In the Upanishads, Vak, often translated as speech or word, is not merely a means of communication but is considered a fundamental force in creation and a powerful tool for spiritual realization. It's seen as a manifestation of the divine, a bridge between the manifest and unmanifest, and a key to understanding the nature of reality and achieving liberation. Here's a breakdown of Vak's power and essentiality in the Upanishads: 1. Vak as a Manifestation of the Divine:
- The Upanishads equate Vak with Brahman, the ultimate reality, highlighting its divine origin and power. - It is seen as the source of all sounds and words, the primordial Omkara (Pranava), from which all creation arises. - Vak is also associated with Saraswati, the goddess of knowledge and wisdom, emphasizing its role in transmitting and revealing truth. 2. Vak as a Bridge Between Worlds: - Vak is the medium through which abstract ideas and inner knowledge are made manifest and shared. - It acts as a link between the inner world of thought and the external world of expression, enabling communication and understanding. - The four stages of Vak (Para, Pashyanti, Madhyama, and Vaikhari) represent different levels of manifestation, from the most subtle to the most concrete, showcasing its role in cosmic creation and individual experience. 3. Vak as a Tool for Spiritual Realization: - The Upanishads emphasize that true knowledge (Vidya) involves understanding the unity of all things, and Vak plays a crucial role in this process. - By understanding the nature of Vak, one can gain insight into the nature of reality and one's own self (Atman). - Mantras, which are powerful combinations of words, are used in spiritual practices to invoke specific energies and facilitate liberation. 4. Vak in the Context of Vedic and Upanishadic Thought: - The Vedas, which precede the Upanishads, also hold Vak in high regard, recognizing its creative power and role in rituals and prayers. - However, the Upanishads delve deeper into the philosophical and spiritual implications of Vak, exploring its connection to Brahman and the path to self-realization. - While the Vedas focus on external rituals, the Upanishads emphasize internal knowledge and the transformative power of Vak in attaining spiritual enlightenment. In essence, Vak in the Upanishads is not just about speaking; it's about the power of sound, language, and thought to reveal the nature of reality, connect with the divine, and ultimately, lead to liberation. KR IRS 25625 Hence the vak stuti in RV. ---------- Forwarded message --------- From: Chittanandam V R <chittananda...@gmail.com> Date: Wed, 25 Jun 2025 at 06:56 Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam - Rama and Bhratha (25) To: இராமாயணம் - திருவடி சூட்டு படலம் (25) -அவ் உரை மறுக்கும் ஈட்டதோ? *தமிழ்நாயகம் * நாட்டை ஏற்றுக் கொள்ளும்படி பரதன் எவ்வளவோ கேட்டுப் பார்த்து விட்டான் இராமனிடம். இராமன் அசைந்து கொடுப்பதாய் இல்லை. அருகில் இருந்த வசிட்டன், "குல குருவான என் ஆணை, நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் " என்று கூறுகிறான். வசிட்டனை வணங்கி, இராமன் சொல்லத் தொடங்குகிறான். "தாமரை மலரில் தோன்றிய பிரமனின் புதல்வனே (வசிட்டனே )! தாய், தந்தை, குரு போன்றோருக்கு ஒன்றை செய்கிறேன் என்று வாக்கு தந்து விட்டால் அதில் இருந்து மாறுவது சரியா?" என்று வசிட்டனிடம் இராமன் கேட்கிறான். பாடல் *‘சான்றவர் ஆக; தன் குரவர் ஆக; தாய்போன்றவர் ஆக; மெய்ப் புதல்வர் ஆக; தான் -தேன் தரு மலருளான் சிறுவ! -“ செய்வேன்” என்றுஏன்றபின், அவ் உரை மறுக்கும் ஈட்டதோ?