Nervous System: நரம்பு மண்டலம் பேசுகிறேன்... நான்தான் உங்க உடம்போட வயரிங்
சிஸ்டம்!
ஆ.சாந்தி கணேஷ் <https://www.vikatan.com/author/3284-santhi.a>
4 Min Read

Nervous System: உங்க தெருவுல ஜங்ஷன் பாக்ஸ் பார்த்திருப்பீங்க... அதுல
இருந்துதான் வீடுகளுக்கு கரன்ட் போகும். அந்த மாதிரி என்கிட்டேயும் இருக்கு.
Published:Today at 6 PMUpdated:Today at 6 PM
[image: Nervous System]
Nervous System
Join Our Channel <https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41>
0Comments
Share

வீட்டோட வயரிங் சிஸ்டம் மாதிரி நான் உங்க உடம்போட வயரிங் சிஸ்டம். வீட்ல
மிக்சி இருக்கும்... கிரைண்டர் இருக்கும்... ஹீட்டர் இருக்கும்... இண்டக்‌ஷன்
ஸ்டவ் இருக்கும்... ஆனா, வயர் வழியா கரன்ட் கனெக்‌ஷன் கிடைக்கலைன்னா அதெல்லாம்
வேலை பார்க்காது இல்லையா..? நரம்பு மண்டலமாகிய நான் கனெக்‌ஷன் கொடுக்கலைன்னா
உங்க மூளை, இதயம், கிட்னி எல்லாம் சரியா வேலை பார்க்க முடியாது. மொத்தத்துல,
நான் இல்லாம நீங்க இருக்க முடியாது. உங்க மொத்த உடம்பையும் வேலை பார்க்க
வைக்கிறது, கன்ட்ரோல்ல வைக்கிறது ரெண்டுமே நான்தான்.

மூளை, முதுகுத்தண்டுவடம், நரம்புகள்னு உங்க உடல் முழுக்க இருக்கிற என்னை
நரம்பு மண்டலம்னு நீங்க சொல்றீங்க. நிறைய பேர் ரத்தக்குழாய்களை நரம்புன்னு
நினைச்சிட்டிருக்காங்க. அதனாலதான், வெயின்ஸ்னு (veins) சொல்லப்படுற
ரத்தக்குழாய்ல ஊசி போடுறதை நரம்பு ஊசின்னு தப்பா சொல்லிட்டிருக்காங்க. ஆனா,
ரத்தக்குழாய்கள் வேற... நான் வேற... மத்தபடி, எனக்கும் ரத்த ஓட்டம் வேணும்.
என்னோட செல்களுக்கு நியூரான்ஸ் (neurons)னு பேர். உங்க உடம்புல எவ்ளோ
நியூரான்ஸ் இருக்கும்னு நினைக்கிறீங்க..? கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடி. என்ன,
ஆச்சர்யமா இருக்கா..?
[image: Nervous System]
Nervous System

நரம்பு செல்களும் மத்த செல்கள் மாதிரிதான். ஆனா, என்னோட செல்கள்ல நீளமா வால்
மாதிரி இழைகள் இருக்கும். இதுக்கு ஆக்ஸன்னு (Axons) பேர். இது அதிகபட்சமா ஒரு
மீட்டர்ல இருந்து 1.5 மீட்டர் நீளம்கூட இருக்கும். தெருவுல கேபிள் வயர் போட்டு
வெச்சிருப்பாங்க பார்த்திருக்கீங்களா..? ஒரு பெரிய கேபிளுக்குள்ள சின்னச்
சின்னதா நிறைய வயர்கள் இருக்கும். அந்த மாதிரி எனக்குள்ள நிறைய ஆக்ஸன்
இருக்கும். இப்படி பல ஆயிரக்கணக்கான கேபிள்கள் சேர்ந்ததுதான் நான். மூளையில
இருந்து உடம்போட மத்த பகுதிகளுக்கும், மத்த பகுதிகள்ல இருந்து மூளைக்கும்
சிக்னல் எடுத்துட்டுப் போறது என் வேலைதான். அதுக்கு இந்த ஆக்ஸன் உதவும்.
பெரும்பாலான இடங்கள்லயும் என் ஆக்ஸன்களுக்கு மயலின் (Myelin) அப்படிங்கிற
இன்சுலேட்டர் கவரிங் (insulator covering) இருக்கும். இதுதான் நான்
மூளையிலிருந்து உடம்போட ஓர் இடத்துக்கு வேகமா சிக்னல்களை கொண்டுபோறதுக்கு உதவி
பண்ணுது.

