இந்திரா பிரியா தர்ஷினி கோர்வை நன்கு உள்ளது; எனினும், வெளிப்பாடு முழுமை
அடையவில்லை என்பது என் கருத்து. சிலவற்றை வெளிப்படுத்த உணர்வில்லாத போது,
இவ்வாறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும். தன் இனம், தன் ராஜதானி, தன் சகா,
மக்களின் மதிப்பை இழந்து விடுவோம், போன்ற பல, எழுத்தின் நேர் தன்மையை இழந்து
விடும். இளையராஜாவின் இசையமைத்த தில், அவர் உள்ளுணர்வு போன்றவை அவர் ஒரு
பீத்தோவன் மாயத் தோற்றத்தில் அழுத்தி விடும். சுஜாதா போல அவர் ஒரு இசை
அமைப்பாளர். விஸ்வநாதன் காலத்து கம்ப்யூட்டர் இல்ல புனைவுகளுடனும், மஹாதேவன்
தபலா கர்நாடக இசைக்கோர்வையும், பரிமளித்த அளவுக்கு, இளையராஜாவின் ஏழ்மைக்கால
இசை அளவுக்கு ஒப்பிட்டாலும், பின்னர் வந்த இசை அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த
முடியவில்லை என்பதே சான்று. ரஹ்மானை ,இளையராஜாவால் கடக்க முடியவில்லை என்பதே
சரி. ஒரு வேலை அவரை வேறு பல தமிழ் நாடு நாகரீக கோமாளிகள் உருவகப்படுத்தியதை,
உண்மை என நம்பி, தலைக்கனம் ஏறி, தன்னை வெளிப்படுத்திய தாலும் கூட இருக்கலாம்.
கலை என்பது ஒரு படைப்பு; அதை, காசுக்கு விற்றால் அது அவர் `உரிமையுடைத்து
அல்ல. பீத்தோவன் விற்க வில்லை; எனவே அவர் உரிமையுள்ளவர்; அவர் அதை
இசைத்தோர்க்கு ஊதியம் வழங்கினார் ஆகவே ஆதி, அவர் முதலாளி. இளையராஜா
தயாரிப்பாளரிடமிருந்து எல்லாக்கும் சேர்த்து வாங்கிய காசை, பிரித்து அளித்த
வகையில், எல்லா உரிமைகளும் விற்கப்பட்டன. தயாரிப்பளார் உடன் சேர்ந்து இவர்
படம் எடுக்கவில்லை; நஷ்டமும் லாபமும் அதன் பொருட்டு சம்பாதிக்கவில்லை; தவறாக
LIC கட்டிடம் என்னுடையது ஷரத்துடன் செய்த ஒப்பந்தம் ஏற்புடையது அல்ல;
(இசையின் முழு உரிமை) அதனால் தான் ரஹ்மான் போன்றோர் ஹோட்டல், ஆகாய விமானம்
இசை கச்சேரி போன்ற ,அவர் பாடல்களின் வெளிப்பாட்டை தடுக்கவில்லை. அவரின்
பிரபலமடையாத தனிப்பாடல்கள் இசை பற்றி ஏன் ஏதும் கூறவில்லை? (IR ) அதில் காசு
வரவில்லை. நேற்று விஸ்வநாதனின் ஜகமே தந்திரம் (நினைத்தாலே இனிக்கும்)
இசைக்கோர்வையை கேட்டேன். ஹிந்தியில் மெஹபூபா (ஷோலே) கேளுங்கள். இரண்டும்
சகோதரர்களே ஆனாலும் தனி தனி. ஷோலே தாளத்தின் வெளிப்பாடு. ஜகமே விலகிய
சுருதிகளில் நேராக இருப்பது போல் ஒரு ஜெகஜ்ஜால மாயத் தோற்றத்தை உருவாக்கி, அதை
விஸ்வநாதன் தவிர யாராலும், இசையுடன் பயணித்து பாடமுடியாது என்ற பொலிவை
உண்டாக்கி , அதுதான் விஸ்வநாதன் உரிமை; ஒரே ஒரு துந்தனா இரண்டு தாளம் ; ஆனால்
அதையும் அவர் உரிமை கேட்கவில்லையே? கலைஞன் உயரத்தில் தெரிவது அப்பொழுதே.
மற்றொரு சிந்தனை. ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் எதையோ
சார்தது போல ஒரு தோற்றத்தை எழுப்புகிறார் இந்திரா? எனக்கு உடன்பாடில்லை. சில
நாட்களுக்கு முன் இதே குழுமத்தில் அவைகள் எது எது என வெளிப்படுத்தி இருந்தேன்.
