---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Sat, May 4, 2024 at 9:41 PM
Subject: Re: Chaar Dham Yathra (24)
To: Chittanandam V R <[email protected]>, Kerala Iyer <
[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>,
Mathangi K. Kumar <[email protected]>, APS Mani <[email protected]>,
Srinivasan Sridharan <[email protected]>, SRIRAMAJAYAM <
[email protected]>


Thanks Sir - for forwarding this beautiful, Divine narration.

When we visited, we were told we can only go by foot to the places
mentioned in the article,  but it is news to me that Dolis (pittu) are
available. God Willing, we may go on the Char Dham yatra again.

We were planning but covid and the subsequent "revenge travel" have altered
our plans. Apart from the Divine Kheshtras, the whole state (Uttarakhand
also called Dev Bhoomi)  is a feast to the eyes.  It is an experience to
cherish.

Regards

N Sekar


On Saturday, May 4, 2024 at 04:20:12 AM GMT+4, Chittanandam V R <
[email protected]> wrote:




*கேதார்நாத் பத்ரிநாத் யாத்திரை - 24*
*மானா கிராமமும் சரஸ்வதி நதியும் (தொடர்ச்சி)*

*கோவை சிவசுப்பிரமணியன் *



*வேதகால சரஸ்வதி நதி, தாய் என்று புகழப்படுகிறாள். கடவுள் என்றும்
போற்றப்படுகிறாள். அவளின் கரையிலேதான் தவச்சாலைகளும், ஆசிரமங்களுக்கும் பல
இடங்களில் இருந்திருக்கின்றன. இந்த நதிக்கரை தன்னை நம்பி இருந்த மக்களுக்குச்
செழுமையான வாழ்க்கையின் ஆதாரமாக இருந்திருக்கிறது.*

*வேத காலத்தில் சரஸ்வதி நதிதான் இவ்வளவு பெருமைக்குரியதாக இருந்திருக்கிறது.
பிற்காலத்தில் எழுதப்பட்ட புராணங்களில் மிக உயரிய இடத்தைப் பெற்றிருக்கும்
கங்கை அப்போது சரஸ்வதி நதி அளவுக்கு புகழ் பெறவில்லை. *

*சரஸ்வதி, த்ருஷத்வயோர்தேவ நத்தோர்ய தந்தரம் *
*ததேவனிர்மிதம் தேஸம் ப்ரஹ்மாவர்தம் ப்ரசக்ஷதே *

*திருஷத்வதி நதிக்கும் சரஸ்வதி நதிக்கும் இடைப்பட்ட சமவெளி பிரம்மவர்த்தம்
அதாவது பிரம்மாவின் பூமி, தெய்வ பூமி என்று அழைக்கப்பட்டது என்று மனு ஸ்ம்ருதி
(2-17) சொல்கிறது. இன்றைக்கு உத்தர்கண்ட் மாநில அரசு தங்கள் மாநிலத்தைத் தேவ்
பூமி என்று பெருமையுடன் சொல்வது மிகப் பொருத்தமானதே.*

*வியாச மகரிஷியின் ஆசிரமம் சரஸ்வதி நதிக்கரையில்தான் அமைந்திருந்தது.
காலத்தால் அழியாத மஹாபாரதத்தை இந்த நதியின் கரையில் அமைந்திருந்த ஆசிரமத்தில்
இருந்துதான் அவர் அருளினார் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்தப் பயணத்தில்
இன்னும் சற்று நேரத்தில் அந்த ஆசிரமத்தை நாம் பார்க்கப் போகிறோம். அவர்
அமர்ந்திருந்த குகையையும் தரிசிக்கப் போகிறோம் அவர் சொல்லச் சொல்ல மகாபாரதத்தை
எழுதிய விநாயகர் பெருமானின் ஆலயத்தையும் அதன் அருகே காணப் போகிறோம். *

*வேத காலத்தில் சரஸ்வதி, இந்த மலையில் பிறந்து, மலையைக் கடந்து பூமிக்கு,
சமவெளிப் பகுதிக்கு வந்து, அங்கிருந்து நெடும் பயணம் செய்து, தன்
வழிகளையெல்லாம் பசுமையாக்கி மக்களை மிக வளமாக வைத்திருந்து, பின் கடலில்
சென்று கலந்தாள். ஆனால் இன்றைய சரஸ்வதி, உற்பத்தியாகும் இடத்திலேயே சிறிது
தூரத்தில் பூமிக்கு அடியில் மறைந்து பிறகு சமவெளியில் மேலே தோன்றி ராஜஸ்தான்
பாலைவனத்தில் சென்று மறைந்து விடுகிறாள். அந்த இடத்திலிருந்து சில நூறு
கிலோமீட்டர் கடந்துதான் கடல் இருக்கிறது. சமவெளியில் பெருமளவு இந்த நதி
வற்றிப் போய்விட்டது. இருந்த அடையாளம் வெளியே தெரியாமல் மறைந்து போய்விட்டது.*

