---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Sat, Jul 13, 2024, 8:30 PM
Subject: Fwd - Beautiful lines
To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. <
[email protected]>, Chittanandam V. R. <[email protected]>,
Mathangi K. Kumar <[email protected]>, Narayanaswamy Sekar <
[email protected]>, Mani APS <[email protected]>, Srinivasan Sridharan <
[email protected]>, SRIRAMAJAYAM <[email protected]>, Rama (Iyer
123 Group) <[email protected]>



சில காயங்கள் " *மருந்தால்* " சரியாகும்.
சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும்.

மனிதனுக்கு " *பிரச்சனை* " அதனால்,
கடவுளுக்கு " *அர்ச்சனை* ".

" *வறுமை* " வந்தால் வாடக்கூடாது.
" *வசதி* " வந்தால் ஆடக்கூடாது.

*வீரன்*  சாவதே இல்லை.
" *கோழை* " வாழ்வதே இல்லை.

மனிதனுக்கு ABCD " *தெரியும்* " ஆனால் *"Q"* ல போகத் "தெரியாது".
எறும்புகளுக்கு ABCD " *தெரியாது* " ஆனால் *"Q"* ல போகத் "தெரியும்"

உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது.
பொய் எப்போதும் " *விரிவாக* " பேசப்படுகிறது.

" *கருப்பு* " மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.
" *சிவப்பு* " மனிதனின் நிழலும் கருப்புதான்

வியர்வை துளிகள் " *உப்பாக* " இருக்கலாம். ஆனால்,
அவை வாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும்.

*கடனாக* இருந்தாலும் சரி,
" *அன்பாக* " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.

" *செலவு* " போக மீதியைச் சேமிக்காதே.
" *சேமிப்பு* " போக மீதியைச் செலவுசெய்.

உன்னை நீ செதுக்கிக் கொண்டே இரு " *வெற்றி* " பெற்றால் சிலை, " *தோல்வி* "
அடைந்தால் சிற்பி.

உறவினர்களில் யார் முக்கியம் என்பதை " *உயிரற்ற* " பணமே முடிவு செய்கிறது.

பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " *போற்றும்* ".
கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுப்பார் மண்ணை வாரி
" *தூற்றும்* ".

பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " *பொய்* ".
அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " *உண்மை* ".

மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்துச் சமாளிப்பவன் " *புத்திசாலி* ".
வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் " *திறமைசாலி*

குறைகளை " *தன்னிடம்* " தேடுபவன் தெளிவடைகிறான்.
குறைகளை " *பிறரிடம்* " தேடுபவன் களங்கப்படுகிறான்.

அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் " *உண்டு* ".
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " *இல்லை*

விழுதல் என்பது " *வேதனை* ".
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " *~சாதனை*~ ".
படித்தேன் பிடித்தது அதனால் பகிர்கிறேன்.
🌟💐✨💐🙏🪷🙏💐✨💐🌟
Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zf-XJuLStsW9_FP%3DV-jUS2rgX%2BdntzPcv7BYk%2BgmSnAaw%40mail.gmail.com.

Reply via email to