Beautiful

On Fri, May 16, 2025, 12:22 Rajaram Krishnamurthy <[email protected]>
wrote:

> Can any one in the groups may not write otherwise their mother grandma and
> wife and daughter also as the 4th? KR  IRS  16525
>
> ---------- Forwarded message ---------
> From: Chittanandam V R <[email protected]>
> Date: Fri, 16 May 2025 at 10:51
> Subject: Fwd: Sujatha - The three women in my life
> To:
>
>
>
>
>
> *சுவாரஸ்யமான கட்டுரை *
>
>
> *மூன்று பெண்கள் - சுஜாதா*
>
> * 1. என் பாட்டி*
>
> *என் வாழ்வில் முக்கியமான மூன்று பெண்களை பற்றி யோசிக்கத் தோன்றுகிறது. பள்ளி
> கல்லூரி நாட்களில் 10 வருடம் ஸ்ரீரங்கத்தில் பாட்டியுடன் கட்டுப்பாடாக
> வளர்ந்தவன் நான். அப்பாவை பணி நிமித்தம் அடிக்கடி மாற்றுவார்கள் என்று சொல்லி
> படிப்பின் தொடர்ச்சிக்காக பாட்டியிடம் அனுப்பப்பட்டேன். இது ஒரு லேசான
> காரணம்தான். **அப்பாவுக்கு அடிக்கடி மாற்றம் ஏற்படவில்லை. என் தம்பி
> பெரும்பாலும் அவர்களுடன்தான் இருந்தான். படித்தான். பாட்டியின் கவனத்துடன்
> வளர்ந்தது ஒருவாறு என் பிற்கால மனோ நிலைகளையும், குணநலன்களையும் அமைத்தது
> என்பதில் சந்தேகம் இல்லை.*
>
> *கோதையம்மாள் என்கிற ருக்மணி அம்மாள் என்று மணியார்டர் பாரத்தில்
> கையெழுத்துப் போடத் தெரிந்த பாட்டி, இருபத்தி மூன்றாவது வயதில் கணவனை
> இழந்தவள். நான்கு குழந்தைகளுடன் தன் அப்பா வீட்டில் சரணடைந்தாள். அவர்களை
> வளர்த்து ஆளாக்கி ஒரு தலைமுறையை உருவாக்கி அடுத்த தலைமுறையான பேரப்பிள்ளைகளை
> காலேஜ் போகும் வயதுவரை பார்த்தவள். *
>
> *வாழ்வில் பல சந்தோஷங்கள் சீக்கிரமே மறுக்கப்பட்டதால் நிச்சயம் ஒரு தனிப்பட்ட
> கோபம் அவரிடம் இருந்தது, வெறுப்பு இல்லை. பாசமும் கண்டிப்பும் இருந்தது. என்
> சினேகிதர்களில் யார் பாடம் படிக்க வருகிறார்கள், யார் கதை பேச என்பதை சுலபமாக
> கண்டுபிடித்து விடுவாள். அடுத்த அறையில் நான் பாடம் படிக்கிறேனா, கதை
> படிக்கிறேனா என்பதை கண்டுபிடிக்கும் 'டெலிபதி’ இருந்தது.*
>
> *“பாடம் படித்தால் இரைந்து, சத்தம்போட்டு படி. அப்போதுதான் மூளையில் ஏறும்"
> என்பாள். சாயங்காலம் காலேஜிலிருந்து திரும்பி வர லேட் என்றால் என்னதான்
> பிராக்டிகல் இருந்தது, வாலிபால் ஆடப்போறேன், நோட்ஸ் எடுக்க போனேன் என்று சில
> சமயம் உண்மையான காரணங்களைச் சொன்னாலும் சினிமாவுக்குத்தான் போயிருக்கிறேன்
> என்ற தீர்மானமான முடிவுக்கு வருவார். *
>
> *அதற்காக சில ஒற்றர்களையும் நியமித்திருந்தாள். “ கண்ணா, எங்க ரெங்கராஜனை
> காலேஜில் பார்த்தாயா?”*
>
> *“ இன்னும் வரவில்லையா?”*
>
> *“ ஏதாவது ஸ்பெஷல் கிளாஸா?”*
>
> *“இல்லையே மாமி, அவனையும், தம்புவையும் கெய்ட்டி தியேட்டர் பக்கம் பார்த்த
> மாதிரி இருந்தது. ஒரு வேளை அங்க பஸ் சுலபமா கிடைக்கும்னு....."*
>
> *"வரட்டும் அவன்"*
>
> *வரும்போது பாட்டி பார்க்கும் பார்வையிலிருந்தே தெரிந்துகொண்டு உண்மையைக்
> கக்கிவிடுவேன். அதுதான் ஒரே வழி. இல்லையென்றால், "உங்கப்பனுக்கு இந்த க்ஷணம்
> கடுதாசி எழுதிடறேன். உன்னை என்னால வளர்க்க முடியாது. தத்தாரி ஆயிட்டே"...
