LEADERSHIP VS SYSTEM This is a big difference between the West and the East. Process or system is always secondary to leadership. While leadership and system differ, leadership takes precedence in the East and system in the West.
Indra Priyadarshini K Rajaram: I beg to differ if leadership precedes the system in the east and the opposite in the west. Always in all nations Judiciary and Parliament go hand in hand here the power to gobble up weighs in which direction is measured by both. In the USA why the system did not stop the present president and how can the judiciary appointed Will the President go against? And even in Singapore so famous for the system fumbles at times where the power weighs more. So, there is no east and west. The IRS of the USA cannot simply send letters or enquire about the president's retinue and the senators as they like because there is a law. Why in our system as well as in the USA system, Representatives of the defendants and the Plaintiffs cannot even argue in the right sense, lawfully, when the Bench rejects or thwarts the lawyers awfully. When I was willing to take the risk of raiding the state political leader and his family there was a bar which is not constitutional but advice pragmatic, where killing the mockingbird is rather, shiftable or can be adjourned for the right time. So too the utterances of Junior pirai soodan as CJ. Certain things are happening only because of the balance of power between the force of administrations. Thus, where the lines drawn are adhered to perfectly without the desire of usurping the power of others. K R IRS 9225 ---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Sun, 9 Feb 2025 at 12:22 Subject: Fwd: Indhira Priyadharshini - Manjunathaa To: *மாத்துபிடா மஞ்சுநாதா* *திரௌபதி சபை நடுவில் இரண்டு கரங்களையும் உயர்த்தி கிருஷ்ண கிருஷ்ண என்று அபயஹஸ்தம் தேடிய **பின்தான் கண்ணன் வந்தான். கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான். கேள்வியிலே பதிலாகக் கண்ணன் **வந்தான். தர்மம் என்னும் தேரில் ஏறி கண்ணன் வந்தான். தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான். கவியரசு **வரிகள். * *சூர்தாஸர் "சபா பீச் கிருஷ்ண கிருஷ்ண திரௌபதி புகாரி. இத்னி ஹரி ஆயிகயி பஸூநந ஆருட பயி" **சபை நடுவே பாஞ்சாலி குரல் கேட்டு வஸ்திரங்களுடன் கண்ணன் பிரசன்னமானான். * *பாரதி "வண்ணப்பொற் சேலைகளாம் அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!