---------- Forwarded message --------- From: N Sekar <[email protected]> Date: Wed, May 22, 2024, 11:46 AM Subject: Re: Fwd: Mother To: <[email protected]>, Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>, Mathangi K. Kumar < [email protected]>, Narayanaswamy Sekar <[email protected]>, APS Mani <[email protected]>, Srinivasan Sridharan <[email protected]>, SRIRAMAJAYAM <[email protected]>
Thanks Sir. Painful truth but thank God, things are changing, albeit slowly, and we can see the difference. I have told all the womenfolk in our family that if they really care for others then it is imperative for them to take care of themselves first. I give them the airlines example where we are advised that in the event of a drop in cabin pressure, to wear our masks first, before we worry about others. Bur mothers are mothers. They derive pleasure by undergoing suffering for their children. N Sekar Yahoo Mail: Search, Organize, Conquer <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_> On Wed, May 22, 2024 at 3:47 AM, Chittanandam V R <[email protected]> wrote: *தலைவி!!* *"அம்மா காஃபி" என்றாள் அனு.* *"அம்மா எனக்கு டீதான்* *வேணும்" என்றான் அருண்.* *"சரி சரி உங்க அப்பாவுக்கு ஓட்ஸ் கஞ்சி குடுத்துட்டு வரேன்" * *என்ற பத்மா வேகவேகமாக இயங்கி* *வேலைக்கு செல்லும் மகனுக்கும்,* *காலேஜ் செல்லும் மகளுக்கும்* *கேட்டதை கொடுத்துவிட்டு* *ஐந்து நிமிடம் உட்காரலாம் என்று* *வந்து சோஃபாவில் அமர்ந்தாள்.* *வயிற்றில் பசி கிள்ளியது. சாப்பிடலாமா என்று ஒரு மனம் நினைக்க, * *இன்னும் எத்தனை எத்தனை வேலைகள் வரிசை* *கட்டி நிற்கின்றது என்ற எண்ணம்* *வந்து அதை தடுத்தது.* *எல்லோருக்கும் கொடுத்தது போக* *மீதமிருந்த ஆறிய காஃபியை* *தூக்கி வாயில் ஊற்றி கொண்டு* *மீண்டும் வேலையை தொடர்ந்தாள்.* *தினமும் கணவன் நாகராஜனுக்கு காலையில் ஓட்ஸ், மதியம் கீரை, சப்பாத்தி, * *ஒரு பொரியல் இவை அனைத்தும் கூடிய சாப்பாடு. * *மாலையில் பிஸ்கட், டீ * *வாக்கிங் சென்று விட்டு* *வருவதற்குள் ஏதாவது ஒரு சிற்றுண்டி தயாரித்து வைத்திருக்க வேண்டும். * *இல்லை என்றால்* *வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்.* *வளர்ந்த பிள்ளைகள் இருந்தாலும்* *தனி அறையில்தான் படுக்கை.* *வெட்கமாக இருந்தாலும் * *கணவன் வேற்று மனைக்கு போய்விடக் கூடாது* *என்பதால் பொறுத்துக் கொண்டாள்.