அவை யாவும் வேதா காலா ஞானத்தை சார்ந்ததே தவிர, அவைகளுக்கு முன், அவற்றை திருடி
வெளிப்படுத்த வேறு ஒரு நாகரிகம் இருந்ததாகத் தெரியவில்லை. இளையராஜாவின்
இசையில் பெரும் பகுதி, கிராம இசையுடன் கர்நாடக ஸ்வரங்களை சேர்த்த, கிட்டார்-
வெட்டின் காலா வெளிப்பாடே; கிட்டார் வாத்தியத்தை சித்தார் போன்று pluckarai
வைத்து வாசிக்க முடியாது. [GUITAR NOTES ARE ONLY CUT NOTES, HENCE ONLY
LATER SHADOW AND VENTURES ELECTRIFIED IT TO PLUCK TO STRETCH THE NOTES]
அதற்கு தான் ஹவாயின் கிட்டார். அதனால்தான், இளையராஜா இசை வார்த்தைகள்
இரண்டிரண்டாக, அல்லது நான்கு நான்காக, எதுகை மோனையுடன் எழுத கங்கை அமரன்
தேவைப்பட்டார்.ஆகவே அவரே கூறியது போல் ஒன்றிலிருந்து மற்றொன்றை
வெளிப்படுத்தினார். அவரின், ஒன்றிலின்றிண்டு ஒன்றை, ஆய கலைகளும் அது போன்றே
என்பது, அனுபவமில்லாத கூற்றாகும்.
Indira Priya Darshini is well done; However, in my opinion the
revelation is not complete.When some are insensitive to express, thus
problems can arise. We will lose the respect of our race, our Rajdhani, our
colleagues, the people, etc. In Ilayaraja's music, his instincts are
pressed into a Beethovenian mysticism. Like Sujata, he is a music arranger.
The proof is that the later music could not make as much of an impact, even
if compared to the computer house legends of Viswanathan's era, Mahadevan's
Tabla Carnatic music, and the poverty-stricken music of Ilayaraja. It is
true that Ilayaraja could not overcome Rahman. A work may also be because
he has come to believe that many other Tamil Nadu fashion clowns have
impersonated him to be true. Art is a creation; If he sells it for money,
he does not own it. Beethoven did not sell; Therefore he is entitled; He
paid the musicians for it, so Adi, he is the boss. All the rights were sold
on a split basis from the producer Ilayaraja. He did not shoot the film
with the producers; Losses and profits are not earned for its own sake;
Erroneous LIC Building Mine Agreement with clause not valid; (full
copyright of music) That's why people like Rahman didn't stop the exposure
of his songs like hotel, air plane music concert.Why don't his unpopular
singles say anything about music? (IR ) There is no money in it. Yesterday
I listened to Viswanathan's Jagame Tantra (Sweet by Thought) music.Listen
to Mehbooba (Sholay) in Hindi. Both are brothers but separate. An
expression of sholay rhythm. Jagame created a majestic mystical appearance
as if straight in the strange pitches, giving it a luster that none but
Viswanathan could travel and sing with the music, and that was
Viswanathan's right; Only one Dundana, two rhythms; But didn't he claim
that too? It is then that the artist appears at his height.Another thought.
Does Indra make it seem as though the sixty-four arts depend on something?
I don't agree. A few days ago I had revealed what they were in the same
group. All of them are based on Vedic Kala wisdom, and there does not seem
to have been any other civilization before them to steal and express them.
A large part of Ilayaraja's music is the gala expression of guitar-vet,
infused with village music and Carnatic tones; A guitar cannot be played
with a pluckarai like a sitar. [GUITAR NOTES ARE ONLY CUT NOTES, HENCE ONLY
LATER SHADOW AND VENTURES ELECTRIFIED IT TO PLUCK TO STRETCH THE NOTES]
That's what Hawaii's guitar is for. That is why Ilayaraja needed Ganga
Amaran to write the musical words in twos, or fours and fours. His
one-two-one art is an inexperienced statement. Thank you K Rajaram IRS 5824
On Mon, 5 Aug 2024 at 19:19, Chittanandam V R <[email protected]>
wrote:
>
> *இசையில் பயணம்*
>
> *இந்திரா ப்ரியதர்ஷிணி *
>
>
> *இசையை விரும்பாத இதயங்கள் குறைவு. இசை மகிழ்வைக் கூட்டும். உவகையைப்
> பகிரும். சோகத்தை ஆற்றுப்படுத்தும். கவலையைப் போக்கும். ஒரே விஷயம் விருந்து
> மருந்து போகம் ஏகம் யாவற்றையும் அளிக்கும் என்றால் அது இசை ஒன்றே. உணவு
> திகட்டும். இசை திகட்டுவதில்லை. பயிற்சியும் சாதகமும் மேலும் மேலும்
> செம்மையாக்கும். *
>
> *சிறிய வயதில் இசை பயில என் தாயால் போதிய அவகாசங்கள் வாய்ப்புக்கள்
> அளிக்கப்பட்டும் பயன்படுத்தாத கூமட்டை நான். இந்த ஒரு விஷயத்தில் எனக்கு
> மன்னிப்பே கிடையாது. சாகும் நேரத்தில் சங்கரா சங்கரா என்று கத்த முயன்று
> கொண்டி ருக்கிறேன். *
>
> *இசை பாரதத் திருநாட்டில் இறையை அடையும் வழியாக உய்யும் உபாசனையாக
> வகுக்கப்பட்டிருக்கிறது. இங்கே பஜனை சம்ப்ரதாயம் நாமாவளி கூட்டுப் பிரார்த்தனை
> எல்லாம் பிற்காலத்தில் வகுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆத்மாவின் பயணம்
> தனித்ததாகும். முதலில் ஒரு பரிச்சயத் தொடக்கமாகக் கூட்டு இருக்கலாம் ஆனால் அது
> மொட்டு நிலையில் இருந்து மலர்ந்து கனியாதல் தனித்த ஆன்மீக சாதகத்தால் மட்டுமே.
