Who is nandu sundu ? On Sun, Jun 16, 2024, 12:19 Narayanaswamy Sekar <[email protected]> wrote:
> > > ---------- Forwarded message --------- > From: N Sekar <[email protected]> > Date: Sun, Jun 16, 2024 at 10:46 AM > Subject: Re: Cataract - Nandhu Sundhu > To: Chittanandam V R <[email protected]> > Cc: Rangarajan T.N.C. <[email protected]>, Mathangi K. Kumar < > [email protected]>, Narayanaswamy Sekar <[email protected]>, > Mani APS <[email protected]>, Srinivasan Sridharan < > [email protected]>, SRIRAMAJAYAM <[email protected]>, Rama (Iyer > 123 Group) <[email protected]>, Kerala Iyer < > [email protected]>, [email protected] <[email protected]> > > > Thanks Sir for your clarification. In my opinion, It was almost a Sujatha > style write up. > > N Sekar > > > On Sunday, June 16, 2024 at 10:31:36 AM GMT+4, Chittanandam V R < > [email protected]> wrote: > > > I am on your side when you say about Sujatha. > > But this piece was not by him. It was authored by நந்து சுந்து. > > Chittanandam > > On Sun, Jun 16, 2024 at 11:38 AM N Sekar <[email protected]> wrote: > > Thanks Sir. > > Typical Sujatha writing although you have not mentioned the author. He is > one of the few who can write about a cataract operation so interestingly > and humorously. > > He can write a story without any real story. Just reading his writings is > a pleasure. > > Fwding to others, so other Sujatha fans can also enjoy reading this as did > I. > > N Sekar > > Yahoo Mail: Search, Organize, Conquer > <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_> > > On Sun, Jun 16, 2024 at 7:19 AM, Chittanandam V R > <[email protected]> wrote: > > > *இரண்டு கண்களிலும் Cataract Surgery செய்து கொண்டேன் எனப் பதிவு > போட்டிருந்தேன். * > > *நகம் வெட்டிக் கொண்டாலே நாலு பக்கத்துக்கு அனுபவக் கட்டுரை எழுதும் ஆசாமி > நான். சர்ஜரி செய்து கொண்டால் விடுவேனா? இதோ ஓர் அனுபவக் கட்டுரை.* > > ************************************************************************* > > *சும்மா கிழி...* > > *நந்து சுந்து* > > > *கொஞ்ச நாட்களாக கண் பார்வை மங்கலாக, கலங்கலாக இருப்பது போல ஒரு பிரமை > இருந்தது. மினரல் வாட்டரைப் பார்த்தால் கிரைண்டர் கழுவிய தண்ணீர் போல் > இருந்தது.* > > *கேடராக்ட் இருக்குமோ என சந்தேகப்பட்டு பெங்களூரில் இருக்கும் ஒரு பிரபல கண் > ஆஸ்பத்திரிக்குப் போனேன். * > > *அங்கு நல்ல சிகிச்சை கிடைக்கும். ஆனால் கையைக் கடிக்கும். திரையைக் கிழித்து > திரவியம் தேடும் ஆஸ்பத்திரி அது.* > > *முதலில் வழக்கமான பரிசோதனை. W S E J M படிக்க வேண்டும். கடைசி வரிசை படிக்க > முடியாவிட்டால் நம்மிடம் கறந்து விடுவார்கள். அந்த டெஸ்டில் கடைசி இரண்டு > வரிசையில் நான் ஃபெயில்.* > > *பைனாக்குலர் மாதிரி இருந்த சமாச்சாரத்தில் பார்க்கச் சொன்னார்கள். இரண்டு > நிமிடத்தில் அவர்கள் ஆவலுடன் தேடிய கேடராக்ட் அவர்களுக்குக் கிடைத்து விட்டது.