* *ஒருநாள் சமையல் செய்யும் போது தலைசுற்றி மயக்கம் வரும்போல்* *இருக்க மெதுவாக கணவனை* *அழைத்துச் சொன்னாள், * *அதற்கு "தல சுத்தலுக்கெல்லாம் பயமா? * *சரி, எனக்கு கொஞ்சம் சுக்கு கசாயம் வச்சுகுடு. * *தொண்டை**லேசா கரகரன்னு இருக்கு" என்று* *கட்டளை இட்டு சென்றான்.* *தனக்கென்று வந்தால் லேசானதுகூட கவனிக்கப்பட வேண்டியதாகிறது.* *எனக்கென்று வந்தால் கவனிக்கப்படவேண்டியது கூட லேசானதாகிப்போகிறது * *இவருக்கு **என்று நினைத்தபடியே வேலையை* *தொடர்ந்தாள்.* *இப்படி முடியாமல் வேலை * *செய்து செய்து சோர்ந்து போன நேரத்தில் * *மகனுக்கு திருமண பேச்சு ஆரம்பித்ததில் * *மனம் மகிழ்ந்து போனது. * *மருமகளை மகள் போல் **பார்த்துக்கொண்டால், * *அவள் என்னைத் தாயாக நினைத்து * *முடியாதபோது தாங்குவாள் என்று நினைத்துக்கொண்டு * *வேகமாக செயலில் இறங்கினாள்.* *மகனுக்கு திருமணம் முடிந்து * *ஆறு மாதங்கள் போனதே தெரியவில்லை. * *இனி புதிய மருமகள் பழைய மருமகளாக மாறி வேலை செய்வாள் * *என்று எதிர்பார்த்து காத்திருக்க, * *அவளோ, பத்மா தரும் காபிக்கு * *கால்மேல் கால் போட்டு கொண்டு காத்திருந்தாள். * *நொந்து போன மனம் * *உடம்பு என்ற வண்டியை இழுக்க முடியாமல் இழுத்தது.* *இப்போதெல்லாம் ஏனோ அடிவயிற்றில் வலி, அதோடு இடுப்பு* *வலியும் சேர்ந்து கொள்கிறது, * *எதைப்பார்த்தாலும் கோபமும், ஆத்திரமும் வருகிறது. * *அடிக்கடி மனச்சோர்வு வேறு, * *யாரிடம் சொல்வது? * *யாருக்குத்தான் நேரம் இருக்கிறது நான் சொல்வதைக் கேட்க! * *மனதில் ஒரு வெறுமை வந்து ஒட்டிக் கொண்டது.* *அந்தநேரம் எதிர்வீட்டு தாயம்மாள்* *பசும்பால் கொண்டுவர * *அவளே கேட்டாள் "ஏன்மா ஒரு மாதிரியா இருக்குற?" என்று, * *மனதில் இருந்ததை சொல்ல * *"அது நிக்கற நேரம்* *அதான் அப்படி!" என்றாள். * *ஒரு வேளை அப்படியும் இருக்கலாம் * *என்று வலியோடு நாட்களை* *கடத்தினாள்.* *ஒருநாள் படுக்கையை விட்டே * *எழ முடியவில்லை. மகளை அழைக்க, * *"இன்னைக்கு காலேஜ்டே நீ தயவுசெஞ்சு சீக்கிரமா * *எனக்கு சாப்பிட ஏதாவது செஞ்சு குடு"* *"என்னால முடியலைடி"* *"ஆமா நான் அழகா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு காலேஜ் * *போலாம்ன்னு நெனச்சா நீ என்னம்மா இப்படி பண்ற?"* *"சரிசரி கத்தாத. உங்கப்பா அதுக்கு வேற எதையாவது * *சொல்லப்போறாரு" என்று எழுந்து* *அன்றைய வேலைகளை முடித்து* *படுத்தவளுக்கு உடம்பு ஏதேதோ* *செய்தது.* *மகனிடம் சொன்னாள், * *அவனுக்கு நேரம் இல்லை என்றவன், தந்தையிடம் * *டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று கொஞ்சம் * *அக்கறையோடு **சொல்லிவிட்டு சென்றான்.* *மாலை எப்போது வரும் என்று* *காத்திருந்தாள், மீண்டும் தலைசுற்ற* *படுத்தவள்தான் லேசாக நினைவுவர, கண்விழித்து பார்த்தாள்.