கழுத்துக்கு மேல உள்ள பகுதிகளுக்கு மூளையில இருந்து நான் நேரடியா வந்திடுவேன்.
பார்க்கிறது, கேட்கிறது, சுவைக்கிறது, உணர்றது மாதிரியான சிக்னல்களை க்ரேனியல்
நரம்புகள் (cranial nerves) வழியா மூளைக்கு அனுப்பி வைப்பேன். அதே மாதிரி
மூளையில இருந்து முகத்துக்கு வர்ற தசை, வாய், நாக்கு தசைகள் செயல்படுறதுக்கும்
க்ரேனியல் நரம்புகள் வழியா சிக்னல் அனுப்பி வைப்பேன். கழுத்துக்கு கீழ உள்ள
உறுப்புகளுக்கு முதுகுத்தண்டு வழியா சிக்னல் அனுப்புவேன்.
[image: B Vitamins]
B Vitamins

மத்திய நரம்பு மண்டலம், புற நரம்பு மண்டலம், தன்னியக்க நரம்பு மண்டலம்னு என்னை
மூணு பிரிவா பிரிக்கலாம். மத்திய நரம்பு மண்டலம், 'மத்திய' , 'புறமத்திய'
நரம்பு மண்டலம்னு ரெண்டு பிரிவா இருக்கும். இந்த ரெண்டு பிரிவும் மூளையிலும்,
முதுகுத் தண்டுவடத்துலயும் இருக்கும். மத்திய நரம்பு மண்டலம் முழு உடம்பையும்
கட்டுப்படுத்தும். அடுத்து, புற நரம்பு மண்டலம். இது முதுகெலும்புலேருந்து
உருவாகும். இது, உடலோட பல்வேறு பகுதிகள்ல இருந்து தகவல்களை வாங்கி அதை தண்டு
வடம் வழியா மூளைக்கு அனுப்பி வைக்கும். மூணாவது, தன்னியக்க நரம்பு மண்டலம்.
உடம்புக்குத் தேவையான விஷயங்களை அதுவே செய்யும். உதாரணத்துக்கு, உங்க வயித்துல
ஆசிட்டை சுரக்க வைக்கிறதுல ஆரம்பிச்சு செரிமானம் வரைக்கும் நீங்க சொல்லாமலே
அதுவாகவே நடக்குது இல்லையா..? அதைச் செய்யுறது இந்தத் தன்னியக்க நரம்பு
மண்டலம்தான்.

உங்க தெருவுல ஜங்ஷன் பாக்ஸ் பார்த்திருப்பீங்க... அதுல இருந்துதான்
வீடுகளுக்கு கரன்ட் போகும். அந்த மாதிரி என்கிட்டேயும் இருக்கு. அதோட பேரு
கேங்லியா (Ganglia). இது தலையில ஆரம்பிச்சு உடம்போட பல இடங்கள்ல இருக்கும்.
உங்க உடம்புல இருக்கிற சுரப்பிகளுக்கும், உடம்போட சில உறுப்புகளுக்கும் இது
வழியாதான் சிக்னல் அனுப்புவேன்.

நீங்க கையை லேசா அசைக்கணும்னாலும் என்னோட உதவி வேணும். பக்கவாதம்
வந்தவங்களுக்கு இந்த கரன்ட் கனெக்‌ஷன் வேலை பார்க்காது. அவங்க கையை
தூக்கணும்னு நினைச்சாலும் மூளையில இருந்து சிக்னல் கைக்கு வராது. அந்தப்
பக்கம் வர்ற கேபிள் கட் ஆயிடுச்சுன்னு இதுக்கு அர்த்தம்.
[image: Folic Acid]
Folic Acid

என் மண்டலத்துல ஆட்டோமட்டிக்கா வேலைபார்க்கிற 'சிம்பதட்டிக்', 'பாரா
சிம்பதட்டிக்'னு ரெண்டு சிஸ்டம் இருக்கு. நீங்க பதற்றமா இருந்தீங்கன்னா
இதயத்துடிப்பு அதிகமாகுறதுக்கும் ரத்த அழுத்தம் அதிகமாகுறதுக்கும்
'சிம்பதட்டிக்' தான் காரணம். 'பாரா சிம்பதட்டிக்' இதுக்கு அப்படியே
எதிர்ப்பதமா இதயத்துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும். தன்னியக்க
நரம்பு மண்டலத்துல, அமிலச்சுரப்பு, செரிமானம்னு குடல்ல தானா நடக்கிற
வேலைகள்பத்தி சொல்லியிருந்தேன் இல்லையா..? அதையெல்லாம் செய்யுறது இந்த பாரா
சிம்பதட்டிக் சிஸ்டம்தான்.
[image: Dr. Rajesh]

