However all 40 MPs and total opposition are waste ; useful to topple the govt; but may work adversely too KR
---------- Forwarded message --------- From: Srinivasan Sridharan <[email protected]> Date: Fri, 7 Jun 2024 at 12:21 Subject: Fwd: election To: Rajaram Krishnamurthy <[email protected]>, Devarajan Subramaniam < [email protected]>, SaranathanTG <[email protected]> *From:* Srinivasan Sridharan <[email protected]> *Date:* June 7, 2024 லோக் சபா கேன்டீனில் நாற்பது தோழர்களுடன் கம்பீரமாக நுழைந்து வெற்றிப் புன்னகையுடன் அமரப் போகும் 'மண்டை ஆட்டி' கனிமொழி சொல்கிறார் - நம் அண்ணாமலை ராஜினாமா செய்ய வேண்டுமாம் கட்சித் தலைவர் பதவியை! அக்கா வுக்கு வயசாச்சு. அதனால் நினைவு படுத்துகிறோம்.. 1977 பார்லிமெண்ட் தேர்தலில் ஆசைக்கு ஒரு தம்பி - ஆசைத்தம்பி மட்டும் வட சென்னையில் வெற்றி பெற, மீதி எல்லாத் தொகுதியிலும் தி.மு.க சுத்தமா வழித்துக் கொண்டு போயிற்றே - அப்போது உங்கள் மானமுள்ள அப்பா கட்சித் தலைவர் பதவியை ராஜினாமாவா செய்தார்? அதே வருடம் சட்டமன்றத் தேர்தலில் - கட்சி தொடங்கி நான்கே வருடத்தில் எம்.ஜி.ஆர் (அதிமுக) ஆட்சியைப் பிடித்தார். திமுகவுக்கு வெறும் 48 சீட் கிடைத்து எதிர்க்கட்சியாகத்தான் வர முடிந்தது - உங்கள் அப்பா கருணாநிதி அப்போதும் கட்சித் தலைமைப் பதவியை ராஜினாமாவா செய்ய வில்லையே.. 1980 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தியிடம் total சரணாகதி அடைந்தார் உங்கள் தகப்பனார். அதுவரை - "சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் உயிர் குடித்த பூதகி, சேலைகட்டிய ஹிட்லர், மீசை இல்லாத முசோலினி"- என்றெல்லாம் எமர்ஜென்சி கொண்டுவந்த இந்திரா காந்தியை 1977 தேர்தலில் திட்டிய உங்கள் தகப்பனார்... 1980 நாடாளு மன்றத் தேர்தலில் மானங்கெட்டு அதே இந்திராகாந்தி காலில் விழுந்து - "நேருவின் மகளே வருக - நிலையான ஆட்சியைத் தருக!"- என்று அந்தர் பல்டி அடித்து பார்லிமெண்ட் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வென்றது. அகில இந்தியாவிலும் வீசிய "இந்திரா அலை" யின் விளைவு தமிழகத்திலும் பார்லிமெண்ட் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வென்றது. அந்த மிதப்பில் இந்திராகாந்தியிடம் முழங்கால் மண்டியிட்டு மாநிலத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கலைக்க வைத்தார் உங்கள் தகப்பனார் ஆகிய கருணாநிதி. ஆனால் அதே வருடம் ஜுன் மாதம் 1980 சட்டமன்றத் தேர்தல்களில் - ஜூன் 3 தனது பிறந்த நாள் அன்று முதல்வராகப் பதவி ஏற்கலாம் என்று மனப்பால் குடித்த உங்கள் தகப்பனாரின் கனவு தூள் தூளாக நொறுங்கியது! ஜூன் 3 பதவி ஏற்கலாம் என்று அலங்கரிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் - எம்.ஜி.ஆர் தொண்டர்கள் பட்டாசு விட்டுக் கொண்டாடிய அதிமுகவின் பிரம்மாண்ட வெற்றியால் அதிர்ந்தது. உங்கள் தகப்பனாரே அண்ணாநகர் தொகுதியில் டாக்டர் ஹண்டேவிடம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கடைசி ரவுண்டு எண்ணிக்கையில் வெறும் 699 வோட்டு எண்ணிக்கையில் தப்பிப் பிழைத்தார். எம்.ஜி.