In Tamil alone I wanted to write but for the sake of all in English. The same concept, if written by Chithanathan and sent to SAVI or Kumudam, would have met the fate of the waste basket. If Rajnikanth blabbers it is the message of a messiah! The univerdals wealth and a bearded old haggard as the owner is a mismatch; one who had so much, might have looked haggard due to age and work, but wearing old clothes is a bundle of contradictions. Also he reflects that he is a Vaishnavaite. wealth and Owner 2 persons. wealth itself is HIM I say and no one had seen HIM till date. KR IRS 141224
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Sat, 14 Dec 2024 at 05:05 Subject: Fwd: Sujatha - Boss of the Universe - Short Story To: *பிரபஞ்சத்தின் எஜமானன் - சுஜாதா சின்னஞ்சிறு கதை* *(நன்றி: குமுதம் 8.9.2003 இதழ்)* *தூரத்தில்….. நம்மில் இருந்து வெகு வெகு தூரத்தில் ஒரு சிறிய கிரகம் இருக்கிறது. வெள்ளைக் குள்ளன் (white dwarf) எனப்படும் பொலிவிழந்த ஒரு நட்சத்திரத்தை அந்தக் கிரகம் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன் நிலப் பகுதியில் இடிந்து போகும் நிலையில் தள்ளாடிக் கொண்டு ஒரு வீடு இருக்கிறது. **வீடு என்பதைவிட பாழடைந்த குடிசை என்றே சொல்லலாம். சுவர்கள் காற்று அடித்தால் ஆடுகின்றன. ஒரே தூசி. ஒட்டடை. உள்ளே வெளிச்சம்கூட தயங்கித்தான் குறைகிறது. இந்த சிதிலமான வீட்டில் ஒரு கிழவன் வாழ்கிறான்.* *நம்முடைய கணக்கின்படி அவன் மிகப் புராதனமானவன். அவன் என்னவோ தன்னை சின்ன வயசுக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். தாடி முகத்தை முக்கால்வாசி மறைக்கிறது. தலைமயிர் கண்ணை மறைக்கிறது. அவனது ஒரே சொத்து கிழிந்த உடைகள். ஒரே சொத்து என்றா சொன்னேன்? தப்பு….. அவனுடைய மற்றொரு சொத்து பிரபஞ்சம் !* *நம் பிரபஞ்சத்தின் அத்தனை நட்சத்திரங்களும், விண்வெளியும், கிரகங்களும் அவனுடையவை. சிருஷ்டி முழுவதுக்கும் அவன் தான் சொந்தக்காரன். அவன் கடவுள் இல்லை. தற்செயலாக இவனுக்கு இந்தச் சொத்து வந்துவிட்டது - ஒரு கெரசின் விளக்கும், பிரபஞ்சமும். அவனுக்கு 12 வயதானபோது அவன் அப்பா, “ இந்தப் பிரபஞ்சம் உன்னுடையது மகனே ! ஒன்று மட்டும் கேள்….. எப்போதும் எதிலும் நேரம் தவறாதே” என்று சொல்லிவிட்டு உயிரை விட்டார்.* *கெரசின் விளக்கு எப்போதோ எண்ணெய் தீர்ந்து ஒளி தருவதை நிறுத்திவிட்டது. அவனது மற்ற சொத்தை மட்டும் இதுவரை கவனமாகத்தான் காப்பாற்றி வந்திருக்கிறான். எப்போதாவது அங்கே இங்கே ஒரு சூப்பர் நோவா விபத்தைத் தவிர. அவனுக்கு 12 வயதில் அப்பா இறந்து போகும் முன் ஒப்படைப்பதில் இருந்து இதுநாள் வரை பிரபஞ்சத்தை காப்பாற்றுவதிலேயே கவனமாக இருந்து விட்டான். கல்யாணம் குடும்பம் இதற்கெல்லாம் சமயம் இல்லாமல் போய்விட்டது.* *இப்போது வாரிசு யாரும் இல்லை. அதனால் அவன் அந்தக் காரியத்தை செய்யத் துணிந்து விட்டான். நீங்கள் இதை படிக்கும்போதே அவன் நடுங்கும் கை, ஒரு தூரிகையை வண்ணங்களில் தோய்த்து அறிவிப்பு பலகையில் எழுதிக் கொண்டிருக்கிறது. **இதோ வருங்கால விண்வெளிப் பயணிகள் அனைவரையும் திடுக்கிட வைக்கப் போகிற அந்த அறிவிப்பு:* *பிரபஞ்சம் விற்பனைக்கு!! சிரியஸ் 4 கிரகத்திற்கு விண்ணப்பிக்கவும்.* *பிரபஞ்சம் புதிய எஜமானனை எதிர்நோக்குகிறது !!!* *==================================* *இந்தச் சிறுகதை பற்றி சுஜாதா:* *இந்தக்கதையின் முழு வீச்சை இப்படி சிந்திக்கலாம்:* *இந்தக் கதை புரியவில்லை என்று பலர் எனக்குச் சொன்னார்கள்.* *அந்தக் கதையின் உள்ளர்த்தம் இதுதான். ஏன் பிரபஞ்சத்தின் எஜமானன் சர்வ வல்லமையுள்ள, முக்கால ஞானமும் பொருந்திய, எங்கும் நிறைந்திருக்கும் ஈசன் என்று கொள்ள வேண்டும்?* *அதையே சற்று வித்தியாசமாக சிந்தித்துப் பார்த்தால், பிரபஞ்சத்தின் எஜமானன் எங்கோ ஒரு மூலையில், ஒரு சின்ன கிரகத்தில் தனியாக வாழும் தேவனாகக்கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும்?* *அப்படி எண்ணிப் பார்த்தால், அத்தனை பெரிய சொத்தை வைத்துக் கொண்டு அவனால் என்ன செய்ய முடியும்? விற்று விட்டு ஏதாவது எளிய சந்தோஷத்தை பண்டமாற்றாக பெற விரும்பலாம் என்கிற அருமையான கருத்து, இன்றைய நாட்களுக்கும் பொருந்தும்.* *ஆழ்வார்பேட்டையில் நான் வசித்தபோது அம்புஜம்மாள் தெருவின் கோடியில் ஒரு பழைய காலத்து வீடு இருந்தது. நிறைய மரங்கள், நிறைய இடம். அதன் சொந்தக்காரருக்கு 90 வயதுக்கு மேல் இருக்கும். வீட்டின் இட மதிப்புக்காக அதை எடுத்து ஃப்ளாட் கட்ட மூன்றரை கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு பில்டர்கள் அவரை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் முகம் மறுத்தார்.* *“இந்த வயதில் இத்தனை கோடியை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்?” என்றார்.* *பறவைகள் சப்தம்* *வேண்டும்* *வீட்டை இடிக்கும் சப்தம்* *வேண்டாம்......* *-சுஜாதா * ****************************** *வாட்சப்பில் வந்தது * *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopdLa31FbfiP5r6J6dP9cA-X0378G5DN2iq66oxjzj%3DMQ%40mail.gmail.com.