* > > *“உங்களுக்கு கேடராக்ட் இருக்கு. அதனாலதான் கண் மங்கலா இருக்கு” என்று > இருள்வாக்கு சொன்னார்கள்.* > > *அதன் பிறகு ஒரு Counselling பெண்ணிடம் அனுப்பினார்கள்.* > > *கவுன்சிலிங் எனப்படுவது யாதெனில் வரும் ஆட்களை கப்பெனப் பிடித்துப் போடுதல்.* > > *ரிப்போர்ட்டுகளைப் பார்த்த கவுன்செல்லர் “எந்த லென்ஸ் வைச்சிக்கறீங்க?” > என்று கேட்டார்.* > > *“கைரேகை ஜோசியம் பாக்கற லென்ஸ் வைச்சிடாதீங்க. அதுல பிடி இருக்கும். மூக்கு > வரைக்கும் தொங்கும்” என்றேன்.* > > *“உங்களுக்கு Trifocal Toric லென்ஸ் வைச்சிடலாம்” என Trigonometric equation > மாதிரி டெக்னிக்கலாக ஏதோ சொன்னார். * > > *அந்த லென்ஸ் வைத்துக் கொண்டால் தூரத்தில் இருப்பது, பக்கத்தில் இருப்பது, > நடுப் பக்கத்தில் இருப்பது எல்லாமே தெரியுமாம்.* > > *“நீங்க Reading glass யூஸ் செய்யறீங்களா?”என்றார்.* > > *“Writing glass யூஸ் செய்யறேன்”* > > *“இந்த லென்ஸ் வைச்சிகிட்டா....”* > > *“இனிமே எழுதவே மாட்டேனா?”* > > *“நோ. இனிமே நீங்க கண்ணாடியே போட வேணாம்” என்றவர் லென்ஸின் விலையை > சொன்னார். ஒரு Eye க்கு அவர் சொன்ன விலையில் இரண்டு ஐ போன் வாங்கலாம். > இருந்தாலும் சரியென்றேன். * > > *அவருக்கு மிகுந்த சந்தோஷம் .ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் அடுப்பெரியும்.* > > *அடுத்த விஷயத்தை ஆரம்பித்தார்.* > > *“சாதா ஆபரேஷனா? லேசர் ஆபரேஷனா?”* > > *லேசர் ஆபரேஷன் என்றால் டாக்டர் கண்ணில் கையே வைக்க மாட்டார். லேசரே > எல்லாவற்றையும் கிழித்து விடும். நீட் பாஸ் செய்த லேசர்.* > > *சாதா ஆபரேஷனில் தோசைக் கரண்டி கொண்டு கண்களில் இருக்கும் திரையை > சுரண்டுவார்களோ!* > > *“லேசரே செஞ்சிடுங்க” என்றேன். அதற்குக் கூடுதல் கட்டணம். ஒரு Split A.C > விலை.* > > *“திங்கட்கிழமை கார்த்தால எட்டு மணிக்கு வந்துடுங்க” என்றார். திங்கட் கிழமை > 7:30 முதல் 9:00 வரை ராகு காலம். ராகு காலத்தை ஏமாற்ற ஒரு உபாயம் செய்வார்கள். > ஊருக்குக் கிளம்புபவர்கள் ராகு காலத்துக்கு முன்பாகவே பெட்டியை வீட்டுக்கு > வெளியே வைத்து விடுவார்கள். ராகு நம்மை விட்டு விலகி பெட்டியை வெளியே வைக்காத > மக்குப் பயல் யாரையாவது தேடிப் போய் விடும்* > > *அது போல பக்கத்து வீட்டு பாட்டி சொன்னார். * > > *“நீங்க ஏழரை மணிக்கு முன்னால கண்ணை எடுத்து வீட்டு வாசல்ல வைச்சிடுங்க” * > > *ஏழே காலுக்கே புறப்பட்டு எட்டு மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்தோம். > ரிசப்ஷனில் ஒரு பெண் ‘வாவ்’ எனச் சொல்லும் வகையில் இருந்தாள். அவள் வாவென > அழைத்தாள். என்னுடைய ஃபைல் பார்த்தாள்.* > > *கண் மாற்றி ஆபரேஷன் செய்து விடக் கூடாதல்லவா! அதனால் என் இடது கையில் ஒரு > Band கட்டினாள். அது சத்தியமாக ராக்கி இல்லை. அதில் என் பெயர் இருந்தது. > போதாதற்கு என் இடது கண்ணின் மேல் ஒரு பெருக்கல் குறி போட்டாள். இது தான் > நொள்ளைக் கண் என்பதற்கு அடையாளமாக. * > > *சில Declaration form களில் கையெழுத்து போடச் சொன்னாள். Software download > செய்யும்போது படித்துப் பார்க்காமல் I agree என்று டிக் அடிப்போமே அது போல > டிக் செய்தேன்.