Excellent KR IRS 311024 On Thu, 31 Oct 2024 at 05:57, Venkatachalam Subramanian < [email protected]> wrote:
> ஸம்ஸ்க்ருத மந்திரங்கள் – கவனம் தேவை:- > > 1. மந்திரங்களில் வரும் ந மற்றும் ந: ( நஹ ) இரண்டிற்கும் பொருள் வேறுபாடு > இருக்கிறது. > > ந: என்றால் எங்களுக்கு. ந என்றால் இல்லை/வேண்டாம். > > காயத்ரி மந்திரத்தில் வரும் > தியோ யோ ந: ப்ரசோயதாத் என்பதில் நஹ என்று ஸ்பஷ்டமாகச் சொன்னால் ‘எங்கள் > புத்தியைத் தெளிவாகப் பிரகாசிக்கச் செய்யட்டும்’. ந என்று உச்சரித்தால் > ‘பிரகாசிக்கச் செய்ய வேண்டாம்’ என்ற பொருள் வந்துவிடும். > > 2. Express bus, fast food என்பதை தமிழில் துரித பேருந்து, துரித உணவு என்று > எழுதுகிறார்கள். > > அது துரித அல்ல. த்வரித என்றிருக்க வேண்டும். ‘த்வரித’ என்றால் உடனடி/விரைவு. > > அப்படியென்றால் துரித என்றால் என்ன பொருள்? > பாபம் என்று பொருள். > > சங்கல்ப மந்திரத்தில் வருமே, மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா > > கடவுள் பூஜைக்கு வேண்டியது ஸம்ஸ்க்ருதமா, தமிழா? > > தமிழில் பூஜிப்பதாக முயற்சி செய்தாலும் பெருவாரியான துதிச் சொற்களும் மூல > மந்திரங்களும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் இருக்கும். > > ஆதி வீர சைவர்கள் சார்பாக என்றுச் சொல்லிக் கொண்டு சிலர் தமிழில் தான் > துதிக்க வேண்டும் என்று அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு தமிழே சரிவரத் > தெரியாது என்று புரிய வரும். > > சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரச் சொல்லாம் ’நமச்சிவாய’ என்பதும், > விஷ்ணுவுக்கான எட்டெழுத்து மந்திரமான ’ஓம் நமோ நாராயணாய’ இரண்டுமே > ஸம்ஸ்க்ருதம் தான். > > அது ‘நமச்சிவாய’ அல்ல நமஹ சிவாய. ‘சிவன் வணக்கம்’, ‘சிவனுக்கு வணக்கம்’ என்று > பொருள். > > தமிழில், ‘சிவனே’, ‘சிவா’ உண்டே தவிர சிவாய என்று வராது. > > இந்த ய என்பது ஸம்ஸ்க்ருத மொழியின் நான்காம் வேற்றுமை உருபாகும். > > ‘ஓம் நமோ நாராயணாய’ வில் வரும் ய வும் ‘ஓம் நாராயண வணக்கம்’ அல்லது ‘ஓம் > நாராயணனுக்கு வணக்கம்’ என்ற பொருளில். > > சம்ஸ்க்ருதத்தின் சொல் புணர்ச்சி (ஸந்தி) விதிப்படியே நமஹ நாராயணாய என்பது > நமோ நாராயணாய என்று மாறி வருகிறது. > > தீவிர சைவ சித்தாந்தத்தின் ஆதி ஆகமம் எனப்படும் தமிழ் நூலான திருமந்திரத்தில் > சிவாய என்று ஸம்ஸ்க்ருத வடிவமே வந்துள்ளது. மந்திரம் என்பதே வடசொல்தான். > திருமந்திரம் நூல் முழுவதிலும் 75℅க்கும் மேலாக ஸம்ஸ்க்ருதச் சொற்களே > அமைந்துள்ளன. > > ஸம்ஸ்க்ருதம் இல்லாமல் மந்திரம் இல்லை.: சிவா & ஸ்ரீ ராம ஜெயம் : > > 1. டாக்டர் சிவா என்று ஒரு திரைப்படம் வந்திருந்தது நினைவிருக்கலாம். சிவா > என்று எழுதினால் ஸம்ஸ்க்ருதச் சொல் அமைப்பின்படி அது முதலாம் வேற்றுமை > அமைப்பின்படி பெண்பால் சொல்லாகும். சிவா, ராமா என்பவை விளி வேற்றுமை என்னும் 8 > ஆம் வேற்றுமையும் ஆகாது. தமிழில் 8 ஆம் வேற்றுமைக்கு சிவனே, ராமனே என்றே > வரும். ஸம்ஸ்க்ருதம் ஆயின் ஹே சிவ, ஹே ராம என்றே வரும். > > சிவா, ராமா என்று சொன்னால் அது பெண்பால் பெயர்கள் ராதா, கீதா என்பது போல. > சிவ, ராம என்றே எழுதுவோம். > > 2. நோட்புக்கில், திருமண அழைப்பிதழ் களில், வீட்டு பூஜையறையில், வாசலில் > கோலம் போடும் போது > ஸ்ரீ ராம ஜெயம் என்று பலர் எழுதுகின்றனர். > > அது ஜெயம் அல்ல. ஜயம். > ஜயம் என்றால் வெற்றி, வெல்வது. > ஜெயம் என்றால் வெல்லப் படுவது (தோல்வி அடைவது). > > ஸம்ஸ்க்ருதத்தில் ‘எ’ உயிரொலி கிடையாது. ‘ஏ’ எனும் நெட்டொலி மட்டுமே. எனவே > ஜெயம் என்று எழுதினால் ஜேயம் என்று ஒலித்து தோல்வியை வேண்டுவதாய் பொருள் > வந்துவிடும். > > ஸ்ரீ ராம ஜயம் என்றே எழுதுவோமாக. > > ஜயம் தமிழில் எப்படி ஜெயம் ஆகிப் போனது? > > அது சில நூறு வருடங்களுக்கு முன்னர் இங்கு மதம் பரப்ப வந்த பாதிரியார்கள் > தமிழ் கற்று பைபிளை தமிழில் எழுதிப் பிரசுரம் செய்த பணியில் நேர்ந்த ( கூடவே, > தெலுங்கு, மலையாள, கன்னட மொழி உச்சரிப்பின் கலப்பினாலும்) நேர்ந்துவிட்ட > அவலம். > > யேசுவின் ரத்தம் ஜயம் என்பதை ஐ, ஜ வேறுபாட்டைக் காட்டுவதாக நினைத்து யேசுவின் > ரத்தம் ஜெயம் (தோல்வி) என்று எழுதிவிட்டனர். > > பலம் பெலம் ஆயிற்று. றக்கை ரெக்கை ஆயிற்று. ரவி ரெவி ஆயிற்று. சிந்தூரம் > செந்தூரம் ஆயிற்று. ஜன்மம் ஜென்மம் ஆயிற்று. > > ஜயம் சரி. ஜெயம் தவறு. > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdttUzN_UY2zCJW81_P9QH9W8bzd3PkYhnn4SQ0gvsB53g%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdttUzN_UY2zCJW81_P9QH9W8bzd3PkYhnn4SQ0gvsB53g%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopWoCpnbRHFMyNcKOfKPtr_43SgbO0AM0GRYuJAHr3UMA%40mail.gmail.com.