*சரஸ்வதியின் உற்பத்தி ஸ்தானத்தில் ஏற்கனவே நான் சொன்னபடி அழகிய சிறியதொரு
கோயில் இருக்கிறது. நாங்கள் போயிருந்த சமயம் அந்தக் கோயில் மராமத்துப்
பணிகளுக்காகத் திருக்காப்பிடப்பட்டிருந்தது. கோயிலின் வெளியே முன்புறம்
பிரம்மாண்டமான ஒரு சரஸ்வதி படம். நம் ரவி வர்மா வரைந்த ஓவியத்தின் அச்சு
வடிவம். அருவியாகக் கொட்டும் சரஸ்வதி நதிக்கு அருகில் இந்தக் கோயில்
அமைந்திருக்கிறது. சரஸ்வதியில் தீர்த்தம் பிடிப்பதற்காக அங்கேயே சிறு சிறு
கேன்கள் விற்கிறார்கள். இது சரஸ்வதியில் மட்டுமல்ல, நாங்கள் சென்றிருந்த
எல்லாப் புண்ணிய நதிகளின் கரைகளிலும், சங்கமங்களிலும் இது போன்ற மிகச் சிறியது
முதல் பெரிய கேன்கள் வரை விற்கிறார்கள். சரஸ்வதியைப் பொருத்தவரை விழும்
அருவியின் அருகில் நாம் செல்ல முடியாது. ஆகையால் கேன்கள் விற்பவர்களே சரஸ்வதி
தீர்த்தத்தை அதில் நிரப்பி விற்கிறார்கள். இருபது ரூபாயிலிருந்து விலை.
நாங்கள் சிறிய கேன்களை வாங்கி அதிலிருந்த தீர்த்தத்தை மீண்டும் நதியிலேயே
கொட்டிவிட்டு, சரஸ்வதி உற்பத்தியாகும் அருவியிலிருந்து பிரிந்து வரும் ஒரு
சிறிய தாரையிலிருந்து நேரடியாகக் கேன்களில் நிரப்பிக் கொண்டோம். *

*அருவி விழுந்து ஆறாகப் பெருகி ஓடும் இடத்தை எதிரில் பாறையிலிருந்து
பார்க்கும் பொழுது, ஓர் உருவ அமைப்பு தெரிகிறது. நழுவத் தயாராக இருக்கும் ஒரு
பெரும் பாறையைப் பெரிய கைகளால் தடுத்து நிறுத்துவது போன்ற தோற்றத்துடன் அந்த
அமைப்பு இருக்கிறது. அதாவது ஒரு பெரிய பிரம்மாண்டமான உள்ளங்கையின் அச்சுபோல.
உள்ளூர் நம்பிக்கைகளின்படி அந்த இடத்தில் திரௌபதி நடந்து வரும்போது பாறை நழுவ
விருந்ததாகவும் பீமன் தன் உள்ளங்கையால் அதைத் தாங்கிப் பிடித்ததாகவும்
நம்பிக்கை. அந்தப் பாறையின் உருவ அமைப்பும் அப்படித்தான் இருக்கிறது.
மகாபாரதம், ராமாயணம் ஆகியவை குறித்த கிளைக் கதைகளும் உள்ளூர் மரபுகளை ஒட்டிப்
பிறந்த கற்பனைக் கதைகளும் இந்தியா முழுவதும் விரவிக் கிடக்கின்றன. நம்
புராணங்களும், இதிகாசங்களும் பாரத மக்கள் அனைவரையும் ஒன்றாக அரவணைக்கும்
கைகள். படித்தவர்கள், பாமரர்கள் அனைவரின் மனங்களிலும் ஊடும், பாவுமாக;
ரத்தமும், சதையுமாகப் இவ்விரு இதிகாசங்களும், இந்த நம்பிக்கைகளும் பின்னி
இருக்கின்றன.*

*நாங்கள் சில வருடங்களுக்கு முன் காசிக்குச் சென்றிருந்தபோது பயணத்தின் ஒரு
பகுதியாகப் ப்ரயாக்ராஜ் சென்று திரிவேணி சங்கமத்தில் நீராடினோம். ஆற்றின்
கரையிலிருந்து வெகு தூரம் படகுகள், தோணிகள் மூலம் உள்ளே சென்று, குறிப்பிட்ட
இடத்தில் கங்கையும், யமுனையும், தண்ணீருக்கடியில் கண்ணுக்குத் தெரியாமல்
சரஸ்வதியுமாக மூன்று நதிகளும், அதாவது திரி வேணிகளும், சங்கமம் ஆகும் இடத்தில்
நீராட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். எங்களில் நான்கைந்து பேரை
அழைத்துச் சென்ற படகோட்டி மிக அன்போடு அந்த இடத்தின் பெருமையையும்
ராமாயணத்தோடு அந்த இடத்துக்கு உள்ள தொடர்புகளையும் விவரித்து கூறிக் கொண்டே
படகை ஓட்டி வந்தார். அங்கே படகோட்டிகள் தமிழ் உட்பட பாரத நாட்டின் பாஷைகளில்
பலவற்றை ஓரளவு அறிந்திருக்கிறார்கள்.எங்கள் படகோட்டி பாமரர் தான். பண்டிதர்
அல்லர். ஆனால் கங்கையோடு தொடர்புடைய ராமாயண நிகழ்ச்சிகளை மிக உருக்கமாக
எங்களுக்கு அவர் கூறிக் கொண்டே வந்தார். *

