*உள்ளுவ* *தெல்லாம்* *உயர்வுள்ளல்* *மற்றது* *தள்ளினுந்* *தள்ளாமை* *நீர்த்து**.*
*உள்ளுவதெல்லாம்* *உயர்வுள்ளல்* *திருக்குறள்* *விளக்கம்**:* எப்பொழுதும் (அரசன், தலைவன்) எண்ணுவது எல்லாம் உயர்ந்த எண்ணங்கள் ஆக மட்டுமே இருக்க வேண்டும். அத்தகைய எண்ணங்கள் சில நேரம் கை கூடி நல்ல பலன்களை அளிக்க கூடும். சில நேரம் செயலற்று, பயனில்லாமல் போக கூடும். அது கை கூடாத தருணங்களில் கூட, நாம் ஊக்கத்தோடு, உயர்வாக எண்ணுவதை விட்டு விடாமல் இருக்க வேண்டும் என்பதே இக்குறளின் கருத்தாகும். எண்ணங்கள் உயர்வாக உள்ள பொழுது அது நம் செயலில் பிரதிபலிக்கும். அது நம்மிடமும், நம்மை சுற்றி உள்ளோரிடமும் ஒரு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும். அதுவே நம் வெற்றிக்கும் அடிக்கோளாக அமையும். சில சூழ்நிலைகளில் வெற்றி கை கூடாமல் போகும் பொழுது, நாம் தளர்வடையாமல் எதிர்மறை சிந்தனைகள் நம்மை அட்கொள்ளாமல், உயர்ந்த எண்ணங்கள் நீர்த்துப் போகாமல் காக்க வேண்டும். ”நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்றார் சுவாமி விவேகானந்தர். ஒரு செயலை நினைத்தால் தான் துவங்கி அதனை முடிக்க முடியும். (”நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்” என்ற பாடல் ஞாபகம் வரும்!) நினைப்பது உயர்வாக இருந்தால் முடிவும் உயர்வாக இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை நமக்கு முதலில் இருக்க வேண்டும். நமக்கே வெற்றி பெறுவோமா என்று சந்தேகமாக இருந்தால் வெற்றி கிடைப்பது கடினம் தான். ஏதேனும் ஒரு இலட்சியத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதைத் தீவிரமாக எண்ணுங்கள். அந்த ஒரு எண்ணம் உங்கள் மனதில், உணர்வில், நாடி நரம்புகளில் முறுக்கேற வேண்டும். அப்போது அந்த இலட்சியம் நிறைவேறும்! இந்த உலகமே அந்த இலட்சியம் நிறைவேறத் துணை புரியும்! என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். அதனால் தான் நல்ல எண்ணங்களைத் தேர்வு செய்து அவற்றையே நினைக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் இருந்தால்தான் நாம் நல்ல மனிதனாக இருப்போம். உயர்ந்த குறிக்கோளை வைத்துக்கொண்டு, அயராது உழைத்தால் நாம் எண்ணியது எல்லாம் நடக்கும். Always (the king, leader) should only think of higher thoughts. Such thoughts may sometimes come together and give good results. It may become inactive and useless for some time. The point of this verse is that we should not give up on being motivated and aiming high, even when it doesn't work out. When our thoughts are high it reflects in our actions. It creates a good and healthy atmosphere for us and those around us. That will be the basis of our success. In some situations when success does not come, we must not relax and prevent negative thoughts from taking hold of us and protect us from diluting high thoughts. "You become what you think," said Swami Vivekananda. An action can be started and completed only by thinking. (I remember the song “I am the one who finishes what I think!”) If the thought is high, the result will be high. We must have the mindset of winning first. It is difficult to succeed if we doubt whether we will succeed. Have an ideal. Consider it seriously. That one thought must be twisted in your mind, in your senses, in your nerves. Then that ideal will be fulfilled! This world will help to fulfil that ideal! Swami Vivekananda said. So, choose good thoughts and think only them. Only if we have good thoughts, we will be a good person. If we aim high and work tirelessly, everything we envision will happen. K Rajaram IRS 9724 10724 On Tue, 9 Jul 2024 at 20:07, Jambunathan Iyer <[email protected]> wrote: > “Always dream and shoot higher than you know you can do. Do not bother > just to be better than your contemporaries or predecessors. Try to be > better than yourself.” > ― William Faulkner > N Jambunathan Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004 > > *" What you get by achieving your goals is not as important as what you > become by achieving your goals. If you want to live a happy life, tie it to > a goal, not to people or things "* > > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorx1-rczq6qcRtr%2Bqk_HkMrvdjRk%2BDv_XSKzTc16BAU9w%40mail.gmail.com.
