---------- Forwarded message
----- Forwarded Message ----- *From:* "N Sekar" <[email protected]> *To:* "Chittanandam V. R." <[email protected]>, "Rangarajan T.N.C." < [email protected]>, "Mathangi K. Kumar" <[email protected]>, "Mani APS" <[email protected]>, "Srinivasan Sridharan" < [email protected]>, "SRIRAMAJAYAM" <[email protected]>, "Kerala Iyer" <[email protected]>, "Rama (Iyer 123 Group)" < [email protected]> *Cc:* *Sent:* Mon, Jul 8, 2024 at 11:21 AM *Subject:* Fwd - அர்ஜுன் சம்பத் அறிக்கை! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இலங்கை தமிழர்களின் நம்பிக்கைக்குரிய தலைவர், தனதுவயோதிகம் காரணமாக திரு சம்பந்தன் ஐயா மரணமடைந்துள்ளார். அன்னாரது இழப்பு இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கை நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் பேரிழப்பாகும். திரு சம்பந்தன் ஐயா அவர்களின் இடையராத சுயநலமற்ற பொதுச் சேவையும் இலங்கைத் தமிழர் நலனுக்கும் உரிமைக்கும் அவர் ஆற்றிய காரியங்களும் என்றும் நினைவு கூறத்தக்கதாகும். இலங்கை இனச்சிக்கலுக்கு தீர்வு இந்தியாவின் துணையோடு தான் நடைபெறும் என்பதை புரிந்து கொண்டு தொடர்ந்து செயல்பட்டவர். இந்திய அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்புடையவர். திரு செல்வநாயகம், திரு அமிர்தலிங்கம், அவரைத் தொடர்ந்து திரு சம்பந்தன் ஆகியோர் தமிழர்களின் அரசியல் முடிவுகளை எடுக்கக்கூடிய இடத்தில் இருந்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் பெயரில் தமிழரசு கழகம் மற்றும் பல ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கி இலங்கையில் அமைதியும் இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமையும் கிடைப்பதற்கு பாடுபட்டு வந்தார். இந்தியாவுடன் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுடன் நல்லுறவை வளர்த்து வந்தார். அண்ணாருடைய வயோதிகத்தின் காரணமாக அவருடைய கட்சியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் கிரிப்டோ கிருஸ்துவரான திரு சுமந்திரன் கையகப்படுத்தி வைத்துக் கொண்டார். திரு சுமந்திரன் அவர்களுக்கு பின்னணியில் கிறிஸ்தவ மிஷனரிகளும் மன்னார் மாவட்ட பிஷப்புகளும் தமிழ்,தமிழர்கள் என்று பேசி தங்களுடைய மோசடி மதமாற்ற நடவடிக்கைகளுக்கு தமிழ் ஈழத்தை கிறிஸ்தவமயமாக மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். இந்தியாவுடனும்,இந்திய தமிழர்களுடனும் நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கிறிஸ்துவ மிஷனரிகள் தெளிவாக இருக்கின்றார்கள். ஈழத் தமிழர்களின் சைவ சமய அடையாளங்களையும் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களையும் அழித்து வருகிறார்கள். அதற்கு அரசியல் களத்தில் துணை நிற்பவர் தான் திரு சுமந்திரன் அவர்கள். அவருடைய மனைவி பல தமிழர்களை கிறிஸ்துவராக மதமாற்றம் செய்வதற்கு ஏஜென்ட் ஆக செயல்படுவதோடு கிறிஸ்தவ மத போதகர் ஆகவும் செயல்பட்டு இந்தியாவில் தமிழகத்தில் கூட அவர்களுடைய கிறிஸ்தவ மத அறக்கட்டளைக்கு ஏராளமான பணம் கை மாறியது அனைவருக்கும் தெரியும். சுமந்திரன் தன்னுடைய இந்து சமயப் பெயரை பயன்படுத்திக்கொண்டு ஆனால் ஒரு கிறிஸ்தவராக வாழ்ந்து வருபவர். அரசியலில் ஒரு வழக்கறிஞராக இருந்து செயல்பட்டாலும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகிறவர். மிகவும் தந்திரமாக செயல்பட்டு சம்பந்தன் ஐயா மனதில் இடம் பிடித்து அந்தக் கட்சியை கைப்பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்பொழுது சம்பந்தன் ஐயா மறைவுக்குப் பிறகு அவருடைய பூத உடலுக்கு மரியாதை செலுத்துவதற்கு கூட யாரையும் கிட்ட நெருங்க விடாமல் செய்து கட்சியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சம்பந்தன் ஐயா உடலை அவமதிக்கக் கூடிய வகையிலே அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. இதன் காரணமாக உலகெங்கிலும் இருக்கக்கூடிய தமிழர்கள் சுமந்திரனெடைய அடாத செயலை கண்டு மிகுந்த துன்பமும் துயரமும் அடைந்துள்ளார்கள். தமிழகத்தில் கிறிஸ்தவ மத நிறுவனங்களின் மத போதகர்களின் தூண்டுதலின் பேரில் செயல்படும் ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் இதை கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக கம்யூனிஸ்டுகள் திராவிடர் கழகங்கள் நாம் தமிழர் மே 17 உள்ளிட்ட ஈழ ஆதரவு அமைப்புகள் கிரிப்டோ கிறிஸ்தவரான சுமந்திரனின் நடவடிக்கைகள் குறித்து யாரும் கவலைப்படவில்லை. திராவிட கட்சிகள் இலங்கைத் தமிழர் நலனுக்காக உழைப்பது போல பாசாங்கு மட்டுமே செய்து வருகிறார்கள். சம்பந்தன் ஐயா உடைய இறுதிச் சடங்கில் யாரும் பங்கேற்கவில்லை. திமுக சார்பிலோ அதிமுக சார்பிலோ யாரும் நேரில் செல்லவில்லை இரங்கல் அறிக்கையுடன் சரி அஞ்சலி நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தவில்லை. என்றும் இலங்கை தமிழர்களுக்கு துணை நிற்கும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இரங்கல் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழகத்தைச் சார்ந்த திமுக அதிமுக கம்யூனிஸ்ட் அமைப்புக்களில் உள்ளவர்கள் எந்த வகையிலும் ஈழத் தமிழர் தலைவர் ஐயா சம்பந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லை. அது சம்பந்தமான நிகழ்ச்சிகளும் நடத்தவில்லை. உண்மையில் திராவிட இயக்கங்களுக்கும் கிறிஸ்தவ மிஷனரியின் தூண்டுதல் பெயரில் செயல்படுகின்ற போலி தமிழ் தேசியவாத இயக்கங்களும் இந்திய ஒருமைப்பாட்டிற்காக செயல்படுவது தான் குறியாக இருக்கிறார்கள். தவிர இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வை கொடுக்க வேண்டும் அங்கே அமைதி நிலவ வேண்டும் வாய்ப்பிருந்தால் தமிழ் ஈழம் அமைக்க வேண்டும் என்கிற அந்தக் கொள்கையில் இவர்கள் உறுதியானவர்கள் அல்ல. இலங்கை தமிழர்களின் பெயரில் இவர்கள் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுபவர்களாகவே இன்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குறித்து இனிமேலாவது உலகெங்கிலும் இருக்கக்கூடிய தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாரதிய ஜனதா கட்சி, ஆர் எஸ் எஸ்,உள்ளிட்ட சங்கப் பரிவார், சிவ சேனை உள்ளிட்ட இந்து அமைப்புகள் மட்டுமே இலங்கை தமிழர் நலனுக்காக செயல்படக்கூடியவர்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. ஈழத்தில் சிந்துவது ஹிந்து ரத்தம். இலங்கை பிரச்சனை இந்துக்களின் பிரச்சனையே. நமது தொப்புள் கொடி உறவுகளை காப்பதற்கு, இலங்கையை பாதுகாப்பதற்கு, அண்டை நாடான இலங்கையின் தாய்நாடான இந்தியாவால் மட்டுமே முடியும். சீன கம்யூனிஸ்ட்டுகளாலும் கிறிஸ்தவ,இஸ்லாமிய மதவெறி சக்திகளாலும் ஈழத் தமிழர் நலனை சிதைக்க மட்டுமே முடியும். இலங்கை தமிழர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் திராவிட மற்றும் கிரிப்டோ கிறிஸ்தவ சக்திகளின் பிடியிலிருந்து இலங்கை தமிழர்களை மீட்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி நம்முடைய தமிழீழக் கனவை சிதைத்து இருக்கின்றார்கள். அங்கே ஒரு ஈழ தமிழர் அந்த மாநிலத்தில் இனி முதலமைச்சராக வருவது சாத்தியமில்லை என்கின்ற நிலை உருவாகியுள்ளது. அதேபோல வடக்கு மாகாணத்திலே மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளிலே கிறிஸ்தவ மிஷனரிகளின் மோசடி மதமாற்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. சைவ சமய அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. கிரிப்டோ கிறிஸ்துவர்கள் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் இந்தியா அரசுக்கு எதிராகவும் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். அதற்கு இங்கே இருக்கின்ற மே 17,ஜெகத் கஸ்பர், கம்யூனிச அமைப்புகளும் திராவிடர் கழகங்களும் துணை நிற்கின்றன. இவர்களால் எந்த வகையிலும் இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை கிடைக்காது. பாரதிய ஜனதா கட்சியாலும் இந்திய அரசாங்கத்தினாலும் மட்டுமே இலங்கை தமிழர்களுக்கு சரியானதொரு தீர்வு கிடைக்கும். அதை நோக்கி இந்திய அரசாங்கம் செயல்பட்டு கொண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. இது விஷயத்தில் ஆர்வம் காட்டி ஆக்கப்பூர்வமான வழிகளில் செயல்பட்டு வருகின்ற பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. இலங்கை மற்றும் இந்திய அரசுகள் சுமந்திரன் போன்ற மோசடி மதமாற்ற சக்திகளிடம் அமெரிக்காவில் இயங்குகின்ற பெட்னா Fetna போன்ற அமைப்புக்களிடமும் கிரிப்டோ கிறிஸ்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இலங்கைத் தமிழர் நலன் கலாச்சாரம் பண்பாடு வரலாறு ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். இந்திய அரசின் துணையோடு தமிழீழம் உருவாக வேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். தமிழக மீனவர்களின் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும். இத்தகைய திட்டங்களோடு பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருவதற்கு இந்து மக்கள் கட்சி பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. மே 17,திராவிடர் கழகங்கள், மன்னார் மாவட்ட பிஷப், ஜகத் கஸ்பர், நாம் தமிழர், உள்ளிட்ட அமைப்புகள் செபஸ்டியன் சீமான் போன்ற தலைவர்கள் தொடர்ந்து இலங்கை தமிழர் விஷயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். கிரிப்டோ கிருஸ்தவர்களான இவர்கள் மீது இந்திய அரசும் இலங்கை அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். Yahoo Mail: Search, Organize, Conquer <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_> -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdavNLJ0Xd0EwpVvO5EeenWx_aE9sv-MGjqxYPhZCcO-g%40mail.gmail.com.
