I liked it KR

On Wed, 2 Oct 2024 at 18:43, Narayanaswamy Sekar <[email protected]>
wrote:

>
>
> ---------- Forwarded message ---------
> From: N Sekar <[email protected]>
> Date: Wed, Oct 2, 2024, 6:42 PM
> Subject: Fwd - Sri Rangam Temple
> To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. <
> [email protected]>, Chittanandam V. R. <[email protected]>,
> Narayanaswamy Sekar <[email protected]>, Mathangi K. Kumar <
> [email protected]>, Suryanarayana Ambadipudi <
> [email protected]>, Srinivasan Sridharan <[email protected]>,
> Rama (Iyer 123 Group) <[email protected]>
>
>
> Mno 2434
> ஒரு அருமையான அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு.
>
> ஸ்ரீரங்கம் போயிருந்தபொழுது அங்கு பெருமாள் புறப்பாடு நடப்பதைக் காண
> வாய்த்தது.
>
> புறப்பாட்டில் பல்லக்கை தூக்கிவந்த இளைஞர்கள் வழியெங்கும் தங்கள் நடையை
> விசித்திரமான ஒரு நடனத்தைப்போல ஆடித் தூக்கி வந்தது, ஏதோ ஸ்ரீரங்கத்து பிராமண
> இளைஞர்களின் மனம்போன போக்கிலான ஒரு குதியாட்டம் என்று மட்டுமே அப்போது நான்
> எண்ணிக் கொண்டேன்.
>
> வேளுக்குடி சொன்னபிறகுதான் அதற்கெல்லாம் சரியான சம்பிரதாயப் பெயர்களும்
> அதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன என்று அறிந்து ஆச்சரியப்பட்டேன்.
>
> ஒரு விஷயத்தை அறிந்துகொண்டு பார்த்து அனுபவிக்கும்பொழுது அதிலுள்ள சுவாரஸ்யமே
> தனிதான்!
>
> உங்களில் பலர் அவற்றை ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும்.
>
> இருந்தாலும் அதைப்பற்றி அதிகம் அறிந்திராத
> மற்றவர்களுக்காக ஓரிரு வார்த்தைகள்.
>
> சுவாமியின் பல்லக்குக்கு *'#தோளுக்கினியான்'* என்ற பெயர் இருப்பதும்,
> பல்லக்குத் தூக்கிகளுக்கு
> *'#ஸ்ரீபாதம் தாங்கிகள்'* என்று பெயர் என்பதும் எனக்கு இத்தனைநாளாகத்
> தெரியாது!
>
> பெருமாள் புறப்பாட்டின் ஆரம்பம், ஒரு கருடன் எப்படி சட்டென தன் சிறகை
> விரித்துப் பறக்குமோ அப்படி புறப்படுமாம்.
>
> அப்பாங்கை *கருடகதி* என அழைப்பார்களாம்!
>
> அதையடுத்து குகையில் இருந்து வெளியே வரும் ஒரு சிங்கம் எப்படி தன்
> இடப்பக்கமும், வலப்பக்கமும் தலையை லேசாகத் திருப்பி, ஏதாவது அபாயம் உண்டா
> எனப்பார்த்துவிட்டுப் பின் சிங்கநடை போடுமோ அதுபோல ஸ்ரீபாதம் தாங்கிகள்
> நம்பெருமாளை கர்பக்கிரகத்திலிருந்து வெளியே தோளுக்கினியானில் தூக்கிப்
> புறப்படுவது *சிம்மகதியாம்!*
>
> இதைத்தொடர்ந்து புலிபோல இரண்டுமூன்று அடிஎடுத்து வைப்பது, பின் நிறுத்துவது,
> மீண்டும் இரண்டு மூன்று அடியெடுத்து வைத்துப் போவதை *வியாக்ரகதி* என்கிறார்கள்.
>
> அதையடுத்து  காளைமாடு போல மணியோசையுடன் நடப்பதை *ரிஷபகதி* என்றும்
>
> ஆண்யானைபோல நடப்பதை *கஜகதி* என்றும் சொல்கிறார்கள்.
>
> புறப்பாடு முடிந்து திரும்பி வந்து கர்ப்பகிரகத்தில் நுழையும்போது எப்படி ஒரு
> பாம்பு தன் புற்றுக்குள் நுழையும் முன்பு தன் தலையை சற்று தூக்கிப்
> பார்த்துவிட்டு பின் சட்டென கடிதில் உள்ளே நுழையுமோ அவ்விதம் நுழைவதை
> *சர்பகதி* என்கிறார்கள்.
>
> கடைசியாக, எப்படி ஒரு அன்னப் பறவை தன் சிறகை சட்டென மடித்துக்கொண்டு
> உட்காருமோ அப்படி உள்ளே நுழைந்த பெருமாளை சட்டென அமர வைப்பதை *ஹம்சகதி* என்று
> பெயரிட்டு வைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம்
> அறிந்து மகிழ்ந்தேன் இன்று நான்.
>
> 'ஏன் ஸ்ரீபாதம்தாங்கிகள் வழியில் வெறுமே நிற்கும்போதுகூட,
