---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Mon, Jun 2, 2025, 9:39 PM
Subject: Fwd - SujathAAA, As usual last line AAAA
To: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar <
[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>,
Chittanandam V. R. <[email protected]>, Srinivasan Sridharan <
[email protected]>, Mathangi K. Kumar <[email protected]>,
Rama (Iyer 123 Group) <[email protected]>, Suryanarayana Ambadipudi <
[email protected]>, Mani APS <[email protected]>



*அந்நியருடன் உரையாடல் - சுஜாதா சிறுகதை ((உண்மையிலேயே ரொம்பச் சின்ன கதை)*

நான்காவது நாளாக அவரைப் பார்க்கிறேன். தினம் மாலை ஆறு மணிக்கு மெர்சிடிஸ்
கார், காந்தி சிலை தாண்டி வந்து நிற்கும். டிரைவர் கதவைத் திறக்க
காத்திருப்பார். மெல்ல வெண்மையான செருப்பணிந்த பாதம் வெளிவரும்; இறங்குவார்.
எப்போதும் வெள்ளை சஃபாரி சூட், கழுத்தை மூடும் ஸ்கார் ஃப், வெயில் கண்ணாடி.

அவருக்கு வயது சொல்ல முடியவில்லை. ரோமங்கள் அனைத்தும் துறந்த வழுக்கைத் தலை.
அவருக்கு அழகாகவே இருந்தது. தங்க ஃபிரேம் கண்ணாடி, வெள்ளை வெளேர் கைக்குட்டை,
நடை பயில கம்பீரமான பழுக்காக் கறை வாக்கிங் ஸ்டிக். பார்த்ததும் இளைஞர்கள்
ஒதுங்கி வழிவிடுவார்கள். ட்ராஃபிக் கான்ஸ்டபிள்களில் சிலர் சல்யூட்
அடிப்பார்கள். மந்திரி இல்லை; போலீஸ் அதிகாரியில்லை, பணக்காரர். தோரணை
அதுதான். அந்த நாசுக்கிலும் பளபளப்பிலும் தெரிந்தது.

யாருடன் பேசாமல் நேராக முந்நூற்று முப்பது தப்படிகள் கணக்கிட்டு நடப்பார்
என்று தோன்றியது.

சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து பதினைந்து நிமிஷம் ஓய்வெடுத்துக் கொள்ளுவார்.
கடிகாரத்தைப் பார்ப்பார். அதுதான் அடையாளம். கார் வந்து மௌனமாக நிற்கும்.
டிரைவர் கதவைத் திறந்துவிட , உள்ளே தன்னைச் செலுத்திக் கொள்வார். கார்
புறப்படும். யாருடனும் பேசமாட்டார். இந்த மௌன நாடகம் தினம் நடந்தது. அவர்
உட்கார வரும்போது மெரீனா கடற்கரை பெஞ்ச் கூட 'எந்திரிங்க' என்று என்போன்ற
சாமான்யர்களை அதட்டியதுபோல் தோன்ற மற்றவர் விலகிக்கொள்வார்கள்.

இப்படிப்பட்ட மனிதருடன் எப்படிப் பேச்சுக் கொடுப்பது? மூன்று முறை முயற்சி
செய்து பார்த்தேன். முதலில் சமமாக உட்கார்ந்ததே ஒரு தீரச்செயல். அதனால்
அவருக்குப் புதுசாக சிக்கல் வந்தது. என் பரட்டைத் தலையும் காலில் ரப்பர்
செருப்பும் பொருந்தவில்லை. இருந்தும் பிடிவாதமாக அவரருகில் உட்கார்ந்து
புத்தகம் படித்தேன். அவர் அதை விரும்பவில்லை என்றாலும், இது ஜனநாயக நாடு,
கடற்கரை பெஞ்சுகளில் யாரும் யார் யாரருகிலும் உட்காரலாம். இதெல்லாம்
பொருட்டென்றால் வீட்டிலேயே இருக்க வேண்டும். என்பது அவருக்குத்
தெரிந்திருக்கும். பெஞ்சை மாற்றிப் பார்த்தார். சரிப்படவில்லை. அடுத்த கட்ட
பெஞ்சை மாற்றிப் பார்த்தார். சரிப்படவில்லை. அடுத்த கட்ட பெஞ்சை நாடுவதற்கு
அதிகம் நடக்க வேண்டியிருந்தது. அவரது நாற்பது நிமிஷ நடைக்குத் தோதான இடத்தில்
இருந்து பெஞ்சு பழக்கத்தை மாற்ற விரும்பவில்லை. அதனால் நான் உட்கார்வதை
சகித்துக் கொண்டார்.

