கண்களால் அல்ல; மூளையால் உற்றுப் பாருங்கள்... வெற்றி உங்களுக்கே! - செல்ஃப்
டெவலப்மென்ட் புக்ஸ்

‘ஏற்கெனவே தெளிவற்ற பார்வை கொண்டிருக்கும் நமக்கு இன்றைக்கு இருக்கும்
டிஜிட்டல் உலகில் உள்ள கவனச்சிதறல் என்பது இன்னமுமே நம்முடைய நிலைமையை மோசமான
தாக்குகிறது



"எந்த ஒரு நிகழ்வையும் கண்ணால் பார்த்து அது குறித்து தெள்ளத் தெளிவாக
விவரிப்பது என்பது ஒன்றும் மிகப் பெரிய விஷயமில்லை. ஆனாலும், பலமுறை நாம்
இதில் தோற்றுப் போகிறோம். ஏர்போர்ட்டில் தவறான கேட்டில் நுழைந்து தவறான
ஃபிளைட்டுக்கு வரிசையில் நிற்கிறோம். தவறான நபருக்கு அவருக்குத் தெரியவே கூடாத
தகவலை இ-மெயிலில் அனுப்பி வைத்துவிட்டு வருத்தப்படுகிறோம்... ஏன் தெரியுமா?



எப்படி தெளிவாகப் பார்க்கவும், தெளிவாக விவரிக்கவும் நமக்கு இயல்பாகவே குணம்
இருக்கிறதோ... அதே போல, தெளிவாகத் தவறிழைக்கும் குணமும் நம்முள்ளே
குடிகொண்டிருக் கிறது என்பதால்தான். இந்த உலகில் மனிதர்களாகிய நம் கண்முன்னே
நடக்கும் நிகழ்வுகளில், நாம் பார்க்க விரும்பும் விஷயங்களை மட்டுமே
பார்க்கிறோம் என்பதால்தான் சிக்கல்களே உருவாகின்றன. இதைவிட கொடுமையான
விஷயம், நமக்குப்
பிடித்தவற்றை மட்டுமே பார்ப்பது கண்களை மூடிக்கொண்டு நடப்பதற்குச் சமமான
ஒன்று. ஏனென்றால், கண்களை மூடிக்கொண்டு நடக்கும்போது நமக்கு மிகவும் தேவையான
பொருள் ஒன்று நம்முடைய காலடியில் கிடந்தால்கூட நாம் அதை எடுக்க மாட்டோம்’’
என்று எடுத்த எடுப்பிலேயே நம் பார்வை மற்றும் அணுகுமுறையில் உள்ள குறைகளைப்
புட்டுப்புட்டு வைக்கிறது ‘விஷுவல் இன்டெலிஜென்ஸ்’ (Visual Intelligence) என்கிற
புத்தகம்.



புலன் உணர்வை அதிகரித்துக் கொள்வதன் மூலம் பயன்பெறுவது எப்படி என்பதைச்
சொல்லும் இந்தப் புத்தகத்தை அமி இ.ஹெர்மென் (Amy E.Herman) எழுதியுள்ளார்.
இவர் நியூயார்க்கில் வசிக்கும் ஒரு வழக்கறிஞர்.



கண்ணில் தெரிவதை நாம் பார்க்கத் தவறுவது ஏன்?



‘‘கண் எதிரில் தெரியும் விஷயங்களை சரியாகப் பார்க்கத் தவறுவதால் சந்திக்கும்
இழப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. இதற்கு, நம்முடைய பழக்கம், போரடிக்கும் குணம்,
சோம்பேறித்தனம்
மற்றும் இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்கும் மனநிலை போன்ற வையே
அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. நிறைய விஷயங்களை நம் கண்வழியாகப் பார்க்க
முடியும். ஆனால், மிகவும் குறைவான விஷயங்களையே நம்முடைய மூளையால் கிரகித்து
உபயோகிக்க முடியும். பலமுறை குற்றவழக்குகளில் நேரடி சாட்சிகள் தாங்கள்
பார்த்தவற்றைத் தொகுத்துக் கூறுவதில் தடுமாறும்போது இது எனக்குத் தெளிவாகப்
புரியவந்தது. இதைச் சரிசெய்ய வேண்டுமெனில், ஓர் ஓவியரைப் போன்ற பார்வை நமக்கு
அவசியமாகிறது. நம் கண்முன்னே இருக்கும் ஓவியங்களை ஆராய்ந்தால் அதை
வரைந்தவருடைய பார்வையில் பட்ட பல விஷயங்கள் நமக்குப் புரியும்.



