ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்-பரா சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி -ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
கணபதி ராயன்-அவனிரு காலைப் பிடித் திடுவோம்; குண முயர்ந் திடவே-விடுதலை கூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) சொல்லுக் கடங்காவே-பரா சக்தி சூரத் தனங்க ளெல்லாம்; வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி வாழியென்றேதுதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) வெற்றி வடிவேலன்-அவனுடை வீரத்தினைப் புகழ்வோம் சுற்றி நில்லாதே போ!-பகையே! துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) தாமரைப் பூவினிலே-சுருதியைத் தனியிருந் துரைப்பாள் பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப் புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) பாம்புத் தலைமேலே-நடஞ் செயும் பாதத்தினைப் புகழ்வோம்; மாம்பழ வாயினிலே-குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு சிந்தனை செய்திடுவோம்; செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி திக்க னைத்தும் பரவும். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) K Rajaram IRS 20525 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorZrRAczDFqFBtJOHmYJqFvn07DSyWExxu9PZTor8DUjQ%40mail.gmail.com.
