I Tirukkural oru adikaram Kamatuppaal திருக்குறள் விளக்கம்
ஊடலுவகை பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: ஊடலுவகை. குறள் 1322: ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும். My 'anger feigned' gives but a little pain; And when affection droops, it makes it bloom again. His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike. குறள் 1327: ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும். In lovers' quarrels, 'tis the one that first gives way, That in re-union's joy is seen to win the day. Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows). குறள் 1330: ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும். A 'feigned aversion' coy to pleasure gives a zest; The pleasure's crowned when breast is clasped to breast. Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike. குறள் 1203: நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ? A fit of sneezing threatened, but it passed away; He seemed to think of me, but do his fancies stray? I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not. குறள் 1253: மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும். யான் காமத்தை என்னுள்ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது. I would my love conceal, but like a sneeze It shows itself, and gives no warning sign. I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze. குறள் 1312: ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார். One day we silent sulked; he sneezed: The reason well I knew; He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'. When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life. குறள் 1313: கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள். I wreathed with flowers one day my brow, The angry tempest lowers; She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'. Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman. குறள் 1316: உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். நினைத்தேன் என்று கூறினேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள். 'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,' She cried, and then her opened arms, Forthwith embraced me not. When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike. குறள் 1317: வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்? She hailed me when I sneezed one day; But straight with anger seized, She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?'. When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?". K Rajaram IRS 9125 ---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Thu, 9 Jan 2025 at 19:35 Subject: Fwd: Tamilnayagam - Nala Thamayanthi To: மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்று நிடத நாட்டு அரசன் நளனின் வரலாறு. இதனை ஸ்ரீஹர்ஷர் வடமொழியில் நைடதம் என்ற நூலாக எழுதினார். இதனைத் தமிழில் புகழேந்திப் புலவர் நளவெண்பா என்கிற நூலாக எழுதினார். இவரின் காலம் 13-ம் நூற்றாண்டு. நளவெண்பா - ஈர மதியே, இள நிலவே *தமிழ்நாயகம் * தமயந்தி தனித்து இருக்கிறாள் நளனை நினைத்தபடி. இரவு அவளுக்குத் துன்பம் தருகிறது. இரவு முடிகிற பாடாக இல்லை. நீண்டு கொண்டே இருக்கிறது. எல்லோரும் தூங்கிவிட்டார்கள். நிலவு மட்டும்தான் இருக்கிறது. அதனிடம் பேசுகிறாள். "ஏய் குளிர்ந்த நிலவே, இளைய நிலவே! என் குழலின் மேல் ஏன் உன் குளிர்ந்த ஒளியை விடாமல் செலுத்துகிறாய்? இந்த மன்மதன் என் மேல் போர் தொடுக்க உனக்கு இந்த விடியாத இரவை ஆயுதமாக கொடுத்து அனுப்பினானா? " என்று கேட்கிறாள். பாடல் ஈர மதியே! இளநிலவே! இங்ஙனே சோர்குழலின் மீதே சொரிவதெவன் - மாரன் பொரவளித்தான் கண்ணி உனக்குப் புலரா இரவளித்தான் அல்லனோ இன்று. பொருள் குளிர்ந்த நிலவே, இளமையான நிலவே! இப்படி அவிழ்த்து விடப்பட்ட கூந்தலின் மீது பொழிவது ஏன்? மன்மதன் போருக்கு அனுப்பினான் கன்னியாகிய உனக்கு இன்று விடியாத இரவை அளித்தான் அல்லவா! நிலவே நீ குளிர்ந்த கதிரை பாய்ச்ச வேண்டியவள். என் மேல் மட்டும் ஏன் தீயை அள்ளி தெளிக்கிறாய்? அப்படிச் செய்யாதே. எனக்கும் குளிர்ச்சியைத் தா என்று சொல்ல "குளிர்ந்த நிலவே" என்கிறாள். நீயும் என்னைப் போல இளமையானவள்தானே! காதலின் பிரிவு என்ன என்று உனக்கும் தெரியும்தானே! பின் ஏன் என்னை துன்பப் படுத்துகிறாய்? போய் விடு என்று சொல்லுவதைப் போல, இளைய நிலவே என்று சொல்லுகிறாள். போருக்கு என்னென்னெவோ ஆயுதங்கள் உண்டு. கத்தி, வில், அம்பு என்று. இங்கே மன்மதன், நிலவை போருக்கு அனுப்புகிறான், இரவு என்ற ஆயுதத்தை கொடுத்து! என்ன ஒரு கற்பனை!! *தமிழ்நாயகம் * ************************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqjudK3_it0cjZGd_GEof1zCo2emZTOHDTKjH2scYb7vg%40mail.gmail.com.
