welcome Nandri KR

On Sat, 28 Dec 2024 at 14:21, Chittanandam V R <[email protected]>
wrote:

> Excellent Ji!
>
> On Sat, Dec 28, 2024 at 2:19 PM Rajaram Krishnamurthy <
> [email protected]> wrote:
>
>> வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
>> நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
>> பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
>> தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்
>>
>> Translation – ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர என் தலைவன் நாராயணன் வருகின்றான்
>> என்ற செய்தியைக் கேட்டதும், அவனை எதிர்கொண்டழைக்க ஊரார் எல்லாம் பொன்னால்
>> செய்து புனித நீர் நிறைத்தக் குடங்களை எல்லாத் திசைகளிலும் வைத்து வீதி வாசல்
>> எங்கும் தோரணம் நாட்டினார்கள். அதனை என் கனவில் நான் கண்டேனடி தோழீ.
>> KR IRS 281224
>>
>> ---------- Forwarded message ---------
>> From: Chittanandam V R <[email protected]>
>> Date: Sat, 28 Dec 2024 at 05:45
>> Subject: Fwd: Indhira Priyadarshini - Nambi
>> To:
>>
>>
>>
>>
>> *நம்பி*
>>
>> *இந்திரா ப்ரியதர்ஷிணி *
>>
>> *நம்பி என்ற சொல்லோடு மிகுந்த பிரேமை எனக்குண்டு. நம்பி என்றால் ஆண்தகை,
>> இறைவன், பூரணன், இளைஞன், குலம் குணத்தில் ஏற்றமுடையான் மற்றும் செல்லப் பிள்ளை
>> என்று பல பொருள் உண்டு. இந்தச் செல்லப் பிள்ளை என்ற பொருள் தான் நமக்கு
>> அணுக்கம் தருகிறது. *
>>
>> *நம்பி ஆருரன், நாற்கவிராச நம்பி, நம்பியாண்டர் நம்பி, திருநறையூர் நம்பி,
>> திருநாரையூர் நம்பி, திருக்கச்சி நம்பி, திருமலை நம்பி  என்று ஆன்றோர் பலர்
>> இத்திருநாமம் உள்ளவர். நம்ப வல்லவன் நம்பி என்பதாகுமோ? எங்கள் திருவள்ளூர்ப்
>> பாசுரத்தில் பெரிய திருமொழியில் இரண்டாம் பத்தில் திருமங்கையாழ்வார் அருளிச்
>> செய்தது. "காசையாடை மூடியோடிக் காதல் செய்தான் அவனூர் நாசமாக நம்பவல்ல நம்பி
>> நம்பெருமான்" (காஷாயம் தரித்து ஔித்துக் கரந்து பிராட்டி மேல் ஆசை வைத்த
>> இராவணன் ஊர் நாசமாக சங்கல்பம் தீர்மானம் செய்த நம்பி நம் பெருமான் திருஎவ்வுள்
>> கிடந்தான்.) எவ்வுள் கிடக்கும் எம்பெருமான் ஸ்ரீ வீரராகவன். *
>>
>> *திருநறையூர் என்னும் நாச்சியார் கோயிலில் குடி கொண்டுள்ள நம்பி நறையூர்
>> நம்பி ஸ்ரீ நிவாஸன். நம்பியின் திவ்ய மகிஷி வஞ்சுளவல்லி என்னும் நம்பிக்கை
>> நாச்சியார். நம்பியை நம்பினோர் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பு.*
>>
>> *திருநாரையூர் நம்பி சைவத்தில் பொல்லாப் பிள்ளையாரின் அருள் பெற்று பதினொரு
>> திருமுறைகளைத் தொகுத்தார். திருவிரட்டை மணிமாலை போன்ற நூல்களையும் இயற்றியவர்.
>> இவர் வழியில் வந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவாலவாய் உடையார்
>> திருவிளையாடற்புராணம் என்னும் நூலை இயற்றியுள்ளார். *
>>
>> *சோழ மண்டலத்தில் புலியூர் என்ற பெயர் கொண்ட பல திருத்தலங்கள் உள்ளன. ஒரு
>> நாள் வியாக்ரபாத முனிவர் தொழுத அத்தலங்களை சேவிக்க வேண்டும். நம்பி ஆரூரர்
>> என்ற இயற்பெயர் கொண்ட சுந்தர மூர்த்திப் பெருமான் தியாகேசப் பெருமானை நம்பி
>> இம்மையும் மறுமையும் சிறக்க வாழ்ந்தார். நாம் நம்பியிருக்க திருப்பாட்டுப்
>> பதிகங்கள் செய்து தந்தார். ஸ்ரீ வைணவத்தில் திருக்கச்சி நம்பியும் கச்சி
>> தேவராஜப் பெருமாளும் உரையாடுதல் இயல்பாகும்.*
>>
>> *திருமலை நம்பியை திருவேங்கடவன் ஆட்கொண்ட வரலாறு நாம் வாசிக்கிறோம்.
