---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Thu, 23 Jan 2025 at 06:32
Subject: Fwd: Indira Priyadashini - Kooththu
To:


கூத்தின் வரலாறு தமிழ் நாட்டின் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும்
அடிப்படையாக விளங்குகிறது. கூத்து என்பது பழங்காலம் முதல் தமிழகத்தில்
நடைபெற்று வரும் பாரம்பரியமான ஒரு நாடக வடிவமாகும். இது நாடகமும் நடனமும்
இசையும் இணைந்த ஒரு கலாரூபமாகும்.
கூத்தின் தோற்றம்:  *பழங்கால அடிப்படை*:கூத்து முதன்முதலில் கிராமங்கள்
மற்றும் நகரங்களில் நடந்தது. இது திரையிடும் நகைச்சுவை, உணர்ச்சி மற்றும்
வாழ்க்கையின் பல்வேறு துறைகளை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இருந்தது.

   1.

   *இந்து புராணங்கள் மற்றும் கிராமிய கதைகள்*:
   புராணங்களின் கதைகள், கிராமிய நம்பிக்கைகள் மற்றும் சமய சம்பிரதாயங்கள்
   கூத்தின் மையமாக அமைந்தன. இது மக்கள் இடையே ஆன அடையாளமாகவும் பிரசாரமாகவும்
   இருந்தது.

வகைகள்: கூத்து பலவகைகளாகப் பிரிக்கப்படுகிறது:

   1. *தெருக்கூத்து*:
   தெருக்களில் நடக்கும் கூத்து. இது பொதுமக்களுக்கு தன்னுடைய கதைகளின் மூலம்
   விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
   2. *சாக்ஷியல் கூத்து*:
   சமுதாயக் கருத்துக்களை எடுத்துரைக்கும்.
   3. *புராணக் கூத்து*:
   புராணங்களை அடிப்படையாகக் கொண்டது.
   4. *புரவி கூத்து*:
   குதிரை போல ஆடலுடன் செய்யப்படும் நாடகம்.

முக்கியத்துவம்: *கலை*: கூத்து தமிழ் நாட்டின் பாரம்பரியக் கலையை
பிரதிபலிக்கிறது. *பாடம்*: வாழ்வின் உண்மை நிலைகளை கற்றுக் கொடுக்கும். *பக்தி*:
சமய உணர்வுகளையும் பக்தியையும் வளர்க்கிறது. *அமைதியும் மகிழ்ச்சியும்*:
கூத்து மக்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது.இன்றைய நிலை:
புதுப்பிக்கப்பட்ட
அரங்கக் கலைகள் மற்றும் சினிமாவின் வளர்ச்சியால் கூத்திற்கான முக்கியத்துவம்
குறைந்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக
கிராமப்புறங்களில், இது இன்னும் தொடர்ந்து கலாச்சார அடையாளமாக விளங்குகிறது.
திரு ராஜகோபாலச்சரி அன்று திராவிட இயக்கத்தை கூத்தாடிகள் என்றே
குறிப்பிட்டார். அதனை ௫௦ 50 வருடங்களின் நிரூபித்தி விட்டார்களா தோலை நோக்கி
மூலமாகவும், திரைப்பட ஞ்சுமையாலும், பெண்களை இழிவுபடுத்தி.   K Rajaram IRS
23125

*கூத்தாடி*

*இந்திரா ப்ரியதர்ஷிணி *

*முத்தமிழில் கூத்து என்பது நாடக வகைப்படும். இயல் இசை என்ற இரண்டிற்கும்
ரசிக்கக் கொஞ்சம் ஞானம் வேண்டும். சங்கீதம்தான் கலை சாதகத்தின் மிக உயர்ந்த
படி என்று எழுத்தாளர் ஜெயமோகன் உரையில் நான் கற்றது. நல்ல இசை காட்டு
விலங்குகளும் கேட்டே மயங்குவது. என்றாலும் கூத்து என்பது பாமரரும் ரசிக்கும்
மயங்கும் ஒன்றாகும். அது நம் வாழ்வை அபிநயம் பிடித்துக் காட்டுவதாலும் தமிழின்
எட்டு மெய்ப்பாடுகளையும் வெளிக் கொணர்வதாலும் சிறந்த இடம் பெறுகிறது. *

*என்றாலும் இந்தப் பொய் மெய் வித்தியாசம் இருப்பதாலும் இயல் இசை இரண்டையும்
உள்ளடக்கி இருப்பதாலும் தனிமனிதத் திறன் கடந்து குழு முயற்சி வெளிப்பாடு
என்பதாலும் கூத்து இசையைக் காட்டிலும் சாதகத்தில் இசைக்கு ஒரு படி தாழ
இருக்கிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. *

