A good approach; but one thing missed is he was diabetic since 13 year old;
his heart operation was performed with great risk. KR 27325

On Thu, 27 Mar 2025 at 15:46, 'N Sekar' via KeralaIyers <
[email protected]> wrote:

>
> பிள்ளைகளின் விருப்பம் அறிவோம்.
>
> இயக்குனரும் நடிகருமான மனோஜ் பாரதியின் மறைவு பல அதிர்வுகளை ஏற்படுத்தி
> இருக்கிறது.
>
> ஐம்பது வயதை கூட தொடுவதற்கு முன்னால் மிக வேக வேகமாக சென்று விட்டாரே என்ற
> ஆதங்கம் ஏராளமானவர்களுக்கு இருக்கிறது.
>
> நேரடியான பழக்கமோ தொடர்போ இல்லாவிட்டாலும் கூட இது போன்ற மரணங்கள் ஒரு சிறு
> அதிர்வையோ அது பற்றிய பேச்சையோ நம்மிடம் இல்லாமல் கடக்காது. மனோஜை இழந்து
> வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்..
>
> மிகப் பெரிய ஜாம்பவான்களின் வாரிசாக பிறப்பது ஒரு புறம் வரம் என்றால் இன்னொரு
> புறம் பெரும் மன அழுத்தம் தான்.
>
> சமூகத்தின் நெருக்கடி. குடும்பத்தில் நெருக்கடி. எதையாவது சாதிச்சே ஆக
> வேண்டும் என்ற அதீத அழுத்தம். நிரூபித்தே ஆகணும் என்பதான தேவையற்ற இந்த மன
> அழுத்தங்கள் எல்லோராலும் தாங்கி கொள்ள இயலுமா?
>
> இது நடிகர் இயக்குனர்கள் கலைஞர்களின் வாரிசு என்று மட்டுமல்ல. மருத்துவரின்
> வாரிசாக இருக்கலாம். பொறியாளரின் வாரிசாக இருக்கலாம். பெரிய தொழிலதிபரின்
> வாரிசாக இருக்கலாம். விளையாட்டு வீரர்களின் வாரிசாக இருக்கலாம்.
>
> இப்படி தாய் தந்தையரின் பெயரை வாரிசுகள் எப்படியாவது நிரூபித்தாகணும்
> சாதித்தாகணும் என்று எழுதப்படாத விதியாக இந்த தேவையற்ற மன அழுத்தம்.
>
> மனோஜூடைய பேட்டிகளை பார்க்கும் போது அந்த பையன் ரொம்ப ஒரு பக்குவப்பட்ட
> பையனாக அதே நேரம் தான் விரும்பியதை செய்ய இயலாத அளவுக்கு தன் தந்தையின்
> தலையீடு முழுமையாக இருந்ததை உணர முடிகிறது.
>
> பிள்ளைகளின் ஆசை என்ன என்பதை விளங்கி கொள்ளாத பெற்றோர்களாக அவர்களின் ஆசைகளை
> தேர்வுகளை அனுமதிக்காத அதற்கு உறுதுணையாய் நிற்காத பெற்றோர்களாக இன்னும்
> ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். மனோஜ் நிலையும் அது தான்..
>
> தான் இயக்குனராக வேண்டும் என்று விரும்பிய பையனை நீ நடிகனாக தான் வேண்டும்
> என்று தன்னுடைய ஆசையை விருப்பத்தை தன்னால் இயலாத ஒன்றை மகனிடம் நிறைவேற்றிக்
> கொள்ள நினைத்த சராசரி தந்தையாக இருந்து
>
> மனோஜின் சுயத்தை தொலைக்க வைத்த பாரதிராஜா ஐயோ தெரியாமல் செய்து விட்டேன்
> என்று வருந்துவதற்குள் அந்த பையனின் பெரும்பகுதி வாழ்க்கை தொலைந்து போய்
> விட்டது.
>
> தன்னை நிரூபிக்க நிரூபிக்க என்று பத்தாண்டு கால மன அழுத்தங்களும் தன்னையே
> மாய்த்துக் கொள்ளும் எண்ணங்களுமாய்
>
> ரொம்ப பாவமான நிலையில் தன் மனைவியும் பிள்ளைகளும் தான் தான் உயிரோடு இருக்க
> மீண்டு வர காரணம் என்று சொல்வதையும்
>
> வாழ்வில் தான் நினைத்தது போன்று பல விசயங்கள் நடக்கவில்லை என்றாலும் என்றாவது
> ஒரு நாள் தனக்கான காலமும் நேரமும் வரும் என்று நம்பிக்கையோடு பேசும் காணொளிகளை
> பார்க்க ரொம்ப வருத்தமாக இருந்தது.