ஒரு மருத்துவக் கல்லூரியில் இது குறித்து ஆய்வு ஒன்று நடந்தது. தோல்
மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒருசாராருக்கு ஓவிய ஆராய்ச்சி
பயிற்சியை அளித்தும், மற்றொரு சாராருக்கு ஓவிய ஆராய்ச்சி பயிற்சி அளிக்காமலும்
அவர்களை நோயாளிகளின் நோய் குறித்து கண்டறியச் சொன்னார்கள். ஓவியக் கலைப்
பயிற்சியைக் கற்றவர்கள், ஓவியக் கலைப் பயிற்சி பெறாதவர்களைவிட கிட்டத்தட்ட 56%
அளவுக்கு நோயாளிகளின் நோயை சரிவரக் கண்டறிந்தனர் என்கிறது ஆய்வு முடிவுகள்.
இதுதான் நாம் வெறுமனே ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கும், ஓர் ஓவியரைப்போல்
பார்ப்பதற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களைக் கண்டறிய என்னைத் தூண்டியது’’
என்று இந்தப் புத்தகத்தை எழுத ஆரம்பித்ததுக்கான காரணத்தை எடுத்துச் சொல்கிறார்
ஆசிரியர்.



கண்களால் அல்ல; மூளையால் உற்றுப் பாருங்கள்... வெற்றி உங்களுக்கே! - செல்ஃப்
டெவலப்மென்ட் புக்ஸ்

புத்தகத்தின் பெயர்: Visual Intelligence



ஆசிரியர்: Amy E.Herman



பதிப்பகம்:‎ Eamon Dolan/Houghton Mifflin Harcourt



மூளையைப் பயிற்றுவிக்க வேண்டும்...



‘‘நம்முடைய விழித்திரை மூளையின் ஓர் அங்கமே தவிர, கண்ணின் ஓர் அங்கம் இல்லை
என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம் மூளையை நம்மால் முழுமை
யாகப் புரிந்துகொள்ள முடியாது என்றாலும், நம்மால் அதை சிறந்த முறையில்
பயிற்றுவிக்க முடியும் என்பது நிஜம். என்னுடன் படித்த போலீஸ் நண்பர்
ஒருவர், அமெரிக்காவின்
9/11 தீவிரவாதத் தாக்குதலுக்குப்பின், ‘மூளையைப் பயிற்றுவிப்பது அவசியம்.
அதுவும் தீவிரவாதத் தாக்குதலை நேரில் கண்டவர்களுக்கு இது மிக மிக அவசியம்.
ஏனென்றால், அவர்களுடைய பார்வையின் கோணத்தை இது மாற்றும்’ என்றார்.



அவர் சொன்னதைத் தொடர்ந்து, நியூயார்க் நகர டெபுடி கமிஷனரிடம், ‘உங்களுடைய
அதிகாரிகளை எங்களுடைய ஆர்ட் மியூசியத்துக்கு வரச் சொல்லுங்கள். பயிற்சி
அளிக்கிறேன். நிச்சயம் அது அவர் களுக்கும் உதவியாக இருக்கும்’ என்று மிகுந்த
பயத்துடன் பேசினேன். நான் பேசுவதைக் கேட்டு அவர் என்னைத் திட்டப்போகிறார்
என்றுதான் நினைத்தேன். அவரோ சற்று யோசித்துவிட்டு ‘சரி’ என்றார்.