* *அது மருத்துவமனை, * *பக்கத்தில் யாரோ ஒருடாக்டர் பேசுவது கேட்டது * *"என்னங்க நாகராஜன் இவ்வளவு கேர்லஸ்ஸா இருந்திருக்கீங்க? * *அவங்க என்ன* *மனுஷியா இல்ல மிஷினா?* *அவங்களுக்கு இப்போ எடுத்த* *டெஸ்ட்ல சுகர், பிபி, கொலஸ்டிரால் எல்லாம் இருக்கு, * *அப்புறம் யூட்ரஸ்ல ப்ராப்ளம், தைராய்டு அதிகமா இருக்கு, * *ரத்தம் கம்மியா, ஊட்டச்சத்து குறைபாடா இருக்கு.* *அவங்க உங்ககிட்ட எதுவுமே* *சொல்லையா? இல்ல நீங்க* *கவனிக்கலையா? நீங்க எல்லாம்* *அவங்களப் பத்தி கவலையே படாம* *உங்க உடம்ப மட்டும் பத்திரமா,* *அக்கறையா பாத்துகிட்டு, * *அவங்கவங்க சுகம் முக்கியம்னு இருந்திருக்கீங்க. * *ஏங்க வருஷத்துக்கு ஒரு முறையாவது அவங்கள * *டாக்டர்கிட்ட* *காட்டவேணாமா? இப்போ அவங்கள* *நான் எப்படி சரிபண்ணி, எத்தனை நாளைக்கு * *இங்கேயே கவனிச்சி...!!* *ஹும்...! ஒண்ணும் புரியலை"! * *என்று சொல்வதைத் கேட்டுக் கொண்டே, * *அதற்கெல்லாம் அவசியம் இல்லாமல்* *"பத்மா" காற்றில் கரைந்தே போனாள்.* *யாருக்கும் எந்த குற்ற உணர்வு மில்லாமல், இதெல்லாம் ஒரு* *குடும்பத் "தலைவியின்" கடமைதானே? என்று நினைத்து * *கொஞ்சம் வருத்தப்பட்டுவிட்டு வேலையை தொடர்ந்தனர். * *சாப்பிடும் வேளையில் எப்போதாவது அவளின் நினைவு * *வந்துபோனது எல்லோருக்கும்!* *இப்போது அவர்கள் வீட்டில் எல்லாம்* *ஒழுங்காய் நடக்கின்றது. * *மருமகள் வேறுவழியின்றி சமைக்க, * *மாமனார், அவள் என்ன செய்தாலும் * *வாயை மூடிக்கொண்டு சாப்பிட, * *மகன் சமையலறையில் மனைவிக்கு ஒத்தாசை செய்ய... * *மகள் அவள் வேலைகளை * *அவளே செய்துகொள்ள நாட்கள் சுறுசுறுப்பாக நகருகிறது... * *இதையெல்லாம் கண்ணாடி சட்டத்தின் உள்ளே இருந்து* *பார்த்த பத்மா என்ற அந்த குடும்பத்தின் "தலைவி" * *இப்படி, நான் இருக்கும்போது * *ஏன் இல்லை? என்று யாருக்கும் கேட்காத குரலில் * *எல்லோரையும் கேட்டுக்கொண்டே இருந்தாள் பரிதாபமாக!!* *எங்கே கேட்கும் அவள் குரல்?* *யாருக்குக் கேட்கும் அவள் குரல்?* *குடும்ப உறுப்பினர்களுக்கு:* *நம் குடும்பத்தைத் தாங்கும்* *தலைவியின் தலையில் எல்லா* *பாரத்தையும் போட்டுவிட்டு* *நாம் சுகமாக இருக்க விரும்புகிறோம். * *அவளும் ஒரு சாதாரண மனுஷி தான், * *அவளுக்கும் ஆசாபாசங்கள்,* *வேதனை வலிகள் இருக்கும்.* *புரிந்து கொண்டு நம் ஆரோக்கியம் காக்கும் * *குடும்பத் தலைவியை **நாம் காப்போம், * *அதனால் ஆரோக்கியமான நாடாக நம்நாட்டை* *மாற்றுவோம். * *ஏனென்றால் ஒரு வீடோ, நாடோ * *அதற்கு ஆதாரமாக இருப்பது பெண்களே!!* *- முரளிதரன் ராஜகோபாலன் * ***************************** *முகநூலில் படித்து* *உதவி: எம்.கே.வேணுகோபால்* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Ze-kgLLU%3DXi3kQYvnGX%2Bffi5GzLv5%2BzHdnP0yuJa4JEkw%40mail.gmail.com.
