நன்றி சித்தன் அவர்களே. நன்று நவில்கிறீர்  அதுவும் இன்றே . தடுப்பவன்
ஆடையின்றி ஊன் இன்றி நடுத்தெருவில் நிற்பான்; சரி. நிறைய சிந்தனைகள், நமக்கு
என்ன வந்தது ?; நாய் இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன; என்ற மாதிரி
நொடியில் வாழ்பவர்கள் . கேள்வி இல்லை; மடிப்புரையும் இல்லை; பரப்புரையும்
இல்லை. அவர்கள் தான் நற்சிந்தனை பற்றி எழுதுபவர்கள். ஆனால் படிப்பதோ ராமாயணம்;
இடிப்பதோ பிள்ளையார் கோவில் . தடுத்தால் வீதி; தடுக்காவிட்டால், கொடுத்தவன்
அல்லவே வீதியில் ஊன் இன்றி, ஆடை இன்றி அலைகிறான்? பட்டினத்தார், இராமலிங்க
அடிகளார்; கர்ணன்; எவ்வளவு உதாரணங்கள். அளந்து கொடுக்கவும், பாத்திரமறிந்து
பிச்சை போடவும் கூறியது யார்? அவர்கள் தடுத்தாட்கொண்டதால், நடுத்தெருவில
நின்றனர்?

*ஒழுக்காறாக்* *கொள்க* *ஒருவன்தன்* *நெஞ்சத்து*
*அழுக்காறு* *இலாத* *இயல்பு**.*

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க
நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

As 'strict decorum's' laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.

Couplet Explanation:

Let a man esteem that disposition which is free from envy in the same
manner as propriety of conduct.

Transliteration(Tamil to English):

ozhukkaaRaak koLka oruvan-than nenjaththu
azhukkaaRu ilaadha iyalpu

ஆகவே, நான் விதண்டாவாதம் செய்பவன் அல்ல; ஆனால், வாதம் நேர்மையுடையதாய்
இருக்கவேண்டும் . திருக்குறள் என்ன சொல்கிறது எனில், பொறாமையுடன் தடுப்பவன்
சுற்றம் ஊன் இன்றி உடையின்றித் தவிக்கும். மற்றவை அல்ல; காரண காரியதுடன்
கூடியது அல்ல. சுக்ரன் அல்லாதது வெள்ளி குரு, பொறாமையுடனா தடுத்தார்?
 என்னவாயிற்று ? பாதாளத்தில்  அல்லவே தள்ளப்பட்டான்? ஆகவே தானம் இறந்தபின்
தான் புண்யம். அதே திருவள்ளுவர் கூறினார்:  பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை
அங்கு அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை; கொடுத்தால் பொருள் போகும் ; வறுமை
வரும்; ஆனால் இவ்வுலகத்தில் இடம் உண்டு.

K RAJARAM  IRS  21224

On Wed, 21 Feb 2024 at 09:59, Chittanandam V R <[email protected]>
wrote:

>
>
> *"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்*
> *உண்பதூஉம் இன்றிக் கெடும்"*
> *என்பது குறள். **கொடுப்பதைக் கெடுப்பவன் (அவன் குடும்பத்தினரும்) உண்ண
> உணவும் உடுக்க உடையும் இன்றி கெடுவர்.*
>
>
> *இதே கருத்தை, இதே வார்த்தைகளில் கம்பனில் காணலாம்.*
>
> *விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணர்களுக்கு திருமாலின் வாமன அவதாரம் பற்றிக்
> கூறும் இடம். **"எனக்கு 3 அடி மண் வேண்டும்" என்று குள்ளனாக வந்த திருமால்
> கேட்கவும், "மகிழ்வுடன் தருகிறேன்" என்று மகாபலி கூறவும், தடுக்க முயல்கிறார்
> சுக்கிராச்சாரியார் எனும் வெள்ளி. **அதற்கு பதில் கூறும் மாவலி,*
>
>
> *"எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்*
>
> *தடுப்பது நினக்கு அழகிதோ, தகவு இல் வெள்ளி?*
>
> *கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்*
>
> *உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய் !"*
> *என்கிறான். **சுக்கிரனின் பார்வை மங்கியது.*
>
>
> *மேலும் உதவியின் பெருமையும் அளவும் செய்கிற உதவியில் இல்லை.யாருக்குச்
> செய்யப்படுகிறது என்பதை வைத்தே அதன் அளவும் சிறப்பும் நிர்ணயமாகிறது.*
>
>
> *"உதவி வரைத்தன்று உதவி:உதவி*
> *செயப்பட்டார் சால்பின் வரைத்து"*
>
> *என்பது குறள். **மாவலி ஊற்றிய நீர் கையில் பட்டதும் குள்ளத் திருமேனியுடன்
> வந்த திருமால் ஓங்கி உலகளந்த உத்தமனாக மாறி விட்டார்.*
>
>
> *"வியந்தவர் வெருக்கொள, விசும்பின் ஓங்கினான் :*
>
> *உயர்ந்தவருக்கு உதவிய உதவி ஒப்பவே" என்கிறார் கம்பர்.*
>
>
> *இன்னும் எண்ணற்ற உதாரணங்கள் திருக்குறளிலும், கம்ப ராமாயணத்திலும் மலிந்து
> கிடக்கின்றன.*
>
>
> *வள்ளுவன் இலக்கணம் வகுத்தான். கம்பன் இலக்கியம் படைத்தான்.*
>
> *வரைபடம் வரைந்தவன் வள்ளுவன். கட்டிடத்தை எழுப்பியவன் கம்பன்  என்று கூறலாம்
> அல்லவா?*
>
> *வத்சலா ஜெயராமன்*
>
> **********************************************************
>
>
>
> *சித்தானந்தம் *
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo-iNBV-kULdQQkRo%2BziWUCw%2BBHeBnMEk5rkgq6Om4mUw%40mail.gmail.com.

Reply via email to