👃👃

On Fri, Oct 18, 2024, 19:58 Rajaram Krishnamurthy <[email protected]>
wrote:

>
> PLEASE FIND ATTACHED WORD DOC ATTACHMENT FOR READING  ON UTTARAKANDA KR
> IRS 181024
>
>
> ---------- Forwarded message ---------
> From: Chittanandam V R <[email protected]>
> Date: Fri, 18 Oct 2024 at 18:54
> Subject: Fwd: Kulasekara Aalvar by Sujatha
> To:
>
>
>
> *குலசேகர ஆழ்வார் - சுஜாதா*
>
> 'பெருமாள் திருமொழி'யில் 'ஆலை நீள்கரும்பு' என்று துவங்கும் ஏழாம் பத்தில்
> அற்புதமான பாடல்களைக் குலசேகர ஆழ்வார் பாடியிருக்கிறார்.
>
> அதில் ஒரு பாடலில் நான் யசோதையாக இல்லையே என்று ஒரு தாய் ஏங்குவதாகப்
> பாடியிருக்கும் பாட்டு அதிசயமானது.
>
> *"மருவு நின்திரு நெற்றியில் சுட்டி*
>
> *அசைதர மணி வாயிடை முத்தம்*
> *தருதலும் உன்றன் தாதையைப் போலும்*
> *வடிவுகண்டு கொண்டு உள்ளம் உள்குளிர*
> *விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து *
> *வெகுளியாய் நின்று உரைக்கும் அவ்வுரையும்*
> *திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன், எல்லாம்*
> *தெய்வ நங்கை யசோதை பெற்றாளே."*
>
> நெற்றியில் சுட்டி அசைய, வாயில் முத்தம் தருவதும், விரலை வாயில் வைத்துப்
> பேசும் வெகுளிப் பேச்சும் எதுவும் நான் பெறும் பாக்கியமில்லாமல் இவையெல்லாம்
> யசோதை பெற்றாளே...
>
> இவ்வாறு கிருஷ்ணாவதாரத்தின் பல செயல்களைச் சொல்லி அவைகளைப் பார்க்கும்
> பாக்கியம் நாங்கள் பெறவில்லையே என்று எங்கும் பாடல்கள் இப்பத்தில் உள்ளன.
> குலசேகரரின் 'மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே'  என்ற பாசுரத்தை
> நீலாம்பரி ராகத்தில் கேட்காதவர்கள் சொற்பமே.
>
> அந்தப் பத்தில் உள்ள அதிகம் மேற்கோளிடப்படாத ராமாவதாரப் பாடல்கள் இரண்டு இவை:
>
> *"மலையதனால் அணைகட்டி மதில் இலங்கை அழித்தவனே! *
> *அலைக்கடலைக் கடைந்து  அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே! *
> *கலைவலவர்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே! *
> *சிலைவலவா! சேவகனே! சீராமா! தாலேலோ"*
>
> மலையால் அணை கட்டி இலங்கையை வென்றவனே! கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதம்
> அளித்தவனே! பல்வேறு கலைகளில் வல்லவர்கள் வாழும் திருக்கண்ணபுரத்துப் பெருமானே!
> வில் திறமையுள்ளவனே! உலகத்தைக் காப்பவனே!இராமனே! தாலேலோ!
>
> குலசேகர ஆழ்வாரின் எட்டாம் நூற்றாண்டுக் காலத்திலிருந்து திருக்கண்ணபுரக்
> கோயில் இருந்திருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. 'முகுந்த மாலை' என்னும்
> சமஸ்க்ருத நூலை எழுதியவரும் குலசேகர ஆழ்வார்தான் என்று நம்பப்படுகிறது. ஆனால்,
> திவ்யசூரிய சரிதம் இதைக் குறிப்பிடவில்லை. ஆகவே பண்டிதரும் திருமாலடியாரும்
> குலசேகரர் என்ற பெயர் படைத்த பிற்காலத்துக் கேரள வேந்தர் ஒருவர் 'முகுந்த
> மாலை'யைச் செய்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
>