அந்த நிமிடம்தான் ‘தி ஆர்ட் ஆஃப் பெர்செப்ஷன்’ (The Art of Perception) பிறந்த
நிமிடம். இன்றைக்கு பத்து ஆண்டுக்கும் மேலாக போலீஸ், எஃப்.பி.ஐ மற்றும்
பாதுகாப்பு சார்ந்த துப்புத்துலக்கும் அதிகாரிகளுக்கு இது குறித்து நான்
பயிற்சி அளித்து வருகிறேன். ஒரு முக்கியமான வழக்கில் 100 மில்லியன் டாலர்
சொத்தை கைப்பற்றியதுடன், 34 பேருக்கு தண்டனையும் வாங்கித் தந்த அதிகாரி ஒருவர்,
அந்த வழக்கை சிறப்பாக நடத்தி முடிக்க என்னுடைய வகுப்புகள் மிகவும் உதவியாக
இருந்தன என்று பேட்டி அளித்திருந்தார்.



அன்று முதல் தனியார் நிறுவனங்களும், பள்ளி கல்லூரிகளும், பணியாளர்கள்
சங்கங்களும் என்னுடைய வகுப்பை விரும்பி கற்க ஆரம்பித்தன. ஏனென்றால், அன்றாட
வாழ்வில் நாம் அனைவருமே பல சம்பவங்களை நேரில் காணும் மனிதர்களே ஆவோம்’’ என்று
சொல்லி, ஒவ்வொரு விஷயத்தையும் ஏனோதானோவென்று பார்க்காமல், உன்னிப் பாகப்
பார்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர்.



நேற்று பயன்படுத்திய சோப்பு எங்கே..?



‘‘ஒரு சூழ்நிலையில் எது முக்கியமோ அதைப் பார்க்க வேண்டும் என்பதை முதலில் நாம்
புரிந்துகொள்ள வேண்டும். ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த டெரெக் கயாங்கோ என்பவர்
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஒரு தங்கும் விடுதியில் அறை வாடகைக்கு
எடுத்துத் தங்கினார். அன்றைக்கு குளியலறை யில் வைக்கப்பட்டிருந்த புதிய சோப்
ஒன்றை அட்டைப் பெட்டியில் இருந்து எடுத்துக் குளித்துவிட்டு குளியலறையில்
விட்டுச் சென்றார். அடுத்த நாள் காலை குளியலறையில் புதிய சோப்
வைக்கப்பட்டிருந்தது. பழைய சோப்பைக் காணவில்லை. அந்த சோப்பை கையோடு
வரவேற்பறைக்கு எடுத்துச் சென்று, ‘நான் நேற்றைக்கு உபயோகப்படுத்திய சோப்
மீதமிருந்தது. அதை எடுத்துவிட்டு, புது சோப் வைத்திருக்கிறீர்கள். அதனால்
இந்தப் சோப்புக்கு நான் காசு தர மாட்டேன்’ என்றாராம். வரவேற்பறையில் இருந்த
நபரோ, ‘சார், தினமும் நாங்கள் புதிய சோப் ஒன்றை அறையில் வைத்துவிடுவோம். இது
இலவசம் தான். நீங்கள் இதற்காக காசு எதுவும் தர வேண்டாம்’ என்றாராம்.
அப்படியென்றால் ‘பழைய சோப் எங்கே?’ என்று கேட்டதற்கு, ‘அதை எங்கள் ஹவுஸ்
கீப்பிங் டிபார்ட்மென்ட் ஆட்கள் குப்பையில் வீசிவிடுகிறார்கள்’ என்றாராம்.



அமெரிக்காவில் மொத்தம் எத்தனை தங்கும் விடுதிகள், எத்தனை அறைகள், எத்தனை
நபர்கள்... எத்தனை சோப்புகள் அன்றாடம் தூக்கி எறியப்படுகின்றன என்று
மனக்கணக்குப் போட்டு வியந்தாராம் அவர்.



ஆப்பிரிக்கா திரும்பியதும் கயாங்கோ, சோப் உற்பத்தியாளரான அவருடைய தந்தை யிடம்
இதைச் சொல்ல, அதற்கு அவருடைய தந்தையோ, ‘அவர்களுக்கு அவ்வளவு வசதி வாய்ப்பு
இருக்கிறது, விடப்பா’ என்றாராம். ஆனால், கயாங்கோவின் மூளையோ சோப்பை
வீணாக்குகிறார்களே என்பதை ஆழமாகப் பதிவு செய்து வைத்திருந்தது. இங்கே நம்
நாட்டில் சோப்பை உபயோகித்து கைகழுவ வழியில்லாததால் வருகிற நோய்களால் பல ஆயிரம்
பேர் சாகிறார்கள். அங்கே அவ்வளவு சோப் வீணாகிறதே என்று வெதும்பினாராம். அந்தக்
காலகட்டத்தில் ஆப்பிரிக்காவில் சோப் என்பது ஓர் ஆடம்பரமான பொருள்.



இந்த விஷயத்தில் ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று நினைத்து, மீண்டும்
அமெரிக்கா போய், தங்கும் விடுதிகளுக்கு சென்று, வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய
சோப்பைக் கேட்க, ‘அது அழுக்கு, அதைத் தர முடியாது’ என்றார்களாம். ‘அழுக்கை
நான் நீக்கிக்கொள்கிறேன். சோப்பை எனக்குக் கொடுங்கள்’ என்று கேட்க, தங்கும்
விடுதிகள் தர ஆரம்பித்தன.



அப்படி சேகரித்த சோப்பை சுத்தம் செய்து, கிருமி நீக்கி மறு உபயோகத்துக்காக
‘குளோபல் சோப் புராஜெக்ட்’ என்ற திட்டத்தின் வாயிலாக ஆப்பிரிக்க மக்களுக்கு
இலவசமாகக் கொடுக்க ஆரம்பித்தாராம். 2011-ம் ஆண்டு வரையில் நூறு டன் உபயோகித்த
சோப்பை மறுசுழற்சி செய்து 32 நாடுகளுக்கு உயிர்காக்கும் பொருளாக இலவசமாக
அனுப்பி வைத்தாராம் அவர். இந்த நல்ல காரியத்தைச் செய்ததால் சி.என்.என்
நிறுவனம் வெளியிடும் ‘ஹீரோஸ்’ பட்டியலில் அவர் இடம்பிடித்தார்.



கண்ணால் அல்ல, மூளையால் பாருங்கள்...



இந்த உலகத்தில் வெற்றி பெற நீங்கள் பலசாலியாகவோ, புயல்போல் வேகமாக செயல்படும்
நபராகவோ, ஸ்மார்ட்டான, பணக்கார, அழகான, அதிர்ஷ்டக்கார நபராகவோ இருக்கத்
தேவையில்லை. பில்கேட்ஸ், ரிச்சர்ட் ப்ரான்சன் மற்றும் டெரிக் கயாங்கோ
போன்றவர்கள் உலகை சரியான கோணத்தில் பார்த்துச் செயல்பட்டதன் மூலம் வெற்றிபெற
முடியும் என்று நிரூபித்தவர்கள். அதாவது, மற்றவர்கள் பார்க்காத கோணத்தில்
உலகத்தைப் பார்த்து அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் விஷயங்களை
நடைமுறைப்படுத்தினாலே வெற்றி பெற முடியும். இந்த உலகை கண்ணால் பார்ப்பதில்லை.
மூளையால் பார்க்கிறோம் என்பதை நாம் முதலில் நமக்கு தெளிவுபடுத்திக் கொண்டு
பார்க்கத் தொடங்கினால், நிச்சயம் வெற்றி கிடைக்கும்’’ என்கிறார் ஆசிரியர்.



உற்றுப் பாருங்கள், வெற்றி கிடைக்கும்...



