தகவு உடையோர் சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்.



       கம்பனின் கவி நயம் வெளிப்பட்டால் தான் கம்ப ராமாயணம் இனிக்கும்.
தமிழநாயகம் ஒருவேளை பக்தி ,காட்டும் விதத்தில் நோக்கினாரோ என்னவோ; நான்
கம்பரின் சித்து விளையாட்டை அவர் வரிகளில் காண்கிறேன். தகவு எனும் வார்த்தை
சீரிய நோக்குடையது .

           தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.   (௱௰௪ - 114)

takkār takavilar eṉpatu avaravar

eccattāṟ kāṇappa paṭum.

The just and unjust shall be known By what they leave behind. (Karma)

ஒருவர் தகுதியாளர், மற்றவர் தகுதியற்றவர் என்று உரைப்பது எல்லாம், அவரவரது
எஞ்சி நிற்கும் புகழும் பழியும் என்பனவற்றால் காணப்படும் (௱௰௪)(Karma)

Hindi (हिन्दी)

कोई ईमान्दार है, अथवा बेईमान ।

उन उनके अवशेष से, होती यह पहचान ॥ (११४)

Telugu (తెలుగు)

వారి వారికున్న వారసత్యమె తెల్పు

తగును తగడటంచు తథ్యముగను(౧౧౪)

Malayalam (മലയാളം)

നീതിപാലിപ്പവൻ, നീതി ലംഘനം ചെയ്തിടുന്നവൻ; സന്താനജിവിതം നോക്കിയറിയാം
രണ്ടുപേരെയും (൱൰൪)

Kannada (ಕನ್ನಡ)

ಸಮಭಾವವುಳ್ಳವರೆ, ಅಲ್ಲವೆ ಎಂಬುದನ್ನು ಅವರವರ ಮಕ್ಕಳ (ಸಂತತಿ) ಹಿನ್ನೆಲೆಯಿಂದ ತಿಳಿಯಬಹುದು.
(೧೧೪)

Sanskrit (संस्कृतम्)

अयं माध्यस्थ्यवर्तीति विपरीतोऽयमित्यपि ।

सदसत्पुत्रजन्मभ्यां ज्ञातुं शक्यं विशेषत: ॥ (११४)

 3     இங்கு பக்தியின்பால் வணங்குதல் ஓரளவுக்கு நியாயம் எனினும், வேறுபாடு
பக்தியில் எது என்பது போன்ற கூற்று, படகோட்டி, அரசன் எனும் வித்யாசம்,
மறைந்ததாக கூறுதல் எவ்வளவு பொருத்தம் என்பது தெளிந்த கூற்று. இங்கு பரதனும்
குகனும் ஒருவரை ஒருவர் ராமனின் வடிவதிலேயே  கண்டதால், வணங்குதல் இயல்பாகிப்
போனது. கம்பன் இதை ஏற்கனவே கூறி விட்டான் (மேலே கம்பனின் பாட்டுக்களை காண்க)
இதில் மதிப்பு உள்ளது; பக்தி அல்ல. பக்தியிலும், நண்பர்களிடமும், அரச மக்கள்
என்ற விதத்திலும், வாழ்க்கையிலும் வேறுபாடு உண்டு; வேற்றுமை இன்றி அமையாது.
வேற்றுமை என்பது மாறுதலின் , மாற்றத்தின் அடையாளம். வார்டை ஜாலத்தில்
இல்லையென்று கூறலாம். ஆனால் உண்மைக்கு புறம்பானது. இல்லையென்றால், திருவள்ளுவர்
ஏன், தக்கார் தகவிலார் என இரண்டு கூறு போட வேண்டும்?  கம்பரும் தக்க என்று
எழுதுங்கள், தகவிலார் குகனின் சிந்தனையிப் போக்கை மாற்றியிருக்கக் கூடும்
அல்லவா?  இங்கு பக்தி அல்ல; ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பே மேலோங்குகிறது
என்பது என் துணிபு.

4     சம நோக்கு என்பது யோகியின் மனநிலை எனக் கூறுவது பகவத் கீதை, எனவே
வேறுபாடு, உயர்வு தாழ்வு, பூர்ஜ்வ கொள்கை, விவாதம் முதலியன இன்றி அமையாதது.
கம்பனே, சிந்தாயிலும், சென்னியிலும் (மனசும் புத்தியும்) எனவே கூறியுள்ளான்;
இருவரும் யோக நிலையில் இருத்தலால் ஆத்மாவை வணங்குதல் எளிதாம். இறைவனுக்கு
எல்லாம் ஒன்றுதான் என்ற வார்த்தைஜாலம் , பாலகுமாரன் எழுத்தில் , பம்மாற்று
வேலை எனக் கூறுவார். கம்பன் இங்கு, மனதின், புத்தியின் நிறைந்த தன்மையை
கூறுகிறான் என நான் நினைக்கிறேன்.     K RAJARAM IRS 141124

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Thu, 14 Nov 2024 at 08:05
Subject: Fwd: Tamilnayagam - - Kamba Ramayanam - Bharathan and Guhan (10)
To:




இராமாயணம் - பரதன் குகன் (10)
தந்தையினும் களி கூரத் தழுவினான்

*தமிழ்நாயகம் *

பரதனைக் காணக்  குகன் வருகிறான். முதலில் ஏதோ இராமன் மேல் கோபம் கொண்டுதான்
பரதன் வந்து விட்டான் என்று நினைத்தான். பின், பரதனின் தவ வேடம் கண்டு, தான்
நினைத்தது தவறு என்று அறிந்து, பரதனைக் காணக் குகன் தனியே வருகிறான்.