>
> நம் குழந்தைகள் நம்மிடம் இருந்து உலகுக்கு வந்தவர்கள் என்பதை விட நம் வழியாக
> உலகுக்கு வந்தவர்கள் என்ற வாசகம் மிகுந்த அர்த்தம் பொதிந்தது.
>
> நான் பெற்ற பிள்ளை நான் சொல்ற படி என் விருப்ப படி என் ஆசைப்படி தான் நடக்க
> வேண்டும் என்பது மிகப்பெரிய வன்முறை அல்லவா.
>
> பாரதிராஜாவை குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை. அதே தவறுகளை செய்யும் சராசரி
> தாய் தந்தையாக நாம் இருந்து விட கூடாது என்பதற்காக சொல்கிறேன்.
>
> நான் செய்ய நினைத்ததை நான் செய்ய இயலாததை என் விருப்பங்களை நான் செய்ய
> நினைத்த சாதனைகளை என் வாரிசுகளின் வழியாக நிறைவேற்றி கொள்ள நினைத்து அவர்களின்
> ஆசைகளையும் தேர்வுகளையும் குழி தோண்டி புதைப்பதை விட நம் பிள்ளைகளுக்கு நாம்
> செய்யும் கொடூரம் என்னவாக இருந்து விட இயலும்?
>
> உன் நன்மைக்கு தான் சொல்றேன். என் அனுபவத்தில் சொல்றேன். உன் பெற்றோர் உனக்கு
> தவறாக எதையும் செய்ய நினைப்பார்களா..எங்களை விட உனக்கு நல்லது நினைக்க யாராவது
> இருக்க முடியுமா என்ற கேள்விகள் எதையும் தவறுன்னு சொல்ல முடியாது.
>
> ஆனால் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நீங்கள் அபகரிப்பது ஆக்கிரமிப்பது
> மிகப் பெரிய வன்முறை என்பது புரிய வேணாமா? அவர்கள் வாழ்வின் அனுபவங்களை
> அவர்களாய் கற்றுக் கொள்ளட்டுமே..
>
> நாலு தடவை கீழ விழுந்து எழாமல் நடந்த குழந்தை உலகத்துல எங்காவது இருக்கா?
>
> உலகத்தில் பிறந்த எல்லாரும் சாதிச்சே ஆகணுமா? ஒரு இயல்பான நிறைவான
> மகிழ்ச்சியான சாதாரண வாழ்வை வாழ்ந்து விட்டு போக கூடாதா?
>
> நாம் செய்ய வேண்டியது எல்லாம் இயன்ற வரை அவர்களுக்கான நல்ல கல்வி.
> கல்வியிலும் கூட அவர்கள் விரும்பும் பாடம் படிப்பு.. அவர்கள் விரும்பும்
> கலைகள். பணி.
>
> அவர்களின் விருப்பங்களுக்கு நாம் எந்த வகையில் எல்லாம் உறுதுணையாய் நிற்க
> இயலுமோ அதை செய்வது மட்டும் தான் நாம் செய்ய வேண்டியதே அன்றி நம் திணிப்புகளை
> அல்ல.
>
> எத்தனையோ மருத்துவர்களின் வாரிசுகள் மருத்துவம் படிக்க விரும்பாத போதும்
> நீட்டுக்கு படி ஆட்டுக்கு படி என்று கொன்று கொலையெடுக்கும் மருத்துவ பெற்றோர்
> உண்டு.
>
> நான் ஆஸ்பத்திரி கட்டிட்டேன். அதை பார்த்துக்க நீ மருத்துவம் படிப்பது
> மட்டும் தான் உனக்கான ஒரே ஆப்ஷன்..
>
> அடேய்களா. உங்க காலத்துக்கு பிறகு அந்த ஆஸ்பத்திரியை நல்ல விலைக்கு
> வித்துட்டு போங்க. வேற யாருக்காவது கைமாத்தி விட்டுட்டு போங்க.
>
> நீங்க ஆஸ்பிட்டல் கட்டி விட்டதற்காகவே உங்கள் வாரிசுகளை மருத்துவம் படிக்க
> நிர்பந்திப்பது எவ்ளோ பெரிய வன்முறை. மருத்துவ கல்லூரிகளில் நடக்கும்
> தற்...கொலை..
