நல்ல பதிவு On Sat, Jun 15, 2024, 22:45 Rajaram Krishnamurthy <[email protected]> wrote:
> IVVALAVU NALLAVANGALA ELLORUM CONSTABLE AVIRA? vERY TOUCHING KR > > On Sat, 15 Jun 2024 at 11:55, Rama <[email protected]> wrote: > >> தகப்பன்சாமி💗💗 >> >> பெண்ணை பெற்ற தகப்பனாக கண் கலங்கியது.. >> >> "என்னங்க மூட்டை" >> >> "ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க, அதான் கொஞ்சம் மளிகை >> சாமான் வாங்கிட்டு வந்தேன்" >> >> ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார் >> >> ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு >> >> ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் >> வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க >> >> இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன் >> >> அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் >> வாங்கல அதானே >> >> வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு >> வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன் >> >> அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு >> விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க >> முடியல. 1000 ரூவா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு >> வந்துட்டீங்க >> >> சரி, எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி >> போவீங்க. >> >> சைக்கிள்ல போவேன் >> >> ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்து சாகுறதுக்கா >> >> நல்ல வார்த்தையே பேச மாட்டியா நீ >> >> இப்ப போக வேணாம் நாளைக்கு காலைல போய் குடுத்துக்கலாம் >> >> இல்லல்ல நான் இப்பவே கிளம்புறேன் >> >> போங்க. போலீஸ்காரன் சாமானையும் சைக்கிளையும் புடுங்கி வச்சுகிட்டு, உங்களை >> தோப்புக்கரணம் போட சொல்லுவானோ, குட்டிக்கரணம் போட சொல்லுவானோ. நடந்து தான் >> வரப் போறீங்க >> >> நல்ல வார்த்தையே பேச மாட்டியா >> >> ஐயையோ துரை போருக்கு போறாரு. நல்ல வார்த்தை சொல்லி அனுப்பனும். >> >> சரி கிளம்பனும் பழைய சோறு இருந்தா கொடு >> >> அதான் மக வீட்டுக்கு போறீங்கள்ள. உங்க மக சமைச்சு வச்சிருப்பா. அங்கே போய் >> சாப்பிட்டு வாங்க >> >> சரி நான் கிளம்புறேன் >> >> சொன்னா கேக்க மாட்டீங்க. பட்டா தான் உங்களுக்கு புத்தி வரும்.போலீஸ்காரன் >> உங்கள அடிச்சு உதைச்சு அனுப்பும்போது தான் நான் சொன்னது ஞாபகத்துக்கு வரும் >> >> அவர் சைக்கிளில் எல்லா மளிகை சாமான்களையும் மூட்டையாக கட்டி, பின்பக்கம் >> வைத்துக் கொண்டு கிளம்பினார் >> >> ஒரு பத்து கிலோமீட்டர் வந்திருப்பார்.அங்கே திருவந்திபுரம் கெடிலம் ஆற்று >> பாலத்தை தாண்டிய சாலையில் தடுப்பு அமைத்து போலீஸ்காரர்கள் நின்று >> கொண்டிருந்தார்கள். >> >> மனைவி சொன்னது போல் போலீஸ்காரர்கள் சாமானையும் சைக்கிளையும் பிடிங்கி >> கொள்வார்களோ. தோப்புக்கரணம் போடச் சொல்லி போட்டோ எடுத்து டிவியில் >> போடுவார்களோ.