Ecellent article. Indira is known for such articles. DESIKAMANI On Sun, Jul 7, 2024, 06:11 Rajaram Krishnamurthy <[email protected]> wrote:
> An excellent version on Tamarai by Indra Priyadarshini Kindly appreciate > Thank you KR IRS 6724 7724 > > ---------- Forwarded message --------- > From: Chittanandam V R <[email protected]> > Date: Sat, 6 Jul 2024 at 19:30 > Subject: Fwd: Indira Priyathashini - Lotus > To: > > > > > *தாமரை* > > *இந்திரா ப்ரியதர்ஷிணி * > > *இரண்டு நாட்களுக்கு முன் காலையில் நண்பர் கமாண்டர் குருமூர்த்தி தாமரை பூத்த > தடாகம் ஒன்றின் சித்திரம் இட்டிருந்தார். * > > *தாமரை பற்றிய ஒரு பொறி. இலக்கிய உவமைகளில் தாமரை போன்று அங்கிங்கெனாதபடி > எங்கும் இருக்கும் உவமை வேறு கிடையாது. தாமரை உருவகமாக உவமையாக தமிழ் இலக்கிய > உலகில் உலவுகிறது. பல வேறு பெயர்கள் கொண்ட தாமரை போல் உள்ள வேன்று கிடையாது. > தாமரைக்கு கமலம் பங்கயம் முண்டகம் அம்புஜம் பத்மம் ராஜீவம் சரோஜம் ஜலஜம் > அம்போருகம் வாரிஜம் புண்டரீகம் இண்டை அரவிந்தம் நளினி சதபத்ரி மலர் என்று > பல்வேறு பெயர்கள்.* > > *தெய்வங்களுக்கு அமரும் பீடமாகவும் கையிலும் பாதபத்மமாகவும் தாமரை > இருக்கும். கஞ்ச தளம் என்றாலும் தாமரை தான். தாமரை பொதுமொழியாக வருகையில் > மலரையும் தொடர் மொழியாக தா + மரை என்றால் தாவுகின்ற மான் எனவும் பொருள் > படும். * > > *பல பெண் தெய்வங்களுக்கு தாமரை சார்ந்த திருநாமங்கள் உண்டு. கமலாயதாக்ஷி > என்பது திருவாரூர் அம்பாள் பெயர். அவள் குளம் கமலாலயம். கடலில் பாதி கமலாலயம். > மன்னார்குடித் தாயார் திருநாமம் செங்கமல வல்லி நாச்சியார். இன்னும் ஸ்ரீ > முஷ்ணத்தில் அம்புஜவல்லி நாச்சியார். பெருமாளுக்கு அரவிந்த லோசனன் என்ற > திருநாமம் திருத்துலைவில்லி மங்கலம் இரட்டைத் திருப்பதியில். நிறையக் > கீர்த்தனங்கள் தோத்திரங்களில் தாமரைப் பிரயோகம் காணலாம். "வாரம் வாரம் வந்தனம் > அஸ்துத வாரிஜதள நயனா கோபாலா" பூரய மமகாமம் ஸ்ரீ நாராயண தீர்த்தர் கிருஷ்ண லீலா > தரங்கிணி. "இண்டை கொண்டு தொண்டர் ஏத்த" எங்கள் திருவள்ளூர்ப் பாசுரம்..பெரிய > திருமொழி. "பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்" பதினாலாவது பாசுரம். > திருப்பாவை. உங்கள் புழக்கடைத் தோட்டத்து.* > > * "சரோஜ தள நேத்ரி" ஸ்ரீ சியாம சாஸ்திரி அவர்களின் பிரபலமான கிருதி கம்பீரமான > சங்கராபரண ராகம். "சரஸிஜ நிலயே சரோஜ ஹஸ்தே" ஸ்ரீ ஸுக்தம். "போற்றி மால் > நான்முகனும் காணாத புண்டரீகம்" திருவெம்பாவை இறுதிப் பாட்டு. திருவெள்ளறைப் > பதியில் உறையும் பெருமாள் புண்டரீகாக்ஷன். தாயார் பங்கயச்செல்வி. அம்போருக > ரஞ்சனி தோடி ராக வர்ணம் இருக்கிறது. "முந்தியம்போருகத் தேமலர்ந்து தேமேவு > தண்டுழாய் மாலையுந் திருவுமொரு" என்ற வரி ஸ்ரீ மங்களேஸ்வரி அம்மை பிள்ளைத் > தமிழில் வலையில் பார்த்தேன். இப்பிரபந்தம் முதன்முதலாக 1901-ஆம் ஆண்டில் > தணிகைமணி ராவ்பஹதூர் ஸ்ரீமான். வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்களது தந்தையார் > ஸ்ரீ வ. த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களால் அச்சிடப் பெற்றது. இந்த அம்மை > யாராம்? மணிவாசக சுவாமி பாடிப் பரவிய திரு உத்தரகோசமங்கை திருத்தலத்தில் > நின்று அருள் பாலிக்கும் அம்மைதான். வாழ்நாளில் நாம் காண வேண்டிய திருத்தலம் > உத்தர கோச மங்கை. திருவாசகமும் பொன்னூசலும் ஒரு மாதிரி கரைந்து போவோம். > அப்புறம் ஜலஜ நிவாஸினி என்று அன்னமய்யா கீர்த்தனையில் பார்த்தேன். ஸ்ரீ > முண்டகக் கண்ணி அம்மை சென்னையில் கொலு வீற்று இருக்கிறாள்.* > > * தாமரை உவமை உருவகக் கையாளுதலில் கம்பனும் துளஸிதாசரும் யாரையும் விஞ்சி > விட்டனர். "ஸ்ரீ ராமசந்த்ர க்ருபாலு பஜூமன ஹரண பவபய தாருணம் நவகஞ்ச லோசன கஞ்ச > முக கர கஞ்ச பத கஞ்சாருணம்" அன்றலர்ந்த தாமரை போன்ற கண் கரம் பாதங்கள் > முகங்களை உடையவன் ராமன். "மெய்த் திருப்பதம் மேவு' என்றபோதினும்,* > *'இந்திருத்துறந்து ஏகு' என்ற போதினும், சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை > ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்" * > *நாடு உனக்கு முடிசூட்டு விழா என்றபோதும், முடி துறந்து காட்டிற்குச் செல் > என்றபோதும் சித்திரத்தில் இருக்கும் செந்தாமரை போல் மாறாதிருந்த கணவன் முகத்தை > நினைத்தாள் சீதைப் பிராட்டி. கம்பன் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை ஒரு போலே > இருக்கும் என்பதால் அந்த உவமை. நாட்டுப்படலத்தில் தாமரை உவமை "தண்டலை மயில்கள் > ஆட தாமரை விளக்கம் தாங்க" என்ற மருத நிலப் பாடலிலும் உண்டு. * > > *தாமரையின் சிறப்பு கருதி அது நம் தேசீய மலராக இருக்கிறது. எங்கள் > பூர்ணத்ரயீசன் குருவாயூரப்பன் இருவரும் கையில் தாமரை வைத்திருப்பார்கள். > குருவாயூரப்பனுக்கு அதிகாலை தரிசனத்தின் போது மட்டும் சிறு குழந்தைக்குப் > பசிக்கும் என்று தாமரையைப் போக்குக் காட்டி மாற்றி விட்டு சிறு கதலிப் பழம் > கொடுத்து விடுவார்கள். மற்றபடி அவன் கையின் தாமரை அவன் முக கமலம் பாத கமலம் > ஆகியவற்றின் முன் தோற்று நாணித்தான் நிற்கும். எங்கள் ஸ்ரீ பூர்ணத்ரயீசனை > தாமரை மாலையின்றி தரிசனம் செய்ய இயலாது. * > > *திருப்பார்த்தன்பள்ளிப் பெருமாளுக்கு தாமரையாள் கேள்வன் என்றுதான் > திருநாமம். குறள் சொல்கிறது சோம்பல் இல்லாத மனிதரிடம் திருமகள் சேர்வாளாம். > "மடியிலான் தாளுளான் தாமரையினாள்". இசையரசு ஸ்ரீ தண்டபாணி தேசிகர் பாடுவது > மாதிரி தமிழ் இலக்கிய உலகு செந்தமிழ்த் தேன் மணக்கும் தாமரை பூத்த தடாகம். > பாமழையால் வற்றாப் பொய்கைதான். தமிழறிவது நமையறிவதாகும். * > > *-- இந்திரா ப்ரியதர்ஷிணி * > > ****************************************************** > > *சித்தானந்தம் * > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoovHRJa2zDUs1YG5Dji%2BMKXHiiOi_yTnXsB0VPX02BjVQ%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoovHRJa2zDUs1YG5Dji%2BMKXHiiOi_yTnXsB0VPX02BjVQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJiWWoKNQ6YzKTVC5SNyinaQk6aPRGJyUc1sL6EDHgmGYq9K%3Dw%40mail.gmail.com.