*இறை அடைதல் என்பது நம் ஆன்மீக வழியில் தனித்து பசித்து விழித்து
இருப்பதுதான். அதில் ஒப்போ குழுவோ லேது. கூத்தைப் பற்றிய ஒரு சிந்தனை இன்று
வரலாற்று ஆசிரியர் வி.ஸ்ரீராம் அவர்களின் நந்தன் சரித்திரம் கேட்டு எழுந்தது.
இதில் ஸ்ரீ கோபால கிருஷ்ண பாரதி மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை
அவர்களின் பாயிரத்திற்காக ஏங்கியதும் பாரதியின் தன்னை மறந்த பாட்டில் பிள்ளை
வாழ்த்தி அருளியதும் குறிப்பிடப் படுகிறது. நம் சமயத்தில் எல்லாக்
கடவுளுக்கும் ஒரு கூத்து அவதாரம் உண்டு. கூத்தின் தலைவன் ஐயம் திரிபற
அம்பலவாணன் தான். கவியரசு கண்ணதாசன் 'கூட்டும் **இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?' என்று சொல்வது மிகச்சரி. *

*அம்மை ஆடுகிறாள். அப்பன் ஆடுகிறான். மாமன் கண்ணன் காளிய நர்த்தனம்.  ஆடலைக்
காண தில்லை அம்பலத்து இறைவன் எப்படி தன் ஆடலை விட்டு வந்தான்  என்கிறார்
ஊத்துக்காடு கவி. அவரைப் பின்பற்றி மருமகன் கணபதி நர்த்தனம். பெங்களூர்
ரமணியம்மாள் பாடினால் கணபதி நர்த்தனம் கூட வரும். பொம்ம பொம்மதா. *

*தமிழில் கூத்து இலக்கியம் என்பது தாென்று தாெட்டு இருக்கிறது. சிலம்பு ஒரு
நாடகக் காவியம். கூத்து மிகவும் கஷ்டமான விஷயம். இசை புரியவில்லை என்றால்
கேட்போர் திறன் குறைவு என்று சாக்கு சொல்லலாம். ரசிகனை ஆட்கொள்ளும் முழுப்
பொறுப்பும் கூத்தாடியை சாரும். என்ன மாதிரி ஒரு சுமை? அதுவும் அரிதாரம் உடை
அலங்காரம் எல்லாம் சுமந்து கொண்டு தானாக இல்லாமல் அவராக மாறுதல். *

*நான் தொழும் இரண்டு பேர் கூத்தில் மிக விருப்பம் கொண்டவர். ஒருவர் சத்யசாயி
மஹான். மற்றவன் பாரதி. பாரதி இதைப்பற்றி ரசவாதம் என்று ஒரு கட்டுரை எழுதி
இருக்கிறான். நாடகக் கீர்த்தனைகள்  மராட்டிய ஹரிகதாவில் இருந்து வந்தவை.
இன்னும் இந்தியாவில் மராத்திய நாடகத் தியேட்டர் புகழ் பெற்றது. தாஸ்கணு ஷீரடி
சாயி புகழை தாம் ஒருவராக ஹரி கதா மூலமாக கொங்கண தேசத்தில் பரப்பியதாக ஸ்ரீ
ஹேமந்த்பந்த் கூறுவார். ஒருவர் மட்டும் செய்யும் அபிநயிப்பில் இருந்து பலரும்
சேர்ந்து செய்வது கூத்தின் பரிணாமம். *

*கூத்தின் மொழி எளியது. ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தன் சரித்திரம்
கூத்துக் கலையின் மைல்கல். நம் ஒவ்வொருவர் உள்ளும் இருக்கும் ஏதோ ஒரு குறைவு
போதாமை மீளா அடிமை வாழ்வுதான் நந்தனால் காட்டப் படுகிறது. நந்தன் உயர்வு அவன்
உயர்வுள்ளல். எது வாழ்வின் இறுதி மேன்மையோ பயனோ அதை நந்தன் நாடியது தான்.
கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் மாதிரி. நந்தன் சரித்திரம் இசையரசு தண்டபாணி
தேசிகரும் எஸ் எஸ் வாசனும் இல்லாமல் பூரணமாகாது. நாடகக் கீர்த்தனங்கள் ஒரு
உரையாடல் வடிவில் இருக்கும். "இராமசாமியின் தூதன் நானடா ராவணா"  என்றான்
என்பது இராம நாடகக் கீர்த்தனை அநுமன் வசனம். "அய்யே மெத்தக் கடினம்" நந்தன்
வாக்கு. பாரதி இதை அப்படியே உள்வாக்கி "ஓய் திலகரே நம்ம ஜாதிக்கு அடுக்குமோ"
என்று நந்தன் சரித்திர வேதியனை வெள்ளைக்கார விஞ்ச் துரையாக  தன் கவிதையில்
வடித்தான். *