வரும் குகனை நானே சென்று பார்ப்பேன் என்று பரதன் எழுந்து செல்கிறான்.

குகனை நோக்கி கை கூப்பியபடி வருகிறான் பரதன். அப்படி வந்த பரதனை குகன்
வணங்கினான். வணங்கிய குகனின் கால்களில் பரதன் விழுந்தான். விழுந்த பரதனை ஒரு
தந்தை மகனை எடுத்து அணைப்பது போல எடுத்து அணைத்துக் கொண்டான்.

பாடல்

வந்து எதிரே தொழுதானை வணங்கினான்; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும் அவனும், அவன் அடி வீழ்ந்தான்;
தந்தையினும் களி கூரத் தழுவினான் - தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்.

பொருள்

தனியாக வந்து (வந்தது குகன்)  எதிரில் தொழுதபடி நிற்கும் பரதனை  (குகன்)
வணங்கினான்;  தாமரை மலரில் இருக்கும் பிரமனும் தன்னை வணங்கும்படி இருக்கும்
பரதனும்  குகனின் காலில் விழுந்தான்; ஒரு தகப்பனைவிட மிக மகிழ்ந்து   தழுவிக்
கொண்டான் குகன்;  தகுதி உடையவர்கள்  சிந்தனையிலும்   தலையிலும் எப்போதும்
இருக்கும் பெருமை கொண்ட குகன்.

பரதன் குகனைத் தொழுதான்; குகன் பரதனை வணங்கினான்; பரதன் குகன் காலில்
விழுந்தான்; குகன் பரதனை தழுவிக் கொண்டான்.

என்ன நடக்கிறது இங்கே? பரதன் ஒரு பேரரசின் மன்னன். குகன் ஒரு ஓடம் ஓட்டுபவன்.
 ஒரு சக்கரவர்த்தி  ஓடம் ஓட்டுபவனின் காலில் விழுவதை நம்மால் எண்ணிப் பார்க்க
முடியுமா?

பரதன் விழுந்தான். பரதனுக்குத் தெரியாதா? தெரியும்.

பல விஷயங்கள் இந்த பாடலில் ஒளிந்து இருக்கிறது.

முதலாவது, இறைவனின் முன்னால் எல்லோரும் சமம். உருவம் இராம பக்தர்கள். இதில்
பெரியவன் என்ன சிறியவன் என்ன? யாரை யார் தொழுதால் என்ன? யார் காலில் யார்
விழுந்தால் என்ன? உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது.

இரண்டாவது, எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தான். குகன் பரதனைத் தழுவிக்
கொண்டான்.  வீட்டுப் பெண்மணிகள், தங்கள் வீட்டில் வேலை பார்க்கும்  பெண்களை
தழுவிக் கொள்வதை நம்மால் சிந்திக்க முடியுமா?  வீட்டு வாசலில் காவல் நிற்கும்
அந்த காவலாளியை நம்மால் கட்டி அணைக்க முடியுமா? கையாவது கொடுப்போமா?
வியர்வையில் நனைந்து, மீன் வாடை அடிக்கும் குகனை பரதன் தழுவிக் கொண்டான்.
அன்பும் பக்தியும் வந்துவிட்டால் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பெரியவன், சின்னவன்,
படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. எல்லோரும் சமம். இது
வைஷ்ணவ சம்பிரதாயத்தின் மிக முக்கியமான ஒன்று.

மூன்றாவது, பக்தர்களுக்குள் வேறுபாடு கிடையாது. இன்று பக்தர்களுக்குள்ளேதான்
பெரிய வேறுபாடுகள் இருக்கிறது. அவர் பெரியவர். இவர்  பெரியவர். அவர் இத்தனை
முறை அந்த கோவிலுக்குப் போய் இருக்கிறார், அவர் மடாதிபதி, சன்னிதானம், தலைவர்,
குரு , என்று ஆயிரம் பாகுபாடுகள். இதெல்லாம் போக வேண்டும். ஒரே ஒரு முறை
பார்த்த குகனும், பரதனும் ஒருவருக்கு ஒருவர் சமமாக பழகினார்கள். பக்தியில்
 சீனியாரிட்டி எல்லாம் கிடையாது.

நான்காவது, இராமன் குகனைத் தம்பி என்றான். குகனோ பரதனை மகனாக நினைக்கிறான்.
ஒரு தந்தை தன் மகனை அணைத்துக் கொண்டால் எவ்வளவு மகிழ்வானோ , அதை விட
மகிழ்ந்தான் குகன். அவ்வளவு அன்பு, வாஞ்சை. பக்தி என்று வந்துவிட்டால்,
அன்புக்கு அளவே இல்லை.

பக்தி செலுத்துவோருக்கு ஒரு பாடம் இந்த பாடல்.

*-- தமிழ்நாயகம்*
*******************************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor%2BYfbftZZLDPEPjtJgjjZFO3HqZpw8ic%2ByxC%2BGLxNbzA%40mail.gmail.com.

Reply via email to