---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Tue, 4 Mar 2025 at 13:48
Subject: Fwd: Aandal by Sujatha
To:

Indragopa (इन्द्रगोप) refers to a kind of insect, popularly known in India
as mukhmuli insect. (see the Rasajalanidhi by Bhudeb Mookerji)

2    Indragopa (इन्द्रगोप) [=Indragopaka?] refers to a “firefly”, according
to the Śrīmatottara-tantra, an expansion of the Kubjikāmatatantra: the
earliest popular and most authoritative Tantra of the Kubjikā
cult.—Accordingly, “The god, possessing a subtle body (puryaṣṭaka), resides
in the lotus of the heart. (His) form is that of a Kadamba bud and (shines)
like a firefly [i.e., indragopaka-sannibha]. O beloved, the great, and
divine Self is present there, located in the calix (of the lotus)”.  {Not
butterfly}

3     Indragopa (इन्द्रगोप) refers to—The name of a species of minute
insect.

4 Indragopa (इन्द्रगोप).—[indro gopo rakṣako'sya, varṣābhavatvāttasya] a
kind of insect of red or white colour; Śukra.4.157; K.1.

5 Indragopa (इन्द्रगोप):—[indra-gopa] (paḥ) 1. m. A fire-fly.

KR IRS   4325


*இந்த வலையில் சிக்கலாம் - சுஜாதா *


ஆண்டாள் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும் அழகான தமிழ்ச் சொற்கள் கிடைக்கும்.
அதற்காகவாவது அதன் பக்தியைக்கூட புறக்கணித்துவிட்டு ரசிப்பவர்கள்
இருக்கிறார்கள்.
தமிழால் முதலில் தனக்குள் அந்தப் பாடல் உங்களை இழுக்கும். உள்ளே
நுழைந்துவிட்டால்
போதும். அதனுள் பக்தி என்கிற வலை விரித்துக் காத்திருக்கும். அதன்
சுழற்சியிலிருந்து
தப்ப முடியாது என்கிறார் கோதை.
பட்டாம்பூச்சி, வண்ணத்துப்பூச்சி என்றெல்லாம் இன்று சொல்லப்படும் ஜந்துவுக்கு
ஆண்டாளின்
காலத்தில் இந்திரகோபம் என்று பெயர். இது எப்படி என்று யோசிக்கவைக்கிறது. ஒரு
வேளை
இந்திரனின் கோபத்தின் வண்ணமோ? திருமாலிருஞ்சோலையில் ஆண்டாள் பார்த்த
பட்டாம்பூச்சிகள் அத்தனையும் சிவப்பு. ஒரே சமயத்தில் சோலை முழுவதும்
குப்பென்று
எழுந்து பரந்து பறந்து செல்கின்றன. நாச்சியார் திருமொழியின் இந்தப் பாடலைப்
பாருங்கள்.

சிந்தூரச் செம்பொடி போல் திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திரகோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்,
மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின்று உய்துங் கொலோ?

(இந்திரகோபம் - பட்டுப்பூச்சி; மந்தரம் - பார்க்கடலைக் கடைந்த மந்தர மலை;
சுழலை - விரித்த வலை;  உய்துங் கொலோ - தப்பிக்கவும் முடியாமல்)

சிவப்பான பொடி இரைத்தது போல திருமாலிருஞ்சோலை எங்கும் பட்டுப்பூச்சிகள் பறந்து
விரிந்தன. அன்று மந்தர மலையை மத்தாக வைத்துப் பாற்கடலைக் கடைந்து இனிப்பான
அமுதம் எடுத்த அழகான தோள் கொண்டவன் விரித்த வலையிலிருந்து தப்பிக்க முடியுமா?

தின வாழ்வில் காதல், பாசம், சம்சாரம், பதவி, மோகம் துவங்கி இன்டர்நெட் வரை
எத்தனையோ விரித்த வலைகள் காத்திருக்கின்றன. கடைசியில் திருமாலின் வலையில்
விழுந்தால் சரி.

*- சுஜாதா*

சுஜாதாவின் இக்கட்டுரையைப் படித்துவிட்டு நண்பர் ஒருவர் எழுதிய மடல்:

தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள புலவனூர் கிராமம் என் தாயாரின் ஊர். என் சிறு
வயதில் அவ்வூரில் மழைக்காலங்களில் ஒரு அழகான பூச்சி எங்கும் நடமாடும். அவை
வெகு மெள்ளச் செல்லும். அதன் சிந்தூரப்பொடி நிற மேல் பக்கத்தைத் தொட்டால்
போதும் . தன்னைத்தானே சுருக்கிக்கொள்ளும். தொடும் போது பட்டுப்புடவையைத்
தொடும் உணர்ச்சி ஏற்படும். ஆண்டாள் சொல்லும் இந்திரகோபம், இப்பூச்சி தானோ?

மிக உயர்ந்த கவிதைகளுக்கு லக்ஷணம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இன்று எழுதியது
போல் ஒரு பிரமை தோன்ற வேண்டும். ஆழ்வார்கள் பாடல்களிலேயே பெரியாழ்வார்
பாடல்கள் இந்த வகையைச்செர்ந்தவை. சிலப்பதிகாரமும் இத்தகைய எளிய சொற்களால்
அமைந்த ஒரு மஹா காவியம். போன வாரம் முழுக்க நான் கோதையின் உற்சவங்கள்
பலவற்றில் கலந்து கொண்டு அவள் பாடல்களை அனுபவித்தேன். காரைக்கால் அம்மையார்,
கோதை, மகாதேவி அக்கா (Karnataka kannada Veerashaiva poetess), மீரா என்று
அக்காலத்திலேயே பெண்மைப்புரட்சி செய்த   நால்வர்.

பாடலுக்கு நன்றி

தி ஈ ஸ்ரீ ராகவன்
*******************************
Chittanandam

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo9rLaNG2jrNfKt7cVHX9_WFJJ7V6GHdkYGLSh0CBaavg%40mail.gmail.com.

Reply via email to