*சாதா மனிதர்களை வசியம் செய்யும் உன்னதக் கலை கூத்து. உள்ளுருக்குதல் கூத்தின்
திறன். இதனால்தான் கொத்தமங்கலம் சுப்பு கே.பி. சுந்தராம்பாள் போன்ற
தேசப்பற்றுடையோர் விடுதலை வேள்வியை கூத்தின் வாயிலாக வளர்த்தார்கள்.
காந்தியோர் பரம ஏழை சன்யாசி, ஆழ்ந்த யோசனை செய்தார் காந்தி போன்ற பாடல்கள்.
'ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருவன் போட்டானாம் வெள்ளரிக்காய்; காசுக்கு இரண்டு
விற்கச் சொல்லிக் காயிதம் போட்டானாம் வெள்ளக்காரன்' போன்ற பாட்டுக்கள்.
தூத்துக்குடி பாஸ்கர தாஸ் அவர்களும் அப்படியே. நான் பட்டப்படிப்பில் படித்த
மருது சகோதரர் நாடகம் மனதை விட்டு நீங்கவே இல்லை. முன்பு தமிழ்ப் பாடத்தில்
ஓரங்க நாடகம் என்று ஒன்று இருந்தது. கடைசிப் பாடமாக இருக்கும். சட்டை போடாத
புத்தக அட்டை கிழிந்து பாதிப் பக்கம் தான் இருக்கும். அப்படி குமண வள்ளல்
படித்துள்ளேன். வகுப்பில் பாத்திரம் ஏற்று நடித்த ஞாபகம். *

*நாடகக் கலையின் பிதாமகர் சங்கரதாஸ் சுவாமிகள். சாக்கியர் கூத்து சவிட்டு
நாடகம் எல்லாம் கேரளத்தில் உண்டு. சவிட்டு நாடகம் கிறித்தவ மதப் பிரசாரத்தில்
முக்கியமானது. சவிட்டு நாடகப் பாட்டு நல்ல தேர்ந்த தமிழில் இருக்கும். கூத்து
காணும் பொழுதில் நாம் பாத்திரமாகவே ஒன்றி விடுகிறோம். உணர்வு பூர்வ மயமானது.
கூத்தில் மிக முக்கியம் அதன் சந்தேசம். சந்தேசம் என்றவுடன் கவி காளிதாசன்
நினைவு. மேக சந்தேசம்.  சாகுந்தலம் மிகப் பெரிய கூத்துப் பாட்டுத்தான். நல்ல
கூத்தின் சந்தேசம் உன்னதமானதாக இருத்தல் வேண்டும். ஏனென்றால் கூத்து மனதில்
ஒன்றி விடும். நல்லது மோசமானது எல்லாம் பசை போட்டு நிற்கும். சங்கரதாஸ்
சுவாமிகள் பெயர் தாங்கிய நடிகர் சங்கம் தற்கால சினிமாவில் நல்லவற்றைக்
கருத்தில் கொண்டு சினிமா எடுக்க வேண்டும். கலைக்கு மட்டும் தொழில் தாண்டிய
லக்ஷியம் உண்டு.  வெறும் காசு துட்டு பணம் என உத்தேசம் வைத்து அதில் அரசியல்
அதிகார குறிக்கோளும் இருந்தால் அது கலை அன்று, கபடம். பாவைக் கூத்து
பொம்மலாட்டம் கழைக்கூத்து போன்ற நாடோடிக் கலைகள் கூத்து சார்ந்தவை. *

*கூத்தாடி என்பது விரசமில்லை. கூத்தபிரான் ஒரு கூத்தாடிதான். எதை முன்னிட்டு
ஆடுகிறோம் என்பதுதான் கணக்கு. எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவே எண்ணல்
வேண்டும். இறையும் தமிழும் அருள்க. *

*-- இந்திரா ப்ரியதர்ஷிணி*
**********************************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooBAW9F%2B1nnqLev%3DvN%2Bif%3DQNw-7aL7g3OeaGY4SoofAmA%40mail.gmail.com.

Reply via email to