பின்னர் கூட்டத்தில் பேசிய ஜெயகாந்தன்
�எனக்கு தமிழ் தான் தெரியும் வேறு மொழி தெரியாது. தொட்டிலில் குழந்தையாக தவழ்ந்தபோதே எனக்குத் தமிழ் தெரிந்தது. எனது தாய் தமிழில் தாலாட்டியதால் தமிழ் அறிந்தேன். இந்தியாவைச் சேர்ந்த தமிழன் என்று கூறிக் கொள்ளவே ஆசைப்படுகிறேன் நான். இந்தி, ஆங்கிலமும் நாம் படிக்க வேண்டும் அப்போது தான் அகண்ட பாரத்தில் தமிழின் பெருமையை நாம் உணர்த்த முடியும். அரசியலுக்காக இந்தி, சமஸ்கிருதம் படிக்காதே என்று எதிர்த்துவிட்டு பின்னர் பதவிக்காக மண்டியிடுபவன் அல்ல நான். இமயத்தின் உச்சியில் நின்று தமிழின் புகழை கொக்கரிப்பவன். பாரதி <https://tamilnation.org/literature/bharathy/>, அண்ணா <https://tamilnation.org/hundredtamils/annadurai> போன்ற தமிழ் அறிஞர்களையே எதிர்த்தவர்கள் தமிழர்கள் அதுபோல என்னையும் எதிர்க்கிறார்கள். தமிழனுக்கு என்று தனிக் குணம் உண்டு என்று பாடி வைத்துள்ளார் பட்டுக்கோட்டையார் <https://tamilnation.org/literature/modernwriters/pattukottai/>. நான் கூறிய கருத்து மற்றவர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் ஆனால் எனது கருத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்றார். He extoled sanskrit as a great language which was opposed by dravidians then K Rajaram IRS 1824 On Wed, 31 Jul 2024 at 18:56, Chittanandam V R <[email protected]> wrote: > > 2012-ஆம் ஆண்டு பிப்.16-இல் சென்னையில் ஜெயகாந்தனுக்கு ரஷியாவின் உயரிய > விருதான > 'ஆர்டர் ஆப் பிரண்ட்ஷிப்' வழங்கப்பட்டபோது அவர் பேசியதாவது: > > 'கண்ணதாசன் தனது கண்ணதாசன் ஏட்டில் என்னைப் பற்றி ஒரு தலையங்கத்தை எழுதினார். > அதில் 'வளைந்தும் குழைந்தும் நேரத்துக்குத் தக்கபடியும் அனுசரித்துப் போகும் > உலகத்தில் > ஒரு நிமிர்ந்த தென்னை ஜெயகாந்தன். ஜெயகாந்தன் இலக்கியத் துறையில் கையாண்ட > புதிய உத்திகளுக்கு முன்னுதாரணமே கிடையாது. இன்னொருவருடைய பாணி இவருக்கு > இருக்கிறதென்று எவரையும் சொல்ல முடியாது. அவருடைய நிலத்தில் தோன்றிய > விளைச்சலுக்கு அவரே விதை. அவரே நீர். அவரே உரம்.' என்று கண்ணதாசன் > எழுதியிருந்தார். இதை என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்றார் > ஜெயகாந்தன். > > -- தினமணி கதிர், 28.7.24 > > சித்தானந்தம் > > > > > > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorw4nFCC1P3sx%3D_MQh5g6wbza_JBNrisPPHB8WveD0qNQ%40mail.gmail.com.
