யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலையாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறையாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடியாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. மற்றவர்களை, மனம் விட்டு புகழ வேண்டும். போலியாக அல்ல. உண்மையாக. அவர்கள் சந்தோஷப்படுவார்கள். நமக்கு மேலும் உதவி செய்ய நினைப்பார்கள். உதாரணமாக, இந்தக் கட்டுரை நன்றாக இருக்கிறது என்றால், நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லலாம். அடடா, இத்தனை பேர் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்களே என்று மேலும் எழுத உற்சாகம் வரும்...நன்று; நாம் எவ்வளவு பேருக்கு அந்த சந்தோஷத்தை கொடுத்திருக்கிறோம் என்பதே நமக்கு அந்த சந்தோஷத்தை பெறும் வழி. நாம் செய்ய தவறியதை நாம் எதிர்பார்ப்பது எவ்வளவு சுய நலம்? திருமூலரின் திருமந்திரம் செப்பியது இன்னுரை; இனிய உளவாக கூறல்' இன்சொலன் ஆகப் இருத்தல். உரை நண்டு எனில் இனிய உரை இன்னொரு தொடுத்த மாலை. யாவர்க்கும் இன்னுரை. உரை யார் யார் வாய்க்கேட்பினும், இன்னுரை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். இன்னுரை உரையை மேலும் மெருகூட்ட;என் வழியே உங்கள் வழியாக இருப்பின், நீங்கள் எதிர்பார்த்த வழி நன்கு அமையும். neṟṟi n. [T. K. Tu. netti, M.neṟṟi.] 1. Forehead; புருவங்களுக்கு மேல் <https://agarathi.com/word/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D> உள்ள முகத்தின் பகுதி. கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை (திருவாச. 8, 8). 2. Front; முன்பகுதி.நிடதத்தினெற்றி (கம்பரா. மருத்து <https://agarathi.com/word/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81> 17). 3. Top,summit; உச்சி <https://agarathi.com/word/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF> கமுகி னெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடை (சீவக. 31). 4. Sky; ஆகாயம் <https://agarathi.com/word/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D> நெறிந்தனமாசுண நெற்றியே (தக்கயாகப். 524). 5. Front side of the storey of a building, facade; கட்டிடத்தின் மேனிலைமுகப்பு. நிரைமணி மாட நெற்றிச் சாளரந்தோறும் (கம்பரா. மிதிலை <https://agarathi.com/word/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88> 14). 6. End or extremity of a board, timber, etc.; தண்டிகை <https://agarathi.com/word/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88> முதலியவற்றின் தலைப்பு. (W.) 7. The upper part of the trunk of a tree where it branches off; மரத்திலிருந்து
நெற்றி neṟṟi s. Forehead, front, brow, நுதல்; vulgarly, நெத்தி. 2. End or extremity of a board, a timber, &c., தண்டிகையின்தலைப்பு. 3. The upright, front, or prominent part of a building, a fort, &c.; a gable, வீட்டின்மு கடு, (c.) 4. Front of an army, முன்னணி. 5. Brow of a hill, மலையுச்சி. 6. Upper part of the stem of a tree, where it branches off, மரத்தினுளி. 7. Rank or file of an army, படைவகுப்பு. நெற்றிக்கண்-நுதற்கண், s. Frontal eye, as of Siva. நெற்றிக்கண்ணன், appel. n. Siva, சிவன். நெற்றிக்குநேரே. Over against one, fronting one. நெற்றிக்கை, s. As நெற்றிமுட்டு, 2. நெற்றிச்சுட்டி, s. An ornament for the forehead of a female or a child. 2. As சுட்டி, which see. நெற்றிச்சுழி, s. A kind of curve on the forehead. நெற்றித்திலகம்--நெற்றிப்போட்டு, s. A spot of sandal, &c., on the forehead. See திலகம். நெற்றிப்பட்டம், s. A plate for a man's forehead, as a badge of distinction. See பட்டம். நெற்றிமாலை, s. A chain, or garland for the forehead. நெற்றிமுட்டு, s. A short and direct course, or way, across, சரிநேர். 2. A slanting timber in a bungalow roof, as எதிர்கைமரம். 3. The end of a board, &c., lower end of a rafter, கைமரத்தினடி. 