பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.   (௫௰௪ - 54)

Pennin Perundhakka Yaavula Karpennum

Thinmaiun Taakap Perin

What more grandeur does a woman need Than possessing the strength of
chastity?

Tamil (தமிழ்)

கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணை விடப்
பெருமை மிக்கவை உலகில் யாவை உள்? ஒன்றுமில்லை (௫௰௪)

Telugu (తెలుగు)

స్త్రీ ల కన్నఁ గొప్పఁ జెప్ప నేమున్నది

చూపు మానమందు మోపిరేని (౫౪)

Malayalam (മലയാളം)

നിശ്ചയം പത്നിയിൻ പാതിവ്രത്യത്തേക്കാളുയർന്നതായ് പ്രതിക്ഷിക്കേണ്ടതായില്ല വേറെ
സൽഗുണമൊന്നുമേ (൫൰൪)

Kannada (ಕನ್ನಡ)

ಹಣ್ಣಿನಲ್ಲಿ ಪಾತಿವ್ರತ್ಯ (ಚಾರಿತ್ರ್ಯ) ವೆಂಬ ಸ್ಥಿರಗುಣವು ನೆಲೆಯಾಗಿದ್ದಲ್ಲಿ,
ಹೆಣ್ಣಿಗಿಂತ ಹಿರಿದಾದ ವಸ್ತು ಮತ್ತಾವುದಿದೆ ? (೫೪)

            The epic Ramayanam as Kambanin Kappium, has a perspective
through women. However, all pof them fit the above tirukkural and thence
move forward the pic story; instead of men yielding to women, cannot be
said that, the prestigious ego of men decided the finality who were forced
to retrieve the prestige? In that some lost some gained.

            Was Mahabharatham different? NO. Draupadi was the cause of
action along with Gandhari, Kundhi, who brought the destructions of the
world or earth forcing the victory for some and losses for some, arose out
of the prestige-ego of men. Did not Bharathi wrote “ Penmai velga “ endru
koothidavomada? Manifestations of GOD Brahmam itself is the enforcement of
shakti as Rig vedam states that Brahmam was asakthan without any thought;
so, he had to split into halves as woman and man and do the creations? So
shakti id inevitable.  What would be men if not married? Dead wood.
Brahmachari has to beg only is the dharma. So root cause of establishing
the dharma was the root cause of both the epics and puranic stories, where
shakti the tool enforces the dharma through the weapon only men.   K
Rajaram IRS 20125

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Mon, 20 Jan 2025 at 07:17
Subject: Fwd: Tamilnayagam - Ramayanam
To:







கம்ப இராமாயணம் - பெண்கள் காட்டிய வழி

*தமிழ்நாயகம் *


இராமாயணம் என்றால் இராமன் காட்டிய வழி. அல்லது இராமனின் வழி என்று சொல்லலாம்.

உண்மையிலேயே இராமாயணம் முழுவதும் பெண்களால் நடத்தப்பட்ட ஒரு காப்பியமாகவே
தெரிகிறது. எப்படி என்று பார்ப்போம்.

முதல் காய் நகர்த்தல் கூனி என்ற பெண்ணால் நிகழ்கிறது. அதுவரை ஆற்றோட்டமாக
சென்று கொண்டிருந்த கதை கூனியால் மடை மாற்றம் செய்யப்படுகிறது. நமக்குத்
தெரியும் கூனியின் பேச்சு சாதுரியம், அவள் எப்படி கைகேயின் மனதை மாற்றினாள்
என்று.

அடுத்த நகர்வு, கைகேயி என்ற பெண். கூனியால் மனம் மாற்றம் செய்யப்பட்ட கைகேயி
ஒரு படி மேலே போய் தசரதனின் மனதை மாற்றுகிறாள். இராமனை காட்டுக்கு அனுப்பி,
பரதனை முடி சூட வைக்கிறாள்.

சரி. இராமன் கானகம் போனான். போன இடத்தில் என்ன நடந்தது?