எண்ணத்தி லடங்காவே; -- அவை **எத்தனை எத்தனை நிறத்தனவோ! பொன்னிழை பட்டிழையும் -- பல புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்" என்பான். * *"நிராதார் கே ஆதார் ஏகி ராமராம்" துளசிதாஸ் சுவாமி. உயர் நோக்கி கைவிரித்த இந்த நிலையில்தான் சொல்லுவர் **"மாத்துபிடா மஞ்சுநாதா!". எங்கே? கர்நாடக மாநிலம் தக்ஷிண கனடா மாவட்டத்தில் இருக்கும் அழகான மலைகள் **நடுவிலான ஸ்ரீ க்ஷேத்ர தர்மஸ்தலா என்னும் புண்ய பூமியில். தர்ம தேவதைகள் தாம் புவியில் வாசம் செய்ய ஏற்ற இடம் **தேடி நடந்தனர். அவர்கள் ஹெக்கடே எனும் ஜைன தம்பதியர் வீட்டுக்கு வருகை தந்தனர். இவர்கள் மேன்மையை **அறியாவிட்டாலும் அதிதிகளை மிக அன்போடும் மதிப்போடும் விருந்தோம்பினர் ஹெக்கடே தம்பதியர். **விருந்தோம்பில் மகிழ்ந்த தேவதைகள் தம்மை வெளிப்படுத்தி அவர்களிடம் இந்த இடத்தை தமக்கு விட்டுத்தருமாறு **கேட்க மறுமொழி கூறாது மிகவும் மகிழ்வுடன் விட்டு நீங்கி வேறொரு இடத்தில் வாசம் செய்தனர் தம்பதியர். * *அங்கு நான்கு தர்ம தேவதைகளைப் பிரதிஷ்டை செய்தனர் ஹெக்கடே தம்பதியர். அதன் பின் ஹெக்கடே தம்பதியர் **பக்தியுடன் ஆராதித்து வர அதன் பின் புரோகிதர் சிவப் பிரதிஷ்டை ஸ்ரீ மஞ்சுநாத ஸ்வாமி மற்றும் அம்மை பார்வதியைச் **செய்தனர். ஹெக்கடே அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மத்வ சம்ப்ரதாயப்படி ஸ்ரீ வாதி ராஜ ஸ்வாமி அவர்கள் **அநுக்ரஹப்படி பூஜைக் க்ரமங்கள் நடைபெறுகின்றன. * *பிரதிஷ்டை சிவன். பூஜாக்ரமம் மத்வ சம்ப்ரதாயம். தனாதிகாரி ஹெக்கடே எனும் ஜைனர். இது தர்மம் வாசம் செய்யும் **தலம். இங்கு ஹொய்சலூஸ் என்னும் ஒரு மக்கள் நீதிமன்றம் உள்ளது. இதன் நீதிபதி ஸ்ரீ மஞ்சுநாத ஸ்வாமி. அவரின் பிரதிநிதி ஹெக்கடே. இப்பகுதியில் யதார்த்த அரசாங்க நீதி மன்றங்களில் வழக்குகள் குறைவாக இருக்கும். காரணம் வழக்குகள் ஹொய்சலூஸ் மன்றத்தில் பெரும்பாலும் தீர்க்கப்படுகின்றன. இரண்டு கட்சிகளும் பேசித் தீர்க்க முடியாத ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட கட்சி "மாத்துபிடா மஞ்சுநாதா" என்று கூறி விட்டால் பின் இந்த மன்றத்தில்தான் சந்திப்பு. இடையில் **அவர்களிடையே பேச்சு கிடையாது. இதையே மாத்துபிடா என்றால் "இனிப் பேச்சில்லை" மஞ்சுநாதா ஸ்வாமி **தான் நீதிபதி என்பதாகும். * *இங்குள்ள தீர்ப்புக்குப் பிறகு யாரும் அரசாங்க நீதிமன்றப் படி ஏறுவதில்லை. உச்ச நீதி மன்றம் உலக நீதி மன்றம் **தி ஹேக்குக்கு மேலானது ஹொய்சலூஸ். யாரோ எழுதியிருந்தார்கள் இந்தத் தீர்ப்புகள் நம்முடைய நீதிமன்றங்களில் **செல்லுபடி ஆகும் என்று. இதைப் பற்றிய சிந்தனை என்னுள் எழுந்தது. நீதிமன்றத் தீர்ப்பின் மிக முக்கியமான சாரம் **இரு கட்சி ஒப்புதல். அது ஹொய்சலூஸ் தளத்தில் இயல்பாக இருப்பதால் மற்ற நீதி மன்றத் தலையீடு உபரி என்று **தோன்றியது. * *இதில் உச்சமான ஒரு விஷயம் ஸ்ரீ மஞ்சுநாத ஸ்வாமி மற்றும் ஹெக்கடே அவர்கள் மீதுள்ள