4. Sudden meeting of one at a corner, முட்டுச்சந்து. Science of samudrika (agastya samhita) : A high, capacious, conch-shell-like and rugged fore-head indicates poverty. Persons, having crescent-shaped foreheads, become rich. Persons, having spacious fore-heads, become preceptors. Persons, having sinewy fore-heads, become sinners. Persons, having high and triangular foreheads, become the possessors of wealth. Persons, having depressed fore-heads, are addicted to wicked deeds and <https://www.wisdomlib.org/hinduism/book/the-garuda-purana-dutt/d/doc122545.html#page-172>worthy of being slain. A round fore-bead indicates miserliness. An elevated fore-head indicates royalty. A dry non perspiring fore-head is not auspicious for men. A sufficiently-perspiring and rough fore-head indicates happiness. Trembling and expensive fore-head is the best and expressive of happiness. A laughing and wicked fore-head indicates madness. Three lines on the fore-head indicate longevity for a hundred years. Four lines indicate royalty and longevity for ninety-five years. Absence of any line indicates longevity for ninety years. When the lines on the fore-head are broken a man becomes licentious. If the lines extend up to hairs a person lives for eighty years. If there are five, seven or six lines, a person lives fifty years or more. If they are dark-blue in colour a man lives forty years; and if they extend up to the eye-brows the person lives thirty years. When there are twenty lines bending towards the left it indicates longevity and when there are short lines it indicates short life. உயரமான, கொள்ளளவான, சங்கு போன்ற மற்றும் முரட்டுத்தனமான நெற்றித் தலை வறுமையைக் குறிக்கிறது. பிறை வடிவ நெற்றி யில் இருப்பவர்கள் பணக்காரர்களாக மாறுகிறார்கள். விசாலமான நெற்றியை உடையவர்கள் ஆசான்களாக மாறுகிறார்கள். பாவியான நெற்றியை உடையவர்கள் பாவிகளாக மாறுகிறார்கள். உயர்ந்த மற்றும் முக்கோண நெற்றியை உடையவர்கள் செல்வத்திற்கு சொந்தக்காரர்கள் ஆவர். மனச்சோர்வடைந்த நெற்றியில் இருப்பவர்கள், தீய செயல்களுக்கு அடிமையாகி, கொல்லப்படுவதற்கு தகுதியானவர்கள். ஒரு வட்டமான முன் மணி கஞ்சத்தனத்தை குறிக்கிறது. உயர்த்தப்பட்ட நெற்றி தலை அரச குடும்பத்தைக் குறிக்கிறது. உலர்ந்த வியர்க்காத நெற்றி தலை ஆண்களுக்கு நல்லதல்ல. போதுமான அளவு வியர்க்கும் மற்றும் கடினமான நெற்றித் தலை மகிழ்ச்சியைக் குறிக்கும். நடுங்காத மற்றும் விலை உயர்ந்த நெற்றி தலை சிறந்த மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. சிரிக்கும் மற்றும் பொல்லாத நெற்றித் தலை பைத்தியக்காரத்தனத்தை குறிக்கிறது. நெற்றியில் உள்ள மூன்று கோடுகள் நூறு ஆண்டுகள் நீண்ட ஆயுளைக் குறிக்கின்றன. நான்கு வரிகள் தொண்ணூற்றைந்து ஆண்டுகள் ராயல்டி மற்றும் நீண்ட ஆயுளைக் குறிக்கின்றன. எந்த வரியும் இல்லாதது தொண்ணூறு ஆண்டுகள் நீண்ட ஆயுளைக் குறிக்கிறது. நெற்றியில் உள்ள கோடுகள் உடைந்தால், ஒரு மனிதன் லைசன்ஸ் ஆகிறான். கோடுகள் முடி வரை நீட்டினால், ஒரு நபர் எண்பது ஆண்டுகள் வாழ்கிறார். ஐந்து, ஏழு அல்லது ஆறு கோடுகள் இருந்தால், ஒரு நபர் ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழ்கிறார். அவர்கள் அடர் நீல நிறத்தில் இருந்தால், ஒரு மனிதன் நாற்பது ஆண்டுகள் வாழ்கிறான்; அவை புருவம் வரை நீட்டினால், அந்த நபர் முப்பது ஆண்டுகள் வாழ்கிறார். இருபது கோடுகள் இடதுபுறமாக வளைந்தால் அது நீண்ட ஆயுளைக் குறிக்கிறது மற்றும் குறுகிய கோடுகள் இருந்தால் அது குறுகிய ஆயுளைக் குறிக்கிறது. நுதல் பிறை என்பது நெற்றியைக் குறிக்கும் என்பது விவாதப் பொருள் என நனனன் என் தமிழ் ஆசிரியர் கூறுவது உண்டு. நுதல் பிறை என்பது புருவம் ஆகும் என்பது என் எண்ணம். பிறை நெற்றி புருவமும் பிறை என்பது சிரிக்கும் பந்தின் வரைபடம் போலவே இருக்கும். K R IRS 121024 ---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Sat, 12 Oct 2024 at 04:35 Subject: Fwd: Tamilnayagam - சிலப்பதிகாரம் (11) To: *சிலப்பதிகாரம் (11)* படை வழங்குவது ஓர் பண்பு உண்டு *தமிழ்நாயகம் * கோவலனுக்கும் கண்ணகிக்கும் முதல் இரவு. அந்த அறையின் தோற்றத்தை விளக்கினார் அடிகளார். அடுத்து, அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று சொல்கிறார். அவர்கள் எங்கே பேசினார்கள். கோவலன்தான் பேசுகிறான். கண்ணகியின் அழகில் மயங்கி, அவள் அழகைப் புகழ்கிறான். கோவலன் , கண்ணகியிடம் சொல்கிறான் (கொஞ்சுகிறான்) "இந்த சிவ பெருமான், பிறை