ஆட்சேபிக்கவில்லை. என்ன என்னவோ நெற்றிச் சுருக்கங்கள் முகபாவங்கள் செய்து
பார்த்தார். நான் கண்டு கொள்ளவே இல்லை. என் புத்தகத்தைத் தொடர்ந்து படித்தேன்.
ஒரு நாள் சலனம். நாளை இவன் வரமாட்டான் என்று எதிர்பார்த்தார்.

தவறாமல் மறுநாளும் நான் வந்து உட்கார்ந்து அவரைக் கவனிக்காமல் புத்தகத்தில்
ஆழ்ந்தேன். ஒருமுறை அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். மீண்டும் புத்தகம்தான்.

ஒருவாரம் கழித்து அவர் என்னை ஒருவிதத்தில் எதிர்பார்க்கவும் செய்தார்.
இருந்தும் என்னிடம் பேசவில்லை. ஒருமுறை நடை பழகிவிட்டு
உட்கார்ந்திருக்கும்போது, அவருக்காக காத்திருந்த காரின் பின்னால் மற்றொரு கார்
வந்து நின்றது. வெள்ளை சீருடை டிரைவர் வந்து, "அய்யா! அம்மா கூப்பிடறாங்க"
என்றான்.

“இந்த வேளையில் படிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு சொல்லு" என்றார் கடுமையாக
"என்னவாம்?"

"அவசரமா பணம் வேணுமாம்.

"அதான் ஏழெட்டு கார்டு வச்சிருக்காங்களே! ஏடிஎம். பிடிஎம்னு
தொவைச்சுட்டாங்களா?""

“தேடிப் பார்க்கணுமாம்."

"இது என்னய்யா பதில்” என்று என்னைப் பார்த்தார். அவன் மௌனமாக காத்திருக்க
“எவ்வளவு வேணுமாம்'

அவன் காத்திருந்த காருக்குச் சென்று திரும்பினான்.

"முப்பதாயிரம் அய்யா! அவசரம்னாங்க"

"போடா!" என்று அதட்டியது. எங்கள் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது.

"எனி ப்ராப்ளம்?" என்றேன்.

அப்போதுதான் முதன்முறையாக என்னிடம் பேசினார். "என் லைஃபே ப்ராப்ளம்தான்.
பெண்டாட்டி. மகன், மகள் எல்லோருக்கும் என்னைத் தெரியாது. என் பணம் மட்டும்தாக
தெரியும். தட்ஸ் த ப்ராப்ளம்,"

"கொடுத்துருங்களேன்"

“குடுத்துருவேன். டிரைவரை விட்டு கேக்காம நேரா வந்து கேட்டா குடுப்பேன். யூ ஸீ
மை பாயிண்ட்?"

நாள் புன்னகைத்து, "எனக்கு அந்தக் கவலையில்லை. நான் ஓய்ஃப்கிட்டருந்து கடன்
கேட்பேன். காரணம் வர்ற சம்பளம் இருபதாம் தேதி காலி,”

"மற்ற நாள்ல ?"

“பீச்சில காத்து, உப்புக் கடலை" என்றேன்.

"நிம்மதிப்பா, யு ஆர் லக்கி. பாரு எங்கிட்ட பதினஞ்சு வீடு இருக்குது. பினாமியா
கொடைக்கானல்ல பங்களா, ஊட்டில ஒரு பல்களா, ஏற்காட்டில்..."

"வாவ்"

அவர் என்னருகில் வந்து, “கேஷா.. பண்ணை வீட்டில் கேஷா எத்தனை இருக்குங்கறே?"

"நோ ஐடியா. ஐ டோண்ட் கேர்."

"அதனாலதான் சொல்றேன் எத்தனை சம்பாதிச்சு நிம்மதி இல்லை. ப்ச். "

“உங்க நிலைமை புரியுது. உங்களுக்குத் தேவை அன்பு. "

"அன்பெல்லாம் விலைக்கு வாங்க முடியும்பா ஒரு தேவடியாளுக்குக் காசு கொடுத்தா,
இருபத்து நாலு மணி நேரமும் அன்பு கிடைக்கும்:

"நான் அந்த அன்பைச் சொல்லலை."

"புரியது எனக்கு எதும் வேண்டாம்பா துரோகம் பண்ணாம இருந்தா போதும் என்னை
ஏமாத்தறது எனக்குத் தெரியுமங்கறது அவங்களுக்குத் தெரியும்."

