Yes That is perfect. KR On Fri, 14 Feb 2025 at 22:22, 'Bala N. Aiyer' via KeralaIyers < [email protected]> wrote:
> In USA, Valentine's Day is celebrated only as a Day of love and affection > towards all in the community. > We greet everyone, especially the children. All adults mention this to all > their friends. > Only in India (that too in South India) it has degenerated to "Lover's > day" between boyfriends and their lady love. > > With kind regards & best wishes, > > Bala N. Aiyer > > > On Friday, February 14, 2025 at 06:25:43 AM CST, Rajaram Krishnamurthy < > [email protected]> wrote: > > > Valentine's Day 2025: Valentine's Day, observed on February 14, *celebrates > love and affection*. This special occasion provides an opportunity to > express your feelings for someone special. The days leading up to > Valentine's Day are also significant and collectively known as Valentine's > Week. The concept of Valentine's Day stems from the Roman festival of > Lupercalia, which used to be celebrated from February 13-15. On this day, > men would take off their clothes before sacrificing a goat or a dog. The > hide of the sacrificed goat would be then dipped in its blood and used by > the men to whip young women. It was believed that this helped boost the > fertility of women. Following this, young women would put their names in an > urn to be paired with a man through a lottery system. Some pairs would even > get married after this day. As per belief, Saint Valentine was a priest > who helped couples in marrying secretly. Roman Emperor Claudius II, who > ruled at that time, did not allow men to marry saying that single men were > better soldiers. Saint Valentine was beheaded on the orders of the ruler. > Each day of Valentine's Week is dedicated to a different expression of > love. It begins with Rose Day on February 7 which is followed by Propose > Day, Chocolate Day, Teddy Day, Promise Day, Hug Day, and Kiss Day. > Couples, in this week, come up with unique ideas to woo their partners. > Roses, teddy bears, heartfelt greeting cards, handwritten notes, and > chocolates are some of the ways the week is celebrated. > > Rather than celebrating 14-2 as Valentine's Day for lovers, I consider > this a day full of love and affection in all the people and among all the > relationships. As R.K. Shanmugam Chettyar said, love is a catch-all term > that applies to everyone, and it is not appropriate to say that it is only > for the lovers. > காதலர் தினம் 2025: காதலர் தினம், பிப்ரவரி 14 அன்று அனுசரிக்கப்பட்டது, > அன்பையும் பாசத்தையும் கொண்டாடுகிறது. இந்த விசேஷ சந்தர்ப்பம் ஒரு