இந்தியா: 4.7 கோடி ஆண்டுகள் முன் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி பாம்பு' - எங்கே? எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? [image: இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 4.7 கோடி ஆண்டுகள் பழமையான 'வாசுகி' பாம்பு - எவ்வளவு நீளம் தெரியுமா?]
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் - 21 ஏப்ரல் 2024 குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பண்டாரோ பகுதிக்கு அருகே உள்ள லிக்னைட் சுரங்கத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சில புதைபடிவங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதுவே உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு புதைபடிவங்களில் மிக நீளமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த புதைபடிவங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் பாம்பின் நீளம் 10 முதல் 15 மீட்டர் வரை இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது 4.7 கோடி ஆண்டுகள் பழமையான புதைபடிவம் என நம்பப்படுகிறது. ஐஐடி ரூர்க்கி பேராசிரியர்கள் சுனில் வாஜ்பேயி மற்றும் தேப்ஜீத் தத்தா ஆகியோர், இந்தப் புதைபடிவம் அடையாளம் காணப்பட்டது குறித்து, இந்துஸ்தான் டைம்ஸில் ஒரு கட்டுரையை வெளியிட்டனர். 'நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' இதழிலும் இதன் ஆய்வுக்கட்டுரை வெளியாகியுள்ளது.இந்தப் பாம்புக்கு 'வாசுகி இண்டிகஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. புராணங்களைப் பார்த்தால், இந்தப் பெயர் சிவபெருமானுடன் தொடர்புடைய பாம்பைக் குறிக்கப் பயன்படுகிறது. 21 April 2024 Archaeologists have examined some fossils collected from a lignite mine near Bandaro area in Kutch district of Gujarat. It has been found that this is the longest snake fossil ever found in the world. The researchers estimated that the length of the snake may be between 10 to 15 meters. This fossil is believed to be 4.7 million years old. IIT Roorkee professors Sunil Vajpayee and Debjeet Dutta published an article in Hindustan Times about the identification of this fossil. A research paper has also been published in the journal 'Nature Scientific Reports'. This snake has been named 'Vasuki Indicus'. If we look at the Puranas, this name is used to refer to the snake associated with Lord Shiva. K Rajaeam IRS 23424 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooUAhG9DqxLRhFO_4aT1HR24G2hsZUNAR_E2a2qT9-Axw%40mail.gmail.com.