> அதில் இசைக்கலவையில் ஒத்திசைவு காண்பது போல் இறையின் அதிர்வுடன் மெல்ல மெல்ல
> இயையப் பாடுபட வேண்டும். அதனால் தான் பெரும் கலைஞர்கள் கலைப் படைப்பிற்குத்
> தனிமையை மிக விரும்புகிறார்கள். *
>
> *இக்காலத்திய இசையில் தொழில் நுட்பம் கூடி விட்டது. சமீபத்தில் நீங்கள் ஸ்ரீ
> ரஹ்மான் விசிறியா ஸ்ரீ இளையராஜா ரசிகையா என்ற எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்
> பதிவு எப்போதும் போல் சிந்தனையைத் தூண்டியது. ரஹ்மான் பல கலைஞர்களுடன்
> கருத்தொருமித்து படைப்புக்களச் சேமித்து அதிலிருந்து கதம்பம் போல் புதியதொரு
> படைப்பைச் செய்கிறார் என்ற பொருளை நான் அறிந்தேன். அதில் பலரது உழைப்பு,
> தொழில் நுட்பம், சிறந்த தேர்வாண்மை, நுட்பம் எல்லாம் வருகிறது. *
>
> *ஆனால் ஸ்ரீ இளையராஜா தாமே உள்புகுந்து குடைந்து குடைந்து மூழ்கி
> முத்தெடுக்கிறார். இது ஒரு தனிமனித அசகாய சூரத்தனம். தவம். குறையும் நிறையும்
> அவருக்கே. அது ஒரு குருபாட்டை என்பதாக சொன்னார். *
>
> *இந்த இரண்டாவது வகை தான் தமிழ்த் திரையுலகில் பெரும்பாலும் முன்பு இருந்தது.
> நாம் பழைய தொன்மையில் கல்வியில் கலையில் குருகுலவாசிகள். கருவிகள் உபயோகம்
> குறைவாக ஸ்ரீ ராஜா காலத்தை விட இருந்தாலும் குரு சிஷ்ய பாவமும் தனிமனிதப்
> பிரயத்னமும் மேலோங்கி இருந்தது. இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. முதலாவது கூட்டு
> முயற்சி. இரண்டாவது தனிமனித அசுர சாதகம். கூட்டு முயற்சியில் பெரும்பாலும்
> இரைச்சல் கூடுதல். ஒலி பிரம்மாண்டம். அங்கே அந்த பிரம்மாண்டத்திற்கு
> பெருமதிப்பு. அதனால் கேளிக்கைகள் விழாக்கள் கூட்டங்கள் ஆகியவற்றில் இந்தப்
> பாடல்கள் வரவேற்பு புகழ் பெறுகின்றன. இதில் போகம் நிறைந்திருக்கிறது. மேலும்
> தனித்த பங்களிப்பின் மேல் தன் தனித்துவத்தை நிலைநாட்ட ஒரு இசை அடுக்கு ஸ்ரீ
> ரஹ்மானுக்கு அவசியமாகிறது. அது தொகுப்பினோடு இசைவாகவும் அதே சமயம்
> தனித்துவத்தைத் தருவதாகவும் இருக்க வேண்டி இருக்கிறது. க்வாஜா மேரே க்வாஜா
> போன்ற பாட்டுக்களில் இதைக் காணலாம். *
>
> *ஆனால் ஸ்ரீ ராஜாவின் இசையில் பூரணமான தனி முயற்சி உண்டு. இதில் தனித்துவம்
> என்று கலையில் சொல்லுகையில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இந்த தேசத்தில் ஆய
> கலைகள் அறுபத்து நான்கில் ஒன்றில்கூட நாம் கண்டுபிடித்தோம் என்று மார் தட்ட
> முடியாது. எங்காவது இருக்கும். நமக்கு அந்தத் தொடுகையில் புலப்படுகையில் நம்
> கண்டுபிடிப்பு சாதாரணம் என்று தெளிவாகும். அதனால் பணிவும் விநயமும் மிக மிக
> நல்லது. அவர்கள் மட்டும் காப்புரிமை கேட்பார்களே ஆனால் இங்கு ஒரு பயல் விருது
> வாங்க முடியாது. அதனால் தான் ஸ்ரீ ரஹ்மான் போன்றோர் தனித்த ஆய்வு நடத்தாது
> கோர்வை நடத்த ஒரு இன்க்ரிமென்டல் முயற்சி முற்படுகிறார்களோ? *
>
> *ஆழ்ந்த பயணத்தில் விளையும் இசை ஆத்ம திருப்தி தந்து நெடு நாள் நிற்கிறது.