சிறப்பு > வாய்ந்த ஒருவருக்காக உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. > காதலர் தினத்திற்கு முந்தைய நாட்கள் குறிப்பிடத்தக்கவை மற்றும் கூட்டாக காதலர் > வாரம் என்று அழைக்கப்படுகின்றன. காதலர் தினத்தின் கருத்து பிப்ரவரி 13-15 வரை > கொண்டாடப்படும் ரோமானிய திருவிழாவான லூபர்காலியாவிலிருந்து உருவானது. இந்த > நாளில், ஆடு அல்லது நாயைப் பலியிடுவதற்கு முன் ஆண்கள் தங்கள் ஆடைகளை > கழற்றுவார்கள். பலியிடப்பட்ட ஆட்டின் தோலை அதன் இரத்தத்தில் தோய்த்து, இளம் > பெண்களை சவுக்கால் அடிக்க ஆண்கள் பயன்படுத்துவார்கள். இது பெண்களின் > கருவுறுதலை அதிகரிக்க உதவும் என்று நம்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, இளம் > பெண்கள் லாட்டரி முறையின் மூலம் ஒரு ஆணுடன் தங்கள் பெயர்களை ஒரு கலசத்தில் > போடுவார்கள். சில ஜோடிகளுக்கு இந்த நாள் கழித்து திருமணம் கூட நடக்கும். > நம்பிக்கையின்படி, புனித வாலண்டைன் ஒரு பாதிரியார், அவர் ரகசியமாக திருமணம் > செய்து கொள்ள தம்பதிகளுக்கு உதவினார். அப்போது ஆட்சி செய்த ரோமானியப் பேரரசர் > இரண்டாம் கிளாடியஸ், ஒற்றை ஆண்களே சிறந்த வீரர்கள் என்று ஆண்களைத் திருமணம் > செய்து கொள்ள அனுமதிக்கவில்லை. ஆட்சியாளரின் உத்தரவின் பேரில் புனித வாலண்டைன் > தலை துண்டிக்கப்பட்டது. காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் அன்பின் வெவ்வேறு > வெளிப்பாடுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பிப்ரவரி 7 அன்று ரோஸ் > தினத்துடன் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து முன்மொழிய நாள், சாக்லேட் தினம், > டெடி தினம், வாக்குறுதி நாள், அணைத்து நாள் மற்றும் முத்த தினம் ஆகியவை > அடங்கும். தம்பதிகள், இந்த வாரத்தில், தங்கள் கூட்டாளிகளை கவர்ந்திழுக்க > தனித்துவமான யோசனைகளைக் கொண்டு வருகிறார்கள். ரோஜாக்கள், கரடி கரடிகள், > இதயப்பூர்வமான வாழ்த்து அட்டைகள், கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் > சாக்லேட்டுகள் ஆகியவை வாரம் கொண்டாடப்படும் சில வழிகள். > 14-2 காதலர் தினமாக கொண்டாடுவதற்கு விட, அன்பும் பாசமும் நிறைந்த நாளாகவே > இதை நான் கருதுகிறேன் ஆர் கே சண்முகம் செட்டியார் கூறியது போல காதல் > என்பது எல்லோருக்கும் பொருந்தும் போட்டுப் பதமே அன்றி, காதலர் மட்டுமே என்பது > ஏற்புடையது அல்ல. > K Rajaram IRS 14225 > > ---------- Forwarded message --------- > From: *Chittanandam V R* <[email protected]> > Date: Fri, 14 Feb 2025 at 16:42 > Subject: Fwd: Sujatha - Valentine's Day > To: > > > > > *Valentine's Day is to be 'celebrated' today, 14th February. I like to > share with you Sujatha's essay * > *on this topic. I sent this to you last year. No problem. You can > enjoy reading this again and appreciate* > *Sujatha's narrative skill.