>
> சற்றே இடதுபுறமும் வலதுபுறமும் சாய்ந்து சாய்ந்து பெருமாளை தாலாட்டிக் கொண்டே
> இருக்கிறார்கள்!!
>
> ஆயக்கால் போட்டு நிறுத்திவிட வேண்டியதுதானே!!'
>
> என்று நான் பலநாள் நினைத்ததுண்டு.
>
> அப்படி ஆயக்கால் போட்டு நிறுத்துவது பெருமாள் கோயில்களில் வழக்கமில்லையாம்!
>
> *பெருமாள் பாரத்தை ஒரு  பாரமாக நினைப்பது தவறாம்.*
>
> அடேங்கப்ப்ப்பா......!!!
>
> இதில் ஆச்சரியம் என்னவென்றால், முன்னே செல்லும் அறையர்சாமி ஸ்ரீபாதம்
> தாங்கிகளுடைய ஆட்டத்திற்கு ஏற்றதுபோல் இசைத்துக் கொண்டும் ,
> பாடிக் கொண்டும் செல்ல,
>
> தீப்பந்தம் பிடிப்போர் குடைபிடிப்போர் வெள்ளித்தடி ஏந்துவோர் ஆளவட்டப்
> பரிகாரகர் போன்றோரும்
>
> அதேகதியில் ஆடிக்கொண்டு செல்லவேண்டுமாம்!
>
> அது என்ன
> ஆளவட்டப் பரிகாரரர் என்கிறீர்களா?
>
> பெருமாளுக்கு விசிறி வீசுபவர்!
>
> தவிர, பெருமாள்
>
>  #சேஷவாகனம்
>
> #கற்பகவிருட்ச வாகனம்
>
> #யானை பசுவையாளிவாகம்
>
> ஆகியவற்றில் பயணிக்கும்பொழுது அதற்கு ஏற்றதுபோல எல்லா கதிகளும்
> மாற்றப்படுமாம்.
>
> உதாரணமாக வையாளி வாகனத்தின் பொழுது
>
> அதாவது குதிரை வாகனத்தின்பொழுது இரண்டுநடை வேகமாகச் சென்றுவிட்டு, பின்
> ஒருமுறை இடப்புறமாக சுற்றிவிட்டு அடுத்து ஒருமுறை வலப்பக்கமாக சுற்றிவிட்டு
>
> மீண்டும் இரண்டுநடை தோளுக்கினியானைத் தூக்கி நடப்பார்களாம்.
>
> சரி, எப்படி இந்த இளைஞர்களால் இப்படி தேர்ந்த நடனக் கலைஞர்களைப்போல இந்த
> அளவுக்கு அப்படி தாளம் தப்பாமல் ஆடிக்கொண்டே பல்லக்கைத் தூக்கிச் செல்ல
> முடிகிறது?
>
> இந்தப் பணிக்கு அத்தனை எளிதில் ஆளை நியமித்து விடமாட்டார்களாம்.
>
> முதலில் சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இடதுதோள் பழக்கமா வலதுதோள்
> பழக்கமா என்ன உயரம் என்பதையெல்லாம் கவனித்து, அதன்பிறகு அவர்களுக்கு வெறும்
> தோளுக்கினியானைத் தூக்கிக்கொண்டு காவிரி மணலில் பல மாதங்கள் பயிற்சி எடுக்கச்
> சொல்வார்களாம்.
>
> அவர்கள் தேர்ந்த ஸ்ரீபாதம்தாங்கிகளாக ஆகிவிட்டார்கள் என்று நிர்வாகத்திற்கு
> சமாதானம் உண்டானால்தான் அவர்கள் அந்தப் பணிக்கு அமர்த்தப்படுவார்களாம்.
>
> ஆச்சரியமாக இல்லை!!!
>
> ஸ்ரீரங்கத்தைப் பற்றிய செய்திகள் எடுக்க எடுக்க வற்றாத அமுதசுரபியைப் போல
> வந்துகொண்டே இருக்கின்றன.
>
> கேட்பதற்கு சில இனிமையாகயும்
>
> பல ஆச்சர்யமாகவும் இருக்கிறது, எனக்கு.
>
> நான் இத்தனைமுறை அங்கு சென்றிருந்தும் இதுவரை நான் பார்த்தும், பார்க்காத
> கேட்டும்  கேட்காத விஷயங்களை இன்னொருமுறை சரியாகப் பார்த்து, கேட்டு
> மகிழவேண்டும் என என் சிந்தை மிக விழைகிறது இப்போது.
> சிறப்பாக வாழத்தகுந்த பெரியகோவில் எனப்படும் மதில்சூழ் திருவரங்கத்துக்கு
> போய்ச்சேராமல் ஏன் இப்படி காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்?' என்று.
>
> 'மருவிய பெரியகோயில் மதிள்திருவரங்கம் என்னா கருவிலே திருவிலாதீர் காலத்தைக்
> கழிக்கின்றீரே?'
>
> இவ்வளவு விஷயம் இருக்கிறதா!!!
> 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
>
> Yahoo Mail: Search, Organize, Conquer
> <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcCG7qOtU56FW6d5UK1O94UzeEHw_apO-vD%3DTAfGgxGtA%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcCG7qOtU56FW6d5UK1O94UzeEHw_apO-vD%3DTAfGgxGtA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorjxzLZcpVT5cHzdykXn-9%3D3Kg5nJtbONbaS%2BaMwvnoWA%40mail.gmail.com.

Reply via email to