As received from my friend. Thi tamil poem has 2 sides; the donor says the
venba in the opening 4 lines In short he means the poet has two tongues;
one will curse; another will praise; my friend say does it not apply in the
present scenerio?; i add more: does it not apply even in our micro world?
KR IRS  25324

போற்றினும் போற்றுவர் : பொருள் கொடாவிடின்

தூற்றினும் தூற்றுவர்: சொன்ன சொற்களை

மாற்றினும் மாற்றுவர்: வன்கணாளர்கள்

கூற்றினும் பாவலர் கொடியவர் ஆவரே!



- என்று ஒரு அரசன் புலவர் இயல்பைப் பற்றி பாடினான். இதற்குக் காளமேகம் சரியான
உதாரணம். ஒருநாள் பசியோடு நாகைப்பட்டினம் வழியே காளமேகம் போகிறான். அந்த ஊரில்
காத்தான் என்பவரது சத்திரத்திற்குப் போனால் சாப்பாடு கிடைக்கும் என்று யாரோ

சொன்னதைக் கேட்டு அங்கே போகிறான். வெகுநேரம் காத்திருந்தும் சாப்பாடு தயாராகிற
வழியாகத் தெரியவில்லை. கடும்பசி கண்ணை இருட்டுகிறது. காளமேகத்துக்குக்
கடுங்கோபம் வருகிறது. கோபத்தில் ஏதாவது வசைப்பாடு விட்டால் காரியம்
கெட்டுவிடும். எனவே சாப்பாடு தயாராகும்வரை பல்லைக் கடித்தபடி
காத்திருக்கிறான். ஓரு வழியாக இரவு கழிந்து விடிகிற நேரத்தில்தான் உணவு
பரிமாறப்படுகிறது.

ஆத்திரத்தோடு காளமேகம் பாடுகிறான்;



கத்துக்கடல் சூழ் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்

அத்தமிக்கும்போதில் அரிசி வரும்; - குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளியெழும்.



-`என்னய்யா சத்திரம் நடத்துறார் இந்த காத்தான்? காலைலேர்ந்து காத்திருக்கிறோம்,
அஸ்தமிக்கிற நேரத்துலதான் அரிசி வருது; அப்புறம் அதைக் குத்தி உலையிலே
போடும்போது ஊரே அடங்கி தூங்கப் போயிடுது; சாதம் வெந்து ஒரு அகப்பைச் சோறு
இலையிலே விழறத்துக்குள்ளே கிழக்கே வெள்ளி நட்சத்திரம் கெளம்பிடுது!` என்று வசை
பாடுகிறான். ஆனால் அதற்காக சாப்பிடாமல் இருக்க முடியாதே! சாப்பிடுகிறான்.
சத்திரத்து நிர்வாகியின் காதுக்கு காளமேகம் பாடிய இந்த வசைப்பாட்டு போகிறது.
வந்திருப்பவர் காளமேகம் என்று தெரிகிறது. ஐயோ! இந்த ஆள் பாடினார் என்றால்
சத்திரத்துப் பெயர் கெட்டுப் போகுமே என்று பதைத்து புலவரிடம் ஓடி வருகிறார்.`ஐயா!
மன்னிக்கணும்!இன்னிக்குக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. உண்மைதான். நீங்க புகழ்
பெற்ற கவிஞர்1 நீங்க இப்படி வசைபாடினது வெளியே தெரிஞ்சா சத்திரத்துப் பெயர்
கெட்டிடும். பெரியமனசு பண்ணிப் பாட்டை மாத்திப் பாடணும்` என்று மிகப் பணிவோடு
கேட்டுக் கொள்கிறார். இப்போது பசியாறிவிட்ட நிலையில் கோபம் குறைந்திருக்கிறது
காளமேகத்துக்கு. அதோடு சத்திரத்து நிர்வாகியின் பணிவான வேண்டுகோள் நெஞ்சை
நெகிழ்விக்கவே மனம் இளகிச் சொல்கிறான்: `பாட்டை மாத்தவேணாம்! அப்படியே
இருக்கட்டும்.` என்கிறான். `அது எப்படி ஐயா?` என்கிறார் நிர்வாகி. பொருளை
மாற்றி விளக்கம் தருகிறான்:



`நாகைப் பட்டினத்து காத்தான் சத்திரத்துக்குப் போனால் அங்கே சாப்பாடு எப்படிப்
போடுறவார்கள் தெரியுமா? காலையிலிருந்து அஸ்தமிக்கும் வரையிலும் அரிசி வந்து
கொண்டே இருக்கும்; அவ்வளவையும் உலையிலே இட்டு சமைத்தால் ஊரே சாப்பிடலாம். ஒரு
அகப்பை அன்னம் இலையில் விழும்போது பார்த்தால் அப்படியே வெள்ளி
நட்சத்திரம்போலப் பளிச்சிடும்! அவ்வளவு வெண்மையாயிருக்கும் சோறு`



 He who may praises and praises: Don't give gifts to poets
they are the Blasphemers: the words said hitting
might Change and Change for good: Chitraguptan even may be good;
Despite the statement, poets are  deadly!

- A king sang about the nature of the poet. Kalamegam is a perfect example
of this. One day Kalamekam goes through Nagaipattanam hungry. Someone said
that if you go to Kathan's inn in that town, you will get food
Hearing what was said, he goes there. Waited for a long time but did not
see the way the food was being prepared. Hunger darkens the eyes. Black
cloud is getting angry. If you let something slip in your anger, things
will go bad. So he grits his teeth and waits until the meal is ready. In
one way, food is served only after nightfall.
Kalamekam sings with rage;

Sea  sheltered the nagapatnam in kathaan charity- inn
Rice will come only after sun set; - cooking will
late in the  night starting the furnace when first food is served
Silver-suran  will rise on the east.

- ``Who runs this inn? We wake up in the morning and wait, the rice comes
only at sunset; Then when it is pierced and put in the furnace, the whole
town goes to sleep; Vasi sings that the silver star shines in the east
while the rice is cooked and a handful of rice falls on the leaf. But you
can't help but eat it! He eats Kalamekam sang this song to the innkeeper's
ears. It seems that the person who has come is Kalamekam. Alas! If this man
sings, the name of the inn will be ruined and he runs to Bulavar. ``Sir!
Sorry! It's a little late today. It's true. You are a famous poet. If it is
known that you have lashed out like this, the name of the inn will be
tarnished. He humbly requests that we should sing the song with a big
heart. Kalamegam has lost his anger now that he is hungry. In addition to
this, the inn manager's humble request to soften his heart, he says: ``I
don't want to sing! Let it be like that.'' ``How is that sir?'' says the
administrator. He changes the subject and explains:

``In Nagapatnam inn, if satrving goes to the inn, do you know how they will
welcome the guest in the service of  feeding  there? Rice keeps coming from
morning till sunset; they stop not the cooking so much in the oven for so
many people assembled. , you can eat it non-stop. When the early guest to
last when served, rice that  falls on any leaf, will sparkles like a silver
star! The rice is so white.  KR  IRS   25324

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoou-NaJ31YXcM5j4ZZ0LgtrzMDiVXWSykNxn-m82Re%2BkQ%40mail.gmail.com.

Reply via email to