How one can make money is also the symbol of 2003. There are 2 sites in the web, One askhistory.com; another ask.com; many people do copy paste and also make money from those and many more similar sites. KR
On Thu, 4 Jul 2024 at 02:08, Chittanandam V R <[email protected]> wrote: > > *(கவனம்: 2003-ல் எழுதியது.)* > > *நீங்கள் 2003-ல் வாழ்பவரா? - சுஜாதா* > > *நாம் கி.பி.2003-ல் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளங்கள் என்ன என்கிற ஒரு > சங்கதி நெட்டில் பரவிக்கொண்டிருக்கிறது. இதை முதலில் துவக்கியவர் ஆண்ட்ரூ > கிரஹாம் என்பவர். எனக்கு அனுப்பியது கலிஃபோர்னியாவில் இருக்கும் என் மைத்துனன் > ரவி. நகரத் தமிழருக்காகத் திருத்திய வடிவம் இது -* > *நாம் 2003-ல் வாழ்கிறோம் என்பதற்கான இருபது அடையாளங்கள்...* > > *1. யாரைச் சந்தித்தாலும் இ-மெயில் விலாசம் கேட்பீர்கள்.* > *2. உங்கள் ஆறாம் கிளாஸ் பிள்ளைகளுக்கு ஜேபெக் (jpeg) பற்றித் > தெரிந்திருக்கும். ஃப்ளாப்பி போன்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பார்கள். தானாகவே > கணிப்பொறியை ஆன் செய்வார்கள். எட்டிப் பார்த்தால் சட்டென்று > அணைத்துவிடுவார்கள்.* > *3. உங்கள் வீட்டில் குழந்தையையும் சேர்த்து மூன்று பேர். நாலு போன்.* > *4. வீட்டுவாசலிலிருந்தே வீட்டில் யாராவது இருக்கிறார்களா என்று செல்போன் > பேசுவீர்கள். நடக்கும்போது பேசவில்லையென்றால் ஜென்மம் சாபல்யம் அடையாது. > போலீஸ் பிடிக்கும்வரை காரில், டூ-வீலரில் போகும்போது பேசுவீர்கள்.* > *5. எல்லா விளம்பரத்தின் கீழேயும் ஒரு www அட்ரஸ் இருக்கும் (பார்க்க - > மதனின் விளம்பர கார்ட்டூன்!). கிராமத்தில் பஸ் ஏறுபவரிடம் விவசாயி - > ''மாப்பிள்ளை! போய்ச் சேர்ந்ததும் இ-மெயில் போடுங்க... www பழனிசாமி டாட் > காம்!''* > *6. கடைசியாக கம்ப்யூட்டர் வாங்கி ஆறு மாதத்தில் கீ-போர்டில் கை வைத்துப் > பழகுமுன், அது பழசு என்று உங்கள் மகள் சொல்வாள்.* > *7. எங்கே சென்றாலும் கையில் செல்போன் இல்லையெனில் கையொடிந்தாற்போல் > இருக்கும் - கக்கூஸ், பொதுக்கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள் உட்பட. சினிமா > பார்க்கும்போது அது ஒரு முறை சிணுங்கியே ஆகவேண்டும். தியேட்டரில் > எல்லாருக்கும் ஸ்பஷ்டமாகக் கேட்கும்படியாக, ''இன்னும் வாங்கலைம்மா... சைஸ் > 36-ஆ... 38-ஆ? சந்தேகமா இருந்துச்சு!''* > *8. அதுபோல கிரெடிட் கார்டு இல்லையெனில் கைகள் எல்லாம் நடுங்க > ஆரம்பித்துவிடும். காகித நோட்டுகள் போதாததால், கைவைத்த பனியனுக்கும் ஒரு ஜோடி > சாக்ஸுக்கும் கிரெடிட் கார்டு கொடுக்க விரும்புவீர்கள்.* > *9. ஏ.டி.எம். நம்பரை உங்கள் டி.வி. ரிமோட்டில் உள்ளிடுவீர்கள்.* > *10. தபாலில் போட்ட கடுதாசி, அடுத்த நாள் போய்ச் சேருவது உங்களுக்கு ரொம்ப > லேட்! 'என்ன டிபார்ட்மெண்ட் நடத்தறாங்க கவர்ன்மெண்ட்ல...' என்று > அலுத்துக்கொள்வீர்கள்.* > *11. உங்கள் வீட்டுச் சாப்பாட்டு மேஜைதான் அத்தனை காகிதங்களும், ஆவணங்களும், > செக்புக்கும், சாவிக் கொத்தும், படிக்க மறந்த கடிதங்களும், மனைவி வாங்கிய > காய்கறிகளும், மகனின் பீட்ஸா பாக்கியும், இன்றைய செய்தித்தாளும் வைக்கும் > இடம்.* > *12. 'பேஸ்ட் இட்' என்னும் மஞ்சள் கடுதாசியில் எதையாவது எழுதி ஒட்டி > வைத்தால்தான் உங்கள் வாழ்க்கை ஒழுங்காகும். அதற்குப்பின் அதை மறக்கலாம்.* > *13. நீங்கள் ஜோக் படிப்பதும் பத்திரிகை பார்ப்பதும் நெட்டில்தான்.* > *14. உங்களிடம் ஒரு போன் நம்பராவது உங்களுக்கே ஞாபகமிருக்காது. வங்கிச் > சேமிப்புக் கணக்கு எண்ணிக்கையுடன் குழப்பம் வரும்.* > *15. இன்டர்நெட் வேலை செய்யவில்லையெனில், உங்களுக்குக் கை- கால் நடுங்கும். > ISP-யைக் கூப்பிட்டுத் திட்டுவீர்கள்.* > *16. அதிகாலை எழுந்து காபி குடிப்பதற்கு முன் நெட்டில் அலைவீர்கள்.* > *17. பாத்ரூம் போவதற்குமுன் இ-மெயில் பார்ப்பீர்கள். இல்லையேல் பாத்ரூம் > வராது. போய் வந்ததும் பதில் வந்ததா என்று பார்ப்பீர்கள்.* > *18. புன்னகைப்பதற்குத் தலையைப் பக்கவாட்டில் சாய்த்துக்கொள்வீர்கள். 🙂 > (எஸ்.எம்.எஸ்.)* > *19. இந்தப் பட்டியலை உங்கள் நண்பர்களுக்கு உடனே மெயில் அனுப்புவீர்கள்.* > *20. இதை முதலில் ஆரம்பித்தது ஆண்ட்ரூ கிரஹாம் அல்ல; நான்தான் என்று > ஆசிரியருக்கு மெயில் அனுப்புவீர்கள்.* > > > ************************* > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorhw%3Dosk49D9u9ZGFmu8yX%2BZY%3D4Fi0ipGw1Wz97kqLTtA%40mail.gmail.com.