*அவர் பேச்சில் உருகிய என் மனைவி கோயிலில் சாத்துவதற்காகத் தான் வாங்கி
வைத்திருந்த புதிய புடவையை எடுத்துக் கவருடன் அவருக்கு கொடுத்தார். அந்த ஏழைப்
படகோட்டி அதை அன்போடு வாங்கிக் கொண்டதோடன்றி தனக்குத் தெரிந்த தமிழில் “இது
குகனுக்கா அம்மா?” இன்று பணிவுடன் கேட்டது எங்களை நெகிழ வைத்தது. எங்களுக்கு
என்றைக்கும் மறக்க முடியாத நிகழ்ச்சி அது. ராமாயணமும் மஹாபாரதமும் நாம் பாரதத்
திருநாட்டினை, அதன் மக்களை எப்படி இணைக்கிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று
வேண்டும்?*

*மேலே சரஸ்வதியைத் தரிசனம் செய்து விட்டுக் கீழே இறங்கி வரும் வழியில் அதே
மலையில் சரஸ்வதிக்குச் சற்று அருகிலேயே இரண்டு முக்கியமான இடங்கள்
இருக்கின்றன. ஒன்று வியாசர் மகாபாரதத்தை எழுதிய குகை. வியாச கூஃபா என்று
அழைக்கப்படுகிறது. கூஃபா என்றால் குகை என்று அர்த்தமாம். அதற்குச் சற்று கீழே
கணேஷ் கூஃபா என்ற இடம். வியாசர் சொல்லச் சொல்ல மகாபாரதத்தை எழுதிய விநாயகருடைய
கோயில் அமைந்திருக்கும் இடம். இந்த இரண்டு இடங்களையும் அவசியம் தரிசிக்க
வேண்டும். சரஸ்வதி உற்பத்தி ஸ்தானம் உட்பட இம்மூன்று இடங்களுக்கும்
முடிந்தவர்கள் நடந்தே போகலாம் முடியாதவர்களுக்கு பிட்டு எனப்படும் கூடைச்
சவாரி கிடைக்கும். கணேஷ் கூஃபா முதலில் இருக்கிறது. இங்கு ஒரு சிறிய கணபதி
கோயில். அதைத் தரிசனம் செய்துவிட்டுச் சிறிது மேலே சென்றால் வியாச கூஃபா
என்னும் வியாசர் குகை. வியாசரால் மஹாபாரதம் அருளப்பட்ட இடம். இந்தக்
குகைக்குள் வியாசருடைய விக்ரகம் இருக்கிறது. *

*இந்தக் கிராமத்தில் இந்தச் சிறிய மலையேற்றப் பாதையில் ஆரம்பத்திலிருந்து
இறுதிவரை இருபுறமும் கடைகள் இருக்கின்றன. பெரும்பாலும் கைவினைப் பொருட்கள்,
குறிப்பாகக் குளிர் ஆடைகள் விற்கின்ற கடைகள். மக்கள் அனைவரும் எளிமையாகவும்
மலர்ந்த முகத்துடனும் இருக்கிறார்கள் இந்தச் சிறிய வியாபாரிகள் குறிப்பாகப்
பெண்கள் முகத்தில் எப்போதும் புன்னகைதான். யமுனோத்ரியிலும், கேதாரிலும்
நம்மைச் சுமக்கும் டோலிவாலாக்கள் போல புன்னகையாலேயே நெய்யப்பட்ட முகங்கள்.
வழியில் சில டீக்கடைகளும் உண்டு. அவற்றில் ஒன்றுதான் நான் முன்னதாக சொன்ன
இந்தியாவின் கடைசி அதாவது முதல் டீக்கடை. *

*யாத்திரையின் இறுதிக் கட்டமான பத்ரிநாத் யாத்திரையை முடித்துக் கொண்டு அதை
ஒட்டிய மானா கிராமத்தில் சரஸ்வதி தரிசனம் செய்ததோடு சார்தாம் யாத்திரை
முடிவுற்றது. இனி முழுவதும் கீழ்நோக்கிய பயணம்தான்.*

*- கோவை சிவசுப்பிரமணியன் *
***************************************************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZeWnfHHJ9XnU4%2BPJ_jXzy4t%2B9LHhR-vn2KzXm5gsdAsWQ%40mail.gmail.com.

Reply via email to