Anger management in B G

These verses do explain how to do it.

1        duḥkheṣv and vigna-manāḥ

sukheṣu vigata-spṛhaḥ

vīta-rāga-bhaya-krodhaḥ

sthita-dhīr munir ucyate 2 56

One who is not disturbed in mind even amidst the threefold miseries or
elated when there is happiness, and who is free from attachment, fear and
anger, is called a sage of steady mind.

2      kāma-krodha-vimuktānāṁ

yatīnāṁ yata-cetasām

abhito brahma-nirvāṇaṁ

vartate viditātmanām  5 2

Those who are free from anger and all material desires, who are self-realized,
self-disciplined and constantly endeavoring for perfection, are assured of
liberation in the Supreme in the very near future.

3      ahiṁsā satyam akrodhas

tyāgaḥ śāntir apaiśunam

dayā bhūteṣv aloluptvaṁ

mārdavaṁ hrīr acāpalam   16 1-3

The Supreme Personality of Godhead said: Fearlessness; purification of
one’s existence; cultivation of spiritual knowledge; charity; self-control;
performance of sacrifice; study of the Vedas; austerity; simplicity;
nonviolence; truthfulness; freedom from anger; renunciation; tranquillity;
aversion to faultfinding; compassion for all living entities; freedom from
covetousness; gentleness; modesty; steady determination; vigor;
forgiveness; fortitude; cleanliness; and freedom from envy and from the
passion for honor – these transcendental qualities, O son of Bharata,
belong to godly men endowed with divine nature.

4       tri-vidhaṁ narakasyedaṁ

dvāraṁ nāśanam ātmanaḥ

kāmaḥ krodhas tathā lobhas

tasmād etat trayaṁ tyajet

There are three gates leading to this hell – lust, anger and greed. Every
sane man should give these up, for they lead to the degradation of the
soul.  16  21

5       krodhād bhavati sammohaḥ

sammohāt smṛti-vibhramaḥ

smṛti-bhraṁśād buddhi-nāśo

buddhi-nāśāt praṇaśyati  2  63

From anger, complete delusion arises, and from delusion bewilderment of
memory. When memory is bewildered, intelligence is lost, and when
intelligence is lost one falls down again into the material pool.

SIMPLE ANGER MANAGEMENT THEORY

K RAJARAM IRS 13525

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Mon, 12 May 2025 at 21:01
Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam - Rama and Bharatha
To:





இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் (4) - கோபத்தை எப்படிக்  கையாள்வது?

*தமிழ்நாயகம் *

நமக்குப் பிடித்தவர்கள், வேண்டியவர்கள் கோபம் கொண்டால் அதை எப்படிக்
கையாள்வது? அவர்கள் கோபம், அவர்களுக்கு சரி என்று படும். அவர்களோடு விவாதம்
செய்ய ஆரம்பித்தால் அவர்கள் கோபம் இன்னும் கூடும். தங்கள் கோபத்திற்கு ஞாயம்
கற்பிப்பார்கள். அவர்கள் எப்படி சரி, மற்றவர்கள் எப்படி தவறு என்று குரல்
மேலும் கூடும்.

சரி, அப்படியே விட்டு விடுவதா என்றால் அதுவும் சரி இல்லை. சரி, அதுவும்
வேண்டாம், பதிலுக்கு நாமும் கோபப்படலாமா என்றால் இரண்டு பக்கமும் கோபம்
என்றால் ஒன்றும் சரி ஆகாது. பின் என்னதான் செய்வது ?
கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ, உடன் வேலை செய்பவர்களோ கோபம் கொண்டால் என்ன
செய்வது ?

என்ன செய்வது என்று நேரடியாகச் சொல்லாமல், இராமன் என்ன செய்தான் என்று கம்பன்
காட்டுகிறான். அதிலிருந்து நாம் ஏதாவது பாடம் படித்துக் கொள்ளலாம் என்று.

இராமனைத் தேடி பரதன் கானகம் வருகிறான். இராமனைக் கண்டு , அரசை அவனிடம்
மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பது பரதனின் எண்ணம். தூரத்தில் பரதன்
சேனைகளோடு வருவதைக் கண்ட இலக்குவன், தங்கள் மேல் பரதன் படை எடுத்து வருவதாக
எண்ணிக் கொண்டு சண்டைக்குத் தயாராகுகிறான். "இராமா, இந்தப் பரதனையும் அவன்
படைகளையும் வென்று அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டுகிறேன் பார் " என்று
ஆற்றொணாக் கோபத்தோடு கிளம்புகிறான். நீண்ட வீர வசனம் பேசுகிறான். கோபத்தின்
உச்சியில் நின்று எரிமலையாக வெடிக்கிறான்.

