நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தொகுதிப் பங்கீட்டுக்குழுவின்
ஆலோசனைக் கூட்டம்தான் அது. கூட்டணியில் இருப்பது புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ
என்று இரண்டே இரண்டு கட்சிகள்தான். வேறு யாரும் இன்னமும் அ.தி.மு.க-வுடன்
கூட்டணியை உறுதியே செய்யவில்லை



“திருவள்ளூர், கிருஷ்ணகிரி தொகுதிகளை அடுத்து கோவை, சிவகங்கை, தென்காசி
உள்ளிட்ட தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனையை நடத்தி
முடித்திருக்கிறார்கள். ‘யாரை வேட்பாளராக நிறுத்தலாம்... தொகுதி நிலவரம்
எப்படியிருக்கிறது... உட்கட்சி சிக்கல்கள் இருக்கின்றனவா?’ என்ற அதே வழக்கமான
கேள்விகளைத்தான் இவர்களிடமும் கேட்டிருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகளும்,
‘தொகுதியைக்
கூட்டணிக் கட்சிகளுக்குத் தராமல், நாமே நேரடியாகப் போட்டியிடலாம்’ என்ற பழைய
பல்லவியையே பாடியிருக்கிறார்கள். ‘தொகுதியை யாருக்குக் கொடுப்பது என்பது
பற்றியெல்லாம் தலைமை முடிவுசெய்யும். தலைமையின் முடிவுக்குக்
கட்டுப்பட்டு, வேட்பாளரை
வெற்றிபெறவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு’ எனச் சொல்லி
அனுப்பிவைத்திருக்கிறார்கள். இதில், புகார் இருப்பவர்களைத் தனியாக அழைத்து
விசாரித்தது பிரச்னையாகியிருக்கிறது. ‘யாரோ சொன்னதை வைத்துக்கொண்டு, எங்களைக்
குற்றவாளிகள்போல நடத்துகிறார்கள்’ என அவர்கள் மா.செ-க்களிடம் குமுற... அது
ஒருங்கிணைப்புக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இதனால், அடுத்து
வந்தவர்களைக் கூட்டத்தோடு கூட்டமாகவைத்து பாலிஷாக எச்சரித்து
அனுப்பினார்களாம்.”



“நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தொகுதிப் பங்கீட்டுக்குழுவின்
ஆலோசனைக் கூட்டம்தான் அது. கூட்டணியில் இருப்பது புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ
என்று இரண்டே இரண்டு கட்சிகள்தான். வேறு யாரும் இன்னமும் அ.தி.மு.க-வுடன்
கூட்டணியை உறுதியே செய்யவில்லை. இந்தச் சூழலில், இவர்கள் யாருடன் அல்லது
யாருக்காகத் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்தார்கள் எனத் தெரியவில்லை
என்று மா.செ-க்களே வேதனையாகச் சிரிக்கிறார்களாம். ‘இந்த லட்சணத்தில் தேர்தலை
அணுகினால், எட்டுத் தோல்வி என்பது எண்ணிக்கையில்லா தோல்வியாக மாறினாலும்
ஆச்சர்யப்படுவதற்கில்லை’ என முணுமுணுக்கிறார்கள் நிர்வாகிகள்.”



“விழுப்புரத்தில் அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற
டி.டி.வி.தினகரன், ‘நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை’ என்று
தடாலடியாக அறிவித்திருக்கிறாரே?”