சூர்ப்பனகை என்ற பெண்ணால் பகை மூண்டது. அவள் இராமன் மற்றும் இலக்குவர்கள் மேல்
ஆசைப்பட்டது, மூக்கு அறுபட்டதுவரை சரி. காப்பியம் அங்கேயே நின்றிருக்கும்.
ஆனால், சூர்ப்பனகை , அவளுடைய அண்ணனான இராவணனிடம் சென்று அவனுக்கு சீதை மேல்
ஆசையை ஏற்றுகிறாள். இராவணன் தடுமாறுகிறான். கதையை மேலே நகர்த்துகிறாள்
சூர்ப்பனகை.

சரி, அப்புறம் என்ன நடந்தது? இராவணன் நேரே வந்து இராமனிடம் சண்டை போட்டானா
என்றால் இல்லை. பொன்மான் வந்தது. அங்கே சீதை என்ற பெண் காப்பியத்தை
நகர்த்துகிறாள். "நீ எனக்கு அந்த பொன்மானைப் பிடித்துத் தர மாட்டாயா" என்று
கெஞ்சுகிறாள். இராமன் மான் பின் போகிறான். இராவணன், சீதையை தூக்கிக் கொண்டு
போகிறான்.

இராமன் நேரே வாலியைப் பார்த்து அவன் உதவியை நாடி இருந்தால், வாலியின்
பலத்துக்கு பயந்து இராவணன் சீதையை விடுவித்து இருக்கலாம். அதற்கு முன் சபரி
என்ற பெண் வருகிறாள். அவள், இராமனை சுக்ரீவன்பால் போ என்று இராமனின் போக்கை
மாற்றுகிறாள்.

இராமன், சுக்ரீவனைப் பார்த்து, நட்பு கொண்டு, சீதையைத் தேடத் தொடங்குகிறான்.

அசோகவனத்தில் சீதை தனிமையில் வாடுகிறாள். அவள் மனம் சோர்ந்தபோதெல்லாம்
அவளுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி அவளை திரிசடை என்ற பெண் தேற்றுகிறாள்.
அவள் இல்லை என்றால் சீதையின் கதி என்ன என்று அனுமானிப்பது கடினம்.

அனுமன் இலங்கைக்கு வருகிறான். இலங்கையை இலங்கினி என்ற பெண் பாதுகாவல்
செய்கிறாள். அனுமன் அவளை சண்டையில் வெல்கிறான். அவள் அவனுக்கு வழி விடுகிறாள்.

சண்டை நடக்கிறது, இராமன் வென்று சீதையை சிறை மீட்கிறான்.

இந்த மொத்த காப்பியத்தில் தோற்றுப் போன பெண் என்று சொல்லுவது என்றால் வாலியின்
மனைவி தாரையைச் சொல்லலாம். வாலி சண்டைக்கு செல்வதை தடுக்க நினைத்து
தோல்வியுறுகிறாள்.  அவளைத் தவிர்த்து, இராமாயணம் முழுக்க முழுக்கப்
பெண்களாலேயே நடத்தப்பட்டு இருக்கிறது.

இராமனின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனை முன்னோக்கி செலுத்தியதில் ஒரு பெண்ணின்
பங்கு இருந்து இருக்கிறது. கதையின் நாயகன், திருமாலின் அவதாரம்,
சக்கரவர்த்தித் திருமகன் ...பெண் சொல்லி நான் கேட்பதா என்று சொல்லாமல்,
ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்களால் நடத்தப்படுவதை அனுமதிக்கிறான் இராமன்.

அவன் நினைத்து இருந்தால் கைகேயி சொன்னதை கேட்க மாட்டேன் என்று சொல்லி
இருக்கலாம். சீதை பொன்மான் வேண்டும் என்றபோது, அதெல்லாம் முடியாது என்று
மறுத்து இருக்கலாம்.

தாய், தாரம், பக்தை என்ற அனைத்து பெண்களின் கருத்துகளுக்கும் இடம்
கொடுக்கிறான். அதனால் துன்பம் வரும், சிக்கல் வரும் என்று தெரிந்து
இருந்தாலும் அவர்கள் கருத்தை அவன் உதாசீனம் செய்யவில்லை.

*-- தமிழ்நாயகம் *

*****************************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopOo5iNLbbA4f0_wS1iEnEo9tb7NQY8iSUB1jLLV7LugQ%40mail.gmail.com.

Reply via email to