அப்போது இராமன், சாந்தமாகச் சொல்கிறான்

"இலக்குவா, இந்த ஈரேழ் உலகத்தையும் அழிப்பது என்று நீ முடிவு செய்துவிட்டால்
அதை யாரால் நிறுத்த முடியும். இருந்தாலும், உனக்கு ஒன்று சொல்ல வேண்டும்.
கேட்பாயா?" என்று சொன்னான்.

பாடல்




*“இலக்குவ! உலகம் ஓர் ஏழும், ஏழும், நீ,“கலக்குவென்” என்பது கருதினால்
அது,விலக்குவது அரிது; அது விளம்பல் வேண்டுமோ? -புலக்கு உரித்து ஒரு பொருள்,
புகலக் கேட்டியால்.*


பொருள்:  இலக்குவனே!  ஈரேழு உலகத்தையும்  நீ  கலக்குவேன் என்று நினைத்து
விட்டால்  அதை நிறுத்துவது என்பது கடினம்;  அது பற்றி சொல்லவும் வேண்டுமா?
அறிவுக்கு  உரிய ஒரு பொருள்  சொல்கிறேன், கேட்பாயா?

இலக்குவன் கோபத்தை இராமன் எப்படி மாற்றுகிறான் ?

முதலில், அவன் திறமையை, ஆற்றலை மதித்து பேசுகிறான். யாராவது கோபம் கொண்டு
 பேசினால் , முதலில் அவர்களை மட்டம் தட்டி பேசக் கூடாது. "ஆமா, கிழிச்சீங்க,
உங்கள பத்தி தெரியாதா?" என்று ஆரம்பித்தால் வீம்புக்காக வேணும் எதையாவது
செய்து வைப்பார்கள். முதலில் கோபம் கொண்டவர்களைக் குளிர்விக்க வேண்டும்.

இராமன் சொல்கிறான், "நீ நெனச்சா பதினாலு உலகத்தையும் கலக்கிருவ" என்று
சொன்னவுடன் இலக்குவனுக்கு கொஞ்சம் பெருமையும், தான் கொண்ட கோபம் வெட்டிக்
கோபம் இல்லை, செயல்படுத்த முடியும் என்றும் தோன்றும்.

கோபம் கொண்டவர்களின் நல்ல குணங்களை முதலில் சொல்ல வேண்டும். "உங்களுக்கு கோபமே
வராதே...என்ன ஆச்சு இன்னிக்கு " என்று ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் கொஞ்சம்
கோபம் தணிந்தவுடன் மேற்கொண்டு சொல்ல வேண்டும். கோபத்திற்கு, கோபம் பதில் இல்லை.

சரி, நீ சொன்ன மாதிரியே இவனுகள ஒரு கலக்கு கலக்கிட்டு வர்றேன் அப்படின்னு
கிளம்பிட்டா என்ன பண்றது? அடுத்து இராமன் சொல்கிறான், "அறிவுக்கு உகந்த ஒன்றை
சொல்கிறேன். கேட்பாயா?" என்கிறான்.

கேட்க மாட்டேன் என்று சொன்னால், தனக்கு அறிவு இல்லை என்று ஆகிவிடும்.
கேட்டுத்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு கேள்வியைப்  போடுகிறான் இராமன்.

நமக்கு எப்படி அறிவு வளர்கிறது? படித்து, வாசித்து (கண்), ஆசிரியரும்
மற்றவர்களும் சொல்வதைக் கேட்டு (காது), தொட்டு உணர்ந்து (தோல்), முகர்ந்து
பார்த்து (மூக்கு), வாயில் போட்டு பார்த்து  (நாக்கு), சிந்தித்து (மனம்) என்ற
இந்த ஆறு புலன்கள் வழியாக அறிவு நமக்குள் வருகிறது.
அறிவை வளர்ப்பது புலன்கள்.

புலக்கு என்றால் அறிவுக்கு என்று பொருள். 'கள்ள புலக்குரம்பை கட்டழிக்க
வல்லானே' என்பார் மணிவாசகர்.

ஏதோ அறிவு பூர்வமான விஷயம் சொல்லப் போகிறான் இராமன் என்று கேட்கத்
தொடங்குகிறான் இலக்குவன்.

அவன் என்ன கேட்டான் என்று மேலும் பார்ப்போம்.

*-- தமிழ்நாயகம் *
***************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqz11x-4pqCwCsvhGMB%2BaP2AZyw2uYhgxUaySKMHOed-A%40mail.gmail.com.

Reply via email to