* > > *Chittanandam* > > சுஜாதாவின் 'காதலர் தின' சிந்தனைகள் > * ********************* * > *இந்த வாரம் காதலர் தினம் வருகிறது என்று சொன்னார்கள். சுமார் ஐந்நூறுக்கும் > குறைவில்லாத மோசமான கவிதைகள் தமிழிலேயே எழுதப்படும். வாலண்டைன் அட்டைகளில் > இதயங்களின் மேல் அம்புகள் தைக்கும். எல்லையற்ற நேரவிரயம் > காத்திருத்தல்களிலும், மூத்தவர் மறுப்பிலும் நிகழும். ஓரிரு தற்கொலைகள் > நடைபெறலாம்.* > > *காதல் தேவையற்ற ஒரு எமோஷன் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கைகளுள் ஒன்று. > என் வாழ்நாளில் நான் பார்த்த காதல்கள் எல்லாம் சந்தேகக் கேஸ். அவை நிஜமாகவே > காதல்தானா, இல்லை இன்ஃபா**ச்சுவேஷனா என்பதே தெளிவில்லை (ஒரே ஒரு உதாரணத்தைத் > தவிர. அது பற்றி இறுதியில்). * > > *சிறுவயதில் காதல் எங்களுக்கு ஏறக்குறைய கெட்ட வார்த்தையாகத்தான் இருந்தது. > அந்தக் காலத்தில் அரு.ராமநாதனின் 'காதல்' பத்திரிகையில் சீனிவாசனின் கதை > வந்தபோது எல்லோரும் அவனை ஒரு மாதிரி நாய் கொண்டுவந்த வஸ்துவைப் > போலப் பார்த்தோம். பள்ளிக்கூடத்தில் ஏதேனும் மாணவன் பெண்களிடம் காதல் > செய்தான் என்று தெரிந்தால் பிரேயர் மீட்டிங்கின்போது அவனை ஒரு மேஜை மேல் > நிற்கவைத்து பிரம்பால் அடிப்பார்கள். இவ்வகையிலான அபாயகரமான சூழ்நிலையில் > காதல் பற்றிப் பேசுவதற்கு அசட்டு தைரியம் தேவைப்பட்டது.* > > *ஜனோபகார சாசுவத நிதியின் கேஷியர் பெண்ணுக்கு கோபாலன் ஒரு காதல் கடிதம் எழுதி > அதை எங்கள் 'நாம் ஐவர்' சர்க்குலேஷன் லைப்ரரி புத்தகத்தில் வைத்து என்னிடம் > கொடுத்துவிட்ட கதையை (ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பில்) எழுதியிருக்கிறேன். > சம்பந்தப்பட்ட தகப்பனார் அதைக் கண்டுபிடித்து "இனிமே **மாதிரி கடுதாசி > எழுதினா முட்டியைப் பேத்துருவேன்" என்று **அதட்டியதும் "சரி மாமா" என்று > அக்காதல் அக்கணமே கைவிடப்பட்டு கோபாலன் தெருவில் சடுகுடு ஆடுவதற்கு > சென்றுவிட்டான். * > > *ஓ**வர்சியர் பெண் மாலா** காதல் செய்து ஒரு நாள் ஓடிப்போய்விட்டதாக வந்த > செய்தி கீழச்சித்திரை வீதி முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இத்தனைக்கும் > அந்தப் பையனைப் பார்த்தால் சாதுவாக அவள் தம்பி போல இருப்பான். "வீதியில் > இத்தனை பேர் இருக்கச்சே போயும் போயும் இந்தக் கறிவேப்பிலைக் கொத்தை பிடிச்சு > இவன்கூட ஓடிப்போனா பாருடா ... அதாண்டா எனக்கு ஆத்து ஆத்து போறது" என்று ரங்கு > ஆதங்கப்பட்டான். * > > *"காதலுக்கு கண் இல்லைங்கறது இதாண்டா." * > > *அந்தப் பெண் ஓடிப்போனதும்தான் அவளை பற்றி தீவிரமாக யோசிக்கத் துவங்கினோம். > இவளா என்று ஆச்சரியப்படும்படி சாதாரணத் தோற்றம் கொண்ட பெண். மாநிறமாக > இருப்பாள். ஒல்லியான கைகளுக்கு பஃ**ப் வைத்து ரவிக்கை. > டி.எஸ்.ஆர்.சந்தனாதித் தைலம், குட்டிக்யுரா வாசனையுடன் தன் தோழிகளுடன் > பேசிக்கொண்டே தண்ணீர் பிடிக்க வருவாள். நாலைந்து பெண்களுடன் சாயங்கால > வேளைகளில் சைக்கிளில் குரங்கு பெடல் பழகுவாள். * > > *அந்தப் பையன் சம்பத் தூரத்து உறவு போலும். திருவானைக்காவலிலிருந்து > வாராவாரம் வருவான். வீட்டுக்கு ஒத்தாசை செய்வான். ஒட்டடை அடிப்பான். எலி > பிடிப்பான். ரங்கன் கடையில் சிம்னி விளக்கு திரி வாங்க வருவான்.* > > *"மாலு எப்டிரா இருக்கா" என்று நக்கலாக கேட்டால், பதிலே சொல்லமாட்டான்.