நம்பிக்கை பயபக்தி. **இறை அருளாளரை கோயில் வளாகத்திலேயே வணங்கிப் போற்றுவதை நான் தர்மஸ்தலாவில் மற்றும் எங்கள் **சக்குளத்துக் கோவிலில் மட்டும்தான் கண்டிருக்கிறேன். நம்முடைய நம்பிக்கை விழுமியங்கள் சார்ந்தது. இன்னார் **சொன்னால் சரியாக இருக்கும் என்ற சிந்தனை. அதனால் தான் புத்தி சாமி ஏமான் போன்ற பதங்கள். இதனால் **அறிவுத் தலைமையாற்றிடும் அவர்க்கு பொறுப்புக்கள் அதிகம். ஏறக்குறைய அரசனை ஒத்த பொறுப்பு. பாண்டியன் **செல்லுயிர் வளைந்த செங்கோலை நிமிர்த்திய வரலாறு நமக்குண்டு. * *மேற்கிற்கும் கீழைக்கும் இது பெருத்த வேறுபாடு. **ப்ராஸஸ் அல்லது முறைமை எப்போதும் நம்மிடம் தலைமை ஆணைக்கு முன்னால் இரண்டாம் பக்ஷம் தான். **தலைமை வாக்கும் முறைமையும் வேறுபடுகையில் கீழையில் தலைமை வாக்கும் மேற்கில் முறைமையும் **முக்கியத்துவம் பெறுகின்றன. * *இதனால்தான் ஹீரோ வழிபாடு தனிமனிதத் துதி எல்லாம் இங்கு அதிகம். ஆதர்சமான ஒரு தலைமையை எப்போதும் **நாம் நாடுகிறோம். இதில் இந்திய தேசத்தின் அழகான ஒரு பண்பாட்டில் ஞானம் எளிமை உலக நலன் மக்கள் நலன் **தியாக உருவமாக இருக்கும் தலைமை போற்றப்படுகிறது. இந்தத் தலைமை முறைமை வழி நிர்வாகம் கடந்து **உணர்வுபூர்வமான பண்பாடு அறிந்த மனிதத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. அப்போது அது வகுக்கும் சாத்திரங்கள் **நீதிகள் சரியான பாதையில் இருக்கின்றன. ப்ராஸஸ் அல்லது முறை சார்ந்த அமைப்பில் மனிதத் தொடல் இல்லாது போவது **போல் கள்ளம் புகுந்த தலைமை விஷமாகிறது. * *நம் நீதிமன்றங்கள் முறைமை சார்ந்த பித்துப் பிடித்திருப்பதால் **மனிதநேயம் காவு கொடுக்கப்படுகிறது சில நேரம். இந்த சட்டங்களும் ஒரு மாதிரி அறிவுத் தலைமையால் **வகுக்கப்பட்டவைதான். மாறாக தலைமை மட்டும் சார்ந்த நிகழ்வுகளில் பொய் சேர்ந்தால் அனர்த்தம்தான் விளையும். **ஆகவே தீர்ப்பின் நம்பிக்கை இந்த மெய்யான நன்னேர்மை கொண்ட அறிவுத் தலைமை பாற்பட்டது. அது இருந்தால் **முறைமை குறைவு. முறைமை மட்டுமே இருந்து நன்னேர்மை இல்லாத் தீர்ப்பாயங்கள் நேர விரைய தலங்கள்.* *ஹொய்சலூஸ் **தீர்ப்பின் மேன்மை ஸ்ரீ மஞ்சுநாத ஸ்வாமியிடம் உள்ள பக்தியாலும் ஹெக்கடே குடும்பத்தாரின் **நன்னேர்மையாலும் தான் நிலைநிறுத்தப்படுகிறது. * *நாளாக நாளாக என் தேசம் மிக மிக உன்னதங்கள் உள்ளது என்று புலப்படுகிறது. என் தாய் மண்ணைப் போல் **ஒரு பூமி இல்லை. பாரதி சொன்னான் முன்னர் நாடு இருந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் சிறுமையும்....**என்று. இந்த சிறுமை ஒரு பனி மூட்டமாய் மறைய ஸ்ரீ மஞ்சுநாத ஸ்வாமி மற்றும் தர்ம தேவதைகள்தான் காக்க வேண்டும். * *வந்தே மாதரம்.* *இந்திரா ப்ரியதர்ஷிணி * ***************************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZordZFtC7t6Pq7h9Z2o2o5gcg%2BeqTNsipeaHvqQyfOym%3DQ%40mail.gmail.com.