‘‘ஏற்கெனவே தெளிவற்ற பார்வை கொண்டிருக்கும் நமக்கு இன்றைக்கு இருக்கும்
டிஜிட்டல் உலகில் உள்ள கவனச்சிதறல் என்பது இன்னமுமே நம்முடைய நிலைமையை மோசமான
தாக்குகிறது. இதனால், கவனம் பெற வேண்டி யதும் கவனம் பெறாமல் போகிறது.
எனவே, நிறுத்தி
நிதானித்தல் என்பது அவசியமான குணமாகிறது.



விளக்கங்கள், விவரங்கள், வடிவங்கள் மற்றும் ஒன்றுக்கொன்று இருக்கும் தொடர்பு
போன்றவற்றை நாம் கண்டுபிடித்து மனதில் இருத்திக்கொள்ள நிதானம் அதிகமாக
தேவைப்படுகிறது. ஓர் ஓவியத்தை நீண்ட நேரம் கூர்ந்து நோக்கினால் அதிலிருக்கும்
பல்வேறு புதிய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குப் புலப்படுகிறது.



அதேபோல்தான் நம் கண்முன்னே நடக்கும் நிகழ்வுகளும். அதையும் நாம் தீர்க்கமாக
உள்வாங்கிக்கொள்ளும் திறனை வளர்த்துக் கொண்டால் நிச்சயமாக நம்மால் சிறப்பான
முடிவுகளையும் நடவடிக்கைகளையும் எடுத்து முன்னேற முடியும்’’ என்று திட்ட
வட்டமாகக் கூறுகிறார் ஆசிரியர்.



நம் கண்முன்னே தோன்றும் விஷயங்களில் முக்கியமானவற்றைக் காண்பது எப்படி என்பதை
மதிப்பிடுதல் (Assess), பகுப்பாய்வு செய்தல் (Analyze), தெளிவாகப்
பேசுதல் (Articulate),
பொருத்துதல் (Adapt) என்ற நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்துத் தந்துள்ளது
இந்தப் புத்தகம்.



வாழ்வில் எந்த ஒரு விஷயத்திலும் ஒருவர் பார்க்கும் பார்வையின் கோணமே அவருக்கு
வெற்றியையோ, தோல்வியையோ தருகிறது. அந்தக் கோணத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வது
எப்படி என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்துப் பயன்பெறலாம்.

Not with the eyes; Take a look with your brain... Victory is yours! - Self
Development Books
"For those of us who already have blurry vision, the distractions in
today's digital world are only worsening our situation.

"It's not a big deal to see and describe an event vividly. Yet many times
we fail at it. We enter the wrong gate at the airport and get in line for
the wrong flight. We end up regretting sending an email to the wrong person
with information they shouldn't have known... Why? Do you know?

Just as we have the natural ability to see clearly and describe clearly...
so we also have the ability to fall clearly within ourselves. Problems
arise because we only see what we want to see in the events that happen
before our eyes in this world. Worse, seeing only what we like is
tantamount to walking with our eyes closed. Because when we walk with our
eyes closed, even if an object we need is lying at our feet, we will not
pick it up.

Amy E. Herman has written this book on how to benefit from heightened
awareness. He is a lawyer based in New York.

Why do we fail to see what meets the eye?

"The losses incurred due to failure to see things right in front of the
eyes are not insignificant. The basic reasons for this are our habits,
boring nature, laziness and the tendency to try to catch and fly away from
existence. We can see many things through our eyes. But very few things can
be grasped and used by our brain. This became clear to me many times when
eyewitnesses in criminal cases struggled to summarize what they saw. To fix
this, we need the vision of a painter. If we examine the paintings before
our eyes, we will understand many things from the point of view of the
painter.

A study was conducted in a medical college. Among the students studying
dermatology, one doctor was given painting research training and another
doctor was not given painting research training and asked them to diagnose
the disease of the patients. The results of the study showed that those who
received the painting training were almost 56% more likely to diagnose the
disease of their patients than those who did not receive the painting
training. This is what inspired me to discover the differences between us
simply looking at a thing and seeing it like a painter'' says the author
about the reason for starting to write this book.

Not with the eyes; Take a look with your brain... Victory is yours! - Self
Development Books
Book Name: Visual Intelligence

Author: Amy E. Herman

Publisher: Eamon Dolan/Houghton Mifflin Harcourt

Train your brain...

