---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Tue, Apr 15, 2025, 1:05 PM
Subject: Re: Indhira Priyadarshini - ஒலி
To: Chittanandam V R <[email protected]>
Cc: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar <
[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>, Mathangi
K. Kumar <[email protected]>, Srinivasan Sridharan <
[email protected]>, Rama (Iyer 123 Group) <[email protected]>,
Mani APS <[email protected]>


Thanks, made nice reading.

Sound - Oli, has a profound influence on us and good music (sound) elevates
our thinking and helps us to relax.  Vedas are taught, not by reading but
by listening to what and how the Guru recites the mantras - to the
Pronunciation and sound. The vibrations of the Vedic Chanting is auspicious
and even today so many of us play it even if we don't understand their
meaning. They have a soothing effect.

I remember the opening scene in the Tamizh film Thillana Mohanambal where
Sivaji, (playing the role of a Nadaswara Vidwan) stops his recital saying
the sound of the crackers have disturbed his and the audience's
concentration BUT Padmini counters him saying there is music in all forms
of sound, irrespective what they are, IF ONLY one cares to appreciate them
and lists those forms of sound. ( that dialogue is one of the many I
enjoyed listening to, in that film) Such is the power of Sound.

Saint Thiruvalluvar has said so in a Kural - Selevathul Selvam SEVI Selvam
Achselvam Selvathul Ellam Thalai.

Yes, he meant primarily to listening to words of wisdom but listening to
mantras, slokas, music all elevate us.

N Sekar


On Tuesday, April 15, 2025 at 04:57:28 AM GMT+4, Chittanandam V R <
[email protected]> wrote:




*இயற்கை ஒலி*

*இந்திரா ப்ரியதர்ஷிணி *

இயற்கையும் இறையும் ஒன்றே. 'ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' அப்பர் சுவாமிகள்
தேவாரம். கர்நாடக இசைப் பரம்பரையில் ஸ்ரீ வேங்கடமஹி அவர்கள் எழுபத்திரண்டு
மேளகர்த்தா ராகங்களை வரிசைப்படுத்தியதன் அடிப்படை இயற்கையில் எழும் சப்தம்
ஒலியாகும் என்று  எங்கோ வாசித்திருக்கிறேன். பல தேவ மந்திர சப்தங்களும் இயற்கை
ஒலிகளின் அடிப்படையே.  தக்ஷன் ஆட்டுருவில் ஜபித்தது சமகம். எனவே  மே என்ற
விகுதி என்று யாரோ பெரியவர் சொல்லித் தந்தார்கள். இந்த தக்ஷன் தலையைக் கொய்த
தலம் திருப்பறியலூர். இது ஆரூர் அருகே உள்ளது. அட்ட வீரட்டானத் தலம்.  அழகான
ஒரு உத்ஸவ மூர்த்தி. சென்று வணங்கத் தவறாதீர்கள்.

சப்தம் அல்லது ஒலி. பாரதியிடம் இந்த ஒலி குறித்து நிறையப் பாடல்கள் உண்டு.
பாடி நகர்ந்து வரும் நதிகள் என்பான். அதெப்படி நதி பாடும், நகர்ந்து
வரும்? நதிகளில் பலவிதம் உண்டு. ஒரே நதி பல அவதாரமும் ஒலியும் எழுப்பும்.
ஹொகேனக்கல் காவேரியும் மாயனூர் அகண்ட காவேரியும் வேறு வேறு ஒலி. சிருங்கேரி
துங்கா வேறு ஒலி. ரிஷிகேஷ் கங்கை, ஹரித்வார் கங்கை, காசி கங்கை வேறு வேறு
ரகம். கோதாவரி பீமா சங்கரம் மற்றும் பத்ராசலத்தில் வேறு அவதாரம். நதியின்
இயல்பான ஒலி மலையில் கற்களை உருட்டி வருகையில் ஒரு ஜூகல்பந்தி. "கல் பொருது
மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல்" ஆர்ப்பரிப்பு ஆரவாரம்.
இதில் மர இலைகள் விழுந்தால் இன்னும் ஒரு சலசலப்பு  ஸிம்ஃபனி. இரண்டு மர இலைகள்
எழுப்பும் சப்தம் வேறு வேறு. பனையோலை. தென்னை ஓலை. அரச இலை எல்லாம் தமக்குள்ளே
ஒரு தனித்த சப்தம் வைத்துள்ளன.

இதில் பறவைகள் விலங்குகள் ஏன் பூச்சிகள் சேர்ந்தால் வேறு வேறு ஒலிகள்.
பூச்சிகள் உலகின் 90 சதவீத உயிரினமாம். சுவர்க்கோழி என்று
கேட்டிருக்கிறீர்களா? குழியானை தெரியுமா? எல்லாமே ஒலி எழுப்பும். ஒரு உஸ்
புஸ்ஸாவது உண்டு. நமக்குத் தெரிந்த கிளிக் கொஞ்சல், குயில் குலாவுதல், கோழி
கூவல், புறா மூளல் அப்புறம் குருவி மைனா எல்லாம் ஒலி எழுப்புகின்றன. அது
இயற்கையின் சித்ர சபை.

பாரதியின் வசன கவிதை வாசித்தால் தெரியும். எங்கள் வீட்டின் அருகே அழகான ஒரு
சூழல். தென்னை சலசலப்பு. காக்கத் தம்புராட்டி ஒலி. குயில் கூவல். கிளிக்
கொஞ்சல். அணில் சலசலப்பு. காலை நேரம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். மேலே
பறக்கும் கருடன் பருந்து எல்லாம் காணலாம். பெரிய பறம்பு அதில் உடும்பு உண்டு.
அடுத்த நீர்நிலையில் மீன்கள் உண்டு.
"ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே கானாமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா!
காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில் பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்
மிசை இல்லையடா!" பாரதியும் பாட்டும் குயிலும் சோலையும் அழகானவை.

*-- இந்திரா ப்ரியதர்ஷிணி *
******************************************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Ze%3DnhetMX5%2BpRi%3DnwqvGy%2Bd05xP-fAB7fVyMXAyshmWEA%40mail.gmail.com.

Reply via email to