என் மண்டலத்தை தாக்கக்கூடிய பல நோய்கள் இருந்தாலும், அதிகமா என்னை பாதிக்கிறது
பெரிபெரல் நியூரோபதீஸ் (peripheral neuropathies) தான். இதுக்கு தொற்று,
வளர்சிதை மாற்றம், தன்னுடல் தாக்க நோய் (auto immune disease)னு பல காரணங்கள்
இருக்கு. இதுல நீரிழிவு நோயாளிகளுக்கு வர்ற பாத எரிச்சல், வலி எல்லாம்
டயாபடிக் பெரிபெரல் நியூரோபதியும் (diabetic peripheral neuropathy) ஒண்ணு.
சிலருக்கு இதனால, கால்கள்ல உணர்ச்சி தெரியாம போயிடும். ஏதாவது குத்தி செப்டிக்
ஆயிட்டா கால் அழுகிப்போய் காலையே எடுக்க வேண்டி வரலாம். அதனால நீரிழிவு
இருக்கிறவங்க தினமும் பாதங்களை சோப் போட்டுக் கழுவி, ஏதாவது காயமிருக்கா,
புண்ணிருக்கான்னு தினமும் உத்துப்பார்க்கிறது ரொம்ப நல்லது. அப்படி ஏதாவது
இருந்தா உடனே டாக்டரை பார்த்திடுங்க.

நான் ஆரோக்கியமா இருக்கணும்னா, நல்ல சரிவிகித உணவுகளை எடுத்துக்கோங்க.
குறிப்பா, பி 12 நிறைஞ்ச உணவுகளை. இந்த வைட்டமின் என்னோட ஆரோக்கியத்துக்கு
ரொம்ப ரொம்ப அவசியம். இந்தச் சத்து பால் பொருள்கள்லயும், அசைவ உணவுகள்லயும்
நிறைய இருக்கு. ஒருவேளை சோர்வா ஃபீல் பண்ணீங்கன்னா, அதுக்குக் காரணம் இந்த
வைட்டமின் குறைஞ்சி இருக்கலாம். இதை கவனிக்காம விட்டுட்டீங்கன்னா அது
ரத்தச்சோகையில ஆரம்பிச்சு தலைவலி, தள்ளாட்டம்னு நிறைய பிரச்னைகளை
ஏற்படுத்தலாம்.

பி வகை வைட்டமின் குறைஞ்சா என் மண்டலத்துல பிரச்னை வரும். ஆல்கஹால் பழக்கம்
இருக்கிறவங்களுக்கு வைட்டமின் பி 12 குறைபாடு இருக்கும். இது மூளையில
ஆரம்பிச்சு என்னை மொத்தமா பாதிக்கும். பி 9 வைட்டமினான ஃபோலிக் ஆசிட் குறைஞ்சா
கருவுல இருக்கிற குழந்தையோட மூளை, முதுகுத்தண்டுவடம்னு என்னோட மொத்த மண்டலமும்
பாதிக்கப்படும். கர்ப்பிணிகள் ஃபோலிக் ஆசிட் மாத்திரையைப் போடாம மட்டும்
இருந்திடாதீங்க ப்ளீஸ்.

எனக்கு நல்லது செய்யணும்னா, சுகரை கன்ட்ரோல்ல வையுங்க... ஏன்னா,அது என்னை
மொத்தமா பாதிக்கும். ஆல்கஹாலை விட்டுடுங்க... சில மருந்துகளும் என்னை
பலவீனப்படுத்தும்கிறதால டாக்டரோட அட்வைஸ் இல்லாம எந்த மருந்தையும்
சாப்பிடாதீங்க...

Nervous System: I'm talking about the nervous system... I am your body's
wiring system!