>
> நீட் ஐஐடி கோச்சிங் தங்களால் முடியல என்று கடிதம் எழுதி வெச்சிட்டு
> மரணிக்கும் மாணவர்களின் கடிதங்களின் இறுதியில் இருக்கும் வாசகங்கள் எல்லாம்
> அப்பா என்னை மன்னிச்சிடுங்க அம்மா என்னை மன்னிச்சிடுங்க உங்க ஆசையை நிறைவேற்ற
> முடியல என்பதான கடிதங்களே பெரும்பான்மை.
>
> மருத்துவம் மட்டுமல்ல. எல்லா துறை சார்ந்த பெற்றோர்களிடமும் இந்த அழுத்தம்
> பரவலாக இருக்கிறது.
>
> இது தேவையற்றது. வாரிசுகள் உங்கள் தொழிலை விரும்பி வருவது வேறு. நீங்களாய்
> திணிப்பது வேறு..
>
> சமூக அழுத்தங்களை புறக்கணிக்க பழகணும். இன்னமும் சொந்தமா வீடு வாங்கலியா
> காரில்லையா சொத்து வாங்கலியா தொடங்கி சமூகமும் குடும்பமும் தரும் புற
> அழுத்தங்களால் வாழ்வை தொலைத்தவர்கள் ஏராளம்.
>
> வேறு வழியின்றி சமூகத்திடம் தன்னை நிரூபிக்க கடன்களில் இஎம்ஐகளில் விழுந்தவன்
> ஏராளம். ஊர்லயே பெரிய வீடு எல்லாரும் பெருமையா பேசணும் என்பதற்காகவே
> வீம்புக்கு கடன் வாங்கி வீணாப்போனவர்கள் ஏராளம். எத்தனை மன அழுத்தங்கள்..
>
> மக்கா..இங்கே எவனுக்கும் நம்மை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. நம்
> ஆயுசு எத்தனை வருசம்னு யாருக்கும் தெரியாது.
>
> எனக்கான வாழ்வை எனக்கு பிடித்த மாதிரியான எளிமையான வாழ்வை நான் வாழ்ந்துட்டு
> போறேன். சாதனை செய்யும் வாய்ப்பு கிடைச்சவன் செய்யட்டும்.
>
> எல்லா பயலும் சாதிச்சே ஆகணும்னா பெத்து விட்டிருக்காங்க? நமக்கு அடிப்படை
> தேவை என்பது ஒரு நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை மட்டும் தான்.
>
> அதற்காக உழைக்க வேண்டும் தான். அது நாமாக விரும்பி செய்தாக வேண்டிய ஒன்று.
>
> ஆனால் இந்த தேவையற்ற அதீத புற அழுத்தங்களும் இந்த சமூகத்திடம் நம்மை
> நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயங்களை மண்டைகளுக்குள் ஏற்ற வேண்டியதும்
> இல்லை..நாம் நம்மை நிரூபிப்பதற்காகவே உலகத்தில் படைக்கப் பட்டவர்கள் அல்ல.
>
> வாரிசுகளிடம் உங்கள் எண்ணங்களை திணிக்காதீர்கள். அவர்கள் வாழ்க்கையை வாழ
> விடுங்கள்.
>
> சந்தோஷ் சுப்ரமணியம் நண்பன் போன்ற திரைப்பட கதைகள் எல்லாம் பார்த்தும்
> புரிந்தும் அதன் நியாயங்களை நாம் உணர்கிறோமா? நம் குழந்தைகளிடம் திணிக்காமல்
> இருக்கிறோமா?
>
> மருத்துவர்.கிங்ஸ்டன் மானுவேல்.நெல்லை
> Yahoo Mail: Search, Organize, Conquer
> <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer>
>
> --
> On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust
>
> We are now on Telegram Mobile App also, please join
>
> Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup
>
> Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust
>
> Kerala Iyers Trust Group for Discussions:
> https://t.me/KeralaIyersTrustGroup
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "KeralaIyers" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/keralaiyers/672170885.2124073.1743070576405%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/keralaiyers/672170885.2124073.1743070576405%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooBcrMKpdLVo4rYuQ2jxOpei%3DjU7LKiHtC299LtJpvrrQ%40mail.gmail.com.

Reply via email to