* > > *அதன் பிறகு அடுத்த அறைக்குக் கூட்டிப் போனார்கள். இங்கு இரண்டு பெண்கள் > இருந்தார்கள். கேடராக்டையும் மீறி அவர்கள் பளிச்செனத் தெரிந்தார்கள். ஒருவர் > B.P யும் Oxygen ம் பார்த்தார். இன்னொருவர் ஒரு மாத்திரை கொடுத்தார்.* > > *அந்த மாத்திரை Anxiety வராமல் இருப்பதற்கு என்று சொன்னாள். ‘உங்க > டாக்டருக்கு பத்து கொடுங்க’ என்று நினைத்துக் கொண்டேன்.* > > *தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் ஆபீஸ் போகும் போது கே.ஆர் .விஜயா > பின்னாலிருந்து கோட் மாட்டி விட்டு மாலையில் கன்னத்தில் அறை வாங்கிக் > கொள்வார். அது போல ஒரு கன்னடத்து விஜயா பின்னாலிருந்து எனக்கு கவுன் மாட்டி > விட்டார். நாம் சும்மா நின்று கொண்டிருக்க இன்னொருவர் கவுன் மாட்டி விட்டால் > அந்த சோம்பேறித்தன சுகத்துக்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை.* > > *தலையில் துணியினால் ஆன ஒரு தொப்பியை கட்டி விட்டாள். இதிலும் இடது பக்கம் > செல்லோ டேப் ஒட்டினார். அதாவது இடது கண்தான் என்பதற்கான மூன்றவது கட்ட > எச்சரிக்கை. இதையும் மீறி வலது கண்ணில் ஆபரேஷன் நடந்தால் நமக்குக் கட்டம் > சரியில்லை என்று அர்த்தம்.* > > *இன்னும் சில சுவாரசியம் இல்லாத ஃபார்மாலிடிக்கள் முடிந்த பிறகு இரண்டாவது > நபராக ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுப்பினார்கள். * > > *தியேட்டரில் ஒரு ஸ்ட்ரெச்சரில் ஏறிப் படுக்கச் சொன்னார்கள். * > > *ஆபரேஷன் தியேட்டரில் மெலிதாக ஏதோ ஹிந்திப் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது. > நல்ல வேளையாக ‘கண்ணாளனே உனது கண்ணை இன்றோடு காணவில்லை’ என்ற பாட்டு > ஒலிக்கவில்லை.* > > *கண்ணைத் திறந்து ஒரு சொட்டு மருந்தை ஊற்றினார் ஒருவர். அதுதான் மயக்க > மருந்தாம். இவ்வளவு பணம் வாங்கிவிட்டு ஒரே ஒரு சொட்டா? ஐந்து லிட்டர் கேன் > கொண்டு ஊற்றியிருக்கலாம்.* > > *இரண்டே நிமிடத்தில் கிழி பீடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ‘மேலே இருக்கற > லைட்டைப் பாருங்க. மூணு லைட் தெரியுதா?’ என்று கேட்டார்கள்.* > > *ஆமாம் என்று தெரிந்ததைச் சொன்னேன்.* > > *‘அந்த லைட்டையே பாருங்க’ என்றார்கள். அது தான் லேசர் லைட்டா? ஒவ்வொரு > லைட்டையும் பார்த்ததில் என் பேங்க் பேலன்ஸ் கணிசமாகக் குறைந்தது.* > > *பிறகு போஸ்ட் ஆபீசில் கவரின் மீது ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டுவது போல > கண்ணுக்குள் எதையோ ஒட்டினார்கள். அநேகமாக அது லென்ஸ் ஆக இருக்கக் கூடும்* > > *மொத்தமே ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. “உங்க ஆபரேஷன் முடிஞ்சது” என்றார் > டாக்டர்.* > > *பெருமாள் கோவிலில் பக்தர்கள் தலையில் சடாரி வைக்கும் அர்ச்சகர் போல அடுத்த > ஆளுக்குப் போய் விட்டார் டாக்டர். * > > *ஒரு ஆள் வந்து என்னைக் கீழே இறக்கி விட்டார். ஒரு கருப்புக் கண்ணாடியைக் > கண்ணில் மாட்டி விட்டார்.* > > *“நீங்க நடந்து போகலாம்” என்று வெளியே அனுப்பி விட்டார். * > > *ஒரு வீல் சேர்கூடக் கொடுக்கவில்லை வீணர்கள். நடந்து போகச் சொல்லி > விட்டார்கள். நடந்து வெளியே போனால் ஆபரேஷன் செய்து கொண்டதாக இந்த சமூகம் > நம்பாதே!