில்  ஊசி குத்த  இடமில்லை. இருக்கும் தெருக்களில் பறக்கின்ற  பல
> வித  துரித  வாகனங்கள். தெருவின் இருமருங்கிலும்  கடைகள்,
> பார்க்குமிடமெல்லாம்  சிரிக்கும்  மந்திரி முகம். அவரைச் சுற்றி பரிவாரமும்
> சிரிக்கிறது. மொத்தத்தில் திருச்சி சிரிப்பாய் சிரிக்கிறது என்று சொன்னால்
> சரியோ?  *
>
> *இன்னும்  மறையாதது  பிரயாணத்தின்போது  காவேரியை கடக்கும்  பாலத்திலிருந்து
> தெரியும்  மலைக்கோட்டை, அதன்மேல் உச்சி பிள்ளையார் கோவில்,  திருவானைக்கா பழைய
> ஜம்புகேஸ்வரர் ஆலயம். ரயில் பாதை, சில பெயர்கள், பாலக்கரை,  மாம்பழ சாலை,
> ஆண்டார் வீதி,  தெப்பக்குளம், கண்டோன்மெண்ட்.  அம்மா மண்டபம், தென்னூர்
> சாலை,  சின்னக்கடை வீதி,  தில்லைநகர்.   *
>
> *அம்மன் கோவில்கள் அநேகம் வழியில் கண்டு வணங்கினேன். காரை நிறுத்தி ஒவ்வொரு
> கோவிலுக்குள்ளும்  போக  ஆசை. ஆனால் கார்  என்னுடையதல்ல, நேரமும்  இல்லை. **90
> வயது நண்பருடன் செல்லும்போது அவரது  உடல் சௌகர்யத்தையும்  கருத்தில்
> கொண்டுதான் பிரயாணம் பண்ண வேண்டும் அல்லவா?*
>
> *அற்புதமான வக்கீல்  ராதாகிருஷ்ணன்.  அறுபது எழுபது வருஷ  அனுபவங்களை எல்லாம்
> சொல்லிக்கொண்டே வந்தார். எனக்கு பேர் மட்டும் தெரிந்த எத்தனையோ  பல
> பிரபலங்களுடன் அவருக்கு நேர்ந்த அனுபவங்கள் கேட்க ஆச்சர்யமாக இருந்தன.*
>
> *வயலூருக்கு செல்ல போட்ட பிளான்  நிறைவேறவில்லை.  ஆண்டார்வீதியில் மதுரா
> லாட்ஜ் ரொம்ப பழைய பிரபலமான  ஒரு  சாப்பாடு ஹோட்டல். சுசி ருசி  என்ற
> வார்த்தையை  இன்னும் செயலில் காட்டிவரும் அமைதியான  ஹோட்டல். பரம்பரையாக
> நடத்தப்பட்டு வருகிறது.  ரெண்டு தலைமுறையாக  ராதாகிருஷ்ணனுக்கு பரிச்சயமான
> ஹோட்டல் என்பதால் அங்கே அழைத்துச்சென்றார். *
>
> * ஒரே சமயத்தில்  60-75 பேர்  சாப்பிடலாம் போல ரெண்டு பெரிய  ஹால்.
> ஒவ்வொருவருக்கும் தனி குட்டி டேபிள். உட்கார ரவுண்டு ஸ்டூல்.  மேசையை அடைத்த
> பெரிய  வாழை  இலை, ஏடு. சூடான பக்குவமான  கமகம என மணக்கும்  பச்சரிசி சாதம்.
> சாம்பார், ரசம், கீரை மசியல், வற்றல் குழம்பு, மோர்க்குழம்பு, கூட்டு கறி,
> பச்சடி, பாயசம், தயிர்,மோர், அப்பளம்….. வயிற்றில் இடம் இல்லை சாப்பிட.
> கண்ணெதிரே  ”உணவை வீணாக்காதீர், எவர் பசியையாவது போக்குமே ” "வேண்டியதை கேட்டு
> வாங்கி நிறைய  சாப்பிடுங்கள்.  TAKE ALL THAT YOU CAN EAT. BUT EAT ALL THAT
> YOU TAKE, SAVE FOOD, SAVE LIFE”  போன்ற  வாசகங்கள் மற்ற  ஹோட்டல்களில் நான்
> பார்க்காத  வாசகங்கள்.*
>
> *ஸ்ரீரங்கத்தில்  அதே போல் ‘மடப்பள்ளி’  என்ற ஹோட்டலில்  சாப்பாடு  அமாவாசை
> என்று வாழைக்காய் கறியோடு, வெங்காயம் இல்லாத சமையலாக கிடைத்தது  சந்தோஷமாக
> இருந்தது.*
>
> *ஸ்ரீ ரங்கநாதன் ஆலயத்தில் கிடைத்த  ‘சேஷ வஸ்திரம்’ எனக்கு  ஸ்ரீ
> ராதாகிருஷ்ணன் பரிசாகக் கொடுத்தது  ரங்கநாதன் அருளால் கிடைத்த என் பாக்யம்
> என்று சொல்வேன். சேஷ வஸ்திரம் என்பது சுவாமி மேல்  அணிவித்த வஸ்திரங்கள்.
> எல்லோருக்கும் கிடைக்காது. பிறந்தநாள், முக்கியமான நாட்களில் பகவானை வேண்டி
> அவன் அருள்  ப்ரசாதமாக  அதை  அணிந்து கொள்வேன்.*
>
> *திருச்சியிலிருந்து திரும்பி வரும்போது சமயபுரம் அம்பாள் கோவில் கோபுர
> தரிசனம் கிடைத்தது.திருப்பட்டூர்  பிரம்மபுரீஸ்வரர்  கோவிலுக்குச்  சென்று
> விட்டு சென்னை  திரும்பினோம்.*
>
> *- J.K.Sivan, Nanganallur*
>
>
> **********************************************
>
> *சித்தானந்தம் *
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoong3dV%3D0PGtXCr1bx-YLSM5zVOB1ALUeb2zyh8Z4F%3Dsw%40mail.gmail.com.

Reply via email to