"துரத்திவிட்டுருங்களேன்"

"அப்படித்தான் செய்யப்போறேன், வேளை வரட்டும்"

"அல்லது நீங்க இப்படிப் பழி வாங்கலாம்"

"எப்படி?"

"உங்க கிட்ட இருக்கிற எக்சஸ் கேஷ், பினாமி பிராபர்டி எல்லரத்தையும் டிக்ளேர்
பண்ணிட்டு உங்களுக்குத் தேவைப்பட்டதை மட்டும் வச்சுக்கிட்டு மத்ததை ஒழுங்கா
வரி கட்டிருங்களேன் அவங்க மூஞ்சில கரி பூசிருங்களேன்"

"நல்ல யோசனை! கட்டறேம்பா. ப்ளாக் மணி வெச்சிருக்கிறவன் எல்லோரும் கட்டட்டும்
நான் கட்டறேன்?

"மக்களுக்குப் போய்ச் சேருமே! “

"நான் கஷ்டப்பட்டுச் சம்பாதிச்சதுப்பா!"

"கஷ்டப்பட்டுன்னு சொல்லாதீங்க. நேர்வழியில கஷ்டப்பட்டுச் சம்பாதிச்சா ஒரு
கோடிக்கு மேல் பண்ண முடியாது. நீங் சொல்றத பார்த்தா உங்க சொத்துடைய மதிப்பு
கிட்டத்தட்ட முந்நூறு கோடி இருக்கும்போல"

"அதைவிட அதிகம். நான் எதுக்குத் தம்பி கொடுக்கணும்? "

அதுகூட வாஸ்தவம்தான். ஆனா உங்க பண்ணை வீட்டில ரெய்டு வந்தா எல்லா ப்ளாக்
மணியும் வெளியே வந்துருமே"

“வரமாட்டாங்க அங்கதான் என் ஆடிட்டர் சாமர்த்தியம் அது என் பேர்லயே இல்லையே!"

“கடலை வேர்க்கடலை" என்று ஒருவன் வந்து கேட்க

“கடலை சாப்டறீங்களா" என்றேன்.

"எவ்வளவோ ஃபுட் சாப்ட்டிருப்பீங்க பீச்சில வேர்க்கடலை சாப்ட்ருக்க மாட்டீங்க"

"சரி குடுப்பா. அதையும் பாத்துரலாம்."

கடலைக்காரர் செய்தித்தாள் கிழிசலில் கூம்பு செய்து ஆளுக்கு ஒரு பொட்டலம்
கொடுத்தார்.

“எத்தனைப்பா?” என்றேன். "ஐ வில் பே“ அவர் பையிலிருந்து ஆயிரம் ரூபாய் நோட்டு
எடுத்தார்.

“சில்லறை இருக்குமாப்பா?"

“நம்ப ஊர் தோட்டுங்களா இது?"

நான் தடுத்து, "பரவாயில்லை சார் இந்தனை பெரிய மனுஷருக்கு கடலை கொடுத்த
சந்தோஷத்தை எனக்குக் கொடுங்க" என்று ஐந்து ரூபாய் கொடுத்தேன்.

"ஒரு நாள் பண்ணை வீட்டுக்கு வாங்க சோழிங்கர் தாண்டி மண் ரோட்டில சின்னதா
மஞ்சக் கல்லுல உள்னிப்பா பார்த்தாத்தான் தெரியும், 'வெரிடாஸ்"னு ஒரு போர்டு
போட் டிருக்கும். அதுல திரும்பணும்.

""நிச்சயம் வரேங்க" என்றேன்

"என் பேரு....."

"சொல்ல வேண்டாங்க. நல்லாவே தெரியும்."

"உங்க பேரு?"

"கோவிந்தராஜ். கவர்மெண்ட்ல வேலை பார்க்கறேன் "

அவர் என் பொருத்தமில்லாத ஆடைகளைப் பார்த்தார். உடையில் கிழிசல், கால்
செருப்பில் சேஃப்டி பின்...

"என்ன பாக்கறீங்க? எல்லாம் உத்தியோக நிமித்தம் வேஷம் போட வேண்டியிருக்கு."

"புரியலை. என்ன டிப்பார்ட்மெண்ட்?"

*“இன்கம்டாக்ஸ் இன்வெஸ்டிகேஷன் டைரக்ட்ரேட்டில. அடிஷனல் டைரக்டரா இருக்கேன்.
வரேன்"*
Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdZDkxF-f9OBv4bXUKVVjxeEofHisw%3DDy1pmfxnXGjqZg%40mail.gmail.com.

Reply via email to