* பொருள்: தேனைத் தருகின்ற மலரின் மேல் அமர்ந்து இருக்கும் பிரமனின் மகனே (வசிட்டனே)! பெரியவர்கள் ஆக, தனக்கு மேலே உள்ளவர் (தலைவர், ஆசிரியர்) ஆகட்டும், தாய் போன்றவர் ஆக. (இராமன் வார்த்தையை பொறுக்கி எடுத்து போடுகிறான். தாய் ஆக என்று சொல்லவில்லை. தாய் போன்றவர் ஆக.)உண்மையான புதல்வர்கள் ஆகட்டும், செய்வேன் என்றுஏற்றுக் கொண்ட பின், அந்த உரையை மறுக்கும் செயலை செய்யலாமா? (செய்யக் கூடாது என்பது தெளிவு) சரியோ தவறோ, சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பது இராமனின் கொள்கை. நான் வாக்கு தந்து விட்டேன். என்ன ஆனாலும் சரி, அதை நிறைவேற்றியே தீருவேன் என்று இராமன் கூறுகிறான். வாக்கு தரக் கூடாது. தந்து விட்டால், உயிரை கொடுத்தாவது அதைக் காக்க வேண்டும் என்பது நம் பண்பாட்டின் ஒரு கூறு. வாக்குக்கு விலை இருக்கும் என்றுதான் நமது வாழ்க்கை முறை அமைக்கப் பட்டிருக்கிறது. திருமண சடங்கில், பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு "வாழ்விலும் சாவிலும் ஒன்றாக இருப்பேன், சுக துக்கங்களில் சம பங்கு எடுப்பேன் " என்று வாக்குத் தருகிறார்கள். பெரிய பதவிகளை ஏற்றுக் கொள்ளும் போது (MLA, MP, பிரதம மந்திரி, ஜனாதிபதி, தலைமை நீதிபதி ) பதவிப் பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்கள். சட்டம் போட்டு அதை கட்டுப் படுத்த முடியாது. ஒருவன் தரும் வாக்கு தான் முக்கியம். நீதிமன்றத்தில் "நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை " என்று பிரமாணம் செய்கிறார்கள். இந்த பிரமாணங்களை எல்லோரும் ஏற்று அதன்படி வாழ்ந்தால் இந்த நாடு எவ்வளவோ முன்னேறி இருக்கும். மனைவியை துன்பத்தில் தவிக்க விடும் கணவன், கணவனை மதிக்காமல் அவன் துன்பத்தில் பங்கெடுக்காத மனைவி, குடும்பச் சிக்கல்கள் வருகின்றன. ஏன்? ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருப்போம் என்று தந்த வாக்கை இருவரும் காற்றில் பறக்க விட்டதால். வீடு நாசமாகப் போகிறது. அரசியல்வாதிகள் நாட்டை சுரண்டுகிறார்கள். இலஞ்சம் தலை விரித்து ஆடுகிறது? ஏன் ? "பாரபட்சமின்றி நாட்டு மக்களுக்கு உழைப்பேன் " என்ற வாக்கை காற்றில் பறக்கவிட்டதால். இன்று நிறைய மருந்தகங்களில் தேவை இல்லாத சோதனைகள் செய்ய வைக்கிறார்கள், தேவையில்லாத மருந்துகள் தருகிறார்கள். மருத்துவ மனைக்கு போவது என்றாலே பயமாக இருக்கிறது .காரணம் என்ன? ஹிப்போக்கரிடிஸ் பிரமாணம் என்ற பிரமாணத்தை மருத்துவர்கள் காற்றில் விடுவதால். இத்தனை மணிக்கு வரும் என்றால், அத்தனை மணிக்கு வர வேண்டும். அது ஆகாய விமானமாக இருந்தாலும் சரி, உள்ளூர் பேருந்தாக இருந்தாலும் சரி. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றி அதன் வழி நடப்பேன் என்று ஒவ்வொரு குடிமகனும் வாக்குத் தருகிறான். அதன்படி நடந்து விட்டால் நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு எல்லாம் எப்படி நடக்கும்? இப்படி, நாடும், வீடும், நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளும் சிதைந்து போகக் காரணம் , யாருக்கும் தாங்கள் தந்த வாக்கைக் காப்பாற்றும் எண்ணம் இல்லாததால். எல்லோரும், தங்கள் வாக்கைக் காப்பாற்றத் தொடங்கிவிட்டால், இந்த உலகம் சொர்க்கமாக மாறும். அதை வலியுறுத்த, இராமன் வாழ்ந்து காட்டுகிறான். *-- தமிழ்நாயகம் * ******************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty+unsubscr...@googlegroups.com. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqUeavKeQ-mVeoAHy%2B2iWXb%3DqefEZ9jNO%2BJ%2B6m5TeW0ug%40mail.gmail.com.