AVANARULAL AVAN THAL VANANGI  KR IRS 5125

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sun, 5 Jan 2025 at 05:50
Subject: Fwd: Tamilnayagam - Andaal Thiruppavai
To:


திருப்பாவை - மனதுக்குள் மழை
*தமிழ்நாயகம் *

உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களின் பெயரைக் கேட்டால் உங்களுக்கு மனதுக்குள் மழை
அடிக்குமா?ஆண்டாளுக்கு அடிக்கிறது. உள்ளம் புகுந்து குளிர்கிறதாம். உள்ளம்
புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ!
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

பொருள்:
பறவைகளும்சிலம்பு போல் சப்தித்தன; பறவைகளின் தலைவன், கருடன் கோவிலில்
வெண்மையான விளிக்கின்ற, சப்திக்கின்ற சங்கின் பேரொலியை கேட்கவில்லையோ? பிள்ளை
போன்ற மனம் கொண்டவளே, எழுந்திராய்! பூதகியின் நஞ்சை உண்டு, கெட்ட (வழியில்
செல்லும்) சக்கரம் அந்த வழியில் சென்று அழியாமல் ஓச்சி என்றால் ஆளுதல்
என்று பொருள்.
கால் ஓச்சி என்றால் அரசு ஆளுதல் வெள்ளம் போல் உள்ள பார் கடலில் பாம்பின் மேல்
உறங்கிய விதையை, மூலத்தை உள்ளத்தில் இருத்தி முனிவர்களும் யோகிகளும்,
மெல்ல (அரக்கப்பரக்க
அல்ல) எழுந்து அரி என்ற உச்சரிக்கும் ஒலி உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ
ரெம்பாவாய்!


நம் வாழ்க்கைச் சக்கரம் நம்மை எங்கெங்கோ இட்டுச் செல்கிறது.
பல சமயம் நல்ல வழியில். சில சமயம் வழி அல்லா வழியிலும் இட்டுச்  செல்லும். அது
அப்படி செல்லாமல் தடுத்து அதை நல்வழியில் செலுத்துவது எது? அவனின் திருவடிதான்.

*-- தமிழ்நாயகம் *
***********************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor70bwB10Oz9qiWE05dy7y3K3ZUwV0A%2Bg8sw%3DD9ou6RwA%40mail.gmail.com.

Reply via email to