> ஆனால் சிலகாலம் பிரபலமாகும் முரட்டுப் பாடல்கள் கால வெள்ளத்தில் காணாமல்
> போகின்றன. இதைப் போலே இன்னொன்று பிரபலமாகையில்தான் சாயல் தட்டும். வெகுஜன
> விருப்பம் கையடிப்பு கூச்சல் ஏகோபித்த ஆதரவு பணம் பிரம்மாண்டம் இவற்றைக்
> கடந்து இசையின் பெரும்பயன் இறையோடு நம்மை சேர்ப்பதே. *
>
> *அந்த வகையில் இந்தப் போட்டியில் கோதாவிற்கு வெளியே நிற்கும் ஸ்ரீ
> வித்யாசாகர் போன்றோர் அறியப் படுவதில்லை. அவர் காலத்தால் அழியாத பல பாடல்களைத்
> தந்திருக்கிறார். ஸ்ரீ ரஹ்மானுக்கு இருக்கும் பணம், புகழ், வரவேற்பு ஸ்ரீ
> இளைய ராஜாவிற்கு இருக்கும் கௌரவம், விருதுப் பட்டியல் இவற்றைக் கடந்து ஸ்ரீ
> வித்யாசாகரின் தனித்த பயணமும் சிறப்புத்தான். பல பாடல்களை குருவின் பெயரில்
> இசையமைத்து தன் பெயரை வெளியில் போடாத ஸ்ரீ கே.வி. மஹாதேவன் அவர்களின் சிறந்த
> சிஷ்யர் ஸ்ரீ புகழேந்தி கூட பெரும் இசையமைப்பாளர் தான். *
>
> *கலியில் பிரம்மாண்டம், வரவேற்பு, புகழ் ஏற்றப்படும் அளவிற்கு தனித்த இசை
> ஞானம் ஏற்றப்படவில்லை. கண்ணை மறைக்கும் மாயம். ஏனென்றால் திறமையை அளவிட
> திறமையும் பொறுமையும் வேண்டும். இரண்டும் இல்லாத இந்த அவசர உலகின் இரைச்சலில்
> இசை மிகவும் கீழ்ப்படி நிலையில் இங்கு நிறுத்தப்படுகிறது. இந்தியாவில் இசையில்
> பயணம் உயரியதும் நீண்டதும் ஆகும். அது செம்மார்ந்தது. எங்கு தொடங்கினாலும்
> இறையை அடைய முற்படாத இசை ஒரு மாற்றுக் குறைவு தான். எல்லாக் கலைக்கும்
> பொருந்தும். *
>
> *சமீபத்தில் கோயிலுக்குச் செல்வது கடவுளுக்கா கலைக்கா என்ற பதிவும்
> பார்த்தேன். நீலத்தைப் பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை. ஸ்ரீ டி.எம்.
> கிருஷ்ணா அவர்களின் வாதங்கள் என்னைப் போன்றோருக்கு அபஸ்வரமாவது இங்கேதான்.
> ஆன்றோர் காட்டிய வழி அதுவே. என்னைப் போன்ற மக்குகளுக்கு வேறு வழி கிடையாது.
> வணக்கம்.*
>
> *-- இந்திரா ப்ரியதர்ஷிணி *
>
> ********************************************************
>
> *சித்தானந்தம் *
>
>
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqY7LYc-gEYiqxPJPZ6DKqXGiBxVZzefjQ_uE44VPq3vg%40mail.gmail.com.