* > > *"சம்பத்து... நீயே கணக்கு பண்ணா எப்படிரா? ஒரு தடவை அவளை எங்கிட்டயும் > விட்டுப்பாரேன்" என்று பாச்சா கேட்டபோது ஆக்ரோஷமாகப் பாய்ந்து இரண்டு பேரும் > புழுதியில் புரண்டார்கள். சண்டையில் பாச்சாவின் இடுப்பு வேஷ்டி கழண்டுபோய் > அன்றைக்குப் பார்த்து அவன் கோவணம் கட்டாததால், இடுப்புக்குக் கீழ் > ஒன்றுமில்லாமல் உள்ளே ஓடியது மறக்கமுடியாத நிகழ்ச்சி (அவனைப் பிற்காலத்தில் > ஏ.ஜி. ஆபீஸில் பெரிய ஆபீஸராக நினைத்துப் பார்க்கமுடியவில்லை. அந்தக் கணத்தின் > வேடிக்கைதான் மனசில் தங்கி இருந்தது). * > > *ஒரு நாள் மாலாவையும் அந்தப் பையன் சம்பத்தையும் காணோம்... என்ன என்னவோ > வதந்திகள். இரண்டு பேரையும் - திருச்சி ராஜா டாக்கீஸில் பேக் பெஞ்சு > டிக்கெட்டில் பார்த்ததாக சிலரும், தூத்துக்குடி எக்ஸ்பிரஸில் ஒரே சால்வையை > இரண்டு பேரும் போர்த்திக்கொண்டு பயணித்ததைப் **பார்த்ததாக சிலரும் > சொன்னார்கள். ஓவர்சியர் எதுவும் போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுத்ததாகத் > தெரியவில்லை. 'எங்களை யாரும் தேடவேண்டாம்' என்று எழுதியிருந்த கடிதத்தைக் > கண்ணால் பார்த்தேன் என்று ராமன் சத்தியம் பண்ணிச் சொன்னான். ஓவர்சியர் வெளியே > தைரியமாக இருந்தாலும் உள்ளே மருகிப்போய்விட்டார் என்று சொன்னார்கள். மாமி இந்த > அவமானத்துக்குப் பிறகு வெளியே வருவதே இல்லை. * > > *இந்தக் காதல் கதை சட்டென்று சப்பென்று முடிந்துவிட்டது. * > > *ஒரு நாள் மாலை, மாலா எப்போதும் போல கையில் பித்தளைக் குடத்துடன் தண்ணீர் > பிடிக்க வந்தாள். எதுவுமே நடக்காததுபோல் என்னைப் பார்த்து 'சௌக்கியமா' > என்றாள். முகத்தில் ஒன்றிரண்டு பருக்கள் புதுசாக வந்திருந்தன. நான் காதோரம் > சிவந்து அவசரமாக பாட்டியிடம் "பாட்டி... அந்தப் பொண்ணு வந்திருக்கு" என இதை > அறிவிக்க, "ஏண்டி, நீ ஓடிப்போயிட்டேன்னு எல்லோரும் பேசிண்டாளே" என்று பாட்டி > கேட்டேவிட்டாள். * > > *"இல்லை பாட்டி... லால்குடில மாமாவுக்கு சீரியஸா இருந்தது. > பார்க்கப் போனேன்" என்று சொன்னாள், அறியாத விழிகளுடன். சாயங்காலம் அவள் > வீதியில் வழக்கம்போல் குரங்கு பெடல் பழகுவதை நாங்கள் ரங்கு கடையிலிருந்து > பார்த்துக்கொண்டிருந்தோம்.* > > *"ஒண்ணுமே நடக்கலை போல இருக்கா பாரு... என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு?"* > > *"மாமாவுக்கு உடம்பு சரியில்லையாம். அதுக்குத்தான் போயிருந்தாளாம்." * > > *"டேய் பித்துக்குளி... இவளுக்கு மாமாவே கிடையாது. தெரியுமா?" என்று ரங்கு > அடித்துச் சொன்னான்.* > > *சம்பத்தைக் கொஞ்ச நாளாகவே காணோம். அவனை மணச்சநல்லூரில் ஆள் வைத்து அடித்துப் > போட்டுவிட்டதாக பேசிக்கொண்டார்கள். மாலா நிஜமாகவே லால்குடிக்கு போனாளா, ஓடிப் > போனாளா என்கிற மர்மம் விடுபடவே இல்லை.* > > *உண்மையான காதலை நான் சந்திக்கவே இல்லையா? காதலர் தினம் என்பது வாலண்டைன் > கார்டு விற்பவர்களுக்காக ஏற்பட்ட மாயையா ? * > > *எ**ன்னுடன் மீனம்பாக்கத்தில் பணிபுரிந்த மார்ட்டின் என்கிற ஒரு ஆங்கிலோ > இந்திய கம்யூனிகேஷன் ஆபீஸர் ஒரு பெண்ணைக் காதலித்தார். அந்தப் பெண் அவரைவிட > இளமையும் தகுதியும் பெற்ற மற்றொருத்தரைக் காதலித்தாள். அவரிடம், "ஸாரி > மார்ட்டின்... நான் உங்களைக் காதலிக்கவில்லை" என்று சர்ச்சில் வைத்து > சொல்லிவிட்டாள். மார்ட்டின் மனம் தளராமல், "அதனால் என்ன... நான் உன்னைக் > காதலிக்கிறேன். அது போதும்" என்று சொல்லிவிட்டார். அவள் கணவனிடம் அவளுடன் > கடிதத் தொடர்பு வைத்துக்கொள்ள அனுமதி கேட்டார்.