ஆர் போட்ட உப்பைத் தின்றுவிட்டு நன்றி கெட்டு உங்கள் தகப்பனாரிடம் வந்து சேர்ந்த நாஞ்சில் மனோகரன் மயிலாப்பூரில் தோற்றார். கட்சி தொடங்கியதில் இருந்து தோற்றே அறியாத ஆயிரம் விளக்கு தொகுதியில் சாதிக் பாட்சா - கட்சிப் பொருளாளர் - தோற்றார். கட்சியின் பலம் 48 ல் இருந்து 38 ஆக ஆயிற்று! உங்கள் தகப்பனார் என்ன கட்சித் தலைவர் பதவியை ராஜினாமாவா செய்தார்? அவர் மானஸ்தன். அப்படி செய்யலையே.. பிறகு 1984 தேர்தல்... இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு நடந்த தேர்தல். எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக போட்டியிட்ட தேர்தல். "என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள் - எம்.ஜி.ஆர் வந்ததும் அவரிடமே ஒப்படைத்து விடுகிறேன்!" "தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் வீசி எறிந்தாலும் கட்டுமரமாக உங்களுக்கு தொண்டு செய்வேன்!"- என்றெல்லாம் கதறி உங்கள் தகப்பனார் கெஞ்சியும் அழுதும் தமிழக மக்கள் திமுகவை படுதோல்வி அடையச் செய்தார்கள்! அப்போதும் உங்கள் தகப்பனார் ஆகிய கருணாநிதி - "சாவுக்கு ஒரு வோட்டு (இந்திராகாந்தி) - நோவுக்கு ஒரு வோட்டு!"- என்று சமாதானம் சொன்னாரே தவிர கட்சித் தலைவர் பதவியை ராஜினாமாவா செய்தார்? எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரை உங்கள் தகப்பனார் ஆகிய கருணாநிதி சென்னை கோட்டையின் காம்பவுண்ட் சுவரைக் கூட எட்ட முடியவில்லை என்பதுதானே கசப்பான உண்மை? அவரது மறைவுக்குப் பிறகும் கூட - அவர் விட்டுச் சென்ற அதிமுக கட்சி - ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று பிரிந்ததால்தான் வோட்டுப் பிளவின் காரணமாகத்தான் 1989 ல் உங்கள் தகப்பனாராகிய கருணாநிதி ஆட்சிக்கு வர முடிந்ததே தவிர அவருடைய தனிப்பட்ட சாதனையால் அல்ல! பிறகு அதே 1989 நாடாளுமன்றத் தேர்தலில் - ஒன்றுபட்ட அதிமுகவின் "இரட்டை இலை" பவர் உங்கள் தகப்பனார் ஆகிய கருணாநிதி கட்சியை (திமுக) ஒரு பாராளுமன்ற சீட் கூட ஜெயிக்க முடியாமல் தூக்கி கூவத்தில் வீசியதே - அப்போது உங்கள் தகப்பனார் கட்சிப் பதவியை ராஜினாமாவா செய்தார்? பிறகு 1991ல் சட்டமன்றம், பாராளுமன்றம் இரண்டுக்கும் ஒரு சேர நடந்த தேர்தலில் - திமுக சுத்தமாக வாஷ் அவுட் ஆகி, சட்டமன்றத்தில் துறைமுகம் (உங்கள் தகப்பனார் ஆகிய கருணாநிதி) மற்றும் எழும்பூர் (செல்வராஜ்) இரண்டு பேர் மட்டும் ஜெயித்தார்களே - அப்போது உங்கள் தகப்பனார் ஆகிய கருணாநிதி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தாரா? பிறகு 1998 நாடாளுமன்றத் தேர்தல், 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்கள் ஆகியவற்றில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிடம் செம அடி வாங்கியதே திமுக - அப்போது உங்கள் தகப்பனாராகிய கருணாநிதி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமாவா செய்தார்? மண்டையை மண்டையை ஆட்டிப் பேசும் முன்பு உங்கள் கட்சியின் கடந்த காலத் தேர்தல் தோல்விகளை - அதுவும் உங்கள் தகப்பனார் ஆகிய கருணாநிதி தலைமையில் கட்சி சந்தித்த தோல்விகளை கவனத்தில் கொண்டு பேசுங்கள். ஆக..அண்ணாமலையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை பாஜகவின் அகில இந்தியத் தலைமை முடிவு செய்யும் - அனாவசியமாக நாக்கைச் சப்பிக் கொண்டு அடுத்த கட்சிக்கு அறிவுரை கூறாதீர்கள்! அசிங்கப்படுவிர்கள்.. வர்ட்டா.. Sent from my iPhone -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoq%3DEHyKp1Zn1pgfjX2Yb1_bOHYu9Bu%3DsGF%3DfddiMdziMQ%40mail.gmail.com.