A. Shanti Ganesh

Like the wiring system of your house, I am the wiring system of your body.
There is a mixer in the house... there is a grinder... there is a heater...
there is an induction stove... but if there is no current connection
through a wire, it will not work..? If I, the nervous system, does not
provide connection, your brain, heart and kidney will not be able to work
properly. After all, you cannot be without me. It is I who makes your whole
body work and keeps it under control.

You call me the nervous system, which is the brain, spinal cord, and nerves
throughout your body. Many people think of blood vessels as nerves. That is
why injecting into blood vessels called veins is mistakenly called
intravenous injection. But, blood vessels are different... I am
different... According to religion, I also need blood flow. My cells are
called neurons. How many neurons do you think you have in your body? Almost
10 thousand crores. What, are you surprised..?

Nerve cells are similar to brain cells. But my cells have long, tail-like
filaments. This is called Axons. It can be a maximum of one meter to 1.5
meters in length. Have you ever seen cable wires hanging on the street? A
large cable can have a lot of tiny wires. I have a lot of axons like that.
I have thousands of such cables. My job is to take the signal from the
brain to the mental parts of the body and from the mental parts to the
brain. This axon helps with that. In most places, my axons have an
insulator covering of myelin. This is what helps me to carry signals from
the brain to a place in the body faster.

From the brain I come directly to the areas above the neck. Seeing,
hearing, tasting and feeling signals are sent to the brain through the
cranial nerves. In the same way, I will send a signal from the brain to the
face through the cranial nerves to activate the muscles of the mouth and
tongue. I send signals through the spine to the organs below the neck.

It can be divided into three parts namely central nervous system,
peripheral nervous system and autonomic nervous system. The central nervous
system has two divisions, the 'central' and the 'peripheral' nervous
system. These two divisions are in the brain and the spinal cord. The
central nervous system controls the entire body. Next, the peripheral
nervous system. It originates from the spinal cord. It receives information
from different parts of the body and sends it to the brain through the
spinal cord. Third, the autonomic nervous system. It does what the body
needs. For example, does your stomach secrete acid and all the way to
digestion without your telling it? It is the autonomic nervous system that
does that.

You must have seen the junction box on your street... It is from that that
the electricity goes to the houses. I have that model too. Its name is
Ganglia. It starts in the head and can be found in many places on the body.
I will send a signal to the glands in your body and some organs of the body
through this way.

Even if you want to move your hand slightly, you need my help. This current
connection does not work for people with paralysis. Even if they want to
lift their hand, the signal from the brain does not reach the hand. This
means that the cable coming to that side is cut.

In my region there are two systems 'Symbhattik' and 'Para Simbhattik' which
work automatically. If you are nervous, the heart rate increases and the
blood pressure increases because of 'Simbadhatik'. 'Para Sympathetic' is
the antidote to this and lowers heart rate and blood pressure. Didn't I
tell you about the autonomic nervous system, acid secretion, digestion and
the work that happens in the intestines? It is this para-symbolic system
that does all that.



Dr. Rajesh

Although there are many diseases that can affect my system, the one that
affects me the most is peripheral neuropathies. There are many reasons for
this like infection, metabolism, auto immune disease. Diabetic peripheral
neuropathy is a common symptom of diabetic foot irritation and pain. For
some people, this causes them to lose sensation in their legs. If something
sticks and the foot becomes septic, the foot may rot and need to be removed
in the morning. If something sticks and the foot becomes septic, the foot
may rot and need to be removed in the morning. Therefore, it is very good
for people with diabetes to wash their feet with soap every day and check
for any wounds or sores every day. If there is something like that, see a
doctor immediately. If I want to be healthy, take good and balanced foods.
Specifically, foods rich in B12. This vitamin is very essential for my
health. This nutrient is abundant in dairy products and non-vegetarian
foods. If you feel tired, it may be due to deficiency of this vitamin. If
you do not pay attention to this, it can start with anemia and cause many
problems such as headaches and tremors. People who are addicted to alcohol
are deficient in vitamin B12. It starts in the brain and affects me as a
whole. Folic acid deficiency of vitamin B9 affects the brain, spinal cord
and entire body of the fetus. Pregnant women please don't take folic acid
tablets. If you want to do good for me, keep sugar under control... because
it will affect me completely. Avoid alcohol... some medicines also make me
weak so don't take any medicine without doctor's advice...

KR IRS 10 3 24

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor5bUkVHDd%3DhtAAZMq%3Du9FYG0peu3UzeEwtGDu0JhaO2A%40mail.gmail.com.

Reply via email to