தெரியாமல் வந்து விட்டோமோ. >> >> பயம் தொற்றிக் கொண்டது. >> >> அவர் அருகில் சென்றபோது ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார் >> >> என்னா பெருசு எங்க கிளம்பிட்டே >> >> ஐயா மஞ்சகுப்பம் வரை போறேங்கய்யா. மக வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு >> போறேங்கய்யா >> >> சைக்கிளை ஓரமாக நிறுத்து. அந்த மூட்டைய தூக்கிட்டு வா >> >> அவ்வளவுதான் 1,400 ரூபாய் மளிகை சாமான் போக போவுது >> >> மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு, மளிகை சாமான் மூட்டையை இறக்கி கீழே >> வைத்தார் >> >> யோவ் பெருசு அந்த ஜீப்புக்குள்ள இன்ஸ்பெக்டர் உக்காந்திருக்காரு அவரை போய் >> பாரு >> >> அவர் போலீஸ் வண்டியை நோக்கி நடந்தார். வண்டியில் வாட்டசாட்டமாய் கூலிங் >> கிளாஸ் போட்ட பெரிய மீசை வைத்திருந்த அந்த இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார் >> >> என்ன பெரியவரே எங்க கிளம்பிட்டீங்க >> >> ஐயா மஞ்சகுப்பம் வரை போறேங்கய்யா. பொண்ணு அங்க இருக்கு. மாப்பிள்ளை டிரைவரா >> இருக்காரு. வேலை இல்ல. அதான் கவர்மெண்ட் கொடுத்த ஆயிரம் ரூபாயில கொஞ்சம் மளிகை >> சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா >> >> ஊர்ல தடை போட்டுருக்காங்க தெரியாதா பெரியவரே >> >> தெரியுங்கய்யா. ஆனா நாலு உசுரு அங்க சோத்துக்கு இல்லாம கஷ்டப்படுமே. >> அதனாலதான் இத போயி கொடுத்துட்டு வந்துடலாம்னு கெளம்பினேய்யா >> >> என்ன வயசு ஆகுது பெரியவரே உங்களுக்கு >> >> 63 வயசு ஆகுதுங்கய்யா >> >> அருகில், நடு சாலையில் பத்துப் பதினைந்து இளைஞர்கள் தோப்புக்கரணம் போட்டுக் >> கொண்டிருந்தார்கள். இவருக்கு மனசு பிசைந்தது. நடுக்கம் வந்தது. >> >> கான்ஸ்டபிள் வந்தார். >> >> சார் இந்த ஆள் கொண்டு வந்த மூட்டைய சீஸ் பண்ணிட்டேன் சார் >> >> உன் வயசென்னை அவரு வயசு என்ன ஆளுன்ற >> >> சாரி சார் >> >> அந்த கான்ஸ்டபிள் தள்ளி போய் நின்று கொண்டார். >> >> பெரியவரே சாப்பிட்டீங்களா >> >> இல்லீங்க சார் >> >> கான்ஸ்டபிள் அந்த சாப்பாடு பொட்டலத்துல ஒண்ணு எடுத்து குடு >> >> ஐயா எனக்கு வேண்டாய்யா. நான் மகள் வீட்டுல போய் சாப்பிடுகிறேன் >> >> சாலையில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன் ஏதோ சொல்ல, >> >> சட்டமா பேசறே என்று ஒரு கான்ஸ்டபிள் அவனை முதுகில் அடித்தார் >> >> அங்க போய் கறியும் சோறும் தின்னுங்க. இது சும்மா பிரிஞ்ஜி தான். >> சாப்பிட்டுக்கங்க. வெயில்ல எப்படி சைக்கிள் மிதிப்பீங்க >> >> சாப்பிட்ட பின் தோப்புக்கரணம் போட சொல்வார்களோ >> >> ஜீப் மைக் கர கரவென்று பேசிக்கொண்டே இருந்தது. >> >> நாளைக்கு காலையில் சீக்கிரமா கிளம்பி போயிருக்கலாம் என்று >> நினைத்துக்கொண்டார். >> >> கான்ஸ்டபிள் எடுத்து வந்து கொடுத்த ஒரு பொட்டலத்தையும் ஒரு தண்ணீர் >> பாட்டிலையும் வாங்கிக்கொண்டார். >> >> பெரியவரே அதோ அந்த மரத்தடி இருக்குல்ல. இல்லன்னா அந்த கடைவாசல் இருக்குல்ல >> அங்க உக்காந்து சாப்பிடுங்க. >> >> இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார் >> >> பெரியவரே நல்லா சாப்பிடுங்க இன்னொரு பொட்டலம் வேணுமா >> >> இன்ஸ்பெக்டர் கேட்க, அவர் வேண்டாம் என்று தலையாட்டினார். >> >> சாப்பிட்டு தண்ணீர் குடித்து கை கழுவினார். பரவாயில்லை வயிறு ரொம்பிடுச்சி. >> இப்ப முட்டி போடலாம். தோப்புக்கரணம் போடலாம். >> >> பெரியவரே சாப்பிட்டீங்களா >> >> சாப்பிடங்கய்யா >> >> ஜீப்ல கொண்டு வந்து உங்க மகள் வீட்டுல விடட்டுமா >> >> ஐயா வேண்டாங்கய்யா நான் போயிடுவேங்கய்யா >> >> சரி இந்த பனியனை போட்டுக்கோங்க. இந்த தொப்பிய போட்டுக்கோங்க. இது >> வாலண்டியர்ஸ் போட்டுக்கறது. அரசாங்கம் கொடுக்கிற பணத்தை வாங்கினமா தண்ணி >> அடிச்சமா தலைகுப்புற விழுந்தமான்னு