* > > *அந்தப் பெண் கல்யாணத்துக்குப் பின் ஆஸ்திரேலியா சென்றுவிட்டாள். அங்கே > அவளுக்கு ஐந்து பெண் குழந்தைகள் பிறந்தன. மிக அழகான கையெழுத்தில் வாராவாரம் > ஆஸ்திரேலியாவுக்குக் கடிதம் எழுதுவார். "என் ரோஸி எப்படி இருக்கிறாள். என் > ஏஞ்சல் நன்றாக சாப்பிடுகிறாளா... ஜெனிஃபர் படிக்கிறாளா?" என்று குழந்தைகளை > விசாரிப்பார். அவர்களை இவரிடம் லீவுக்கு அனுப்பினாள். அவர் அவர்களுக்குப் > படிப்பதற்கு பணம் அனுப்பினார்.* > > *பல வருடங்கள் கடந்து அந்தப் பெண்ணின் கணவன் ஆஸ்திரேலியாவில் இறந்துபோனான். > ஐந்து குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு பல்லாவரம் வந்துவிட்டாள். மார்ட்டின் > தான் காதலித்த பெண்ணை அவள் ஐந்து குழந்தைகளுடன் தன்னுடைய ஐம்பத்தாறாவது வயதில் > கல்யாணம் செய்துகொண்டார். * > > *நான் வாழ்நாளில் சந்தித்த ஒரே ஒரு உண்மைக் காதலாக இதை ஒரு மனோதத்துவ > நிபுணரிடம் சொன்னபோது அவர் "ஹி இஸ் நாட் நார்மல்" என்றார். * > > *- சுஜாதா* > *********************************** > > -- > On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust > > We are now on Telegram Mobile App also, please join > > Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup > > Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust > > Kerala Iyers Trust Group for Discussions: > https://t.me/KeralaIyersTrustGroup > --- > You received this message because you are subscribed to the Google Groups > "KeralaIyers" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/keralaiyers/CAL5XZoqJHy5FNM8SNTZouYiAQa1%3DLtSFo75mudvh-w2UNZFa%2BQ%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/keralaiyers/CAL5XZoqJHy5FNM8SNTZouYiAQa1%3DLtSFo75mudvh-w2UNZFa%2BQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > > -- > On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust > > We are now on Telegram Mobile App also, please join > > Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup > > Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust > > Kerala Iyers Trust Group for Discussions: > https://t.me/KeralaIyersTrustGroup > --- > You received this message because you are subscribed to the Google Groups > "KeralaIyers" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/keralaiyers/209699119.214396.1739551932252%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/keralaiyers/209699119.214396.1739551932252%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooDxauoTU6_fbeKg0PDc-K25aKyh6wvWq2McykoQkeV9Q%40mail.gmail.com.
