தான தர்மம் செய்வதற்கு முன்பு, நாம் தானம் என்றால் என்ன? தர்மம் என்றால் என்ன?
என்பதை தெரிந்து கொள்வது அவசியம். தர்மம் என்பது யாரும் கேட்காமல், தேவைப்பட்ட
ஒருவருக்கே கூட அது தெரியாமல் செய்யக்கூடிய நன்மையாகும். இது புண்ணிய கணக்கில்
சேரும். தானம் என்பது பிறருக்கு தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர்
அவர் நிலையை எடுத்துக் கூறி அறிந்த பிறகோ தருவது தானம் ஆகும்.
ஒருவர் பசியால் வாடும்போது தனது பசியைக் கூறி உதவி கேட்க, இவர் கொடுப்பது
தானமாகும். அதுவே அவர் பசி அறிந்து, அவர் கேட்காமலே அவருக்கு உணவு அல்லது உதவி
செய்வது தர்மமாகும். நல்ல காரியங்களுக்காக நாம் தருவதை தர்மம் என்று சொல்லலாம்.
இது நம் தலைமுறையை தாண்டியும் காக்கும். நம்மை விட வசதி குறைந்தவர்களுக்கு
அவர்கள் கேட்கும்போது நாம் தருவதை தானம் என்று சொல்லலாம்.
தர்மம் என்பது நாமாக மனம் ஒப்பிக் கொடுப்பது. இதில் எதிர்பார்ப்பு
எதுவும் இருக்காது. பொதுநலம் கருதியும் செய்வது இதில் அடங்கும். உதாரணமாக,
கோயில் கும்பாபிஷேகம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுவது. பொதுவாகவே, தானமாக
இருந்தாலும் தர்மமாக இருந்தாலும் அதை அவரவர் இடத்திற்கு சென்று தர வேண்டும்
என்பதுதான் விதி. ஆனால், இன்றைக்கு இதை யாரும் பொதுவாக பின்பற்றுவதில்லை.
கர்ணன் தர்மங்கள் நிறைய செய்து புண்ணியங்களை ஈட்டியவன். ஆனால் மொத்த
புண்ணியத்தையும் கிருஷ்ண பகவான் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர,
தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாக தாரை வார்த்துத் தந்த
பிறகு கர்ணன் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது.
ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கேட்டுக் கொடுப்பது தானம், கேட்காமலே
கொடுப்பது தர்மமாகும்.
Before giving charity, we need to know what charity is? What is charity? It
is important to know. Charity is a good deed that can be done without
anyone asking, even to a needy person without knowing it. This is counted
in the merit list. Charity is giving what others need after they ask or
after someone else mentions their condition and knows about it.
When someone is hungry and asks for help, it is charity. That is, when he
knows he is hungry and gives him food or help without asking, it is
charity. What we give for good causes can be called charity. This will
protect us beyond our generation. What we give to those who are less
fortunate than us when they ask can be called charity.
Charity is giving of our own accord. There is no expectation in this. It
also includes doing it for the common good. For example, engaging in
charitable activities like temple consecration. Generally, the rule is that
whether it is charity or charity, it should be given to the person in
question. But today, no one generally follows this.
Karna was a man who earned merit by doing many acts of charity. But he did
not receive all the merit as charity except by asking for it from Lord
Krishna. After giving all the merit as charity, Karna became an ordinary
man. That is why death approached him easily. In a nutshell, giving without
asking is charity, and giving without asking is charity.
K Rajaram IRS 19325
---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Wed, 19 Mar 2025 at 05:49
Subject: Fwd: Tamilnayagam - Divya Prabandham - Thondaradi
To:
நாலாயிர திவ்ய பிரபந்தம் - அணிலம் போலேன்
*தமிழ்நாயகம் *
முதியோர் இல்லத்துக்கு, அனாதைப் பிள்ளைகளைப் பராமரிக்க, ஏழைக் குழந்தையின்
மருத்துவ செலவுக்கு என்று எத்தனையோ நன்கொடை வேண்டி விளம்பரங்கள் வரும். கொடுத்து
உதவலாம் என்று நினைப்போம். ஆனால் ஏனோ மறந்து போகும். கொடுக்கக்கூடாது
என்றில்லை..மற்ற விஷயங்களில் மூழ்கி இதை மறந்து போவோம். நம்மால் ஒரு அனாதை
ஆசிரமம் எடுத்து நடத்த முடியாது. யாரோ செய்கிறார்கள், நம்மால் ஆனதைச் செய்வோம்
என்று நினைப்போம்...செய்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
இராமர் இலங்கைக்குப் போகப் பாலம் கட்டினார். குரங்குகள் எல்லாம் மலையைப்
பிளந்து கல்லைக் கொண்டு வந்து போட்டு பாலம் செய்தன. அங்கு ஒரு அணில்
இருந்தது. நாமும் இராமருக்கு ஏதாவது உதவி செய்வோம் என்று நினைத்து ஓடிச்
சென்று கடலில் மூழ்கும். அதன் உடலில் கொஞ்சம் மண் ஒட்டிக் கொள்ளும். கரைக்கு
ஓடி வந்து உடலை குலுக்கி அந்த மண்ணை கீழே தட்டி விடும். இப்படி கடலின் மண்ணை
எல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு விடலாம் என்று அந்த அணில் எண்ணியது.
இராமருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணம்.
அந்த அணிலுக்கு இருந்த நல்ல உள்ளம் கூட எனக்கு இல்லையே என்று வருந்துகிறார்
தொண்டரடிப் பொடி ஆழ்வார்.
பாடல்
*குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டு ஓடிதரங்க நீர் அடைக்கல்
உற்ற சலம் இலா அணிலம் போலேன்மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு
தன்னால்அரங்கனார்க்கு ஆட் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின் றேனே.*
பொருள்: வானரங்கள் மலையை பிளந்து கல்லைத் தூக்கி வந்து பாலம் போட கடலில்
குளித்து தான் புரண்டு இட்டு ஓடி அலையும் கடலை அடைக்க நினைத்து, இது
முடியுமா முடியாதா என்ற சந்தேகம் இல்லாத அணில் போலக்கூட இல்லாத நான், மரத்தைப்
போல வன்மையான மனத்தைக் கொண்ட வஞ்ச மனம் உள்ள நான் மனதில் அரங்கனுக்கு
ஆட்செய்யாமல் அனாவசியமாக வாழ்நாளை வீணடிக்கின்றேனே!
நல்ல காரியம் ஏதாவது செய்கிறோமா? நல்ல காரியங்களுக்கு உதவி செய்கிறோமா ?
தொண்டரடி தன்னைத் தானே கேட்டு அயர்ந்தார். நாமும் கேட்போம்.
தமிழ்நாயகம்
*******************
சித்தானந்தம்
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopv%2BSX1TXcbmvyUxFs3HZ43w9dkq6ORZjBp8nF99Wrt7Q%40mail.gmail.com.