நிலவை தலையில் சூடிக் கொண்டிருக்கிறார். அது அவருக்கு அழகாகத்தான் இருக்கிறது. எல்லோரும் அவரை வணங்கும்போது, அந்த பிறை நிலவையும் வணங்குகிறார்கள். ஆனால், அந்த பிறை நிலா அவருக்கு உரியது அல்ல. உன் நெற்றியில் இருந்து வந்தது அது. எனவே, அதை உனக்கு (கண்ணகிக்கு) அவர் தருவதுதான் ஞாயம். அரசர்கள் போருக்குச் செல்லும் முன், வீரர்களுக்கு ஆயுதங்களை வழங்குவார்கள். போரில் போராடி வெற்றி பெற வேண்டி. இந்த காமப் போரில் நீ வெல்ல அந்த மன்மதன், தன் கையில் இருந்த கரும்பு வில்லை உன் புருவமாக வளைத்து அனுப்பி வைத்திருக்கிறான் போலும் " பாடல் குழவித் திங்கள் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமைத்து ஆயினும், உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின், பெரியோன் தருக - திரு நுதல் ஆக என: அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப் படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின், உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில் பொருள் குழவி என்றால் குழந்தை. இங்கே இளைய, அல்லது சிறிய. பிறை. நிலா தேவர்கள் போற்ற அழகாக முடியில் அருமையாக இருந்தாலும் அதன் உரிமை உன்னுடையது (காரணம்) அது உன் உடன் பிறப்பு. உண்மையாக, சிவபெருமான் உனக்குத் தர வேண்டும் உன்னுடைய சிறந்த நெற்றியாக. பகைவர்களை சந்திக்கும் இடம் அந்த இடத்துக்கு போர் செய்யச் செல்வோருக்கு ஆயுதங்கள் கொடுத்து அனுப்புவது ஒரு வழக்கம். ஆகவே, அது போல மன்மதன் சிறந்த பெரிய கரும்பு வில்லை உனக்கு புருவமாகக் கொடுப்பான். (உருவிலாளன் = மன்மதன். மன்மதனுக்கு உருவம் கிடையாது. யார் கண்ணுக்கும் தெரிய மாட்டான், அவன் மனைவி இரதி தேவியைத் தவிர.) பெண்களுக்கு நெற்றி சிறிதாக இருக்க வேண்டும் என்பது சாமுத்திரிகா இலட்சணங்களில் ஒன்று. ஏன்? பெண்களுக்கு கருணை அதிகம் (அந்தக் கால பெண்களுக்கு). கருணை, கண் வழியேதான் வெளிப்படும். அதற்கு கண்ணோட்டம் என்று பெயர். கண்ணோட்டம் என்று வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார். கருணை அதிகமானால், கண்கள் விரியும். கண்கள் விரிந்தால், நெற்றி சுருங்கும். அம்பாளுக்கு விசாலாட்சி என்று ஒரு பெயர் உண்டு. விரிந்த, பெரிய கண்களை உடையவள் என்று அர்த்தம். கண்ணகியின் நெற்றி, பிறைச் சந்திரனைப் போல சிறியதாக இருந்ததாம். சீதையை, குகனிடம் அறிமுகப் படுத்தும் போது இராமன் சொல்லுவான், "இந்த சிறந்த நெற்றியை உடைய சீதை உன் உறவினள்" என்று. "நல் நுதலவள் நின் கேள்" அன்னவன் உரை கேளா, அமலனும் உரை நேர்வான், என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந் நல் நுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம் உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் வர்ணனை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முதலிரவில், மனைவியை ,கணவன் புகழ்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நாம், மற்றவைகளை எவ்வளவு புகழ்கிறோம் ? அவர்கள் நல்ல குணத்தை, அவர்கள் செய்த உதவியை, எவ்வளவு புகழ்கிறோம். மனைவியின் சமையலை, அவள் வேலை மெனக்கட்டு வீட்டை சுத்தமாக வைக்கப் படும் பாட்டை, கணவனின் வெளி உலக சங்கடங்களை சமாளிக்கும் திறமையை, நண்பர்களின் உதவியை, கீழே வேலை செய்பவர்களின் பங்களிப்பை...இப்படி ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது, புகழ்ந்து சொல்ல. நாம் புகழ்கிறோமா? குறை சொல்ல மட்டும் முதலில் வந்து விடுகிறோம். சாப்பாட்டில், ஒரு உப்புக் கல் கூடி விட்டால், தைய தக்கா என்று குதிக்கிறோம். சரியாக இருந்தால், நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்வது கிடையாது. மற்றவர்களை, மனம் விட்டு புகழ வேண்டும். போலியாக அல்ல. உண்மையாக. அவர்கள் சந்தோஷப்படுவார்கள். நமக்கு மேலும் உதவி செய்ய நினைப்பார்கள். உதாரணமாக, இந்தக் கட்டுரை நன்றாக இருக்கிறது என்றால், நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லலாம். அடடா, இத்தனை பேர் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்களே என்று மேலும் எழுத உற்சாகம் வரும்... "யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. " என்பார் திருமூலர். யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. முயன்று பாருங்கள். *-- தமிழ்நாயகம்* ********************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor2mvH7onsgXTpOj1%3DitgkSAuOTScpKZqmGHZvJ-LLm%3DQ%40mail.gmail.com.