> *"தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! *
> *யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்த் துயின்றவனே! *
> *காவிரி நல்நதி பாயும் கணபுரத்து என் கருமணியே! *
> *ஏவரி வெஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ" *
>
> தேவாசுரர்களையும் திசைகளையும் படைத்தோனே, எல்லோரும் வந்து வணங்கும்
> திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருப்பவனே, வில்வித்தையில் சிறந்தவனே, ராகவனே,
> தாலேலோ.
>
> குலசேகரர் கம்பர் அளவுக்கு உருக்கமாக ராமாயணக் கதையில் அயோத்தியில் நடந்த
> சம்பவங்களைப் பாடியிருக்கிறார். கம்பரின் முன்னோடி என்றுகூட இவரைச் சொல்லலாம்.
>
>  தசரதன் புலம்புவதாக அமைந்தது இந்தப் பாட்டு:
>
> *"வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இருநிலத்தை *
>
> *வேண்டாதே விரைந்து வென்றி *
> *மைவாய களிறொழிந்து தேரொழிந்து *
> *மாவொழிந்து வனமே மேவி *
> *நெய்வாய வேல் நெடுங்கண் நேரிழையும் *
> *இளங்கோவும் பின்பு போக *
> *எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ! *
> *எம்பெருமான்!என் செய்கேனே?" *
>
> என்னுடைய கொடுமையான ஆணையைக் கேட்டு ராச்சியத்தைத் துறந்து, யானை, தேர்,
> குதிரைகளையெல்லாம் துறந்து,வேல் போன்ற கண்ணுடைய மனைவியுடனும் தம்பியுடனும்
> எவ்வாறு நடந்தாயோ? இராமனே! எம்பெருமானே! நான் என்ன செய்துவிட்டேன்!
>
> தசரதன் இறந்துபோவதன் முன் சாசனமாக இருக்கிறது இந்தப் பாடல்:
>
> *"தேனகு மாமலர்க்கூந்தல் கௌசலையும் *
> *சுமித்திரையும் சிந்தை நோவ *
> *கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட *
> *கொடியவள்தன் சொற்கொண்டு இன்று *
> *கானகமே மிக விரும்பி நீ துறந்த *
> *வளநகரைத் துறந்து நானும் *
> *வானகமே மிக விரும்பிப் போகின்றேன் *
> *மனுகுலத்தார் தங்கள் கோவே!" *
>
> கௌசலையும் சுமித்திரையும் வருந்தத்தக்க 'கூனி' சொல்லைக் கேட்டுக் கொடிய
> கைகேயியின் ஆணையை மேற்கொண்டு காட்டுக்கு விருப்பத்துடன் இந்த நகரத்தைத்
> துறந்து சென்றாய். இதே நகரத்தைத் துறந்து நானும் சாவை விரும்பிப் போகிறேன்.
>
> சிதம்பரத்தில் நடராசர் சன்னதிக்கு எதிரே உள்ள விஷ்ணு கோயில் ஆழ்வார்
> பாடல்களில் தில்லைச் சித்திரகூடம் என்று அழைக்கப்படுகிறது. இராமாயணத்தின்
> சித்ரகூடத்திலிருந்து வந்த பெயர். சுருக்கமாக ராமாயண சம்பவங்கள்  முழுவதையும்
> பத்தாம் பத்தில் சொல்லிவிடுகிறார்.
>
> முழு இராமாயணமே உத்தர காண்டத்தையும் சேர்த்து இருக்கிறது.
>
> *-- சுஜாதா*
>
> ************************************
>
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooPtpncCHEZNjuOM%3DjV%3DwNXio%2B5oJSNAYJEi3L%3Dme3m8g%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooPtpncCHEZNjuOM%3DjV%3DwNXio%2B5oJSNAYJEi3L%3Dme3m8g%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJiWWoLHxStYPFKKxuCX5OyT-Q1wZn%2BzvK%3DFWQSE5jD1LP%3DwFg%40mail.gmail.com.

Reply via email to