பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.   (௫௰௪ - 54)

Pennin Perundhakka Yaavula Karpennum

Thinmaiun Taakap Perin

What more grandeur does a woman need Than possessing the strength of
chastity?

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட
பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? (௫௰௪)     KR    IRS 28325

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Fri, 28 Mar 2025 at 06:10
Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam - Thaarai, Vaali's Consort (7)
To:




இராமாயணம் - தாரையின் ஆளுமை (7) - நீர் எலாம் அயல் நீங்குமின்

*தமிழ்நாயகம் *

சீதையைத் தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன், சொன்ன சொல்லை மறந்து,
போதையில் மிதந்தான். அதனால் கோபம் கொண்ட இராமன், இலக்குவனை அனுப்பினான்.இலக்குவன்
மிகுந்த கோபத்தோடு வருகிறான். கோட்டை மதிலை கற்களை கொண்டு குரங்குகள் அடைத்தன.
இலக்குவன், அவற்றை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு வருகிறான்.

என்ன செய்வது என்று எல்லோரும் திகைத்து நின்றனர். அப்போது, அனுமன் "தாரை அவன்
முன் சென்று நின்றால், அவன் கோபம் மாறும் " என்றான்.

அதைக் கேட்ட தாரை "நீங்க எல்லாம் விலகுங்கள். நான் போய் இலக்குவனை சந்தித்து
அவன் மன நிலை என்ன என்று அறிந்து வருகிறேன் " என்று கிளம்பினாள் . அவளுக்கு
வழி விட்டு எல்லோரும் விலகி நின்றனர்.

ஒரு அரசியல் திருப்பத்திற்கு, தாரை வழி வகுக்கிறாள். இத்தனை ஆண்பிள்ளைகள்
இருந்தும் ஒன்றும் பயன் இல்லை என்று உணர்ந்து கொண்டாள் . தானே நேரில்
சென்றால்தான், இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று முடிவு செய்து, "நீங்க
எல்லோரும் தள்ளுங்கள்..நான் போகிறேன் " என்று கிளம்புகிறாள்.

ஒரு பெண்ணின் தைரியம், அவளின் தன்னம்பிக்கை, ஆளுமை வியக்க வைக்க வைக்கிறது.

பாடல்

'நீர் எலாம், அயல் நீங்குமின்;நேர்ந்து, யான்,
வீரன் உள்ளம் வினவுவல்' என்றலும்,
பேர நின்றனர், யாவரும்;பேர்கலாத்
தாரை சென்றனள், தாழ் குழலாரொடும்.

பொருள்: தாரை, "நீங்கள் எல்லாம் (அனுமன், அங்கதன் எல்லோரும்)  நீங்கிப்
போங்கள்;  நான் சென்று  வீரனாகிய இலக்குவனின் உள்ளத்தை விசாரிக்கிறேன்"
என்றதும்  எல்லோரும் விலகி நின்றனர்.  நல்ல நெறிகளில் இருந்து பெயராத, விலகாத
தாரை  தன் தோழியரோடு சென்றாள்.

யோசித்துப் பார்ப்போம். தன் கணவனை, இராமனின் துணையோடு, வஞ்சகமாகக் கொன்றவன்
சுக்ரீவன்.அவனுக்கு ஒரு சிக்கல் வந்திருக்கிறது. தாரை நினைத்திருந்தால் "நல்லா
வேண்டும்...என் கணவனைக்  கொன்றவன் இப்போது  வகையாக மாட்டிக் கொண்டான்.
இலக்குவன் அவனைக் கொல்லட்டும், என் மகனுக்கு ஒரு வேளை ஆட்சி கிடைக்கலாம் "
என்று நினைத்து இருக்கலாம்.

கணவனைக் கொன்றவன் மேலும் கருணை. கணவனைக் கொன்றது மட்டும் அல்ல, மகனுக்கு ஆட்சி
கிடைக்காமல் செய்தவன். அப்படிப் பட்ட சுக்ரீவன் மேலும் கருணை கொள்கிறாள்
தாரை. மேலும்
உயிர் சேதம் விளைவதை அவள் விரும்பவில்லை. குடும்பச் சண்டையில்  மற்றவர்கள்
பாதிக்கப்படக் கூடாது என்று நினைக்கிறாள். பிரச்சனையைத் தீர்க்கத் தானே
முனைகிறாள்.

அவளின் பெரிய மனதை நாம் கண்டு வியக்கிறோம். இப்படிப்பட்ட பெண்கள்
இருந்திருக்கிறார்கள் இந்த மண்ணில். வீரமும், அறிவும்,  விவேகமும்,பரந்த
மனமும், கருணையும் கலந்து அற்புதப் பிறவிகளாக இருந்திருக்கிறார்கள்.

வருங்காலப் பெண்களுக்கு ஒரு உதாரணமாகத் தாரையைப் படைக்கிறான் கம்பன்.

*தமிழ்நாயகம் *
***************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoq4xHYkOWNoY-FNdWjosO9DeBfPMuBwDq0FCbe9c3hxuA%40mail.gmail.com.

Reply via email to