* > > *வெளியே வந்தேன். முன்னர் பார்த்த அதே பெண் வந்தார். நலம், நலமறிய ஆவல் என > விசாரித்தார். பிறகு தாம்பூலப் பை மாதிரி எதையோ கொடுத்தார். அதனுள்ளே > ரவிக்கைத் துணி இருக்கவில்லை. ஒரு ஜூஸ் இருந்தது. ஒரு குடை இருந்தது. இந்தக் > குடைக்காக நான் கொடுத்த விலை மிகவும் அதிகம்.* > > *Dos and Don’ts சொன்னார்.* > > *பணத்தைக் கட்டி விட்டு வெளியே வந்தோம். கருப்புக் கண்ணாடி போட்டுக் > கொண்டதில் பசு மாடு எருமை மாடு மாதிரி தெரிந்தது. எருமை மாடு தெரியவே இல்லை.* > > *முருகன் இட்லிக் கடையில் நான்கு விதமான சட்னிகள் வைப்பது போல நான்கு விதமான > ஐ டிராப்ஸ் கொடுத்திருந்தார்கள். * > > *சரியாக கண்ணுக்குள் விழுவது போல அதைப் போட்டுக் கொள்வது ஒரு அவஸ்தை. வட > இந்திய கோவில்களில் சிவலிங்கம் மேல் ஒரு சொம்பு இருக்கும். அதிலிருந்து நீர் > சொட்டு சொட்டாக விழும். அது போல ஒரு சொம்பு இருந்தால் வசதியாக இருக்கும். > அதற்குக் கீழே படுத்துக் கொள்ளலாம்.* > > *இரண்டு நாட்களில் கண் நன்றாகத் தெரிய ஆரம்பித்தது. இது வரை தெரியாதது > எல்லாம் தெரிந்தன. கிச்சன் சுவற்றில் எறும்பு ஊர்வது தெரிந்தது. அந்த எறும்பு > கர்ப்பமாய் இருந்ததுகூடத் தெரிந்தது.* > > *அடுத்த திங்கட்கிழமை வலது கண்ணுக்கு ஆபரேஷன். மேலே கூறியது அனைத்தும் > இன்னொரு முறை நடந்தன. பெண்கள்கூட மாறவில்லை. அதே கண்கள். அதே பெண்கள். அதே > குடை.* > > *ஒரு வாரம் கழித்து செக் அப் போனேன். சில சந்தேகங்கள் கேட்டேன்.* > > *“தும்மினா லென்ஸ் கீழே விழுமா?”* > > *“எச்சில்தான் விழும்” என்றார் அந்த பெண் டாக்டர்.* > > *இந்த ஆஸ்பத்திரியில் எல்லா கண் டாக்டர்களும் இளம் கன்னிகளாகவே இருந்தார்கள். > ரின் போட்டுத் துவைத்த வெள்ளைக் கோட் போட்டிருந்தார்கள்.* > > *“கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் பார்த்தா கொஞ்சம் Discomfort இருக்கு” என்றேன்.* > > *“அந்த மாதிரி சமயத்துல கண்ணை சிமிட்டுங்க”* > > *“இந்த மாதிரியா?” என்று அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியிருக்கலாம். போக்ஸோ > சட்டத்தில் உள்ளே தள்ளி விடுவார்கள் என்ற பயத்தில் சிமிட்டல் கொஸ்டினை > சாய்ஸில் விட்டு விட்டேன்.* > > *மறுபடியும் பயாஸ்கோப்பில் தாடையை வைத்து டெஸ்ட்.* > > *“உங்க லென்ஸ் எல்லாம் சரியான இடத்துல பத்திரமா இருக்கு. கொஞ்ச நாள்ல லென்ஸ் > பவர் செட் ஆகி பழகிடும்” என்றார்.* > > *பழகிக் கொண்டிருக்கிறேன். * > > *நகைச்சுவைக்காக கலாய்த்திருந்தாலும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை > சிறப்பாகவே இருந்தது. Systems, பணியாளர்களின் பணிவு, கனிவு, நீல நிறத்தில் > மஞ்சள் பூ போட்ட புடவை யுனிஃபார்ம் எல்லாமே முதல் தரம். கண்ணைத் திறந்து > கொண்டு Five Star Rating கொடுக்கலாம்.* > > *டாக்டர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஜே!* > > ************************************************************************* > > *சித்தானந்தம் * > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcacsfS_DM_8%2B5T1R7S2j1xi2Wm54ufnRoi_Rqxt1%2BVOg%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcacsfS_DM_8%2B5T1R7S2j1xi2Wm54ufnRoi_Rqxt1%2BVOg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJiWWo%2B_VpoWCwTAn45Vx7nPOVki5cQvruu%2BWqtdM6xMTPxb0g%40mail.gmail.com.