“பயம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். முதலில், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்
ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் களமிறங்கவே முடிவுசெய்திருந்தார்
தினகரன். ஏற்கெனவே அவர் வெற்றிபெற்ற தேனி தொகுதியில் மீண்டும்
களமிறங்கினால்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று நிர்வாகிகள் சொன்னதால், அங்கு
தேர்தல் வேலைகளையும் தொடங்கினார். ஆனால், அந்தத் தொகுதியில் போட்டியிட
ஓ.பி.எஸ்-ஸின் இரு மகன்களுமே மல்லுக்கட்டுகிறார்களாம். சொந்தச் சகோதரனுக்கே
விட்டுக்கொடுக்காதவர்கள், நாம் களமிறங்கினால் உள்ளடி வேலை செய்தே காலி
பண்ணிவிடுவார்கள் என்று அஞ்சிய தினகரன், ராமநாதபுரம் தொகுதியில் பல்ஸ்
பார்த்திருக்கிறார். ‘அந்தத் தொகுதியைக் குறிவைத்து பா.ஜ.க வேலையைத்
தொடங்கிவிட்டது. ஒருபோதும் அவர்கள் ராமநாதபுரத்தை நமக்கு விட்டுத்தர
மாட்டார்கள்’ என்று உள்ளூர் நிர்வாகிகள் சொல்லிவிட்டார்களாம். அதுமட்டுமன்றி
சீனியர் நிர்வாகிகளும், ‘கட்சியின் பொதுச்செயலாளர் நீங்கள். 2021 சட்டமன்றத்
தேர்தலில் நீங்களே தோல்வியடைந்ததால்தான் பல நிர்வாகிகள் கட்சியைவிட்டு
வெளியேறினர். இந்தத் தேர்தலிலும் போட்டியிட்டுத் தோற்றால், எதிர்காலம்
சூன்யமாகிவிடும்’ என்று எச்சரித்திருக்கிறார்கள். அதிலிருக்கும் உண்மையைப்
புரிந்துகொண்டதாலேயே போட்டியிடும் முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டாராம்
தினகரன்.”



“எடப்பாடிக்கு கூட்டணிக்கு ஆளில்லை... தினகரனுக்குப் போட்டியிடத்
தொகுதியில்லை... ரொம்பப் பாவம்” என்ற நம்மைச் சிரித்தபடி பார்த்தார் கழுகார்.
நாம் கொடுத்த காளான் சூப்பை வாங்கிச் சுவைத்தவர்...



“ஏற்கெனவே தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று விமர்சனம்
எழுந்திருக்கும் நிலையில், ஐ.பி.எஸ் ஆபீஸர்களின் டிரான்ஸ்ஃபர்
சர்ச்சையும் `தடதட’க்கிறது.
அதிலும், கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, அரசியல்
கட்சிகளின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்த ஆர்.பாண்டியராஜனுக்கு தலைநகரிலேயே
முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. திருப்பூர்
ஏ.டி.எஸ்.பி-யாக பாண்டியராஜன் இருந்தபோது, சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு
எதிராகப் போராடிய பெண்கள்மீது தடியடி நடத்தினார். ஒரு பெண்ணின் கன்னத்தில்
அவர் ஓங்கி அறைந்துவிட, அந்தப் பெண்ணின் செவித்திறனே போய்விட்டது. அப்போது
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், ‘பாண்டியராஜனை தற்காலிகப் பணிநீக்கம்
செய்ய வேண்டும். பெண்ணைத் தாக்கியவர் காவல்துறையில் பணியாற்றத் தகுதியற்றவர்.
அவர்மீது கிரிமினல் வழக்கு பதிந்து கைதுசெய்ய வேண்டும்’ என்றெல்லாம்
குரலெழுப்பினார். இப்போது தி.மு.க ஆட்சியில், கொளத்தூர் துணை ஆணையர் பொறுப்பை
அளித்திருக்கிறார்கள். இந்தத் துணை ஆணையர் எல்லைக்குள்தான் முதல்வரின்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியும் வருகிறது.”



“பலே... இந்த பாண்டியராஜனுக்குத்தானே உச்ச நீதிமன்றம் குட்டுவைத்தது?”



பாண்டியராஜன்

பாண்டியராஜன்

“ஆமாம். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின்
பெயரை, அப்போது
கோவை எஸ்.பி-யாக இருந்த பாண்டியராஜன் வெளிப்படையாகச் சொன்னதால், உச்ச
நீதிமன்றம் குட்டுவைத்தது. அதனால், காத்திருப்போர் பட்டியலுக்கு
தூக்கியடிக்கப்பட்ட அவர், அ.தி.மு.க தலைவர்களுடன் இருந்த நெருக்கத்தைப்
பயன்படுத்தி கரூர் எஸ்.பி-யாகிவிட்டார். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் சில
ஆண்டுகள் டம்மியான பதவியிலேயே இருந்தவர், யாரையோ பிடித்து சென்னைக்குள்
நுழைந்திருக்கிறார். ‘தகுதியின் அடிப்படையில் யாரை, எங்கு வேண்டுமானாலும்
பணியமர்த்தலாம். ஆனால், கடந்தகாலத்தில் முதல்வரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட
ஒருவரை, அவருடைய தொகுதிக்குள்ளேயே பணியமர்த்தலாமா?’ என்கிறார்கள் காக்கிகள்
வட்டாரத்தில்” என்று புறப்படத் தயாரான கழுகார்...



