அணியன் என்றால் தமிழ் அகராதியில் "நெருங்கினவன் "என்று பொருள். Hence GOD is
close to us is said in a right way Meaning is straight KR

On Sun, 7 Jul 2024 at 07:43, Chittanandam V R <[email protected]>
wrote:

>
> *கீதை படியுங்கள் *
>
> *சுஜாதா *
>
> துவாரகையில் இடையர் குலத்தில் பிறந்த மாயக்காரன் கண்ணன். அவன் நமக்கு 
> வெகுதூரத்தில்
> இருப்பவனா எனில் ஆம். கிட்டத்தில் இருப்பவனா ஆம். மிகப் பெரியவனா ஆம். சிறுவனா
> ஆம். அவன் அன்று யுத்தத்தின் நடுவில் ஓதிய கீதையை கற்காதவர்கள் ஞானமற்ற
> அந்நியர்கள்.
>
> நான்முகன் திருவந்தாதியில் திருமழிசை ஆழ்வாரின் இந்த வெண்பாவில் மூன்று அழகிய
>  தமிழ் வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளலாம். சேயன் என்றால் தூரத்தில் இருப்பவன்.
>  அணியன் கிட்டத்தில் இருப்பவன். ஏதிலர் என்றால் அந்நியர்கள்.
>
> 'ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்' என்று வள்ளுவர் சொல்லும்
> 'மற்றவர்கள்'. இம்மூன்று சொற்களில் அணியன் என்ற சொல் தற்போது வழக்கில்
> மலையாளத்தில் இருக்கிறது,  கையாள் என்கிற அர்த்தத்தில்.
>
> பகவான் நம் கையாளாக இருந்தால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.
>
> இப்போது பாடலைப் பார்ப்போம்.
>
> சேயன், அணியன், சிறியன், மிகப்பெரியன்,
> ஆயன், துவரைக்கோனாய் நின்ற மாயன் - அன்று
> ஓதிய வாக்கு அதனைக் கல்லார், உலகத்தில்
> ஏதிலர் ஆம், மெய்ஞ் ஞானம் இல்.
>
> துவரை என்று துவாரகையை தமிழ்ப்படுத்தியிருக்கிறார் ஆழ்வார். அவர் வாக்கு
> என்று சொல்வது பகவத்கீதையை. அதைக் கற்காதவர்கள் உலகத்தில் எதற்கும்
> தகுதியில்லாதவர்கள்.
>
> *- சுஜாதா *
> ****************************
>
> *சித்தானந்தம் *
>
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopFD5nX-g7wG5hVkFDW%2BT1iVY9BJEXSEC%3DCAoD%2B3U7HQw%40mail.gmail.com.

Reply via email to