> இத்யாதி அர்ச்சனைகள். பிரபந்தம் படிப்பாள். அர்த்தம் புரியாத விசிஷ்டாத்வைத
> காலட்சேபங்களில் போய் உட்கார்ந்து கொள்வாள். *
>
> *இந்த சூழ்நிலையில் எப்படி என்னால் காதல், கண்ணால் பேசுதல் போன்ற மென்மையான
> சமாச்சாரங்கள் முடியும்? பாட்டி தன்னுடைய அறுபத்தியிரண்டாவது வயதில் இறந்து
> போனபோது எத்தனை தூரம் என்னைக் காப்பாற்றியிருக்கிறாள் என்பதை நினைத்துப்
> பார்க்கிறேன். ஒரு பெரிய சொத்துக்கு என்னை சுவீகாரம் தருவதை கடுமையாக
> எதிர்த்துத் தடுத்திருக்கிறாள். அந்த சுவீகாரம் நடந்திருந்தால் நான்.. *
>
> *மஹேந்திரமங்கலத்திலோ, குவளைக்குடியிலோ ஒரு பண்ணையாராக வெள்ளிச் சொம்பும்,
> பன்னீர்ப் புகையிலையும், பத்தமடைப் பாயும், இஸ்பேட் ஆட்டமுமாக
> வளர்ந்திருப்பேன். எழுத்தாளனாகியிருப்பேனா? சந்தேகம்!*
>
> *********************
>
> *2.  அடுத்தது என் அம்மா*
>
> *பலபேர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். “உன் அப்பாவைப் பற்றி நிறைய
> எழுதியிருக்கிறாய். உன் அம்மாவைப் பற்றி அதிகம் எழுதவில்லையே?” என்று. அம்மா
> மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்து பரிபூரணமாக தன்னை அப்பாவின்
> தேவைகளுக்கும் பிடிவாதங்களுக்கும் (இனிமேல் பட்டுப்புடவை கூடாது. கதர்தான்)
> அட்ஜெஸ்ட் செய்து கொண்டாள்.  *
>
> *அவள் மிக அழகாக இருந்ததும், அதனால் அவளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளும் எனக்கு
> அந்தரங்கமானவை. அம்மா மிக நன்றாக சமைப்பாள். எல்லா காரியங்களும் திறமையாக
> செய்வாள். தையல் ( எனக்கு சட்டை கூட தைத்திருக்கிறாள். லீவு நாட்களில் மட்டும்
> போட்டுக் கொள்வேன்) எம்பிராய்டரி, கூடை பின்னுவது எல்லாம் கொஞ்சம் செய்வாள். *
>
> *ஊட்டியில் எங்கள் வீட்டு எருமையிடம் பால் கறந்து இருக்கிறாள். ‘ நில்லுடா’
> என்று சொல்லி என் அருகில் இருந்த பாம்பை அடித்து இருக்கிறாள் ( சாகடித்து
> சம்ஸ்காரம் பண்ணினாள்). வீணை வாசிப்பாள். ஒரு தடவை அவளிடம் இங்க் பேனா திறக்க
> கொடுத்தபோது எந்தப் பக்கம் திருகுவது என்று தெரியாமல் நாக்கைக்
> கடித்துக்கொண்டு அதை டைட் செய்தே திறந்து விட்டாள்.*
>
> *சின்ன வயசிலேயே கல்யாணம் செய்து கொண்டு விட்டதால் பள்ளிக்கூடப் படிப்பு
> அதிகம் இல்லை. தமிழில் கவிதை கலந்த ர, ற தப்புகளுடன் கடிதம் எழுதுவாள்.