We must clearly understand that our retina is a part of the brain and not a
part of the eye. Although we cannot fully understand our brain, it is a
fact that we can train it better. A police friend who studied with me said
after the 9/11 terrorist attacks in America, 'Training the brain is
essential. It is also very important for those who witnessed the terrorist
attack. Because it will change their point of view.

After that, he told the Deputy Commissioner of New York City, 'Have your
officers come to our Art Museum. I give training. Surely it will help them
too' I spoke with great fear. I thought he was going to scold me after
listening to me. He thought for a while and said 'Okay'.

That moment was the moment when 'The Art of Perception' was born. I have
been training police, FBI and security detectives on this for over ten
years now. An officer who seized $100 million in assets and convicted 34
people in an important case, said in an interview that my classes were very
helpful in completing the case.

Since then, private companies, schools, colleges and employee associations
started learning my class. Because in our daily life, we are all human
beings who witness many incidents.''

Where is the soap you used yesterday?

"We must first understand that we have to look at what is important in a
situation. Derek Kayango, an African, rented a room in a hostel in
Philadelphia, USA. He took out a new soap from the cardboard box that had
been installed in the bathroom that day and left it in the bathroom. The
next morning there was fresh soap in the bathroom. Missing the old soap. He
took the soap with his hand to the drawing room and said, 'The soap I used
yesterday was left. Take it off and you have new soap. So I will not pay
for this soap.' The person at the reception said, 'Sir, we keep a new soap
in the room every day. It's free. You don't have to pay anything for this.'
So when asked 'Where is the old soap?', he said, 'Our housekeeping
department throws it in the garbage'. He wondered how many hostels, how
many rooms, how many people... how many soaps are thrown away every day in
America. On his return to Africa, Kayango told his father, a soap
manufacturer, to which his father said, 'They have such an opportunity,
Vidappa.' But Kayango's brain had deeply registered that they were wasting
soap. Here in our country many thousands of people are dying due to
diseases caused by using soap and not having a way to wash their hands.
Wethumpinaram said that so much soap is wasted there. Soap was a luxury
item in Africa during that period. Thinking that something should be done
in this matter, he went back to America, went to the hostels and asked the
customers for the soap they had used. 'I will remove the dirt. "Give me the
soap", the hostels started giving. He cleaned and disinfected the collected
soap and started giving it to African people for free through a program
called 'Global Soap Project'. By 2011, he had recycled a hundred tons of
used soap and sent it to 32 countries as a life-saving product for free.
For doing this good deed, he was included in the list of 'Heroes' published
by CNN. Look not with your eyes, but with your brain... You don't need to
be strong, fast, smart, rich, handsome or lucky to succeed in this world.
People like Bill Gates, Richard Branson and Derrick Kayango have proven
that success can be achieved by looking at the world from the right angle
and acting. That is, success can only be achieved by seeing the world from
a perspective that others do not and applying what we learn from it. We do
not see this world with our eyes. If we first make it clear to ourselves
that we are seeing with the brain, then we will definitely get success,"
says the teacher. Look hard and you will win...''The distractions in
today's digital world only worsen our already blurred vision. As a result,
attention that needs attention goes unnoticed. Therefore, pausing becomes a
necessary remedy. It takes a lot of patience to find and keep in mind the
descriptions, details, patterns, and interrelationships. If we look closely
at a painting for a long time, we can see various new things in it little
by little. The same is the case with the events happening in front of our
eyes. If we develop the ability to absorb it decisively, we can definitely
take better decisions and actions and move forward," says the teacher. This
book divides how to see the important things in front of our eyes into four
major sections namely Assess, Analyze, Articulate and Adapt. One's
perspective on any matter in life is what gives him success or failure.
Everyone can benefit from reading this book that tells you how to get that
angle right.  K R IRS 1224//2224

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorypA9S2EbWTRUfEeDWb7cMDM5kRKhGBzd46Ee5u0bdjw%40mail.gmail.com.

Reply via email to