இல்லாம, நாலு உசுருக்கு சோறு போட சாமான் >> வாங்கிட்டு போறீங்களே. நீங்க தான் உண்மையான வாலண்டியர். >> >> இந்த பனியனை போட்டுக்கோங்க. பத்திரமா போயிட்டு வாங்க. >> >> அது கனவா நனவா என்று நம்ப முடியாமல் பனியனை வாங்கி மாட்டிக்கொண்டார். >> >> இன்ஸ்பெக்டருக்கு இரண்டு கை குவித்து வணக்கம் வைத்தார். >> >> சைக்கிளில் ஏறி, மகள் வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். >> >> * >> >> அப்பா எப்படி வந்தீங்க. எதுக்குப்பா சைக்கிள்ல வந்தீங்க. கை கழுவுங்க. >> >> பேரன்கள் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள். >> >> பேரன்களை அணைத்து உடனே தள்ளிப் போகச் சொன்னார். >> >> மகள், அவர் வாங்கி வந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு >> >> என்னப்பா தனியா வந்துருக்கீங்க அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல >> >> இல்லம்மா. இன்னொரு நாளைக்கு கூட்டிட்டு வரேன். நான் கிளம்பட்டுமா. இங்க >> இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லம்மா. நான் வீட்டுக்கு போயிடுறேன். உங்க அம்மா >> தனியா இருக்கும். >> >> அப்பா சாப்பிட்டு போங்கப்பா. சாப்பாடு ரெடியா இருக்குப்பா >> >> நான் சாப்பிட்டேன்மா >> >> ஏதுப்பா இந்த பனியன் நீங்க வாலண்டியரா இருக்கீங்களா >> >> நடந்த எல்லா விஷயங்களையும் மகளிடம் சொன்னார் >> >> பேரன்களை அழைத்து அவர்களுக்கு காசு கொடுத்து விட்டு கிளம்பினார் >> >> மகள் ஒரு பையோடு வந்தாள். >> >> அப்பா பையில கொஞ்சம் பழங்கள் இருக்கு. எடுத்துட்டு போயி அம்மாகிட்ட >> கொடுங்கப்பா. அம்மாவுக்கு ரோட்ஹெலர் மெஷின் வாங்கினேன். அத கொடுத்துடுங்கப்பா. >> அம்மாவுக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கி இருக்கேன் அதையும் மறக்காம >> குடுத்துடுங்கப்பா. >> >> பையை வாங்கிக்கொண்டார். >> >> மாப்பிள்ளை எங்கம்மா >> >> அப்பா அரசாங்கத்துல காய்கறி எல்லாம் வண்டியில் போய் விக்க >> சொல்லியிருக்காங்க. அதான் ஒரு காய்கறி வண்டியில டிரைவரா போயிருக்காருப்பா >> >> இந்த ஆஸ்துமா மெஷினுக்கும்,'ஆஸ்துமா மாத்திரைக்கும் ஏதும்மா காசு >> >> போன மாசம் சம்பளத்திலேயே இது இரண்டும் வாங்கி வச்சுட்டேன் பா >> >> அவர் சைக்கிளை எடுக்க வீட்டை விட்டு வெளியே வந்தபோது மகள் ஓடிவந்து அவர் >> சட்டைப்பையில் இரண்டு ஐநாறு ரூபாய் நோட்டுகளை வைத்தார் >> >> அப்பா எங்களுக்கும் நேத்துதான் அரசாங்கத்திலிருந்து ஆயிரம் ரூபாய் >> கொடுத்தாங்க. நேத்து நைட்டு உங்க மாப்பிள்ளை சொல்லிட்டாரு, உங்க அப்பா >> அம்மாக்கு கொடுத்துடு. நம்ம ஏதாவது வேலை செஞ்சி சம்பாரிச்சுக்கலாம். வயசானவங்க >> என்ன பண்ணுவாங்கன்னு சொன்னாருப்பா. >> >> சரிம்மா. மாப்பிள்ளைய கேட்டேன்னு சொல்லு. பத்திரமா இருங்கம்மா. >> >> அவர் உயிரை தன் மகள் வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் ஏறி தன் வீட்டை >> நோக்கி மிதிவண்டியை இயக்க ஆரம்பித்தார்... >> >> படித்ததில் பிடித்தது. >> > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorFAB%3D-Fxn5uiGT%2B8Y5cfJePUkWsNzt5vDp-SPrY1BXwA%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorFAB%3D-Fxn5uiGT%2B8Y5cfJePUkWsNzt5vDp-SPrY1BXwA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJiWWoK0P%3Dh%3D3FKL9tqD58ybdnD9PBtEo_mYmFe2SiqWb2vdaw%40mail.gmail.com.