> ஆங்கிலம் கற்றுக்கொள்ள ரொம்ப ஆசைப்பட்டாள். என்னை அடிக்கடி கேட்டுக்
> கொண்டிருந்தாள். லிப்கோ ஆசானை வைத்துக்கொண்டு அப்பாவிடமும், தம்பியிடம்,
> என்னிடமும் சொல்லித் தா என்று கெஞ்சி இருக்கிறாள். *
>
> *“ போம்மா…. உனக்கு வராது” என்று வெத்து அவசரங்களில் அந்த இன்பத்தை இழந்து
> விட்டோம். சொல்லித் தரலாம் என்று தீர்மானித்தபோது இறந்து விட்டாள். இப்போதும்
> சில நாள் கனவுகளில் சொல்லித் தருகிறேன்.*
>
> *******************
>
> *மூன்றாவது என் மனைவி சுஜாதா*
>
> *எங்கள் கல்யாணம் நிகழ்ந்து 37 வருடங்கள் ஆகின்றன. இன்னும் அவளை முழுமையாக
> புரிந்து கொண்டதாக சொல்ல முடியாது. அவ்வப்போது வியப்பாக ஏதாவது செய்வாள். இந்த
> கணந்தோறும் வியப்புதான் திருமண வாழ்க்கையில் எங்களுடன் வளர்ந்தது. டெல்லியில்
> கல்யாணமான புதிதில் அவளை எதிர் கடைக்குப் போய் ஒரு பல்பு வாங்கி வரச்
> சொன்னேன். *
>
> *நான் என் ரூமில் உட்கார்ந்து கொண்டு க்ராஸ்வேர்டு போட்டுக் கொண்டிருந்தேன்.
> அவள் மாடிப்படி ஏறி வரும் போது கால் தடுக்கி அதை உடைத்து விட்டாள்.
> உடைத்துவிட்டு ஓடிவந்து என்னிடம் மூச்சிரைக்க சொன்னாள், “ பல்பை
> உடைச்சுட்டேன். கொடுத்த காசு வேஸ்ட்”*
>
> *நான் “ போனால் போகிறது, வேறு பல்பு வாங்கிக் கொள்ளலாம்” என்றேன்.*
>
> *இந்த பதில் அவளை பாதித்திருக்க வேண்டும். கண்களில் கண்ணீருடன், “அதெப்படி
> உங்களுக்கு இப்படி ஒரு அலட்சியம்?” என்றாள்.*
>
> *“ ஏன்?”*
>
> *"பல்பை நான் உடைச்சதுக்கு ஏன் என்னைத் திட்டலை?"*
>
> *இப்படி ஒரு கோபமா?*
>
> *வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்*
> *யாருள்ளித் தும்மினீர் என்று.*
>
> *(நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும்
> நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு கோபித்து
> அழுதாள் - சுஜாதா எழுதிய திருக்குறள் உரை)*
>
> *என்கிற திருக்குறள்தான் ஞாபகத்துக்கு வந்தது.*
>
> *நன்றி : மதுரை கிருஷ்ணன் *
>
> ******************
>
> *சித்தானந்தம்*
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqZY-xekSvOjS894JwtKX6FRwZnk65NKVCqW%3D-8N%3D4Agw%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqZY-xekSvOjS894JwtKX6FRwZnk65NKVCqW%3D-8N%3D4Agw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJiWWoK6JHfrVR91PgeYFQv%3DJfh-nwDk3FA%2B9uPnXa5LRj85Jg%40mail.gmail.com.

Reply via email to