>> நாற்கவிராச நம்பி சித்ரகவி, வித்தாரக் கவி, ஆசு கவி, மதுரகவி என நாலுவகைக் கவி
>> பொழியும் ஆற்றல் பெற்றவர். திருமங்கையாழ்வாரும் நாலுகவிப் பெருமாள் என்று
>> இதனால் போற்றப்படுகிறார். *
>>
>> *நம்பிகளில் மிகச் சிறந்த நம்பி ஒருவன் உண்டு. அவன் குறுங்குடி நம்பி. ஸ்ரீ
>> இராமனுஜரிடம் உபதேசம் பெற்ற வைணவ நம்பி. அழகிய நம்பி, வடுக நம்பி.
>> பெரியாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் மங்களாசாஸனம். *
>>
>> *நம்பி ராஜன் என்ற வேடர் குலத் தலைவர்தான் ஸ்ரீ வள்ளியம்மை தகப்பனார். கம்ப
>> ராமாயணத்தில் "நன்றே நம்பி நம் குடி வாழ்க்கை" என்ற பாடல் மிகவும் சிறப்பு.
>> "ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம் அன்றே என்னின்
>> அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம் இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று
>> உரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு
>> அம்மா!” இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி
>> அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை
>> என்றாலும் இல்லைதான்; உண்டு என்றாலும் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில்
>> தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று. இது தான் நம்பி
>> என் தலைவா இறைவா எம் வாழ்வு என உணர்ந்து கொண்டோம் என்றும் பொருள் கொள்ளலாம். *
>>
>> *இந்த நம்பி சொல் பிரயோகத்தில் இந்தப் பாசுரம் மிக அழகானது.*
>>
>> * "சோத்த நம்பி யென்று தொண்டர்*
>> *மின்டித் தொடர்ந்தழைக்கும்,*
>> *ஆத்தனம்பி செங்கணம்பி*
>> *யாகிலும் தேவர்க்கெல்லாம்,*
>> *மூத்த நம்பி முக்கணம்பி*
>> *யென்று முனிவர்தொழு*
>> *தேத்தும், நம்பியெம்பெருமா*
>> *னெவ்வுள் கிடந்தானே" *
>>
>> *தொண்டர்கள் அடர்ந்து  "ஐயனே உனக்கு ஸ்தோத்திரம்" அஞ்சலி என்று அயராது
>> அழைக்கும் நம்பி.  என்றும் உற்ற துணையாய் இருக்கும் ஆப்த(ஆத்த) நம்பி.
>> செங்கணம்பி. சிவந்த தாமரை போன்ற நேத்ரங்களை உடைய எம் நம்பி. அவன் நேத்ரங்கள்
>> சிவக்கக் காரணம் தசகண்ட ராவணனை அழித்த சினம். ஸ்ரீ வீரராகவன் அன்றோ? தேவாதி
>> தேவர்க்கெல்லாம் முன்னவன். மூத்தவன். தேவரும் அயனும் முக்கண் ஈசனும் தொழும்
>> நம்பி. இத்தகைய சிறப்பு வாய்ந்த நம்பி உறைவதற்குரிய உள் எவ்வுள் என்று ஸ்ரீ
>> சாலிஹோத்ர மஹரிஷியிடம் கேட்டு திருஎவ்வுள்ளில் கிடந்த திருக்கோலம் கொண்டது
>> நம்முடைய பெரும்பயனாகும். கிம் கிருஹசேம் (எந்தக் கிருஹம் யாம் உறைவதற்கு?")
>> என்று சம்ஸ்கிருதத்திலும் திருஎவ்வுள் என்று அழகுத் தமிழிலும் விளிக்கப்படும்
>> இந்த திவ்ய தேசம் அவசியம் சேவிக்க வேண்டும். எம்பெருமான் மரவுரி எனும் பப்ளி
>> துப்பட்டி சார்த்திக் கொண்டு இங்கு வருவோரின் சங்கடங்கள் நீக்குவேன் என்று
>> ஸ்ரீ சாலி ஹோத்ர மஹரிஷி தலையில் கை வைத்துச் சொல்கிறான். இராவணன் நாசமாக நம்ப
>> வல்ல நம்பி நம் குறை தீர்ப்பான் என்று நம்பிச் செல்லுங்கள். நிச்சயம்
>> நடக்கும். இந்த நம்பியை நம்பாமல் இந்தக் கலியில் யாரை நம்புவது? கநகவல்லி
>> நாயீக சமேத ஸ்ரீ வீரராகவஸ்வாமி சரணம். நாள் இனியது.  *
>>
>>
>> -- இந்திரா ப்ரியதர்ஷிணி
>> *************************************************
>> சித்தானந்தம்
>>
>>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqVeW3qmjEf3xuJMdfbMFS5jau0oOByV7ox2yj-LSHJXw%40mail.gmail.com.

Reply via email to