No Jalras for such writers; is this not sharp? KR IRS  7524

வாசலில் சோமு சத்தமாகக் கேவியழும் ஒலி கேட்டதும் வாசற்பக்கம் ஓடிவந்தாள்
அன்னம்.

வாசற்திட்டில் அமர்ந்திருந்தவனைத் தெரு வோடு போன பையன்கள் யாரோ சீண்டி
கேலிசெய்து கிள்ளிவிட்டு ஓடியிருக் கிறார்கள். அவன் புறங்கையில்
நகக்கீறல்களும் ரத்தமும் தெரிய, சோமு வலியில் அழுது கொண்டிருந் தான்.

“வாசப்பக்கம் போகாதே போகாதேன்னா கேக்கறியா?” எரிச்சலும் ஆதங்கமுமாய் அவனை
உள்ளே இழுத்து வந்தாள்.

“கண்டவங்களும் இப்படி காயப்படுத்த வாடா உன்னையப் பெத்தேன்?” நகக்கீறலைத்
துடைத்து, மஞ்சளும் எண்ணெயும் தடவினாள்.

கார்த்திகை மாதம் வந்தால் சோமுவுக்கு 20 வயதாகிவிடும். எந்தக் குறையுமின்றி
நல்ல படியாகத்தான் பிறந்தான். ஐந்து வயது வரை புத்திசாலிக் குழந்தையாய்
நன்றாகத்தான் இருந்தான். ஆசிரியர் கற்பித்ததை கற்பூரமாய்ப் பற்றிக்கொண்டு
நன்கு படித்துக் கொண்டிருந் தவன்தான். அவனின் ஆறாவது பிறந்தநாளுக்கு
இருதினங்களுக்கு முன்பு, வகுப்பில் எல்லாருக் கும் தானும் சாக்லேட் கொடுக்க
வேண்டு மென்று அப்பாவை நச்சரித்தான்.

இதைக்கேட்டு முருகேசன், அன்னத்தைக் கோபித்தான்.

“இதென்ன புதுப்பழக்கம்? யார் ஆரம்பிச்சது இதையெல்லாம்? ஏழைங்க படிக்கற சாதாரண
கிராமத்து அரசுப் பள்ளி அன்னம் இது. நமக்கெல்லாம் பொறந்தநாள் கொண்டாடுற
வழக்கமிருக்கா சொல்லு?’’

“தெரியாத்தனமா நான்தான் நாளை மறு நாள் உனக்கு பொறந்தநாள்னு சொல்லிட் டேன்யா.
போன மாசம் பஞ்சாயத்து தலைவர் பையன் தன் பொறந்தநாளுக்கு எல்லாருக்கும் சாக்லேட்
கொடுத்தானாம். நானும் எல்லாருக் கும் சாக்லேட் கொடுக்கவான்னு கேட்டான். புள்ளை
ஆசைப்படுது. இந்த ஒருமுறை வாங்கிக் கொடுத்துடேன்.”

முருகேசன் யோசித்தான். 50 பைசா சாக்லேட் வாங்க வேண்டுமென்றாலும் 30 ரூபாயாவது
தேவைப்படும். ஒருநாள் கூலியே மிஞ்சிப்போனால் 100 ரூபாய்தான் கிடைக்கும்.
ஆனால், 200 ரூபாய் கொடுத்ததாகக் கையெழுத்து வாங்கிக்கொள்வார் கான்ட் ராக்டர்.
அவனைப் பகைத்துக்கொண்டால் எந்த வேலையும் கிடைக்காது.

முருகேசன் யோசித்தான். அன்றிரவு கான்ட்ராக்ட்டரைப் பார்த்து பேசினான். “என்ன
வேலை வேண்டுமானாலும் செய் கிறேன், நாளை மட்டும் கூடுதலா கூலி கிடைக் கறாப்பல
ஏதாச்சும் வேலை கொடுத்தால் உதவியா இருக்கும். பணம் தேவைப்படுது.”

“அப்டின்னா?”

“அது... ரெண்டுநாள் வேலையை ஒரே நாளில்கூட செய்யறேன்.”

அவர் யோசித்தார்.

“சரி... நான் சொல்ற ஊருக்குப் போறியா?”

“போறேன்யா.”

“விலாசம் தர்றேன். நாளைக்காலை மொத பஸ்ல கிளம்பு. நான் சொல்ற ஆளைப்பாரு. கட்டட
வேலைதான். உனக்கேத்த வேலை தருவாங்க. அவங்க சொல்ற வேலையெல்லாம் நேரம் பார்க்காம
செய். தினக்கூலி அதிகம் கிடைக்கும்.”

``ரொம்ப நன்றிங்கய்யா’’ - கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தான். அன்னத்திடம்
விஷயத் தைச் சொன்னான். மறுநாள் காலையே கிளம்பினான். மதியத்துக்கு சாப்பிட
ஏதேனும் கட்டித்தரச் சொன்னான்.

“அப்பா நானும் பஸ்ல வர்றேன்” - சோமு, அப்பாவின் முழங்காலைக் கட்டிக் கொண்டான்.

“நான் வேலைக்குப் போறேன் கண்ணு. உனக்கு இஸ்கோலு இருக்குல்ல? இன்னொரு நாள்
கூட்டிட்டு போறேன் உன்னை.”

சோமு கை, கால் உதறி அழத் தொடங்கி னான்.

“கூட்டிட்டுதான் போயேன். புள்ளை அழுவுதில்ல?”

“இஸ்கோலு இருக்கேடி?”

“ஆமா, பெரிய கலெக்ட்டருக்கு படிக்கிறான் பாரு. ரெண்டு பேத்துக்கும் சோறு
கட்டறேன். கூட்டிட்டு கிளம்பு. த பாரு சோமு... அப்பாவைத் தொந்தரவு செய்யாம
நல்ல பிள்ளையா இருக்கணும் புரியுதா?”

அவர்களை அனுப்பிவிட்டு தன்னுடைய தூக்குப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அறுப்பு
வேலைக்குக் கிளம்பினாள்.

NB  Translation may not provide the impact. KR

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqE%2B_Sm4ba7TB%3DN62hjiB2%3DZpHgz5%3D5wdGRFty1AiJYZQ%40mail.gmail.com.

Reply via email to