“சென்னையில் கமிஷனர் அலுவலக கேட்டுகளையே மூடும் அளவுக்கு ஒரு பிரச்னை
அரங்கேறியிருக்கிறது. சமீபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் பீட்டருக்குச் சொந்தமான
இடங்களில் சோதனையிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், அவர்மீது சென்னை மத்திய
குற்றப்பிரிவு பதிந்திருக்கும் வழக்கு குறித்தும், அது தொடர்பாக நடந்த விசாரணை
குறித்தும் துருவித் துருவி கேட்டிருக்கிறார்கள். மத்திய குற்றப்பிரிவைச்
சேர்ந்த சில அதிகாரிகள், பீட்டரிடமிருந்து பணத்தை வம்படியாக வாங்கி எதிர்
பார்ட்டிக்குக் கொடுத்துவிட்டதாகச் சந்தேகிக்கிறது அமலாக்கத்துறை. அது
தொடர்பாக விசாரணை நடத்த, கமிஷனர் ஆபீஸுக்கு அமலாக்கத்துறை வரவிருப்பதாக கடந்த
ஜனவரி 27-ம் தேதி காலை தகவல் பரவியது. உடனடியாக கமிஷனர் ஆபீஸின் அத்தனை
நுழைவாயில்களும் மூடப்பட்டு, கடும் சோதனைக்குப் பிறகே வாகனங்கள் உள்ளே
அனுதிக்கப்பட்டன. மதியம் 12 மணி வரையிலும் அமலாக்கத்துறை வராததையடுத்தே,
பெருமூச்சுவிட்டிருக்கிறார்கள்
உயரதிகாரிகள். ‘கேட்டுகளை ரிப்பேர் செய்தோம். அதனால்தான்
மூடவேண்டியதாகிவிட்டது’ என அதிகாரிகள் சொன்னாலும், பதற்றமிருந்தது
உண்மைதானாம். ‘எதுவாக இருந்தாலும் இங்கே வராதீர்கள்... மானமே போய்விடும்.
நீங்கள் அழைக்கும் இடத்துக்கு நாங்கள் வரத் தயார்’ என அமலாக்கத்துறை
மேலிடத்துக்கு சமரசத் தூது அனுப்பியிருக்கிறாராம் ஒரு முக்கியமான அதிகாரி”
என்றபடி சிறகுகளை விரித்தார்.



கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:



 மாநிலத்தின் மையமான தொகுதியை எதிர்பார்த்திருக்கும் கதர் தலைவருக்கு, இந்த
முறை சீட் இல்லை என்கிறதாம் சத்தியமூர்த்தி பவன். டென்ஷனில், துணிவானவருக்கே
தூதுவிடத் தொடங்கிவிட்டாராம் அவர். ‘கரை வேட்டி மாத்துறது அவருக்கென்ன புதுசா?’
என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில்.



 நாமக்கல்லை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் ஒரு நிறுவனம்தான், தமிழ்நாடு
முழுவதும் டிராஃபிக் சிக்னல், பிளாஸ்டிக் பேரிகார்டு, டிராஃபிக் சைன் போர்டு
உள்ளிட்ட போக்குவரத்து தொடர்பான சாதனங்களை சப்ளை செய்கிறது. `இந்த நிறுவனம்
வழங்கும் பொருள்கள் தரமாக இல்லை’ என்று பலமுறை தலைமைக்குப் புகார் அனுப்பியும்
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் புலம்புகிறார்கள் போலீஸ் அதிகாரிகள்
சிலர். KR IRS 1224//2224

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZops4Zh%3Dy3zWesO1EPMZ9PqgWpngHkyRoqo5QEjdAq64-w%40mail.gmail.com.

Reply via email to